Monday, May 29, 2017

திராவிட நாடு உருவாக வேண்டும் என சிலர் கொடி பிடிக்கின்றார்கள்

திராவிட நாடு என்ற பெயர் அடிபடும்பொழுது, இந்த கி.வீரமணியினை நினைத்தால்தான் பயமாக இருக்கின்றது


ஒட்டுமொத்த காப்பி, பேட்டண்ட் ரைட்ஸ் என்னிடம்தான் இருக்கின்றது என விரைவில் வருவார் பாருங்கள்






திராவிட நாடு உருவாக வேண்டும் என சிலர் கொடிபிடிக்கின்றார்களாம்


அது முன்பு சொல்லபட்டு பின் இது நடக்காது என கைகழுவ பட்டு, அது கைவிடபட்டு பின் திமுக தேசிய ஜோதியில் கலந்தது


இந்திராவின் மிசா காலத்திலே வராத அந்த கோரிக்கை, மோடி காலத்தில் வருவது ஆச்சரியம்




மாட்டுகறி என்பது நிச்சயம் சர்ச்சை, ஆனால் பாஜக ஒன்றும் மாற்றமுடியாத ஆட்சி அல்ல, இருக்கும் சிக்கலுக்கு அவர்களே ஓடிவிடுவார்கள்


இதில் திராவிட நாடு என சிலர் கொடிபிடிக்கின்றான், மலையாளி, தெலுங்கன் கன்னடன் எல்லாம் அப்படி பேசவே இல்லை


இன்று அல்ல, அவன் என்றுமே பேசவில்லை,


பிராமணர் அல்லாதோர் சங்கம், நீதிகட்சி என மற்ற சாதி உரிமைகளை பேசினார்கள், பெரியாரும் சுயமரியாதை இயக்கம் என அதனையே பேசினார், அதுவரை எல்லாம் நன்றாக இருந்தது


பின்பு அவர் திராவிடநாடு என பேசும்பொழுதுதான் பெரியார் அவர்களிடமிருந்து விலக்கபட்டார், பின் அண்ணா அந்த குரலை நிறுத்தி தமிழக தேர்தலுக்கு வந்து வெற்றியும் பெற்றார்


பிரிவினைக்கு என்றுமே இந்த மாநிலம் கொஞ்சமும் ஆதரவு தெரிவிப்பது அல்ல, இது மட்டுமல்ல மலையாள, கன்னட, தெலுங்கு மாநிலங்களும் அப்படியே


பின் இந்த புரளியினை கிளப்புவது யார் என்றால் இந்த "உணவாளர்கள்",


தனிதமிழ்நாடு சொல்லிபார்த்தார்கள், நாயும் சீண்டவில்லை, அதனால் திராவிட நாடு என கிளம்பிவிட்டார்கள், கிளப்புவது அவர்கள்தான்


அது என்றோ காலாவதியானது என்பது புரியாத இவர்களை ஒன்றும் செய்ய முடியாது



No comments:

Post a Comment