Monday, May 22, 2017

2004ல் பிரபாகரன் பேட்டி ...




Image may contain: 1 person, standing, sunglasses and outdoor


2004ல் பிரபாகரனை ஒரு ஊடகவிய‌லாளர் பேட்டி எடுத்தார், தனிபட்ட பேட்டி அது, அதில் பிரபாகரன் நிறைய பேசினார், அரசியல் துளியும் இல்லை, சிங்கள பேரினவாதம் அது இது என சொல்லிகொண்டே இருந்தார்


அந்த நிருபர் கிடுக்கிபிடி கேள்விகளை கேட்டார், இப்படியாக‌


"ராஜிவ் கொலைக்கு பின் இந்தியாவில் புலி ஆதரவு எப்படி இருக்கின்றது?





எம்மீதான தடையினை நீக்க இந்தியாவில் தமிழ்மக்கள் போராடுவார்கள் என்ற நம்பிக்கை உண்டு.

ராஜிவ் கொலையால்தானே தடை வந்தது? அது பற்றி?

(இதற்கு ஒருநாளும் பிரபாகரன் பதில் சொன்னதே இல்லை,, மாறாக இப்படி இழுத்தார்)

அதற்காக திருச்சி வேலுச்சாமி போன்றவர்கள் போராடுகின்றார்கள், எப்பொழுதுமே நாம் இந்தியாவினை நட்பு நாடாக பார்க்கின்றோம், சிங்களனை விட புலிகளே இந்தியாவிற்கு விசுவாசமாக இருக்க முடியும், எம்மீதான தடையினை நீக்க வேண்டும்

அய்யா அந்த ராஜிவ் கொலைபற்றி...

நாம் இந்தியாவிற்கு நேசகரம் நீட்டுகின்றோம்

இந்தியா இன்னும் ஈழவிஷயத்தில் தலையிடும் என நம்புகின்றீர்களா?

ஆம், எங்களை தேடி நிச்சயம் வரும், நாங்களும் அவர்களுடன் நட்பாகவே இருக்க விரும்புகின்றோம், எங்களை இனியாவது இந்தியா புரிந்துகொண்டு எங்கள் போராட்டத்தை அங்கீகரிக்க வேண்டும்

உங்கள் கவனமெல்லாம் ஆயுதத்திலே இருக்கின்றதே?

ஒரு இனம் வலுவாக இருக்க ஆயுதம் அவசியம், இந்தியா போன்ற நாடுகள் பெரும் பட்ஜெட்டில் ராணுவத்தை பலபடுத்துவது ஏன்? நாங்களும் அதனைத்தான் செய்கின்றோம்

(இந்தியா எனும் பெரும் தேசமும் இவரும் ஒன்றா?)

ஈழம் அமைந்தால் அதில் எப்படிபட்ட ஆட்சி, ஜனநாயகமா சர்வாதிகாரமா?

எங்கள் ஆட்சிதான் நடக்கும்..

இந்தியாவில் புலிகள் தடை நீங்குமா? எப்படி?

நாங்கள் இப்பொழுது இறுக்கமான அமைப்பு அல்ல, பழைய சம்பவங்களை வைத்துகொண்டு இப்பொழுது எமக்கு தீர்ப்பிட கூடாது, இந்தியா என் நண்பன் கிட்டுவினை கொன்றது அதற்கு நாங்கள் பழிவாங்கயில்லை , பொறுமை காக்கின்றோம்..

(என்னது இந்தியாவினை பழிவாங்குவாரா??.. இன்னும் தொடர்ந்தார் பாருங்கள்)

அண்ணன் கோப்பால்சாமி அவர்களும், பழநெடுமாறன் போன்றவர்களும் இந்தியர்கள்தான், அவர்கள் எம் போராட்டத்தின் நியாய தர்மங்களை புரிந்துகொண்டு எமக்காக போராடுகின்றார்கள், அவர்களால் எம்மீதான தடை நீங்கும்

இதற்கு மேல் என்ன சொல்ல, புலிகள் எப்படி அழிந்தார்கள் என இனியும் சொல்ல என்ன இருக்கின்றது?, வைகோவினை நம்பியெல்லாம் காத்திருந்திருக்கின்றார்கள்

வைகோவினையும், பழநெடுமாறனையும் நம்பி அழிந்திருக்கின்றார் பிரபாகரன் , ஆனால் இவர்கள் திட்டுவது எல்லாம் கலைஞரை

அந்த தடை நீக்கும் வழக்கில் வைகோ வாதாடி ஒன்றும் கிழிக்கவில்லை என்பது இன்னொரு விஷயம்..

வைகோவும் பழநெடுமாறனும் இந்திய அரசை பணிய வைத்து புலிகள் மீதான தடையினை நீக்கி தன்னை வாழவைப்பார்கள் என்று நம்பிய அந்த அப்பாவி பிரபாகரனை என்ன சொல்வது?

( பிரபாகரன் எம்ஜிஆரின் சுயரூபம் கண்டபின் அவரை பற்றி அதிகம் சொன்னதில்லை, ஆனால் அவர் செய்த பண உதவிகளை சொல்லியிருக்கின்றார்

கலைஞரை பற்றி ஒருவார்த்தை கூட பிரபாகரன் குற்றம்சாட்டி பேசியதில்லை,

தன்னை தூக்கிடவேண்டும் என சொன்ன ஜெயா பற்றி கூட அவர் பேசியதில்லை, பிரபாகரனின் சுவாபவம் அது, ஒரு மாதிரியானவர் அவர்.

இந்த விஷயங்களை எல்லாம் அவர் தவிர்த்தே வந்தார்

இன்னொரு விஷயம் , இந்த பேட்டியில் மட்டுமல்ல எந்த பேட்டியிலும் சீமான் என்றொரு பெயரையோ, திருமுருகன், வேல்முருகன் என்றொரு பெயரையோ சொன்னதே இல்லை

இப்படி சிலர் உண்டு என்பதே அவருக்கு தெரியாது, இன்று அவர்கள் எல்லாம் கத்திகொண்டிருப்பதுதான் வினோதம்)













 


 

No comments:

Post a Comment