Saturday, May 27, 2017

மாட்டை மற, மனிதனை நினை....




Image may contain: 1 person, sunglasses and close-up


"மாடு வெட்டி உண்போம் முடிந்தால் தடுத்துபார்" என கேரளம் உரிமை கீதம் பாட தொடங்கிற்று, அட்டகாசமாக எதிப்பினை கேரளம் கொடுக்கின்றது


இவ்வளவிற்கும் மலையாளம் மலையாளிக்கே, மலையாள மாடு மலையாளிக்கே என சத்தமிடும் கூட்டம் எல்லாம் இல்லை , தேசிய கட்சிகள் தான்


ஆனால் எது தன் உரிமை? எது தேசியம்? என்பதில் மிக கவனமாக இருக்கின்றது





தனிநாடு கோரிக்கையினை கைவிட்ட திமுகவின் போராட்டமும் இந்த அடிப்படையில்தான் இருந்தது, இன்று அந்த சிங்கம் ஓய்ந்தபின் அப்படியான உறுமல்கள் இல்லை

அந்த சிங்கம் நலமாக இருப்பின், முரசொலியில் இன்று எப்படி தலைப்பிட்டு சீறியிருக்கும் தெரியுமா?

"மாட்டை மற, மனிதனை நினை"
"மாடா? நாடா?"
"மாடா ? மனிதனா"

என ஒரு தலைப்பிட்டு பொங்கி தீர்த்திருப்பார்

"அன்று நான் சொன்னது வேதம் என்றார்கள், நான் சொன்னதுதான் சாதி என்றார்கள், நான் வகுத்தது சட்டம் என்றார்கள், இன்றோ நான் சொன்னது உணவு என்கின்றார்கள்....." என தொடங்கி

அன்று பெரியாரின் போராட்டம் கடவுளை மற , மனிதனை நினை என்ற கோஷத்துடன் தொடங்கியது, அது பெரிதாக எதிரொலித்தது, நாமெல்லாம் அவர்பின் கோஷமிட்டு போராடி உரிமை பெற்றோம்

இன்றோ கழுதை கெட்டு குட்டிசுவரானது போல, அதிமுக கெட்டு சசிகலா ஆனது போல இன்றோ நிலை மகா மோசமாய்விட்டது

அன்று வேதம் அவர்கள் தலையில் இருந்தது, இன்றோ மாட்டு சானம் இருக்கின்றது.

கடவுளை மற என கோஷமிட்ட காலம் போய், மாட்டை மற என போராடும் நிலைக்கு தள்ளபட்டிருக்கின்றோம்

இனி அவர்களாக நம் சோற்றில் இவ்வளவுதான் உப்பு இட வேண்டும் என நமக்கு சொல்லுமுன், நம் உரிமையினை மீட்டெடுக்க களம் காண்போம்,

ஏறகுறைய மாட்டுதொழுவம் ஆகிவிட்ட பாராளுமன்றத்தை சுத்தம் செய்வொம்"

"மாட்டை மற, நாட்டை நினை" எனும் கோஷம் தமிழகம் முழுக்க எதிரொலிக்கட்டும், போராடுவோம், வெற்றிபெறுவோம்

அந்த மனிதன் எவ்வளவு பெரும் வெற்றிடத்தை விட்டு சென்றிருக்கின்றான் எனும்பொழுது சில சொட்டு கண்ணீர் விழுவதை தடுக்கமுடியவில்லை





 




மாடு வெட்ட தடை விதித்திருக்கின்றது மத்திய அரசு, இனி தமிழகத்திலும் அதற்கு தடை


ஆனால் வாரம் ஒருமுறை மோடியினை சந்திக்கும் இந்த பன்னீரும், எடப்பாடியும் டெல்லி போயிவிட்டு என்ன சொல்வார்கள் தெரியுமா?


"ஜெயலலிதா பட திறப்புவிழா அன்று அவருக்கு பாரத ரத்னா வழங்க சொல்லி வற்புறுத்தினோம்"




முதலில் இந்த கட்சிக்கும், ஆட்சிக்கும் பாலூற்றாமல் தமிழகத்தை காப்பாற்ற முடியாது....







 

No comments:

Post a Comment