Thursday, May 25, 2017

வம்புக்கு இழுப்பதில் பல வகை உண்டு : குஷ்பு vs தமிழிசை




Image may contain: 2 people, people smiling, close-up


வம்புக்கு இழுப்பதில் பல வகை உண்டு, டிரம்ப் வம்பிழுப்பது, பாகிஸ்தான் வம்பிழுப்பது, ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்கள் களத்தில் வம்பிழுப்பது ஒருவகை,


கிராமத்து கிழவிகள் திண்ணையில் அமர்ந்துகொண்டு வருவோர் போவோரிடம் வம்பிழுப்பது இன்னொரு வகை


தமிழிசை வம்பிழுப்பது கடைசி வகை





இப்பொழுது அவரின் வம்பிழுப்பு எல்லோரையும் சீண்டிவிட்டு குஷ்பூ மீது சென்றிருக்கின்றது, ரஜினி அரசியல் குறித்து தமிழிசை ஏதோ சொல்ல அது குஷ்பூவின் டிவிட் வரை சென்றிருக்கின்றது

வார்த்தைகள் எண்ணங்களை வெளிபடுத்தும் என குஷ்பூவினை தமிழிசை சாடியிருக்கின்றார், சொல்லியிருப்பது யார் தமிழிசைதான்,

அவர்தான் வார்த்தைகள் முக்கியம் எனவும் சொல்லியிருக்கின்றார், இதுதான் காமெடி

இப்படியாக டிவிட்டரில் அவரை அம்மணி சீண்டியிருக்கின்றார், யானையினையே விரட்டும் புலி பாகனை விடுமா? அப்படி மோடியினையே சமயங்களில் சாடும் குஷ்பூதமிழிசையினை போட்டு சாத்தியிருக்கின்றார்

இப்படியாக அடித்த அடியில் சிரம் கலங்கி, கரம் ஒடுங்கி அமர்ந்திருக்கின்றார் தமிழிசை, அவருக்கு ஆறுதலும் கண்ணீரை துடைக்க டிஸ்பூ பேப்பர் சகிதம் சிலர் வந்துகொண்டிருக்கின்றார்கள்

எல்லோரையும் வம்பிழுப்பது போல மின்சாரத்திடமும் வம்பிழுத்தால் இப்படித்தான் ஆகும் என அனுபவபூர்வமாக தெரிந்து அதிர்ச்சியில் இருக்கின்றார் தமிழிசை

நமக்கு தமிழிசை பற்றி நன்கு தெரியும் , இன்னமும் வம்பிழுப்பார், ஆனால் குஷ்பூவின் ரசிகபடை சும்மா விடாது

அப்படி குஷ்பூ மீது தமிழிசைக்கு என்ன கோபம்? தமிழக காங்கிரசின் நட்சத்திரமாகிவிட்டார் என்பதை தவிர என்ன இருக்க முடியும்? அதனால் ம்ம் விட கூடாது, விடவே கூடாது வம்பிழுத்து பார்ப்போம் என இறங்கியிருக்கின்றார்

புயல் வீசும்பொழுதுதான் மரம் எந்த அளவு வேர் விட்டிருக்கின்றது, அதன் வேர்கள் எவ்வளவு தூரம் பலமாயிருக்கின்றது என்பது புரியும், அப்படியாக குஷ்பூவிற்கு சோதனை வரும்பொழுதுதான் அவரின் ரசிகர் பலம் புரியும்

மேடம் தமிழிசை, இதோடு நிறுத்தி கொள்வார் என தெரிகின்றது, இல்லையென்றால் குஷ்பூ தொண்டர் படை களத்தில் இறங்கும்

இன்னும் குஷ்பூவினை வென்றுகாட்டுகின்றேன் என சொல்லி அரிதாரம் பூசி கேமரா முன் நடிகையாக வந்துவிடாதீர்கள்,

அப்படி வந்து "பூப்பூக்கும் மாதம் தைமாதம்" "அரைச்ச சந்தணம் மணக்கும் குங்கும்"கொட்டை பாக்கும் கொழுந்து வெத்தல" என நீங்கள் ஆடி பாடினால் நாடு தாங்காது..

பாகிஸ்தானிய அணுகுண்டு வேலையினை அந்த காட்சி செய்துவிடும்











 


 

No comments:

Post a Comment