Tuesday, May 30, 2017

செய்தி அவியல் ....







வள்ளுவன் புலால் மறுத்தல் எழுதியிருக்கின்றான், பின்னும் ஏன் தமிழர் மாட்டுகறி பற்றி பேசுவது என சில பாஜக தரப்பு கிளம்புகின்றது


நல்ல அரசும், நல்ல துறவியும் எப்படி இருக்க வேண்டும் என்று கூடத்தான் வள்ளுவன் சொல்லியிருக்கின்றான்


அதனை நீங்கள் பின்பற்றி காட்டுங்கள்.




ராமர் , யோகா பற்றி எல்லாம் வள்ளுவன் சொல்லவே இல்லை ஆக அதனையும் விட்டுவிட்டு புலால் மறுத்தல் பேச வாருங்கள்







பாகிஸ்தானில் துப்பாக்கி முனையில் கற்பழிக்கப்பட்ட பெண்ணை, முறைகேடான உறவில் ஈடுபட்டதாக கூறி கல்லால் அடித்து கொலை செய்ய கிராம பஞ்சாயத்து உத்தரவு


எப்படி பட்ட அறிவார்ந்த நாடாக பாகிஸ்தான் ஆகிவிட்டது?, மேற்படி சம்பவம் வர்சிஸ்தானில் நடந்தாலும் பழங்குடி என சொல்லலாம், ஆனால் நடந்திருப்பது பாகிஸ்தான் பஞ்சாபில்


இப்படி ஒரு நாடா? என சொல்லிவிடும் முன் அடுத்த கேள்வி எழுகின்றது




அதாவது இஸ்லாமிய அடிப்படைவாதத்தில் ஊறிய அந்த நாடு இப்படித்தான் செய்யும், ஆனால் இன்னும் கொஞ்சநாளில் மாட்டுகறி, மனுநீதி என பழமைவாதம் நோக்கி சென்றுகொண்டிருக்கும் நமது நாட்டிலும் இப்படி விபரீதம் நடக்கலாமோ?


மாட்டுகொம்பை காட்டி கற்பழித்த ஒருவனுக்கு, மனுநீதிபடி அவளை கட்டிவைத்துவிட்ட செய்திகள் பிற்காலத்தில் நடக்கலாம்


இதில் நாம் பாகிஸ்தானை பார்த்து பரிதாபபட என்ன இருக்கின்றது??











மோடியின் மூன்றாண்டு சாதனையை பற்றி தமிழக மக்கள் பேசாதது ஏன்? : தமிழிசை


மூன்றாண்டு கடப்பது எல்லாம் சாதனையா அம்மணி, ரோட்டில் ஓட்டை டவுண்பஸ் கூட 30 ஆண்டுகளாக ஓடிகொண்டிருக்கும்


மூன்றாண்டில் என்ன சாதனை என முதலில் சொல்லுங்கள், முடியாதல்லவா?





நீங்களும், எச்.ராஜாவும் பேசுவதை எல்லாம் சாதனை என்றா எடுத்துகொள்ள முடியும்??? அது இம்சை அல்லவா?

உங்கள் பேட்டிகளை கண்டபின்னும் தமிழகம் அமைதியாக இருக்கின்றது என்றால், மக்களுக்கு வந்த‌ அந்த "சகிப்பு தன்மைதான்" மோடி அரசின் சாதனையாக இருக்கமுடியும்.

இதனையும் மீறி சாதனை என்ன என தெரியவேண்டுமென்றால் , மாட்டு தொழுவம் பக்கம் சென்று கேளுங்கள்...

மாட்டிடம் கேட்க வேண்டிய கேள்வியினை மனிதரிடம் கேட்டால் எப்படி பதில் வரும் மேடம்??

தமிழக மக்கள் மாடுகளா என்ன?









சங்கமித்ராவிலிருந்து ஸ்ருதிஹாசன் வெளிவந்துவிட்டாராம்,

அதனாலென்ன குஷ்பூவினையே அந்த இளவரசியாக்கி படத்தை தொடரலாம், படம் பாகுபலி வரலாற்றை நிச்சயம் உடைக்கும்

ஆனால் ஆணாதிக்க சுந்தர்.சி அதனை செய்ய யோசிக்கின்றார்..




 சுவாதி கொலை திரைப்படமானது டிரெயிலர் வெளியிடபட்டதுஎங்கே? "அப்பல்லோ மிஷன்" என அந்த மருத்துவமனை சம்பவத்தை எவனாவது படமாக எடுக்கட்டும் பார்க்கலாம்..

ஏழை சொல் சபையேறாது, ஆனால் ஏழை வீட்டு சம்பவம் சினிமா வரை ஏறும்..






 சவுதி அமெரிக்க அடிமைகளில் ஒன்று, சமீபத்தில் அங்கு சென்ற டிரம்ப் பெரும் தொகைக்கு ஆயுதங்களை விற்றிருக்கின்றார்

அவை எல்லாம் ஈரானை தாக்க என்பது எல்லோருக்குமே தெரியும் பொழுது ஈரானுக்கு தெரியாதா?

ஈரானிய அதிபர் சாடியிருக்கின்றார், எப்படி?


"அமெரிக்கர்கள் பசுவிடம் பால் கறப்பது போல சவுதியிடம் கறப்பார்கள், பால் ஒய்ந்ததும்
வெட்டி கறியாக்கிவிடுவார்கள்.."

ஒருவேளை மோடியினை ஈரானிய அதிபர் லேசாக சீண்டியிருப்பாரோ?

என்ன செய்திகளோ? உள்ளூரில் மாட்டு சர்ச்சை என்றால், உலக செய்திகளும் அப்படி மாட்டுகறியாகவே இருக்கின்றன‌.




 


No comments:

Post a Comment