Monday, May 29, 2017

காலா படபிடிப்பு தொடங்கியது, நெல்லை தமிழில் பேசினார் ரஜினி

மும்பையில் காலா படபிடிப்பு தொடங்கியது, நெல்லை தமிழில் பேசினார் ரஜினி


நடிகர்களில் அன்றே இரு வகை , எம்ஜிஆர் சிவாஜி அப்படி. எம்ஜிஆர் சரியாக பேசகூட மாட்டார் அல்லது தெரியாது, ஒரே தமிழ்தான் இறுதிவரை ஆனால் அவர் தான் வசூல் சக்கரவர்த்தி


சிவாஜி அன்றே கொங்கு தமிழ் முதல் எல்லா தமிழும் அட்சரம் பிசகாமல் பேசியவர், எல்லா வகை தமிழும் அவருக்கு அத்துபடி




இப்பொழுது கமல் சிவாஜிவகை, ரஜினி சந்தேகமே இல்லை எம்ஜிஆர் வகையரா


நெல்லை தமிழ் எல்லாம் அவருக்கு பெரும் சவால், பேசாமல் மும்பை தமிழிலே (அப்படி ஒரு தமிழ் உண்டு, மாப்பிள்ளை தனுஷ் படத்தில் விவேக் பேசுவது அதுதான்), ரஜினியினை பேச வைத்துவிடலாம், ரஜினியின் இயல்பு தமிழ் அது


ரஜினி கமலஹாசனாக மாற வேண்டாம், ரஜினியாகவே இருக்கட்டும்


இது வேறு அந்த ரஞ்சித் படம், ரஜினி என்ன பேசியிருப்பார், அதுவும் நெல்லை தமிழில்?? இப்படி இருக்குமோ


"எலேய்.. தமிழேன் எங்க போனாலும் கூழும் கஞ்சியியும்தான் குடிக்கணுமோல., அவன் சப்பாத்தி, பரோட்ட, வடபாவ் எல்லாம் சாப்ட கூடாதால....


நா சப்பாத்தி சாப்படுவேம்ல, நல்லா சால்னா வச்சி சாப்பிடுவேம்ல, உன் முன்னால உக்காந்து சாப்பிடுவேம்ல..


ருசியா, டேஸ்டா நக்கி நக்கி சாப்பிடுவேம்ல‌


உன்னால பொறுக்க முடியலண்ணா சாவுல சவத்து மூதி,


எந்த செறுக்கி பயவுள்ளையாவது சப்பாத்திய புடுங்க வந்தா தூக்கி போட்டு மிதிப்பேம்ல‌ "



No comments:

Post a Comment