Tuesday, May 23, 2017

சர்ச்சையான சந்திராசாமி காலமானார்




Image may contain: 3 people, people standing and beard


சர்ச்சையான சந்திராசாமி காலமானார்


ராஜிவ் கொலைவழக்கின் மிக முக்கியமான மர்ம புள்ளி அவர், ஆயுத வியாபாரியான அவர் மூலம்தான் அந்த பெல்ட்பாம் கொண்டுவரபட்டது எனும் செய்தி உண்டு


அவரை சிவராசன் சந்தித்ததாகவும், யாகம் நடத்தி அவர் அந்த பெல்ட்டினை ஆசீர்வாதம் செய்த்ததாகவும் அன்றைய பத்திரிகைகள் எழுதின‌





அந்த ஆர்டிஎஸ் பாம் புலிகளின் சொந்த தயாரிப்பு அல்ல, அது மிக நுட்பமான விஞ்ஞான தயாரிப்பு

ராஜிவ் கொலைக்கு பின் தெற்கு கடல்காவல் வலுபெற்றதால் நேபாளம் வழியாக இலங்கைக்கு தப்பும் சிவராசன் இவரை மையமாக கொண்டே வடக்கு நோக்கி நகர்ந்தான்

ராஜிவ் கொலை டெல்லி அல்லது சென்னையில் திட்மிடபட்டது, சென்னையில் தவறியிருந்தால் அது டெல்லியில் முடிந்திருக்கும், அன்று டெல்லியில் தயாராக இருந்த இன்னொரு மனித வெடிகுண்டு ஆதிரைக்கு சில உதவிகளை இவர் செய்ததாக சர்ச்சை

இவரை ஏன் கடைசிவரை போட்டு சாத்தி விசாரிக்கவில்லை என்றால் அதுதான் மர்மம்,

ராஜிவினை கொன்றது புலிகள் சந்தேகமில்லை, ஆனால் புலிகள் வாய்திறந்தால்தான் இம்மாதிரி ஆசாமிகள் சிக்குவார்கள், அவர்களோ கனத்த மவுனம்

ராஜிவ் கொலைக்கு பின் புலிகளுக்கு 11 கப்பல் நிறைய ஆயுதம் கிடைத்தது, அந்த ஆயுதம் கொடுத்த சர்ச்சையிலும் சாமி இருந்தார்

ராஜிவ் கொலையில் மர்மம் இருவருக்கு நன்கு தெரியும், ஒருவர் இந்த சாமி, இன்னொருவர் கே.பத்மநாபன் அவர் இன்றும் இலங்கையில் சிங்கள அரசிடம் தான் இருக்கின்றார்

இந்தியா அவரை ஒப்படையுங்கள் எனவும் கேட்காது , ஏன் என்றால் அப்படித்தான்

ஆக ராஜிவ் கொலையின் மிக மர்ம புள்ளி ஒன்று ரகசியத்தை சுமந்துகொண்டே செத்துவிட்டது, அந்த ரகசியமும் செத்துவிட்டது

சாமிகளுக்கு மிக பாதுகாப்பான நாடு இந்தியா, எந்த சாமியினையும் எந்த ஆச்சாரியரையும் யாரும் நெருங்கமுடியாது , அதுவும் வடக்கத்திய சாமி என்றால் அவ்வளவுதான்

அப்படி சுகவாழ்வு வாழ்ந்தவர் இந்த சாமி

இலங்கையில் இருக்கும் பத்மநாபனையாவது பிடித்து விசாரித்து அடுத்த தலைமுறைக்கு உண்மையினை சொல்லும் கடமை இந்தியாவிற்கு உண்டு

ஆனால் சில இடங்களில் தன் கடமையில் இந்தியா அதீத மர்மம் காட்டும், அதில் இதுவும் ஒன்று

இப்படிபட்ட விசாரனை கமிஷனை விட தனுவும், அந்த சிங்களன் விஜயதமுனியும் அவ்வளவு மோசமானவர்கள் அல்ல‌













 


 

No comments:

Post a Comment