Thursday, May 25, 2017

புதுச்சேரி தமிழனை தமிழகத்தோடு இணைக்கட்டும் ....




No automatic alt text available.


இந்த தமிழுணர்வு இம்சைகள் முதலில் புதுச்சேரி தமிழனை தமிழகத்தோடு இணைக்கட்டும்


அந்த சாதனையினை முதலில் செய்யட்டும், இந்த ஈழம் , தமிழனை தமிழன் ஆள்வது, இன விடுதலை எல்லாம் பின்னர் பார்க்கலாம்


புதுச்சேரியினை தமிழ்நாடு சேர்ப்போம் என்றால் புதுவை மக்கள் செருப்பு பிய்ய பிய்ய அடிப்பார்கள்





இதில் "இலக்கு இன விடுதலையாம்..", அப்படி யாரிடம் அடிமைபட்டிருக்கின்றோம் என்றால் சொல்ல தெரியவில்லை, அவ்வளவு பரிதாபமாக திரிகின்றது அந்த கூட்டம்

இந்தியாவில் நாம் அடிமையா? அப்படியானால் இங்கிருக்கும் 32 மாநிலமும் அடிமையா? அவனெல்லாம் இப்படியா புலம்புகின்றான்?

சரி முதலில் உங்கள் புரட்சியில் புதுவையினை தாய் தமிழகத்தோடு இணையுங்கள் பார்க்கலாம்

மாற்றிவிடுவார்கள், அடிக்கின்ற அடியில் கண் காது மூக்கு என எல்லாம் இடம் மாறிவிடும்...

ஈழத்தை விடுங்கள், இங்கேயே தமிழ்நாடு புதுவை என தமிழன் பிரிந்து கிடக்கின்றானே?? இதெல்லாம் உங்கள் கண்ணுக்கு தெரியாதா?

விஷயம் இதுதான், ஒரு மண்ணும் புடுங்க முடியாது, ஆனால் பேச்சி மட்டும்..............











கொசுறூஸ்


சுதந்திர தினத்தில் ரஜினி புது கட்சி


அதவாது எந்திரன் 2.0 படம் ஜூலையில் வருகின்றது என உலகிற்கு மறைமுகமாக சொல்லிகொள்கின்றார்கள்













 ஆட்சியை தக்கவைப்பதற்காக டெல்லி செல்வதிலேயே தமிழக அரசு குறியாக இருக்கிறது: விஜயகாந்த்

இப்படியா சொல்ல வேண்டும் விஜயகாந்த்??

"டேய் வைகோ, உன்னால நான் கலைஞர் பக்கம் போகமுடியாம அம்மா ஜெயிச்சி அதுவும் செத்து என்னெல்லாம் நடக்குண்ணு பார்டா..." என அவர் கழுத்தில் துண்டை முறுக்கி சொல்ல வேண்டாமா?




இந்தியா அத்துமீறினால், அவர்கள் தலைமுறைகள் கடந்து வருந்தும் அளவுக்கு பாகிஸ்தான் தயார் நிலையில் இருக்கிறது

போய்யா...இங்காவது தலைமுறை வருந்தும், அங்கு வருந்த கூட ஒரு பயலும் உயிரோடு இருக்க மாட்டான், ஒரு புல் பூண்டும் இருக்காது




 

No comments:

Post a Comment