Friday, May 26, 2017

"நெல்லை வட்டாரத்தில் எமனை காலா சாமி என்பார்கள்" : ரஞ்சித்

"நெல்லை வட்டாரத்தில் எமனை காலா சாமி என்பார்கள், இது மும்பையில் நடக்கும் நெல்லை வட்டார கதை படம் என்பதால் காலா என பெயரிட்டோம்" : ரஞ்சித்


ஏம்பா நெல்லை மக்கா, கருப்ப சாமி, சுடலைமாடன், இசக்கி தவிர காலாசாமி எங்காவது அந்த பக்கம் இருக்கின்றதா? காலா சாமி கொடை என எங்காவது பார்த்தோமா?


எங்காவது "டேய் நான் காலா சாமிடா.. கரும்பு எங்கடா" என சாமி ஆடியிருக்கின்றதா?




நெல்லையில் சுடலைதான் பிரதானம், அடுத்து இசக்கியும் கருப்பசாமியும், காலா எனும் வார்த்தை நெல்லையில் எங்காவது உண்டா?


இந்த ரஞ்சித் எப்படி அவிழ்த்துவிடுகின்றான் என்பதை நீங்களே முடிவு செய்யுங்கள், நெல்லை மக்களான நம்மிடமே கதைகட்ட வந்துவிட்டார் இவர், என்ன சொல்ல? இவர் இப்படித்தான்.


அய்யா நெல்லை வட்டார கதைக்கு ஏன் ரஜினி BR 1956 காரில் இருக்கின்றார்??


நெல்லை சாதிவெறியில் ஊறிய மண், கொஞ்சம் தொட்டாலும் சீறிகொள்ளும், பெரும் எரிமலைகள் அங்கு உறங்குகின்றன‌


அந்த கணலில் ரஜினி மூலம் பெட்ரோல் ஊற்றாமல் இருப்பது நல்லது


எமனை தமிழில் கூற்றுவன் என்றுதான் சொல்வார்கள் , அவருக்கு தமிழகத்தில் வெள்ளலூர் பக்கம் உள்ளது அதுவும் கோவை பகுதி,


நெல்லை பகுதி அல்ல‌


சினிமா என்பது பொய், அதற்காக இயக்குனர்களும் பொய் சொல்லலாம் , ஆனால் இப்படி பச்சை பொய் சொல்ல கூடாது...


அதுவும் பெயர் விளக்கத்திலே பச்சை பொய், இவர் சொன்னதெல்லாம் நம்ப, எல்லோரும் ரஜினிகாந்தா?


காலாவிற்கு பதிலாக "சுட்லை மாடன்" என பெயர்வைத்துவிட்டு இவர் இப்படி சொன்னால் நாம் மறுக்க முடியுமா?


அட மும்பை நெல்லை தமிழர் என நோக்கினாலும் அங்கு பிள்ளையார்தான் பிரசித்தம், டான் வரதராஜ முதலியார் போன்றவர்கள் அதனைத்தான் உற்சாகபடுத்தினார்கள், கண்பத்தி என அவர்கள் வழக்கில் சொல்வார்கள்,


இதில் காலா சாமி எங்கிருந்து வந்தார்?


இவரின் சிந்தனையும் பேச்சும் காட்சியும் ஆழ்ந்த அறிவில்லா மேம்போக்கானது, அரைகுறையானது , அதனைத்தான் சொல்கின்றோம்



No comments:

Post a Comment