Monday, May 22, 2017

எழுத்தாளனுக்கு இறப்பில்லை



Image may contain: 1 person, sunglasses, glasses and close-up


எழுத்தாளனுக்கு இறப்பில்லை, அவன் தன் எழுத்தில் எந்நாளும் எல்லா தலைமுறையோடும் பேசிகொண்டே இருப்பான்


அப்படி ஜெயகாந்தன் தற்போது என்னுடன் பேசிகொண்டிருக்கின்றார், மிக மிக உறுதியான வரிகளோடும் , உறுதியோடும், பதைபதைக்க வைக்கும் தகவல்களோடும் பேசிகொண்டிருக்கின்றார்


1990கள் ராஜிவ் கொலைநடந்த காலங்களை மிக மிக உக்கிரமாக பேசிகொண்டிருக்கின்றார். சோ ராமசாமி, ஜெயலலிதா, வாழப்பாடி ராமமூர்த்தி, மபோசி எல்லோரும் எப்படி எல்லாம் புலிகளை கண்டித்தார்கள், கலைஞரிடம் கெஞ்சினார்கள் என்ற செய்திகள் அவை





கலைஞர் ஏன் 2009ல் அமைதியானார் என்பதற்கான காரணங்களை சொல்லிகொண்டிருக்கின்றார்

பத்மநாபா கொலை நமக்கு தெரிந்தது, அதனை விட மகா பயங்கரமானது 1990ல் செப்டம்பரில் சென்னையில் ராஜிவும் இன்னும் அகில இந்திய சிந்தனையாளர்களும் கலந்துகொண்ட விழாவின் மண்டபத்தை தகர்க்க திட்டமிட்டிருக்கின்றான் சிவராசன்

பத்மநாபா கொலையின் ஒரு மாத இடைவெளி அது, அந்த பயங்கர சதி மறைக்கபட்டது ஏன்? அந்த சதியிலே சிவராசனை, அதன் பின்னும் தமிழகத்தில் சுதந்திரமாக அலைந்த சிவராசனை சுட்டுபொசுக்கியிருந்தால் ராஜிவினை காப்பாற்றி இருக்கலாம், முறைப்படி டெல்லிக்கு தெரியபடுத்தியிருந்தால் கூட உஷாராயிருப்பார் ராஜிவ் , அது தடுக்கபட்டது ஏன்?

அவ்வளவிற்கு புலிகளை ஆதரித்திருக்கின்றார் கலைஞர், அந்த அளவு திமுக புலிகளுக்கு ஒரு காலத்தில் உதவியிருக்கின்றது

ஜெயகாந்தன் உலகம் சொல்வது போல புலிகளை தீவிரவாதிகள் என்றோ கொலைகாரர்கள் என்றோ சொல்லவில்லை மாறாக சைத்தான் தத்தெடுத்த பாதகர்கள் என தனக்கே உரித்தான வார்த்தைகளில் வறுத்தெடுக்கின்றார்

எப்படி எல்லாம் கலைஞரிடம் கெஞ்சியிருக்கின்றார்கள், எத்தனை தலைவர்கள் மன்றாடியிருக்கின்றார்கள் ஆனால் கலைஞர் புலிகளை அதனை மீறி ஆதரித்திருக்கின்றார்

தமிழகத்தை மிகபெரும் சுடுகாடாக புலிகள் ஆக்கும் முயற்சியினை அவர் தடுக்கவில்லை அதன் கொடூரம் ராஜிவ் எனும் பெரும் தலையோடு முற்றுபெற்றிருக்கின்றது

அந்த பாவத்தின் சம்பளம்தான் கலைஞருக்கு 2009ல் அவர் செய்யாத குற்றத்திற்காக சுமந்திருக்கின்றார்

கலைஞரின் மன்சாட்சியே அவரை கொன்றிருக்கும்

அப்படி ஒரு அசாதாரண சூழ்நிலை அமைதிபடை திரும்பிய பின் தமிழகத்தில் நிலவியிருக்கின்றது, கலைஞர் தடுக்கவில்லை

ஜெயகாந்தன் அறுதியிட்டு சொல்கின்றார்

"இந்த சைத்தானின் தத்துபிள்ளை கூட்டம் ஆடும் வரை ஆடட்டும், ஒரு நாள் இவர்கள் கேட்க ஆளில்லாமல் நாயினை போல அடிபட்டு சாவார்கள், அழிவார்கள்.

சந்ததி இல்லாமல் அவர்கள் அழிவதை இந்த உலகம் பார்க்கத்தான் போகின்றது, அப்பொழுதும் சிலர் அவர்களுக்காக அழுவான் அந்த மூடர்களை ஒன்றும் செய்ய முடியாது"

அப்படி இன்று அழும் மூடர்களை அன்றே கணித்திருக்கின்றார்

எப்படிபட்ட பெரும் அழிவிற்கு தமிழகத்தை புலிகள் தயார் படுத்தியிருக்கின்றார்கள், ராஜிவின் மரணமும் இந்திய தேசியமும் நம்மை காத்திருக்கின்றன‌

ஒருவேளை தமிழகம் தனிநாடாக இருந்திருக்குமானால் நாள் தோறும் ஒரு முள்ளிவாய்க்கால் தமிழகத்தில் நடந்தேறிகொண்டே இருந்திருக்கும்

இந்தியா தமிழருக்கு எவ்வளவு அவசியம் என்பதை ஜெயகாந்தன் வலியுறுத்தி சொல்கின்றார்

எவ்வளவு உறுதியான, தீர்க்க தரிசனமான எழுத்துக்கள், அவர் சொன்னது எல்லாம் பலித்திருக்கின்றது

எப்படிபட்ட புலி ஆபத்திலிருந்து தமிழகம் தப்பியிருக்கின்றது என நினைக்கும்பொழுது மனம் சில்லிடத்தான் செய்கின்றது

அவர்கள் சைத்தான் தத்தெடுத்த பாவிகள் என்ற ஜெயகாந்தனின் வரிகள் நிதர்சனமான உண்மை..












No comments:

Post a Comment