Tuesday, May 30, 2017

அந்த ராகவேந்திரர் ரஜினியை ரஞ்சித்திடமிருந்து காக்கட்டும்



Image may contain: 1 person, beard, glasses and close-upதிருமுருகன் கைதான விஷயத்தில் அரண்டு போயிருக்கின்றார் சீமான், அவரோடு அவரை போல ஈழ கான சபா எல்லாம் அப்செட்


எங்கே நம்மையும் கம்பிக்குள் வெளிச்சம் பார்க்க வைத்துவிடுவார்களோ என கச்சேரிக்கு பதில் ஒப்பாரியில் இறங்கியிருக்கின்றன‌


ரஜினியினை விமர்சிக்கும் குரல்கள் சற்று ஓய்ந்தன என்றால் இதுதான் சாக்கு என விஜயகாந்த் கட்சியினர் அடுத்து கல் எறிகின்றனர்


அதாவது விஜயகாந்த் மகா நல்லவராம், ரஜினியினை விட மிக பெரும் நல்லவராம், அப்படி எல்லாம் சொல்லிகொண்டே இருக்கின்றார்கள்


விஜயகாந்த் வடலூர் வள்ளலாருக்கும் மேற்பட்டவரா இல்லையா என்ற சர்ச்சை வேறுவிஷயம், ஆனால் கவனிக்க தக்கது ஒன்று உண்டு


ரஜினியினை கண்டு முதலில் அஞ்சியவர் எம்ஜிஆர், வரலாறு அதனைத்தான் சொல்கின்றது, இருவருக்குமான உரசலும், தன் அவரசர போலீஸ் படத்தினை ரஜினியினை வைத்து நிரப்பகூடாது என உறுமியதும், உச்சமாக என் சினிமா வாரிசு பாக்யராஜ் (எம்ஜிஆருக்கும் பாக்யராஜூக்கும் என்ன?) என சில தமாஷ்களை செய்ததும்  வரலாறெங்கும் காண கிடக்கின்றது


இருவரும் ஒரு வார்த்தை பேசிய விஷயம் கூட இல்லை, ஆனால் அதனை தாண்டி ரஜினி வளர்ந்தார்


ஆனால் ஆர்.எம் வீரப்பன் விழாவில் ரஜினி அரசியல் பேசியது சர்ச்சை தொடங்கியது, அதுவும் அரசியல் அல்ல, மணிரத்னம் வீட்டில் குண்டுவெடித்த சம்பவத்தை சொன்னார்


ஏற்கனவே எம்ஜிஆர் வழியில் வந்த ஜெயலலிதாவிற்கும் , எம்ஜிஆருக்கு இருந்த அதே அச்சம் இப்பொழுது அதிகரித்தது
அப்பொழுதும் ரஜினி அரசியலுக்கு வரவில்லை


1996ல் ஜெயாவினை வீழ்த்த ரஜினி முதலில் தானாக கிளம்பவில்லை, மாறாக சோ, மூப்பனார், எல்லோரும் சேர்ந்தே அவரை ஆதரிக்க வைத்தனர், கலைஞர் முதல்வரானார்


அதன்பின் நடந்த மர்மம்தான் இன்னும் புரியவில்லை, மூப்பனார் பிரதமராவது மறுக்கபட்டபின் தமிழக காட்சிகள் மாறின, மூப்பனார் ஜெயா பக்கமே சென்றார், ரஜினி அமைதியானார், ஏதோ கசப்பான அனுபவம் கிடைத்திருக்கின்றது


அதுபற்றி மூப்பனாரோ, ரஜினியோ, சோ, சிதம்பரம் என யாரும் ஒரு வார்த்தையும் சொல்லவில்லை, அந்த கூட்டணி ஏன் பிரிந்தது என இன்றுவரை தெரியாது


அதன் பின் ரஜினி அரசியல் பற்றி அதிகம் பேசவில்லை, சில இடங்களில் ராமதாஸ் கோஷ்டி சீண்டினாலும் அவர் பெரிதாக ரியாக்ஷன் காட்டவில்லை, பாபா பிரச்சினையில் கூட ரஜினி தன் முழுபலத்துடன் அவர்களோடு மோதவில்லை


இன்று கலைஞர் ஓய்ந்து, ஜெயா இல்லா நிலையில் அரசியலுக்கு வருவாரா? என்ற விவாதம் நடக்கின்றது


இந்திரா இருக்கும் வரை அவர் ஏன் வரவில்லை, எம்ஜிஆர் இருக்கும் வரை பன்னீர் ஏன் வரவில்லை என்பதெல்லாம் வெற்றுவிவாதம், அவரவர்க்கு நேரம் வரும்பொழுது யாரும் வரலாம்


பழனிச்சாமியும், பன்னீரும் முதல்வராக நேரம் வரவில்லையா அப்படித்தான்


இது ரஜினி கதை...


விஜயகாந்த் கதையே வேறு, அவரை யாரும் அரசியலுக்கு அழைக்கவுமில்லை, அவர் மேல் எதிர்பார்ப்புமில்லை


அவரை யாரும் எதிர்பார்க்கவில்லை, திடீரென அரசியல் ஆசை வந்தது கட்சி தொடங்கினார்


கொஞ்சம் வாக்கினை பெற்றதும் அவருக்கு தலைகால் புரியவில்லை, போதாகுறைக்கு எதிர்கட்சி தலைவரானதும் சுத்தமாக தன் நிலை மறந்தார்


அந்த போதையினை அரசியலில் பழம் தின்று கொட்டை போட்ட வவ்வால்கள் இன்னும் ஏற்றி, அடுத்த முதல்வர் என காட்டி இன்று படுகுழியில் வீழ்த்திவிட்டன‌.


60 ஆண்டுகளாக அரசியல் செய்த கலைஞரிடம், 6 ஆண்டுகள் கூட அரசியல் செய்யாத விஜயகாந்த் சரிக்கு சரி என நின்றது பெரும் தவறு


இவரை அந்நாளைய கலைஞராகவும், கலைஞரை ராஜாஜியாகவும் எண்ணி இவர் மேல் நின்று பேசியதுதான் இன்று குப்புற கிடக்கின்றார்


மனிதரின் ஆசையும், எதிர்பார்ப்பும் அப்படி இருந்திருக்கின்றன‌


ரஜினி தனக்கு கிடைத்த பெரும் வாய்ப்பினையும் புறம் தள்ளிவிட்டு அமைதியாக தன் வழியில் சென்றவர், விஜயகாந்த் பாதை மாறி அரசியலுக்கு வந்தவர்


எல்லாவற்றிற்கும் ஆசைபடுவது விஷயம் அல்ல, கிட்டும் கிரீடம் கைக்கு எட்டும் தொலைவில் இருந்தும் தொடாமல் செல்ல ஒரு பெரும் மனது வேண்டும்


அது ரஜினியிடம் இருக்கின்றது, தன் இமேஜ் பற்றியோ , தன் உடை பாவனை பற்றியோ கொஞ்சமும் கவலை இல்லாதவர் ரஜினி


பெரும் செல்வாக்கிருந்தும் வழுக்கை தலை, தாடி என வந்து நிற்கின்றார், எம்ஜிஆரை இப்படி பழிவாங்குகின்றாரோ என்னமோ?, அந்த எளிமை இன்றைய நிலையில் யாருக்கும் இல்லை, விஜயகாந்த் தலையில் நட்டுவைத்த முடியும், முகத்தில் ஒட்டிவைத்த மீசையும் உண்டு


ரஜினியிடம் வியப்பது அதுதான், பஞ்சாயத்து தலைவர் பதவிக்கே பல கொலைகள் செய்ய துணிபவர்கள் உள்ள தமிழகத்தில் , தன் தொழிலை மட்டும் பார்த்துகொண்டு மிக அமைதியாக, எளிமையாக தன் வழியில் செல்பவர் ரஜினி


இப்பொழுதும் நேரம் வந்தால் அரசியலுக்கு வருவேன் என்கின்றார், இப்பொழுதுள்ள சூழலில் அவர் வரலாம்


தீபா மாதவனே கட்சி தொடங்கிய தமிழகத்தில் ரஜினிக்கு என்ன?


புழுக்களே ஊர்வலம் வரதுடிக்கும் தமிழகத்தில் அந்த பட்டத்து யானைக்கு என்ன? வரலாம், கதவு திறந்தே இருக்கின்றது


ஆக விஜயகாந்தையும் ரஜினியினையும் ஒப்பிட முடியாது, ஓடி சென்று கிரீடம் சூட்ட துடித்தவர் விஜயகாந்த்


கிடைத்த கிரீடத்தை தள்ளி வைத்துவிட்டு, நடந்து சென்றவர் ரஜினி, கிரீடம் துரத்தினாலும் அவர் நகர்ந்துகொண்டுதான் இருக்கின்றார்


அவர் சொன்ன நேரம் விரைவில் வரட்டும், அவரால் முடிந்ததை அவர் செய்யட்டும்


ராமன் ஆண்டாலும் பரதன் ஆண்டாலும் அயோத்தி நன்றாக இருக்க வேண்டும் என்பார்கள், அப்படி யார் ஆண்டாலும் தமிழகம் நன்றாக இருக்கவேண்டும்


அது ரஜினியாக இருந்தால்தான் என்ன? அல்லது அவர் கைகாட்டுபவராக இருந்தால்தான் என்ன?


ரஜினி தமிழகத்தை காப்பது இருக்கட்டும், முதலில் ரஜினியினை ரஞ்சித் என்பவரிடம் இருந்து காக்க வேண்டும்


கபாலி என சொல்லி அவரை என்னவெல்லாமோ செய்தவர், இப்பொழுது காலா என சொல்லி எப்படி எல்லாம் கொத்துகின்றாரோ.


ரஜினிக்கு ஜனரஞ்சகமான படங்களே பொருந்தும், டான் என்றால் கூட பாஷா வகைதான் பொருந்தும்


அவரை குப்பை தொட்டி அருகே இறுக்கமான‌ புரட்சியாளாரக அமரவைத்து ரஞ்சித் செய்யும் இம்சைகள் தாளவில்லை,


அதுவும் உடைககளை பார்த்தாலே முடியவில்லை, எல்லா படத்திலும் ரஜினி அம்மாதிரி ஒரு சில காட்சிகளில் பிளாஷ் பேக்கில் வருவார்,


ஆனால் படம் முழுக்க அப்படியே அலைய விடுவதுதான் ரஞ்சித் பாணி, அவரின் வட்டம் அப்படியான குறுகிய ஒரே நோக்கம் கொண்டது, பின்பு ரஜினி நிச்சயம் வருந்தலாம்


அந்த ராகவேந்திரர் அவரை ரஞ்சித்திடமிருந்து காக்கட்டும்













 












No comments:

Post a Comment