Saturday, December 31, 2016

"கேட்டாச்சி கேட்டாச்சி சின்னம்மா ஊமை இல்லை"

https://youtu.be/cX7nZIAgV4Q



ஏதோ ஒரு படத்தில் விவேக் கை இல்லாதவர் போல நடிப்பார், ஆனால் அந்த கையினை கண்டுவிட்டு வடிவேலு ஓடிவருவார்


"பார்த்துட்டேன்..பார்த்துட்டேன்.புரூஸ் பார்த்துட்டேன்"


அப்படி சின்னம்மா பேச்சினை கேட்டுவிட்டவுடன் நானும் ஓடினேன், "கேட்டாச்சி கேட்டாச்சி சின்னம்மா ஊமை இல்லை"





ஓடிவிட்டு மெதுவாகத்தான் அவரின் பேச்சினை கவனித்தேன்

ஒரு சாமன்யபெண் சசிகலா

30 வருடம் ஜெயாவுடன் இருந்ததால் அந்த பேச்சு ஸ்டைல் ஒட்டி இருக்கலாம், அப்படி அடியொற்றி இருக்கின்றது, ஜெயாவிற்கு எழுதி கொடுத்தவர் அப்படியே சசிகலாவிற்கும் கொடுத்திருக்கின்றார்

ஆக அது சசிகலாவின் இயல்பான குரல் அல்ல, ஆனால் அப்படியே அதிமுக குரல்.

உண்மையில் அதிமுகவினர் எங்கிருந்து பட்டம் எடுப்பார்களோ தெரியாது, இனி சசிகலா "புதுமை தலைவி" என அழைக்கபடுவாராம்

வரலாற்றில் வேலைக்காரராக வந்து அரசினை கைபற்றியவர் மிக சிலர்

ஹைதர் அலி, நெப்போலியன் என வெகு சிலர்

அந்த புதுமையினை சசிகலா செய்திருப்பதால் அவர் "புதுமை பெண்" என அழைக்கபடுவதில் ஆச்சரியமில்லை

புரட்சி கட்சி இப்பொழுது புதுமை கட்சியாகிவிட்டது

அதனால் அந்த கட்சியினர் இனி "புதுமை பித்தன்கள்" என அழைக்கபடுவார்கள் என எதிர்பார்க்கலாம்

பொறுப்பும் வந்தாகிவிட்டது, பேச்சும் வந்தாகிவிட்டது இனி என்ன?

அடுத்த பேச்சு விரைவில் எப்படி இருக்கும்?

"நான் கனவிலும் கற்பனையும் நினைக்காத ஒன்று இது" என முதல்வர் நாற்காலியில் இருந்து சசிகலா பேசிகொண்டிருப்பார்

2016ல் டிசம்பர் 31ல் ஒரு இயக்கத்தின் தலைவியாக சசிகலா பேசுவார் என பிரம்மன் எழுதிய எழுத்து நிறைவேறிவிட்டது.

பன்னீர்செல்வம் எப்பொழுதும் இடைக்கால முதல்வர் என அவர் தலையில் பிரம்மன் எழுதியிருக்கின்றான்

அவர் தலைவிதியினை எழுதும்பொழுது விட்டு விட்டு எழுதினானோ என்னமோ?














ஜோதிமணி, குஷ்பூ போன்றவர்களை ஒன்றும் செய்ய முடியாது...

Jothimani Sennimalai


சகோதரி ஜோதிமணியினை பாஜகவினர் மிக தரகுறைவாக விமர்சித்த செய்திகள் அணல் பறக்கின்றன‌


இது ஒன்றும் புதிதான நிகழ்வு அல்ல, பெண்கள் மீது எல்லா துறைகளிலும் வீசபடும் ஆயுதம் இது. பதில் கருத்து ஒன்றும் இல்லா நிலையில் பெண்ணை ஆபாசமாக திட்டி அவளை மன ரீதியாக உடைய வைக்கும் ஒரு வித மனவியல் தாக்குதல் இது


எல்லா நாட்டு கலாச்சாரத்திலும் இது ஊறி கிடக்கின்றது, எந்த இனமும் விதிவிலக்கு அல்ல.


சில நாகரீக சமுகம் என தங்களை சொல்லிகொள்ளும் சமூகம் கொஞ்சம் இவற்றினை குறைத்திருக்கின்றது அவ்வளவுதான், ஆனாலும் அவர்கள் மன அடி ஆழத்தில் அது ஒளிந்திருக்கின்றது


தமிழகத்தில் 1960க்கு முன்புவரை அரசியலில் பெண்களின் பங்களிப்பு குறைவு, அப்பொழுது மேடைபேச்சுக்களில் ஒரு தரம் இருந்தது


அதன் பின் திராவிட கட்சிகளின் அரசியலில் அந்த நாகரீகம் மறைந்தது, இந்திரா தாக்கபட்டபொழுது திமுகவினர் கொடுத்த அநாகரீக வார்த்தைகள் கால கொடுமை, தமிழனின் இம்மாதிரியான ஆபாச வார்த்தைகள் இந்தியவினை அதிர வைத்தன‌


பின் ஜெயா காலத்தில் தீப்பொறி ஆறுமுகம், வெற்றி கொண்டான், எஸ் எஸ் சந்திரன் போன்றோர் பேசிய பேச்சுக்கள் எல்லாம் வாந்தி எடுக்கும் ரகம்


திமுக தலமையும் அமைதியாக அவர்களை ரசித்தது


ஜெயலலிதா இத்தனை அவமானங்களையும் தாண்டித்தான் ஜெயித்தார், திமுகவினர் இப்படி திட்ட திட்ட அவர் மீது மக்களுக்கு ஒரு அனுதாபம் வந்து, இறுதியில் அவர் என்ன தவறு செய்தாலும் ஏற்றுகொள்ளும் நிலைக்கு வந்தனர்


பெண்கள் அரசியலுக்கு வந்தால் கொள்கை ரீதியாக விமர்சிக்கலாம், பதில் சொல்லலாம் அதனை விட்டு கடும் ஆபாச சொற்களால் தாக்குவது சரி ஆகாது


ஆனால் துணிந்து நிற்கும் பெண்கள் இவற்றை எல்லாம் புறந்தள்ளி மேலே வந்துவிடுவார்கள்


ஜெயா காட்டிய வழி அதுதான், அவர் மீது வீசபட்ட சேறு கொஞ்சமல்ல, எதுவும் அவரை பாதிக்கவில்லை


குஷ்பூ அப்படித்தான் அரசியலில் தனக்கொரு இடத்தினை பிடித்திருக்கின்றார்


கனிமொழி மீதும் வீசபடும் சேறு கொஞ்சமல்ல, அவரும் தந்தையினை போல தாங்கியே வருகின்றார்


சகோதரி அப்படி தாண்டி வரட்டும்


சகோதரி உண்மையில் கொஞ்சம் பக்குவபட்டவர், நிதானமாக எதிர்கொள்கின்றார், வாழ்த்துக்கள்


நிச்சயம் இம்மாதிரியான பேச்சுக்கள் எல்லாம் ஏற்புடயவை அல்ல, பெண்களுக்கு எதிரான பெரும் குற்றங்களில் வரவேண்டியவை


ஆனால் இம்மாதிரி திட்டினால் அவருக்கு பரிதாபமும் ஆதரவும் பெருகும் என்பது கூட தெரியாத தமிழக பாஜகவினரை என்ன சொல்ல?


அவர்கள் அரசியல் அறிவு அவ்வளவுதான்


இதில் ஒரு விசித்திரம் உண்டு


இந்த பாஜக மாந்தர்கள், ஜோதிமணியினை விமர்சித்ததை விட மிக மிக மோசமான விமர்சனங்களை வைப்பவர்கள் நாம் தமிழர் கட்சியினரும், தமிழ் தேசியம் பேசுபவர்களும்


காது கொடுத்தால் அல்ல, கண்ணால் பார்த்தால் கூட கண் கெட்டுவிடும் வார்த்தைகள் அவை


ஆனால் அவர்களை யாரும் கண்டுகொள்ளவே இல்லை


பாஜக உறுப்பினர்களை இன்று குதறிகொண்டிருக்கும் யாரும், அந்த பாவபட்ட நாம் தமிழர்களை கண்டுகொள்ளவில்லை


அவர்கள் தலைவர் சீமானை யாரும் கண்டுகொள்ளாதது போல, இவர்களின் கீழ்தரமான விமர்சனங்களையும் எல்லோரும் அவர்கள் அப்படித்தான் என தள்ளிவிட்டார்கள்


தமிழக பாஜகவினரும் இப்பொழுது அந்த நிலைக்கு சென்றுகொண்டிருக்கின்றார்கள்


ஒரு பெண்ணை எதிர்க்க முடியா நிலையில், இப்படியான ஆபாச வார்த்தைகளை வீசி அவளை நிலைகுலைய செய்யலாம் என நினைப்பவர்கள் மகா பெரும் கோழைகள்


மிக மிக அவமானமான கோழைகள்


அவ்வளவுதான் சொல்ல முடியும்


இந்த கோழைகள் எப்படி தெரியுமா?


வளர்பவர்களை விமர்சிப்பார்கள், அவர்கள் வளர்ந்து உச்சம் தொட்டுவிட்டால் அப்படியே அமுங்கி விடுவார்கள்


ஜெயாவிடம் அப்படித்தான் பம்மினார்கள்,


ஜோதிமணியினை விமர்சிப்பவர்கள், இதோ நாளைய முதலமைச்சர் சசிகலா எங்காவது மக்கட் நலனில் அக்கறைகொண்டு மோடியினை விமர்சித்துவிட்டால் இப்படி கிளம்புவார்களா?


ஏதும் சொல்லிவிட்டு தமிழகத்தில் இருக்க முடியுமா?


நடக்காது, பின் வேறு யாரையாவது திட்ட சென்றுவிடுவார்கள்


என்னமோ திராவிட கட்சிகளின் ஸ்டைலை பாஜகவும் காப்பி அடிப்பதுதான் காலகொடுமை


இப்பொழுதெல்லாம் திமுகவினர் இதனை எல்லாம் விட்டுவிட்டார்கள், கனிமொழியின் வரவுக்கு பின்னால் பழைய திமுகவின் முகம்சுழிக்கும் பேச்சுக்கள் இல்லை


அதனை பாஜக தொடங்கிவிட்டது.


ஆனால் ஜோதிமணி, குஷ்பூ போன்றவர்களை இவர்களால் ஒன்றும் செய்ய முடியாது,


இவர்களால் இவ்வளவுதான் முடியும், இதனை விட என்ன செய்துவிட முடியும்??

சின்னம்மா அதிமுக பொது செயலாளராக பதவி ஏற்றார்...

https://youtu.be/_gAdt9nGf_k

 

எம்ஜிஆர், ஜெயா சமாதிகளில் சசிகலா அஞ்சலி, அண்ணா சமாதியிலும் அஞ்சலி செலுத்தினார்

ஜெயா, எம்ஜிஆர் சமாதி சரி, அண்ணா சமாதியில் எதற்கு அஞ்சலி, அவர்தான் இந்த கட்சிக்கு பிதாமகன் என்பதற்கா?

இருக்கலாம்


ஆனால் அப்படியே கோபாலபுரம் சென்று கலைஞரிடமும் ஒரு ஆசி வாங்கி இருக்கலாம்

சசிகலா நடராஜன் திருமணத்தினை அவர்தான் ஒருகாலத்தில் நடத்தி வைத்தவர்

அது என்ன ராசியோ கலைஞருக்கு?

அவரை ஆதரித்தவர்கள்/எதிர்த்தவர்கள் மட்டுமல்ல, எதிர்த்தோருடன் இருந்தவர்கள் கூட சிகரம் தொடுகின்றார்கள்

இன்றைய தேதியில் சசிகலா ஆசிவாங்க கலைஞரை தவிர பொருத்தமானவர் யாருமில்லை

எம்ஜிஆர் , ஜெயா, சசிகலா என எல்லோரும் கலைஞர் இன்றி உருவாகியிருக்க முடியாது.

இது சசிகலாவின் ஆள்மனதிலும் நிச்சயம் இருக்கும்.

Friday, December 30, 2016

இந்த வருடம் முடியபோகின்றது ...





இந்த வருடம் முடியபோகின்றது


வழக்கம் போலவே இந்த வருடமும் வெட்டியாக கழிந்தது, மனதிற்கு தோன்றுவதை கிறுக்கி வைத்ததில் பல நண்பர்கள் கிடைத்தார்கள், அவர்களில் பலர் பயனுள்ளவர்கள்


பயனுள்ளவர்கள் என்றால் அவரைக்காயிலிருந்து ஆட்டுகுடல் வரை எப்படி விதம் விதமாக சமைப்பது என சொல்லி தருகின்றார்கள், அப்படி பல நண்பர்களை பெற்றது மிக்க மகிழ்ச்சி




இது ஒரு பொழுதுபோக்கு தளம், இங்கு புரட்சியோ சீரியஸ் கருத்துக்களோ வேலைக்கு ஆகாது


அதோ பார்த்தீர்களா ஹா ஹா ஹா, இதோ பார்த்தீர்களா ஹோ ஹோ , இப்படி நடந்துவிட்டால் ஹிஹிஹி என சிரித்துவிட்டு நகர்ந்து விடுவதை தவிர் ஒன்றும் செய்துவிட முடியாது


அதனால் உறுதியாக சொல்லலாம் என்னுடன் இருக்கும் முகநூல் நண்பர்கள் எல்லாம் ஜாலி பேர்வழிகள், சீரியசான கொள்கை பற்றாளர்களை அருகில் வைத்துகொள்ளவே கூடாது


அது மதமோ, அரசியலோ, இனமோ, மொழியோ எவ்வகை சீரியஸ் பார்ட்டிகளுக்கும் நம் அருகில் இடமே இல்லை


அது ஐஎஸ் இயக்கம் அருகில் இருப்பதை விட ஆபத்தானது, நம்மையே மாற்றினாலும் மாற்றிவிடுவார்கள்


நம்மை பொறுத்தவரை ரசிக்க உலகில் ஏராள விஷயங்களும், சிரிக்க ஏராளமன விஷயங்களும் உண்டு


ரசிக்க பல விஷய்ம் உண்டு எனினும் சிரிக்க வைப்பது சாட்சாத் நமது அரசியல்வாதிகளே


இப்படி எந்த நோக்கமும் இன்றி சும்மா சுற்றிவரும் என்னையும் நண்பனாக ஏற்றுகொண்டவர்களுக்கு நன்றிகள்


பிறக்கும் புத்தாண்டு எல்லா நண்பர்களுக்கும் நல்ல ஆண்டாக அமையட்டும்


எல்லா நண்பர்களும் முக்கியமானவர்கள் எனினும் நண்பர் Ramamoorthy Vanamamalai Nanguneri சிறப்பானவர், என் பதிவுகளை எல்லாம் அவரே தொகுக்கின்றார்,


என் எழுத்து எனக்கு பிடித்தது அல்ல‌,ஆனால் அந்த தொகுப்பினை கண்டால் அவ்வளவு மோசமில்லை என்றே தோன்றுகின்றது


மிகசிறந்த நண்பர்களில் அவரும் ஒருவர்.


இப்படி பல அருமையான நண்பர்கள் Babu Rao போல கிடைத்திருக்கின்றார்கள், நயந்தாராவிற்கு கல்யாணம் ஆகாத வரை நட்பு தொடரும், காரணம் நயனின் திருமண செய்தி நண்பரை சாய்க்காமல் விடாது


எனினும் நயன் பற்றி வரும் செய்திகளை கண்டால் நண்பரின் நட்பு காலத்திற்கும் தொடரும் போல தெரிகின்றது


எல்லோரும் புத்தாண்டு சபதம் என ஒன்றை எடுப்பார்கள்


நமக்கு அது அவசியமே இல்லை, காரணம் பல ஆண்டுகளாக எடுத்துகொண்டிருக்கும் அதே சபதத்தை இந்த ஆண்டும் எடுத்துவிட வேண்டியதுதான்,


பல ஆண்டுகளாக அந்த லட்சியம் நிறைவேறாதபடியால் அடுத்த வருடமும் அதுவே சபதமாகின்றது


அப்படி என்ன லட்சியம்?


இந்த வருடமாவது குஷ்பூவினை சந்தித்து ஒரே ஒரு படம் எடுத்து (தள்ளி நின்றுதான்), அதனை பெரும் பிரேம் போட்டு வீட்டில் தொங்க விட வேண்டும.


பல காப்பிகள் போட்டு வைக்க வேண்டும், திரும்பும் இடமெல்லாம் வீட்டில் அப்படமே தெரிய வேண்டும்


இதனை விட பெரும் வாழ்க்கை லட்சியம் என்ன இருந்துவிட முடியும்?


பிறக்கும் அடுத்த வருடமாவது என் லட்சியம் நிறைவேட்டும்,







கடவுளே "சின்னமாவிற்கு பேச்சு கொடு" என்ற கோஷம் இனி தமிழகமெல்லாம் ஒலிக்கும்

மறுபடியும் அடிமைகள் மண்சோறு, அலகு குத்துதல், காவடி எடுத்தல், தீ மிதித்தல் போன்ற பக்திகளில் மூழ்க வாய்பிருக்கின்றது


எதற்கு?


பொதுகுழு எனும் பட்டத்து யானை மாலை சூட்டிய பின்னும் சின்ன அம்மாவிற்கு பேச்சு வரவில்லை என்றால் என்ன செய்ய?




அதுதான் வழி, விரைவில் பால்குடம் எடுக்க கிளம்புவார்கள்


சின்னமாவிற்கும் ஆலோசனை கொடுப்பார்கள்


சின்னம்மாவும் சரஸ்வதி சபதம் சிவாஜி கணேசனாக இப்பொழுது தெய்வத்திடம் முறையிட்டு கொண்டிருப்பார்


இனி அந்த தெய்வமே வந்து "செல்வம், கல்வி,கட்சி மக்கள் செல்வாக்கு என்பதை விட நட்பே பெரிதென்று நிரூபி,


எல்லாவற்றையும் நட்பில் அடிமையாக்கு, நட்பே பெரிது என்பது உன்னால் உலகெல்லாம் விளங்கட்டும்" என ஆசீர்வதிக்கும்,


பின் சின்னம்மா "அம்மா, அப்பா, எம்ஜிஆர், ஜெயா, நடராஜன், கட்சி, ஆட்சி, பொதுசெயலாளர், பன்னீர், முதல்வர்" என சரஸ்வதி சபதம் சிவாஜி போலவே ஒவ்வொரு வார்த்தையாக படிப்பார்


அனைத்தும் வந்துவிட்டது, அனைத்து வந்துவிட்டது என மகிழ்ந்து ஜெயா படத்தின் முன்பு வந்து


"அகர முதல எழுத்தெல்லாம் அறிய வைத்தாய் தேவி
எம்ஜிஆர், ஜெயா முதல் என்றே புரிய வைத்தாய் தேவி
கட்சி, ஆட்சி , போயஸ் தீபம் ஏற்றிவைத்தாய் நீயே
நடராஜன் நெஞ்சினை குளிரவைத்தாய் தாயே"


என பாடிவிட்டு பத்திரிகையாளரை சந்திக்க வருவார்


இப்படி நடக்க‌ அடிமைகள் மறுபடியும் கோயில் கோயிலாக சென்று உருளவேண்டும்.


ஆக அடிமைகள் மறுபடியும் ஆலய அழிச்சாட்டியம் செய்யும் காலம் வந்தே விட்டது


கடவுளே "சின்னமாவிற்கு பேச்சு கொடு" என்ற கோஷம் இனி தமிழகமெல்லாம் ஒலிக்கும்.







சீமான் கும்பல் வரிசையோடு சின்னம்மா ஆதரவாளர்களும் சேர்ந்துவிட்டார்கள்

சீமான் என்பவர் பேசியே கொன்றார்

சின்னம்மா பேசாமலே கொல்கின்றது


அது என்னமோ சி என்றாலும் சீ என்றாலும் நமக்கு சீசீ என்று சிக்கலாகவே அமைகின்றது.




 


அரசியலில் யாரையும் நம்ப கூடாது....





காமராஜர் தமிழக காங்கிரஸ் தலைவராக அதாவது தனக்கு எதிரான கட்சியின் தலைவராக இருந்தபொழுது அவரின் ஒவ்வொரு அசைவினையும் விமர்சித்த கலைஞரை


எம்ஜிஆர் கட்சியின் பொதுசெயலாளராகும்பொது நடிகர் கட்சி, அட்டை கத்தி என்றெல்லாம் வாட்டிய கலைஞரை


ஜெயா ஜாணகி என பிரிந்து நின்றபொழுது நிமிடத்திற்கொருமுறை அறிக்கை அனுப்பிய கலைஞரை





ஜெயா ஆட்சியினையும், கட்சியினையும் கைபற்றும்பொழுது அம்மையார் என சொல்லி சொல்லி விமர்சித்த கலைஞரை

சசிகலா பொறுப்புக்கு வரும்பொழுது காணவே இல்லை, அவருக்குத்தான் வயதாகிவிட்டதென்றால், அடுத்த வாரிசாவது சில கருத்தோ, வாழ்த்தோ சொல்ல கூடாதா?

பல விஷயங்கள் நோக்க கூடியவை

1996ல் ஜெயலலிதாவினை முடக்க காட்டிய வேகங்களை 2001க்கு பின் திமுக குறைத்துகொண்டது

அதன் பின் ஜெயா ஆட்சியில் கலைஞருக்கோ, கலைஞர் ஆட்சியில் ஜெயாவிற்கோ சிக்கலே இல்லை

மாற்றி சொல்ல வேண்டுமென்றால் கலைஞரின் ஆட்சியில் சசிகலாவின் மிடாஸ் இயங்கியது, ஜெயா ஆட்சியில் கலைஞர் கும்பலின் பீர் கம்பெனி இயங்கியது

அதாவது ஒரு புரிந்துணர்வுக்கு வந்திருக்கின்றார்கள்

உனக்கு நான் மட்டும் எதிரி, எனக்கு நீ மட்டும் எதிரி. அவ்வப்போது மோதிகொள்வோம் ஆனால் ஒருவர் பிசினஸில் இன்னொருவர் தலையிட கூடாது, குறிப்பாக இன்னொரு கட்சி வளர்ந்துவிட கூடாது

இன்று சசிகலா பொறுப்பு வந்தபின்னும் திமுக பக்கம் ஒரு சலசலப்புமில்லை, 25 வருடமாக ஜெயாவுடன் இவர்தான் இருந்தார், இனி இவர் மட்டும் இருப்பார் மற்றபடி சிக்கல் இல்லை என அவர்கள் ஒதுங்கிகொண்டது போல் தெரிகின்றது

சன்டிவியின் செய்தி அணுகுமுறை அதனைத்தான் சொல்கின்றது

அரசியலில் யாரையும் நம்ப கூடாது என்பார்கள்,

அரசியல் கட்சியிலும் யாரையும் நம்ப கூடாது என்பது மட்டும் விளங்குகின்றது








மலேசிய முன்னாள் பிரதமர் துன்.டாக்டர் மகாதீர்

https://youtu.be/llYFPbYFU2U

 



அந்த காட்சி மறுபடி மறுபடி கண்ணில் வருகின்றது


அந்த மாலைபொழுதில் கோலலம்பூர் இரட்டை கோபுர உள்வளாகத்தில் சுற்றிகொண்டிருந்தேன், ஒரு சிறு கூட்டத்தின் நடுவே அந்த முதியவர் புன்னகை பூக்க ஆட்டோகிராப் கொடுத்துகொண்டிருந்தார், அவரின் இரு மெய்காப்பாளர்கள் மட்டும் இருந்தார்கள்,


அந்த கூட்டத்தில் 10 பேர்தான் இருப்பார்கள், கையெழுத்து வாங்கியதும் பெரும்பாலும் அவரை அடையாளம் கண்ட வெளிநாட்டவர்கள்.


நெருங்கி பார்த்தால் அவர் மலேசிய முன்னாள் பிரதமர் துன்.டாக்டர் மகாதீர் அவர்கள்


ஒரு கணம் மயக்கமே வந்தது, எப்படிபட்ட மனிதர் அவர், மலேசிய நாட்டிற்கு அவர் செய்திருக்கும் சாதனைகள் என்ன, கொஞ்சமா?


22 ஆண்டுகள் மலேசியாவினை ஆண்டார், நவீன உலகளவில் அதற்கு இடம் பிடித்துகொடுத்தார்.


கோலாலம்பூருக்கு புது அடையாளங்களை உருவாக்கினார், இரட்டை கோபுரமும், இணைய நகரான சைபர் ஜாயாவும், புது நிர்வாக நகரான அழகான‌ புத்ராஜாயாவும் , மிகபெரும் விமான நிலையமும் அவரால் கொண்டுவரபட்டவை


1998ல் பெரும் பொருளாதார தேக்கம் கிழக்காசியாவினை தாக்கியபொழுது மிக சாதுர்யமாக மலேசியாவினை காப்பாற்றியவர்.


இஸ்லாமிய மக்களின் அமைதிக்கு அவர் ஆற்றிய உரைகள் உண்மையில் நோபல் பரிசுக்கு தகுதியானவை.


மலேசியாவிற்கு அவர் ஆற்றியிருக்கும் சேவை மிக பெரிது, மிக மிக பெரிது,


இன்றுவரை நல்ல ஆலோசனைகளை சொல்லிவருபவர், சிங்கப்பூருக்கு ஒரு லீ என்றால் மலேசியாவிற்கு ஒரு மகாதீர் என்பதுதான் வரலாறு எழுதிகொண்டது


மலேசிய மக்கள் எல்லா நவீன வசதிகளை அனுபவிக்க அவரும் ஒரு காரணம்


அப்படிபட்ட மகாதீர் முகமது அவர்கள் வந்தபொழுது பெரும் கூட்டமில்லை, அருகிலிருந்த கடையில் ஒரு பெண்ணிடம் கேட்டபொழுது அவர் புன்னகை பூக்க சொன்னார்


"ஆம், அவரை நாங்கள் மிக மதிக்கின்றோம், கொண்டாடுகின்றோம். அவரின் சேவைகள் பெரிது, எங்கள் நாட்டை உயர்த்தி எங்களை எல்லாம் வாழ வைத்திருக்கின்றார், பெரும் அடையாளம் நாட்டிற்கு கொடுத்திருக்கின்றார்.


ஆனால் இங்கு அவர் வேலை நிமித்தமாக வந்திருக்கின்றார்,


நாங்கள் எங்கள்வேலையினை பார்க்கின்றோம், அவர் வந்த வேலையினை அவர் பார்ப்பார், என் வேலையினை நான் பார்க்க வேண்டாமா?"


அவ்வளவு பெரும் தலைவர் வரும்பொழுது தோரணம் இல்லை, கூட்டம் இல்லை, பாதுகாப்பு கெடுபிடி இல்லை, வாழ்க கோஷம் இல்லை, கேமரா இல்லை, டிவி சேணல் இல்லை


ஒரு சாதாரண மனிதனாக அவர் நடந்துசென்றபொழுது மனம் நம்ப மறுத்தது.


இப்படி பல பெரும் பிம்பங்களை பார்த்திருக்கின்றேன், ஒரு சாதாரண ரெஸ்டாரண்டில் அடுத்த டேபிளில் மிக சிம்பிளாக தனியா காபி குடித்துகொண்டிருப்பார் டத்தோ சாமிவேலு.


வாழ்க போட கூட 2 பேர் கூட இல்லை.


இதுதான் பண்பட்ட நாட்டு மக்கள் மனநிலை, இங்கிலாந்தில் பிரதமர் ரயிலில் செல்வதும், அமெரிக்காவில் கென்னடி குடும்பமோ புஷ் குடும்பமோ ரோட்டோர கடையில் ஹாயாக ஹாட் டோக் சாப்பிடுவதும் இப்படித்தான்


மோடிக்க்கு சிங்கப்பூர் பிரதமர் கோமளவிலாசில் தோசை கொடுத்ததும் இப்படித்தான், அது அவர்கள் வழக்கம்


அப்படிபட்ட பெரும் தலைவர்கள் எல்லாம் உலகில் அமைதியாக இருக்கின்றார்கள், மனதிற்குள் மக்கள் அவர்கள் மீது பெரும் அபிமானம் வைத்திருக்கின்றார்களே ஒழிய, விளம்பரத்திற்கு கத்துவதில்லை


மலேசிய மகாதீர் முகமது அவர்களுக்கு இந்நாட்டின் உயரியபட்டம் ஏற்கனவே வழங்கபட்டது, அவருக்கு நோபல் ஏன் தரவில்லை என இஸ்லாமிய உலகம் கேட்கவில்லை,


ஆனால் அதற்கு மகா தகுதியான நபர் மகாதீர்


சிங்கப்பூர் சிற்பி லீகுவான் யூ மறைந்தார், அவரின் கிழக்காசிய சாதனை என்ன? அவருக்கு ஏன் ஐநாவில் சிலை இல்லை, நோபல் இல்லை என சிங்கப்பூர் மக்கள் கேட்கவில்லை.


எத்தனை பிலிப்பைன்ஸ் மக்களுக்கு வாழ்வு கொடுத்துகொண்டிருக்கின்றது சிங்கப்பூர், அந்த சிங்கப்பூர் மக்களே லீ இறக்கும்பொழுது ரோமன் மகாசேச விருது வேண்டும் என கேட்கவில்லை


இதோ பெரும் மானுட போராளி காஸ்ட்ரோ மறைந்தார், எவ்வளவு பெரும் தாக்கத்தை உலகில் விதைத்தவர், அவருக்கு கியூபாவில் சிலை கூட இல்லை, அவருக்கு ஏன் நோபல் இல்லை என அவரின் குடும்பத்தார் கூட கேட்கவில்லை


எத்தனை பெரும் தலைவர்கள்? எத்தனை பெரும் புரட்சியாளர்கள் அமைதியாக வாழ்ந்து மறைந்திருக்கின்றார்கள், எங்கிருந்தாவது ஒரு சத்தம் வந்ததா?


சீன பெருந்தலைவன் டெங் இறந்தபோதும், சிங்கபூரின் தேசிய தலைவன் லீ குவான் யூ இறந்தபோதும் அம்மக்கள் கண்ணீர் வடிய வேலை செய்துகொண்டே தன் அஞ்சலி செலுத்தினார்கள்


காரணம் நல்ல தலைவர்கள் அதனை முன்பே வலியுறுத்தினார்கள், நாங்கள் செய்வது நாட்டிற்கான கடமை, அதனை நீங்களும் செய்யுங்கள் மாறாக எங்களுக்காக அழவேண்டாம், சிலை வைக்க வேண்டாம்


எங்களை மறங்கள், ஆனால் நாட்டிற்காக நாங்கள் காட்டிய பாதையினை மட்டும் மறக்காமல் முன்னேறுங்கள்


நல்ல நாடுகள் அப்படி தங்கள் மரியாதைகுரியவர்களை மனதில் வைத்து முன்னேறிகொண்டிருக்கின்றன‌


இங்கோ பொதுகுழுவில் உலக விருதுகள் எல்லாம் எங்களுக்கு வேண்டும் என கொஞ்சமும் வெட்கமின்றி அழுது கொண்டிருக்கின்றார்கள்


ஈரானை நொறுக்கிபோடும் வல்லமை தன் விரல்நுனியில் இருந்தபோதும் ஓபாமா காத்த அமைதி அவருக்கு நோபல் பரிசினை கொடுத்தது,


அவர் கண் சிமிட்டியிருந்தால் இந்நேரம் ஈரான் அழிந்தே இருக்கும், ஆனால் அவர் செய்யவில்லை


உலக அமைதிக்கான விருது அதனால்தான் கொடுக்கபட்டது


27 வருடம் நாட்டின் விடுதலைக்காக சிறையில் இருந்தார் மண்டேலா, அந்த பொறுமைக்கும் தியாகத்திற்கும் நோபல் கொடுத்தார்கள்


இங்கு லஞ்ச வழக்கில் சிறைக்கு சென்றவர்களுக்கு எல்லாம் நோபல் வேண்டுமாம்


நேர்மையாக தேர்தலை நடத்தினார் என் டி.என் சேஷனுக்கு ரோமன் மகசேச கொடுத்தார்கள், நேர்மைக்கும் ஜெயாவிற்கும் என்ன சம்பந்தம்? அவருக்கும் அதே விருது வேண்டுமாம்


அப்படி அந்த தலைவி என்ன கிழித்தார்? என கேட்டால் கூட சொல்ல தெரியவிலை


இப்படி எல்லாம் மக்கள் கவனிக்கும் மன்றத்தில் தீர்மானம் போடுகின்றோமே, உலகம் சிரிக்காதா? எனும் வெட்கம் கொஞ்சமும் இல்லை?


சீ.. சீ


தூ... தூ


இப்படி ஒரு மானக்கேடு உலகில் எந்த நாட்டிற்கும் இல்லை, இடி அமீனுக்கு யாரும் நோபல் கேட்டதாக தெரியவில்லை


இரண்டாம் உலகப்போரில் நாட்டை கெடுத்த முசோலினியும், ஹிட்லரும் கூட இன்றளவும் அம்மக்களால் வெறுக்கபடுகின்றார்கள்


நேற்று கூட அமெரிக்காவில் குண்டு வீசியது ஜப்பானின் தவறு என மன்னிப்பு கேட்டிருக்கின்றார் ஜப்பானிய பிரதமர்.


அதாவது சர்வாதிகாரிகளை எல்லாம் நினைத்துபார்க்க கூட நல்ல நாட்டு மக்கள் நினைப்பதில்லை, மறக்க நினைக்கின்ரார்கள்


இங்கோ அவர்களை தியாகியாக்கி, அவரின் மேஜையினை துடைத்துகொண்டிருந்தவரை எல்லாம் வாரிசாக்குகின்றார்கள்


ஒரு விஷயம் நன்றாக புரிகின்றது?


அன்று அந்த வளாகத்தில் மகாதீர் முகமது அவர்களை பார்க்கும்பொழுது அந்த பெண் சொன்னது மிகபெரும் உண்மை


"எங்கள் வேலையினை நாங்கள் பார்க்க வேண்டாமா?"


அதுதான், அதே தான். ஆளாளுக்கு நல்ல வேலையும் பொறுப்பும் இருந்தால் அதனை பார்ப்பார்கள்


இங்கு என்ன?


வேலை வெட்டிக்கு செல்லாமல், உழைக்காமல் ஆனால் சம்பாதிக்க என்ன செய்யலாம்?


யாருக்காவது ஒரு தலைவருக்கு கோஷம் எழுப்பலாம், அதன் மூலம் ஏதோ ஒரு காண்டிராக்ட் அல்லது உரிமம் பெற்று சுரண்டலாம், பார் நடத்தலாம், மணல் அள்ளலாம், சாக்கடை ஊழல் செய்யலாம்


இப்படி வேலைவெட்டி செய்யாமல் உழைக்காமல் பிழைக்கும் கூட்டமே அரசியலில் யார் வந்தாலும் சரி, நாம் பிழைக்க வேண்டும் என பெருகிவிட்ட கூட்டமே எல்லாவற்றிற்கும் காரணம்


அது இருக்கும் வரை சசிகலா அல்ல, யார் வேண்டுமானாலும் எந்த பொறுப்பிற்கும் வருவார்கள்.


என்று அரசியல் கட்சிகளால், ஆட்சியாளர்களால் பெரும் பணம் சேர்க்கமுடியாது, கட்சி அரசியலால் 5 பைசா லாபம் இல்லை என்றொரு காலம் வருகின்றதோ, அன்றே இதெல்லாம் முற்றுபெறும்


வெளிநாடுகளில் அதனால்தான் அரசியலுக்கு யாரும் வருவதில்லை, பெரும் பணம் சுருட்டமுடியாது, பிய்த்து பிராண்டி விடுவார்கள்


அதனால் இந்த அரசியலை விட டீ ஆற்றலாம் என ஆளாளுக்கு வேறு தொழிலை பார்க்க சென்றுவிடுகின்றார்கள்


இங்கோ டீ ஆற்றுவதை விட அரசியலில் ஈடுபட்டால் டீ எஸ்டேட் வாங்கலாம் எனும் நிலை


இந்நிலை மாறாமல் எதுவும் சாத்தியமில்லை,


அந்நாள் என்றுவரும்?


இன்னும் நிலை மகா மோசமாகி, பெரும் சிக்கல் வந்து அதன்பின் வாழமுடியா மக்கள் பொங்கி எழுந்து பெரும் ரத்தகளறியிலோ அல்லது பெரும் அழிவில்தான் அது நடக்கும்


அல்லது 10 தலைமுறை கழித்து கல்வியில் முன்னேறிய சிந்திக்கும் திறனுள்ள வருங்கால தலைமுறை வரும்போது நடக்கும்


எப்படியும் இந்நாடு திருந்த நெடுங்காலம் வேண்டும்..








மோடி இன்றிரவு என்ன பேச போகின்றாரோ ?

இப்பொழுதெல்லாம் மோடி டிவியில் பேசபோகின்றார் இந்தியாவில் என்றால் ஒரு வித அச்சம் அப்படியே ஆட்கொள்கின்றது


சொல்லாமல் கொள்ளாமல் நள்ளிரவில் வந்து ரூபாய் செல்லாது என அறிவிப்பவர், மிகுந்த தயாரிப்போடு பேசவந்தால் எப்படி இருக்கும்?


உண்மையில் மோடிக்கு சிக்கலான காலம்,


ரூபாய் நோட்டுகள் பிரச்சினை எல்லா நாட்டிலும் இருப்பதுதான், கள்ளநோட்டுக்களோ பதுக்கலோ எல்லை மீறினால் அந்நாடுகள் உயர் மதிப்பு கரன்சிகளை வங்கிகளில் சமர்பிக்க சொல்லி, வேறு பாதுகாப்பான அதே நோட்டுக்களை வழங்கும்


அப்பொழுது கருப்புபணமும் வெளிவரும், கள்ளநோட்டும் செல்லாததாகும், உலகளாவிய நடைமுறை இதுதான்


ஆனால் தகுந்த முன் தயாரிப்பின்றி மோடி செய்த அறிவிப்புகள் அவருக்கு பின்னால் தீயினை பற்றவைத்துவிட்டது, விளைவுகள் இன்னும் சரியாகவில்லை


எல்லோரும் வங்கிகணக்கிற்கு மாறுங்கள் என்பது இந்தமாபெரும் நாட்டில் குறைந்தது 2 ஆண்டுகள் எடுக்கும் பணி, 40 நாட்களுக்குள் அறவே சாத்தியமில்லை


இன்னொன்று வங்கி கார்டுகளை தேய்க்கும்பொழுது பெரும் சேவைகட்டணங்கள் கூடாது, ஏடிஎமில் பணம் எடுக்கும்பொழுதும் கட்டணம் உண்டாம்


வங்கிகள் உண்மையில் இவற்றை இலவசமாகவே வழங்க வேண்டும், முன்பெல்லாம் கணிணி இல்லை, இணையம் இல்லை, வங்கியில் ஏராளமான மனித அலுவலர்களே இருந்தார்கள்


இன்று காலம் மாறி கணிணி மூளைக்காரர்கள் பின்புலத்தில் இருக்க முன்பக்கம் ஏடிஎம், இணைய பரிவர்த்தனை என வங்கிகள் மாறிவிட்டன‌


இந்த செலவுகளை தாங்குவது வங்கிகளை பொறுத்தது, சேமிக்கும் மக்களிடம் இருந்து அதனை பெறுவது மிக சரியானது அல்ல‌


இது உன்பணம்தான் ஆனால் அதனை நீ பெற்றுகொள்ள எனக்கு கமிஷன் கொடுக்கவேண்டும் என்பது ரவுடிகள், கொள்ளையர்கள் செய்வது. அதனை வங்கிகள் செய்வது சரியானது அல்ல‌


வங்கிகளுக்கு முதலில் அரசு பல கட்டுபாடுகளை விதிக்க வேண்டும். வெறிகொண்டு லாபவெறியில் வங்கிகள் அலைவதற்கு ஒரு கடிவாளம் விதிக்க வேண்டும்


இந்திராகாந்தி அந்த வகையில்தான் சிந்தித்தார்.


வங்கிகள் என்பது என்ன? பணம் இருப்போர் கொடுங்கள், பாதுகாப்பும் வட்டியும் தருகின்றோம், தேவைபடுவோர் குறைந்த வட்டியில் வாங்கிகொள்ளுங்கள் என்பதே அடிப்படை


இதில் இப்பொழுது மக்கள் வங்கி கணக்கிற்கு மாறியே ஆகவேண்டும் என மிரட்டுகின்றார்கள், மாறினாலும் அதில் முதலீடு செய்யும் பணத்தினை எடுக்கும் பொழுதும் ஏடிஎம் கட்டணம், ஸ்வைப் கட்டணம் என பிடித்துகொள்கின்றார்கள்


இது வங்கி செய்யவேண்டிய செலவு அல்லவா? என ஒரு பயலும் கேட்கமாட்டான், அப்படி ஆகிவிட்டது நிலை


இந்த குழப்பமான காலகட்டத்தில் மக்கள் வங்கிகளின் மீது கடும் வெறுப்பில் இருக்கும் நிலை, அரசின் கரன்சிகொள்கைகளில் கால்கடுக்க காத்திருக்கும் மக்களுக்கு கோபம் அதிகரிகின்றது


இதில் தொழிலதிபர்கள், அதிகாரிகள் வீட்டில் கோடி கோடியாக சிக்கும் புது கரன்சிகள் மக்களின் கோபத்தை அதிகரிக்கின்றன, வங்கிகள் ஒத்துழைபில்லாமல் இது எப்படி சாத்தியம்? என்பது குழந்தைக்கும் புரியும்


மோடி 50 நாட்களில் நிலமை சரியாக வில்லையென்றால் என்னை கேள்வி கேளுங்கள், அதுவும் தெருவில் நிறுத்தி கேள்வி கேளுங்கள் என சவால்விட்டார்


அந்த சவால் முன்பு ராமர்கோவில் கட்டிய நிலைக்கு சென்றுவிட்டது, இனி மோடி அதனைபற்றி பேசமாட்டார், தேசமே முச்சந்தியில் கூடி கத்தினாலும் பதில் வராது


உண்மையில் இந்த திட்டத்தில் மத்திய அரசு தள்ளாடிவிட்டது, தடுமாறுகின்றது


புதிய ஆயிரம், ஐநூறு நோட்டுக்களை வைத்து, பழைய நோட்டுக்களுக்கு சரியான கணக்கோடு ஈடுசெய்யவேண்டிய பிரச்சினை இது, கணக்கில்வராத பணம் செல்லாது என அறிவித்திருக்கலாம்


ஆனால் புது இரண்டாயிரம் அது இது என சொல்லி குழப்பிவிட்டார்கள்


இந்நிலையில் இன்று இரவு மோடி பேச போகின்றாராம், தேசம் முழுக்க பரபரப்பு ஆயிரம் ஹேஸ்யங்கள் ஊகங்கள்


இருக்கட்டும்


நண்பர் ஒருவரிடம் பேசினேன், இன்று இரவு மோடி பேச போகின்றாராமே? என்ன பேசுவார்?


அவர் சொன்னார், அவர் என்னமும் பேசட்டும், கண்ணீர் விடட்டும், சட்டையினை கிழித்துகொண்டு அழட்டும் பிரச்சினை அது அல்ல?


நான் 10, 50, 100, 2000 ரூபாய் நோட்டுக்களை கட்டி வைத்திருக்கின்றேன். இதில் எது செல்லாது என அறிவிப்பார்களோ அதனை ஓடி சென்று வங்கியில் காலையிலே மாற்றிவிடுவேன், அவர் பேசும்பொழுது பைக்கினை ஸ்டார்ட் செய்துவிடுவேன், அறிவிப்பு வந்தவுடன் ஓடி சென்று நள்ளிரவிலே வங்கியிலே நின்றுவிட வேண்டியதுதான்.


இப்படி சிலர் கிளம்ப, சிலரோ அடுத்து செல்லாமல் போகபோவது 100 ரூபாயா, 2000 ரூபாயா? என பெட் கட்டி கொண்டிருக்கின்றார்களாம்


இந்நிலையில் மோடி பேச போகின்றாராம், என்ன பேச போகின்றார் என தேசம் எதிர்பார்க்கின்றது, இது தேசபிரச்சினை


புதிதாக பொதுசெயலளாரான சசிகலா என்ன பேசபோகின்றார் என தமிழகம் எதிர்பார்க்கின்றது, இது மாநில பிரச்சினை


அவர் பேசபோவதில்லை, அப்படி நினைத்திருந்தால் எப்பொழுதோ ஜெயா டிவியில் பேசியிருப்பார், அட நேற்றுகூட ஒரு நன்றி தெரிவித்திருக்கலாம் ஆனால் செய்யவில்லை


அது நடுக்கமா அல்லது நான் ஏன் பேசவேண்டும்? எனும் இறுமாப்பா எனவும் தெரியவில்லை


ஆனால் கண்ணதாசனின் வரிகள் இந்நேரம் சசிகலாவின் மனதில் ஓடிகொண்டிருக்கும், அது அவருக்காகவே மூன்றாம்பிறையில் எழுதபட்ட வரிகள்


"ஏழை என்றால் அதிலொரு அமைதி
ஊமை என்றால் அதிலொரு அமைதி


ஏதோ தெய்வம் சதி செய்தது
பேதை போல விதி செய்தது"


சசிகலா நிலை இப்படித்தான் உள்ளது


அது இருக்கட்டும்


பிரதமர் இன்றிரவு என்ன பேசபோகின்றாரோ என்ற பயத்தில் புத்தாண்டு கொண்டாடங்களை குப்பையில் போட்டுவிட்டு கையில் கரன்சி கட்டுடன் " உள்ளே வெளியே" மங்காத்தா ஆடும் பதைபதப்பில் இந்திய மக்கள் உள்ளனர்.

சின்னம்மா.. சின்னம்மா....




சின்னம்மாவினை விமர்சிக்காதே விளைவுகள் பயங்கரமாக இருக்கும் என சிலர் மிரட்ட தொடங்கிவிட்டார்கள்


பொதுவாழ்க்கைக்கு வந்த யாரும் விமர்சனங்களுக்கு தப்ப முடியாது, அதுவும் கட்சிக்கு ஒரு பணியும் செய்யாமல் சொய்ங்ங்ங்கென்று வந்து அமர்ந்தால் எல்லோரும் விமர்சிப்பார்கள்


நாமாவது நாகரீகமாக சொல்கின்றோம், இன்னும் பலர் சொல்வதை சசிகலா காண நேர்ந்தால் மன்னார்குடிக்கே ஓடிவிடுவார்





இப்பொழுது என்ன விமர்சித்துவிட்டார்கள்?

அந்த சசிகலா , ஆளும் கட்சியின் பொதுசெயலாளராகிவிட்ட சசிகலா வாய்திறந்து ஒரு வார்த்தை பேசினால்தான் என்ன? ஒரு பத்திரிகையாளர் சந்திப்பினை நடத்தினால்தான் என்ன?

பங்கரில் அமர்ந்து கட்டளை பிறப்பிக்கும் மாபியாக்களை போல் ஏன் நடந்துகொள்கின்றார்?

இந்த பங்கர் அரசியலைத்தான் சொல்கின்றோம், எல்லா தலைவர்களும் மக்கள் முன் வந்தார்கள் பேசினார்கள், முழங்கினார்கள்

ஏன் இத்தாலியில் இருந்து வந்த சோனியாவே இந்தி கற்றுகொண்டு பேசவில்லையா?

இதில் இந்த சசிகலாவிற்கு மட்டும் ஏன் இவ்வளவு அமைதி அல்லது ...

சரி, அவர் குரல் உங்களுக்கு தெரியுமா? சத்தியமாக எங்களை போன்ற பலருக்கு தெரியாது

நாளையே அவர் குரலில் இடைத்தேர்தல் பிரச்சாரம் அவர் செய்கின்றார் என வைத்துகொள்வோம் என வைத்துகொள்வோம்

"என்னை வாழ வைத்த புரட்சி தலைவியின் ரத்தத்தின் ரத்தங்களே, புரட்சி தலைவியின் கனவு நனவாக என்னை நம்பி வாக்களிப்பீர்..." என அவர் தொடங்கட்டும்

அந்த குரலை கேட்டு நீங்களே சிரிக்க மாட்டீர்களா? திடீரென ஒரு புதுகுரல் கிளம்பினால் உங்கள் உதட்டோரம் ஒரு புன்னகை வராதா?

அது எங்களுக்கு நிரம்ப வருகின்றது

எம்ஜிஆர் ஒரு முகமூடி, ஜெயாவும் முகமூடி அப்பொழுது பங்கரில் அமர்ந்து சிலர் இயக்கினாலும் எம்ஜிஆர், ஜெயா எனும் முகமூடிகளுக்கு ஒரு வசீகரம் இருந்தது

இப்பொழுது பங்கரில் இருப்பவர்களை முன்னோக்கி கொண்டுவந்தால் எப்படி?

பாரதிராஜா அருமையான இயக்குநர், ஆனால் முதல்மரியாதை படத்தில் ராதாவோடு "பூங்காற்று திரும்புமா" என பாடியிருந்தால் எப்படி இருக்கும்?

சசிக்குமா?

இப்பொழுது அப்படித்தான் இருக்கின்றது

உங்கள் சின்னம்மா உங்களுக்கு பெரிது, உங்கள் கட்சிக்கு பெரிது என்றால் உங்களோடு வைத்துகொள்ளுங்கள்

எம்மிடம் வந்து எழுதாதே என சொல்ல உங்களுக்கு என்ன உரிமை இருக்கின்றது?

அக்கட்சி தனியார் கம்பெனிதான், சீனியாரிட்டிபடி மேனேஜர் பதவிக்கு வராமல் ஏதோ ஒரு டீ கப் கழுவிகொண்டிருந்த ஒரு
வந்துவிட்டார், அது கம்பெனி விவகாரம்

ஆனால் கம்பெனியின் ஆணிவேர் என்ன? மக்கள் வழங்கும் வோட்டு, அதுதான் ஆதாரம்

அந்த கஸ்டமராகிய மக்கள், கம்பெனியில் நடைபெறும் சில குழப்பங்களை கண்டு அஞ்சமாட்டார்களா?

இவரை எல்லாம் வைத்தபின் எப்படி இந்த கம்பெனியினை நம்ப, அதுவும் ஏராளமான குற்றசாட்டுக்களை கொண்ட ஒருவரை , அனுபவமிலா ஒருவரை கொண்டு வைத்தால் என்ன ஆகும் என பேசமாட்டார்களா?

பேசுவதற்கு முழு உரிமையும் அந்த மக்களிடம்தான் இருக்கின்றது

அந்த மக்களில் ஒருவராகத்தான் பேசுகின்றோம், பிடிக்காவிட்டால் விலகி விடலாம்

அதனை விட்டு எம்மை மிரட்டுவது எப்படி சரியாகும்? உத்தரவிட அது என்ன‌ மன்னர்குடியா? அல்ல மன்னார்குடி

சரி முதலில் உங்கள் புது தலைவியினை ஒரு பத்திரிகையாளர் சந்திப்பில் 4 வார்த்தை உருப்படியாக பேச சொல்லுங்கள்

வேண்டாம், புத்தாண்டு வாழ்த்தினையாவது ஒரு கேமரா முன் சொந்த குரலில் சொல்ல சொல்லுங்கள்

ஒரு 5 நிமிடம் சொன்னால் போதும்

செய்வார்களா? செய்ய சொல்வீர்களா?

போங்கடா டேய்..









அதிமுக பொதுகுழுவினையும் அதன் சின்னம்மா ஆதரவாளர்களின் கொண்டாட்டத்தையும் ஜெயா டிவி சொல்லிகொண்டே இருந்தது ஆச்சரியமல்ல

ஆனால் சன்டிவி அதனை பெரும் செய்தியாக சொல்லிகொண்டிருந்தது தான் ஆச்சரியம்?

ஜெயா டிவியின் வேலையினை சன் டிவி ஏன் செய்தது?


ஏதும் உள்குத்து இருக்குமோ?

ஒரு கட்சியினை இன்னொரு கட்சிதான் புரிந்துகொள்ள முடியும்போல







ஊழல் அதிகாரிகளை ஹெலிகாப்டரில் இருந்து வீசி எறிவேன்: பிலிப்பைன்ஸ் அதிபர் ஆவேசம்

https://youtu.be/o3QyPGJ57BM

ஊழல் அதிகாரிகளை ஹெலிகாப்டரில் இருந்து வீசி எறிவேன்: பிலிப்பைன்ஸ் அதிபர் ஆவேசம்


இது என்ன பைத்தியக்காரதனம்? ஊழல் செய்தவர்கள் ஹெலிகாப்டரில் போகாமல் ஆட்டோவிலோ போவார்கள்?


அவர்கள் அப்படித்தான் பறப்பார்கள், கீழே ஹெலிகாப்டருக்கும் சேர்த்து வணக்கம் செலுத்தவேண்டும்,


அதுதான் ஜனநாயகம் எங்கள் தமிழகத்தில் அப்படித்தான் செய்து கொண்டிருக்கின்றோம்




பிலிப்பைன்ஸில் முன்பு எமல்டா மார்கோஸ் எனும் பெண் அதிபர் இருந்தார், பெரும் ஊழல்புகார் அவர் மீது எழும்ப அவர் ஓட விரட்டபட்டார்.


அதன் பின் அவர் தோழி, வேலைக்காரி, தோட்டக்காரி எல்லாம் பதவிக்கு வர பிலிப்பைன்ஸ் மக்கள் அனுமதிக்கவில்லை


ஒருவேளை பிலிப்பைன்ஸ் அரசின் ரோமன் மகேசேச விருதினை ஜெயலலிதாவிற்கு அடிமைகள் கேட்டது அவருக்கு தெரிந்துவிட்டதோ?


அதனால்தான் ஹெலிகாப்டரில் இருந்து ஊழல்வாதிகளை தூக்கி எறிய வேண்டும் என சிம்பாலிக்காக சொல்கின்றாரோ


அடிமை பாய்ஸ்..நோட் திஸ்



Thursday, December 29, 2016

இஸ்ரேலிய தலைவிதி அப்படி, தமிழக தலைவிதி இப்படி ...

பிரதமர் மீதான இரு ஊழல் வழக்குகளை விசாரிக்க இஸ்ரேல் அட்டார்னி ஜெனரல் உத்தரவு, பதவி இழக்கின்றார் பிரதமர் நேதன்யாகு


யாராக இருந்தாலும் வழக்கு என வந்துவிட்டால் கடாசி விடுகின்றார்கள் இஸ்ரேலில், முன்பு முன்னாள் பிரதமர் எகுத் ஒல்மர்ட்டும் சிறைக்கு அனுப்பபட்டார்.


இஸ்ரேலிய தலைவிதி அப்படி.


இங்கு தமிழகத்தில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு இருந்தாலும் பதவி ஏற்க அழைக்கின்றார்கள்


தமிழக தலைவிதி இப்படி


ஊழலை ஒரு பொருட்டாகவே தமிழகம் நினைக்கவில்லை,


மனதளவில் இன்னும் மன்னராட்சியாகவே அது ஜனநாயகத்தை அணுகுகின்றது,


இது மாறாது


பைத்தியகாரன் இருக்கும் ஊரில் நாமும் பைத்தியமாகவே இருந்துவிட வேண்டும், இல்லை என்றால் நம்மை கிறுக்கன் என்பார்கள்


சின்ன அம்மா வாழ்க, சின்ன அப்பா வாழ்க , சின்ன எம்ஜிஆர் பன்னீர் வாழ்க, சின்ன தாத்தா பொன்னையன் வாழ்க, சின்ன பாட்டி சரஸ்வதி வாழ்க , சின்ன பெரியப்பா தம்பிதுரை வாழ்க‌


இப்பொழுதுள்ள மில்லியன் டாலர் கேள்வி, சின்ன ஜெயலலிதா யார்?


விந்தியா, நமீதா என யார் அந்த இடத்திற்கு பொருத்தமானவரோ தெரியவில்லை


வருங்காலத்தில் உருவாக போகும் சின்ன ஜெயலலிதா இன்றே வாழ்க‌






திமுகவில் கணக்கு சரி இல்லை, அங்கு எல்லாமே ஊழல். தமிழகத்தை ஊழல்வாதிகளிடமிருந்தும் சுரண்டல்காரர்களிடமிருந்தும் காப்பாற்றவே தனிகட்சி தொடங்கினேன் என்றார் எம்ஜிஆர்


எப்படி தமிழகத்தை எம்ஜிஆர் காப்பாறி இருக்கின்றார் என்பது மிக நன்றாகவே தெரிகின்றது


ஒரு காலம் வரும் தமிழகத்திற்கு அவர் இழைத்திருக்கும் துரோகம் என்ன என்பதை பின்னாளில் வரலாறு சொல்லும்


அன்று எம்ஜிஆரின் கல்லறை கூட தமிழகத்தில் இருக்காது,







சசிகலா இன்னும் வாய்திறந்து பேசவில்லை, பேச போவதுமில்லை









Image may contain: 1 person, smiling, sitting Image may contain: 1 person, close-up






ஸ்டீபன் ஹாக்கிங் என்றொரு விஞ்ஞானி இருக்கின்றார், இன்றைய தேதியில் அவர்தான் மிக சிறந்த விஞ்ஞானி , ஐன்ஸ்டீனுக்கு பின் அவரிடம் விஞ்ஞானம் கொட்டி கிடக்கின்றது, விண்வெளி குறித்து அவர் காட்டும் வழிதான் இன்றைய விஞ்ஞானிகளுக்கு பாதை.


மிக ஆச்சரியமான விஞ்ஞானி அவர், அவர் சொல்லும் கருத்துக்களும் கணிப்புகளும் பெரும் பரபரப்பானவை


ஆனால் பாவம்





அவரால் பேசவோ எழுந்து நடமாடவோ முடியாதபடி ஒரு வகையான பக்கவாதம், அதனால் அவர் விழிதிரையில் இயங்கும் ஸ்பெஷல் கம்பியூட்டர் ஒன்றை பயன்படுத்துகின்றார், அதன் மூலம் தன் கருத்துக்களை சொல்கின்றார்

சில வயர்களை அவர் தலையில் இணைப்பார்கள், அவர் சொல்ல வருவது திரையில் வரிகளாக வரும்.

அவரும் ஸ்பெஷல், அவர் கம்பியூட்டர் அவரை விட ஸ்பெஷல்

இவர் கதை இப்பொழுது எதற்கு? விஷயம் இருக்கின்றது.

இனி அப்படி ஒரு கம்பியூட்டரை போயஸ்கார்டன் வீட்டில் பொருத்தி சின்னம்மாவினையும் அந்த கம்பியூட்டரையும் இணைத்துவிடாமல் இனி அக்கட்சியினை நடத்தா சாத்தியமில்லை

சசிகலா இன்னும் வாய்திறந்து பேசவில்லை, பேச போவதுமில்லை

இந்த கட்சிக்காரர்களும் அவரை விடுவதாக இல்லை, பொதுசெயலாளர் என தேர்ந்தெடுத்தாகிவிட்டது

இனி லண்டனிலிருந்து அந்த ஸ்பெஷல் கம்பியூட்டர் சென்னை வரும், பெரும் மக்கள் சக்தி கொண்ட இயக்கத்தின் தலைவி ஸ்டீபன் ஹாக்கின்ஸ் பாணியில் கட்சியினை நடத்துவார்

அவரை பார்த்துவிட்டு செல்லும் அமைச்சர்கள், அவரையும் அவர் மனவோட்டம் தெரியும் அந்த கம்பியூட்டரையும் வணங்கிவிட்டு செல்வார்கள்

மோடி கேஷ்லெஸ் இன்டியா என சொல்லிகொண்டிருக்கின்றார்

தமிழகம் ஸ்பீஸ்லெஸ் மாநிலமாக ஆகிகொண்டிருக்கின்றது

 



















மிஸ்டர் சைமன், வாட் ஆர் யு டூயிங்?

வீரப்பெரும்பாட்டி வேலுநாச்சியார் பொதுக்கூட்டம் : சீமான் வீரவணக்கம்


மிஸ்டர் சைமன், வாட் ஆர் யு டூயிங்?


இந்த வீரபெரும்பாட்டி என்ன செய்தார்?, முன்பொரு காலத்தில் வடுக நாட்டின் அரசன் திப்புசுல்தானோடு சேர்ந்து வெள்ளையனை எதிர்த்தார்,




தமிழகத்தில் அவர் போராடியபொழுது அவரோடு சில நாயக்க பாளையக்காரரும் இருந்தார்கள்


இப்படி வடுகர்களுடம், வந்தேறிகளுடனும் இணைந்து வெள்ளையனுடன் போராடிய வேலுநாச்சியாருக்கு எப்படி வீரவணக்கம் செலுத்தலாம்??


அப்படி அஞ்சலி செலுத்த சென்றால் வடுக மக்களுடன் அல்லவா செல்லவேண்டும்?


இன்னொன்று தெரியுமா? இந்த வேலுநாச்சியார் 7 மொழி பேசுவாராம், அதில் தெலுங்கும் ஒன்றாம்


ஆக தெலுங்கு வடுக மொழி படித்த, தெலுங்கர்களோடு பழகிய ஒரு இனதுரோகிக்கா வீரவணக்கம்?


இது தமிழுணர்வா?


வெள்ளையர்களே இந்த வடுக வந்தேரிகளை விரட்டிவிட்டு தனி தமிழ்நாடு அமைத்து தாருங்கள், நான் உங்களுக்கு சந்தோஷமாக வரி கட்டுகின்றேன் என சொல்லியிருந்தால் உங்கள் அஞ்சலியில் ஒரு அர்த்தம் இருக்கின்றது


தமிழனுக்கும் தெலுங்கனுக்குமான போரை நடத்தும் நீங்கள், தெலுங்கனோடு இணைந்து போரிட்ட வேலுநாச்சியாருக்கு எப்படி அஞ்சலி செலுத்தலாம்?


முப்பாட்டன் முப்பாட்டி என்றுதானே வரும்? இது என்ன பெரும்பாட்டி?


இனி முருகபெருமான் பெரும்தாத்தா என்றா அழைக்கபடுவார் அங்கிள்?


பலமொழிகளை கற்று, எல்லா இன மக்களையும் அனுசரித்து பெரும் எடுத்துகாட்டு வாழ்வு வாழ்ந்த அந்த மகாராணிக்கு, இனவாதம் பேசிகொண்டிருக்கும் இவர் அஞ்சலி செலுத்துவாராம்


என்னா டூப்பு......



ஜெவிற்க்கு நோபல், மகசேச, பாரத் ரத்னா விருதுகள் : அதிமுக பொதுக்குழு




பொதுகுழு தீர்மானத்தை ஏற்றார் சசிகலா, பொதுசெயலாளர் ஆக சம்மதம்.

அட அட அடடா....

இவர்கள் வாசிப்பிற்கும், அவர்கள் அசைவிற்கும் அந்த காட்சிதான் நினைவுக்கு வருகின்றது

"என்ன அமெரிக்காவுல‌ டிரம்ப் கூப்பிட்டாக, ரஷ்யாவுல புட்டீன் கூப்பிட்டாக, பாகிஸ்தான்ல பெனசிர் பார்ட்டில கூப்பிட்டாக‌

இலங்கையில ராஜபக்சே கூட கூப்பிட்டாக..

சீன கம்யூனிஸ்ட் கட்சில கூட தா.பாண்டியன் மூலமா கூப்பிட்டாக..

அத எல்லாம் விட்டு என் கிரகம், இங்க வந்து மாட்டிகிட்டேன்..."




 சரி இப்பக்கம் ராணி நிறுத்தபடுகின்றார்,

அப்பக்கம் எந்த சிப்பாய் வருமான வரி சோதனைக்கு வரப்போகின்றானோ? அல்லது ஆளுநர் எனும் யானையினை நிறுத்த போகின்றார்களோ?

ஆட்டம் சுவாரஸ்யமாக செல்கின்றது



ஜெயலலிதாவிற்கு பாரத ரத்னாவும், பிலிப்பைன்ஸ் அரசு வழங்கும் ரோமன் மகசேச விருதும், உலக அமைதிக்காக நோபல் பரிசு வழங்க அதிமுக பொதுகுழுவில் தீர்மானம்


அடேய் பாரத ரத்னா கொடுங்கள் என இந்தியாவினை கேட்கலாம், ரோமன் மகசேச விருதை கொடுங்கள் என பிலிப்பைன்ஸை எல்லாம் கேட்க முடியாது, அது அவர்களாக கொடுக்க வேண்டியது.


எத்தனை பேருக்கு வழங்கபட்ட உயர்விருது அது? யாராவது வலிய கேட்டார்களா? தகுதியான நபருக்கு தானாக அந்த‌ விருது வரும்.


அமைதிக்கான நோபல் பரிசும் வேண்டுமாம்,


இந்திய பாகிஸ்தான் யுத்தம் நிறுத்தபாடுபட்டாரா? ஈராக் போர், உக்ரைன் போர், சிரியபோரில் எல்லாம் பேசசென்றாரா?


பாலஸ்தீன பிரதிநிதியினையும், இஸ்ரேல் பிரதமரையும் போயஸ் கார்டன் வரவைத்து மிரட்டினாரா?


ஈழத்தில் போர் நிறுத்த நீந்தி சென்றாரே அதற்கா அமைதிக்கான நோபல் பரிசு?


கொடநாட்டில் மாளிகை கட்டி அமைதியாக இருந்தால் அது உலக அமைதிக்கான உழைப்பா?


உலகம் இந்த கோரிக்கைகளை கேட்டு விழுந்து விழுந்து சிரிக்கின்றது,


அவர்களோ சீரியசாக கேட்டுகொண்டிருக்கின்றார்கள்.


பாராளுமன்றத்தில் ஜெயாவிற்கு சிலை வைக்கவேண்டுமாம், சென்னை மற்றும் பார்பன அக்ரஹாரா சிறையில் ஒரு படமாவது வைக்க வேண்டாமா?


நல்ல வேளையாக ஜெயா இந்துமதவாதி, இல்லையென்றால் இந்நேரம் போப்பாண்டவர் கழுத்தை பிடித்து "செயின்ட்" பட்டம் கேட்பார்கள்?


ஆச்சரியமாக நீதிபதி குன்ஹாவினையும், ஆச்சாரியாவினையும் பழிவாங்க தற்கொலை படையாக மாறுவோம் என்ற தீர்மானம் இல்லை


சேர்த்திருக்கலாம், நோபல் பரிசு வேண்டும் என கேட்ட தீர்மானத்தில் இதனையும் சேர்த்திருக்கலாம், காமெடிகளில் இன்னும் ஒரு தீர்மானம் கூடியிருக்கும்


ஆக பொதுகுழு என்ற பெயரில் காமெடி நிகழ்ச்சி நடத்தியிருக்கின்றார்கள்











இறந்தவர்களுக்கு நோபல் கொடுக்கமாட்டார்கள் என்பதை அவர்களிடம் சொல்லாதீர்கள்

அந்த நோபல் பரிசு பெற தகுதியான அளவு ஜெயாவினை உருவாக்கியதே சின்னம்மா தான்,

அதனால் அந்த நோபல் பரிசினை சின்னம்மாவிற்கு கொடுங்கள் என கிளம்பிவிடுவார்கள்.

ஒரு மாதிரியாக அலைகின்றார்கள்,

மாற்று மருந்து கண்டுபிடிக்கும் வரை அவர்களிடம் ஒன்றும் சொல்லவேண்டாம்






இதற்கு இவ்வளவு நாடகமா?



பொதுகுழு தான் தலைவரையோ பொதுசெயலாளரையோ தேர்ந்தெடுக்குமாம்...

நம்பிகொள்வோம்

பொதுகுழு கூடி தேர்தல் நடக்கும்


பின் தலைவரை அறிவிப்பார்கள், ஜனநாயக கட்சி தேர்தலாம்

அதன் பின் சொல்வார்கள், இந்த முடிவு பொதுகுழுவின் முடிவு,

பொதுகுழுவினை கூட்டியது யார்?

பொதுகுழு செயற்குழு வழிகாட்டலில் நடந்தது

செயற்குழு யார் வழிகாட்டலில் நடந்தது?

அது தலைவர் வழிகாட்டலில் நடந்தது.

இதற்கு பொதுகுழுவினை கூட்டி தன்னை தலைவர் என அறிவிக்க, தலைவரே சொன்னார் என சொன்னால்தான் என்ன?

இதற்கு இவ்வளவு நாடகமா?






இளம் வயது கங்கை அமரன் ஒரு பாடல் எழுதினார் ... வீரமணி ஜால்ரா போடுகிறார்...



Image may contain: 1 person, text


தமிழக திரையுலகில் குறிப்பிடதக்க கலைஞர் கங்கை அமரன், இளையராஜா எனும் சூரியன் முன் அவர் திறமை மங்கலாக தெரிந்திருக்கலாமே ஒழிய , மிக திறமையான கிராமிய கலைஞன்


அவரின் பல பாடல்களுக்கும், வைரமுத்துவின் பாடல்களுக்கும் கூட வித்தியாசம் தெரியாது எனும் அளவிற்கு அவர் திறமை அபாரமானது.


அவருக்கும் அதிமுகவிற்கும் என்ன பிரச்சினையோ தெரியவில்லை, பூர்வ ஜென்ம தொடர்பாக இருக்கலாம்


இளம் வயது கங்கை அமரன் அக்காலத்தில் ஒரு பாடல் எழுதினார்


"நம்ம ஊரு நல்ல ஊரு இப்ப ரொம்ப கெட்டு போச்சிண்ணே.." என வந்த பாடல் அது,


பாடல் பிரச்சினை இல்லை, அது வந்த காலம்தான் பிரச்சினை


அதாவது எம்ஜி ராமச்சந்திரன் ஆண்ட காலம், திரை துறையினை வைத்து அரசியலுக்கு வந்தவர் என்பதால் திரையுலகில் அவர் கண், காது, மூக்கு, அந்த பாதி தொண்டை, தொப்பி தலை என எல்லாவற்றையும் வைத்திருப்பார்


எப்படி அவர் படங்களில் திராவிட அண்ணா பாடல்கள் தாக்கம் தனக்கு அடையாளம் கொடுத்து போல இன்னொருவன் வந்துவிட கூடாது என்பதில் அவருக்கு அப்படி ஒரு ஆனந்தம்


"நீங்க நல்லா இருக்கோணும் நாடு முன்னேற, நான் ஆணையிட்டால்" போன்ற பாடல்கள் தமிழகத்தில் ஒலித்துகொண்டே இருக்கவேண்டும் என்பதுதான் அவர் ஆசை,


தேங்காய் சீனிவாசன் ஜால்ரா வசனங்களும் இருக்க வேண்டும்


பலர் எம்ஜிஆரை அண்ணன் என அழைத்துகொண்ட காலம், அங்கிள் என அழைக்கமால் அண்ணன் என அழைத்த காலம்,


இதில் "சிப்பாய் அண்ணே.., ஆளாக்கு நாட்டாமை, விலைவாசி கூடிப்போச்சி, செய்றதை செய்யுங்கள்" போன்ற வரிகள் எம்ஜிஆரை எரிச்சல் படுத்தின‌.


""என் ஆட்சியில் இப்படி பாடல் வந்தால் மக்கள் என்னைபற்றி என்ன நினைப்பார்கள்" என சீரியசாக சிந்தித்தார் ராமசந்திரன்.


காரணம் அக்காலத்தில் இப்படியான பாடல்களை பாடித்தான் அவர் மக்கள் மனதில் இடம்பிடித்தார், கலைஞர்களின் பாடல் கலைஞர்கள் அறிவார்கள் அல்லவா?


அதுவும் ராமச்சந்திரன் மதுகடைகளை மறுபடி திறந்த காலம், அப்பாடலில் வேறு குடித்துவிட்டு பாடுவதாக இருந்தது (இன்றும் வெங்கட் பிரபு படங்களில் அந்த சாயல் உண்டு)


போதாதா எம்ஜிஆருக்கு, இது சமூகத்திற்கு கேடான பாடல் என கதையினை மாற்றி கங்கை அமரனை நிற்க வைத்தார், அதவாது ராமசந்திரன் ஆட்சியில் மது கடைகள் திறந்தது சமூக பொறுப்பு அதனை சினிமாவில் காட்டினால் சமூக சீர்கேடு


ஒன்றும் ஆச்சரியமல்ல, சினிமாவின் தாக்கத்தை எம்ஜிஆரை விட அனுபவித்தவர் யார்? அந்த அனுபவம்


கடும் விசாரணை கங்கை அமரன் மீது நடத்தபட்டது, ஒரு மாதிரி மிரட்டலில்தான் அவர் வீடுதிரும்பினார், புரட்சி தலைவரின் பொற்கால ஆட்சியில் இப்படி பெரும் வெகுமதி பெற்றார் கங்கை அமரன் எனும் கலைஞன்


அதன்பின் அப்படியான பாடல்களை அவர் எழுதவில்லை


புரட்சி தலைவர் அப்படி செய்தால், புரட்சி தலைவியும் ஏதும் செய்யவேண்டும் அல்லவா?


சசிகலா தன் சிறுதாவூர் வீட்டை மிரட்டி வாங்கினார் என ஜெயலலிதாவிடம் புகார் சொன்ன கங்கை அமரனுக்கு ஒரு நீதியும் கிடைகவில்லை, வீடு போய் சில வழக்குகள் வந்ததுதான் மிச்சம்


இப்படி புரட்சி தலைவரிடம் பாடல் சுதந்திரத்தையும், புரட்சி தலைவி ஆட்சியில் வீட்டையும் இழந்த கங்கை அமரன், இனி அடுத்த ஆட்சியில் எதனை இழப்போமோ என தெரியாமல் தன் ஆர்மோனியத்தை கெட்டியாக பிடித்துகொண்டிருக்கின்றார்


காரணம் அதிமுக தலமைகளுக்கும் அமரனுக்கும் உள்ள பூர்வ ஜென்ம தொடர்பு அப்படி.


சினிமா மூலம் அரசியலை கைபற்றியவர்களால் பின் வந்த சினிமாக்காரர்கள் எப்படி எல்லாம் அடக்கபட்டிருக்கின்றார்கள் என்பதற்கு கங்கை அமரன் பெரும் உதாரணம்


அவர் கதை வெளியே வந்தது, இன்னும் எத்தனைபேர் கதை வெளிவராமல் இருக்கின்றதோ?


இந்த அரசியலால் சினிமா இழந்த பெரும் கலைஞன் வடிவேலு.


தன்மான சிங்கம் டி.ஆர் இன்று தரைடிக்கெட் அளவிற்கு கவிழ்ந்து கிடப்பதும் அவ்வகையே.


அஜித் சசிகலா சந்திப்பு என சில செய்திகள் கண்ணாமூச்சி ஆடுவதும், அஜித் இதுவரை மூச் விடாமல் இருப்பதும் அவ்வகையே


முன்பாவது யாரும் மிரட்டினால், பொதுகூட்டத்தில் கலைஞர் முன்னால் "மெரட்டுராங்ங்ங்க்க அய்ய்ய்யாஆஆஅ" என சொல்ல அஜித்தால் முடிந்தது


இப்பொழுதுள்ள முதல்வர் பன்னீர்செல்வத்திடம் அஜித்தால் அப்படி சொல்ல முடியும்?


ஒருவேளை அஜித் அப்படி சொன்னால் பன்னீர் என்ன செய்வார்??


இம்சை அரசன் வடிவேலு பாணியில் கண்ணீரை துடைத்து சொல்வார்


" என் இனமடா நீ.. அழக்கூடாது"



















வீரமணி ஏன் சசிகலாவினை ஆதரிக்கின்றார் என சர்ச்சைகள்

வீரமணியின் அரசியல் மகா சிம்பிள் கணக்கு, ஆட்சியில் யார் இருக்கின்றார்களோ? அதிகாரம் யாரிடம் இருக்கின்றதோ அவர்களுக்கு ஜால்ரா போட்டு பெரியார் சொத்துக்களை காத்துகொள்வது அவரின் அரசியல்.

இதனைத்தான் இத்தனை காலமும் செய்கின்றார், இனியும் செய்வார்


அன்று ஜெயாவினை "சமூக நீதி காத்த வீராங்கனை" என்றார், இனி சசிகலாவினை "சமூக நீதி காக்கும் சின்ன வீராங்கனை" என்பார், சின்ன போர்வாள் என்பார்

அதிமுகவினை ஆதரிப்பதும், அப்படியே பாஜகவினை ஆதரிப்பதும் ஒன்று என்பது இந்த வீரமணிக்கு தெரியாதது அல்ல‌

சசிகலா என்ன? நாளை சங்கராச்சாரியோ, பங்காரு அடிகளோ யார் ஆட்சிக்கு வந்தாலும் வீரமணி இப்படித்தான் சொல்வார்

அவனவன் தன் கையில் சிக்கியிருக்கும் சொத்துக்களை காக்க என்ன வேண்டுமானாலும் சொல்லும் உலகமிது..




 



இலங்கை தேநீரும், மலையக தமிழரும்...

https://youtu.be/_9KnIdKzAU4




இலங்கை தேநீருக்கு அப்படி ஒரு சுவை, தமிழரின் உழைப்பில் விளைவதாலோ என்னமோ எந்த பானமும் கொடுக்காத திருப்தியினை மலையக தேநீர் கொடுக்கின்றது


உலகில் மிக மோசமான அபலை வாழ்க்கை வாழும் தமிழர்கள், அந்த தேயிலை தோட்ட தமிழர்கள்


ஆனால் அவர்களின் நிலைபற்றி யாரும் பேசமாட்டார்கள், எந்த உணர்வாளனும் பேசமாட்டான், முழங்கமாட்டான்





சரி அவர்கள் உழைப்பின் தேநீரையாவது தமிழகத்தில் கிடைக்கவிடுவானா என்றால், அய்யகோ அது இலங்கை அரசுக்கு செல்லும் பணம் அதனால் புறக்கணிப்போம் என கிளம்புவார்கள்

அது தமிழுணர்வு, அதுதான் புரியாத தமிழ் தேசிய இம்சை

இதே மலையக தமிழர்கள் கொஞ்சம் செழிப்பாக இருந்திருந்தால் ஈழ சினிமா போல, கபாலி போல நிறைய படங்கள் வந்திருக்கும், ஆனால் பராரிகள் அல்லவா? யார் தேடுவார்கள்

அந்த மலையக தமிழரிலும் சில அடையாளங்கள் உண்டு, அந்த எஸ்டேட் தமிழர் வம்சத்தில் ஒருவர்தான் பிரபல கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன்

சிங்களர்கள் அவரை அரவணைத்தனர், அதனால்தான் முரளி சில இடங்களில் இலங்கையில் எந்த வேறுபாடும் என்னால் காணமுடியவில்லை என்றார், அது உண்மையும் கூட‌

கொஞ்சம் கவனித்தால் முரளிதரனை தென்னிலங்கை கொண்டாடியது, வட இலங்கையில் அவருக்கு பெரும் வரவேற்பெல்லாம் இல்லை இவ்வளவிற்கும் வடக்கேதான் தமிழர் அதிகம்

அந்த தேநீரை கையில் ஏந்தும் பொழுதெல்லாம் அம்மக்களின் அவல வாழ்க்கை கண்முன்னே வந்தே போகும்

மிக மிக பரிதாபத்திற்குரிய விதி அவர்களது.

சிங்களன், இந்தியா, தமிழர், ஈழம் என எல்லா தரப்பும் கண்டுகொள்ளாத, தமிழகம் கூட கண்டுகொள்ளாத ஒரு அபல வாழ்வு அவர்களுடையது

ஈழபிரச்சினை என உலகெல்லாம் ஒப்பாரி வைத்தாலும், மலையக பிரச்சினை என்பது வேறு, ஈழகுரல் அந்த குரலை அடக்கியே விட்டது

அவர்களுக்காக குரல் கொடுக்க யாருமே இல்லை என்பதுதான் சோகம்..

ஆனால் மிக மிக உறுதியாக சொல்லலாம் தேநீரில் மிக சிறந்தது இலங்கை தேநீர், மலையக தமிழர் உழைப்பால் உருவாகும் தேயிலை நீர்

வேறு எந்த நாட்டு தேநீரும் அதனை நெருங்க கூட முடியாது.

விசித்திரம் என்னவென்றால் அந்த தமிழர்கள் விளைவிக்கும் தேநீர் தமிழகத்தில் பெரும்பாலும் கிடைக்காது, அதுபற்றி பேசவும் மாட்டார்கள், இதுவும் ஒரு அரசியல்








Wednesday, December 28, 2016

இன்று கூடுகிறது அ.தி.மு.க. பொதுக்குழு ...





பரபரப்புக்கிடையே இன்று கூடுகிறது அ.தி.மு.க. பொதுக்குழு


அப்பட்டமாக தெரிகின்றது சசிகலா பொதுசெயலாளராக போகிறார் என்று, இதில் என்ன பரபரப்பு வேண்டி இருக்கின்றது?


பெரும் எதிர்ப்புகள் ஏதுமில்லை,சிலர் கத்தி ஒன்றும் ஆகபோவதுமில்லை





கட்சி இப்பொழுது ஆட்சியில் உள்ளதால் சசிகலா என்ன? கோவை சரளா பொதுசெயலாளர் ஆனாலும் யாருக்கும் சிக்கல் இருக்காது.

அவர்களுக்கென்ன? யார் ஆண்டால் என்ன? இன்னும் 4 வருடம் சம்பாதிக்க வேண்டும், அதற்கு யார் காலிலும் விழ, அல்லது எந்த தலமைக்கும் தலைகொடுக்க அவர்கள் தயார்

ஒரு சில அதிருப்தி எம்எல்ஏக்கள் கட்சி தாவ முடியாதபடி சட்டம் இருக்கின்றது, அதனால் அவர்கள் சிலிப்பிங் செல்களாக இருப்பதை தவிர வேறு வழி இல்லை

இனி அக்கட்சியில் ஒரு பரபரப்பும் இருக்காது, இப்படியே விட்டால் 4 வருடத்தினை கடத்தி விடுவார்கள்

ஆனால் சிக்கல் எங்கு வரும்?

சட்டம் ஒழுங்கு சீர் குலைந்தாலோ, இப்படி அடிக்கடி பண குவியல் சிக்கினாலோ 356 போட்டு கலைத்துவிடுவார்கள்

அப்பொழுது தேர்தல் வருமல்லவா? அப்பொழுதுதான் இந்த தலமையினை ஏற்கமாட்டோம் என அடாவடியாக கிளம்புவார்கள், பல்டி அவர்களுக்கு புதிதல்ல‌

ஆக அக்கட்சியில் ஏதும் திருப்பம் நேரவேண்டும் என்றால் 4 வருடம் காக்க வேண்டும், அல்லது அதிரடி காரியங்கள் மத்திய அரசால் நடத்தபடவேண்டும்

செய்திகள் என்ன சொல்கின்றன?

அதிமுகவினருக்கு 1 சிங்கமும் 4 மாடுகளும் கதையினை சசிகலா சொன்னாராம் எல்லோரும் ஒழுங்காக கேட்டுவிட்டு சமத்தாக பொதுகுழுவிற்கு வந்துவிடுவார்களாம்

எல்லாம் ஆட்சி இருக்கு மட்டும், அதோ நிலாவில் வடை சுடுவது ஜெயலலிதா என்றால் கூட அதிமுகவினர் இப்பொழுது சமத்தாக கேட்டு கொள்வார்கள்

ஆட்சி இழந்தால் என்னாகும்?

சசிகலா இவர்களுக்கு கதை சொல்ல மாட்டார், இவர்கள் ஊடகங்கள் முன்னால் கதை சொல்வார்கள், என்ன கதை?

கூடாரத்தில் ஒட்டகம் நுழைந்த கதை








அதிமுகவில் இணைவேன்: டி. ராஜேந்தர்

https://youtu.be/zrGE5groK3s

 




அழைப்பு வந்தால் அதிமுகவில் இணைவேன்: டி. ராஜேந்தர்


அதிமுகவில் இணையாமலே கங்கை அமரனின் வீடு வரை பிடுங்கினார்கள், இவரிடம் எதனை எல்லாம் பிடுங்க போகின்றார்களோ??


கவனமாக செல்லுங்கள் டி.ஆர் அங்கு ஏராளமான பிடுங்கிகள் உண்டு





ஆனாலும் ஒரே ஒரு சந்தேகம்

பொதுவாக வைகோவினை போட்டு தாக்குபவர் டி.ஆர், இன்றோ வைகோ இன்னும் சசிகலாவிற்கு பல்லாக்கு தூக்காதது தான் பாக்கி, இதில் எப்படி இருவரும் இணைந்தார்கள்??

என்னமோ

எம்ஜிஆரை எதிர்த்தவன், எம்ஜிஆருக்க அஞ்சாமல் தமிழகத்தில் இருந்த ஒரே திரைகலைஞன் நான் என சொடுக்குபோடும் டி.ஆர் இனி அந்த எம்ஜிஆர் படத்தின் முன்னால் அதிமுகவில் இணைந்தால் எப்படி இருக்கும்?

இதெல்லாம் டி.ஆருக்கு மறக்குமா? பின்னர் ஏன்?

"கருணாநிதியுடன் ஒரு கரடி மட்டும்தான் இருக்கின்றது" என டி.ஆர் கலைஞர் நட்பினை பகிரங்கமாக கலாய்த்தவர் எம்ஜிஆர், ஒருவேளை அதற்கு பழிவாங்கத்தான் அந்த கட்சிக்கு டி.ஆர் செல்வாரோ?








சிறு குறு செய்திகள்....

இந்த ஆண்டின் மிக சிறந்த படம் "இறுதி சுற்று", மிக சிறந்த இயக்கமும் நடிப்பும் அதில் மின்னியது

கொஞ்ச வருடத்திற்கு இனி அப்படி ஒரு படம் சாத்தியமே இல்லை

மிக சிறந்த பாடல் "அவளும் நானும்"


மிக சிறந்த பொழுதுபோக்கு படம் "சென்னை 600028 II"

மிக சிறந்த சீரியசான காமெடி படம் "கபாலி"





ஜெ. மரணத்தில் சந்தேகம் உள்ளது, மன்னார்குடி குடும்பத்திடம் ஆட்சி சிக்கிவிட கூடாது : கராத்தே வீரர் உசேனி


அட பரிதாபமே, ஹுசைனி எல்லாம் கண்டிக்கும் அளவிற்கு கட்சி நிலை சென்றுவிட்டதா? இனி இப்படி ஒரு கட்சி தமிழகத்திற்கு தேவையா?


கடந்த வாரம் கட்சியினை பிரபலபடுத்த சிலர் லிபிய விமானத்தை கடத்தி காமெடி செய்தார்கள், இவர் ஏற்கனவே அம்மாவிற்காக விமானத்தை கடத்துவேன் என மிரட்டியவர்.


ஒருவேளை ஏதும் விமானத்தை கடத்தி, அம்மா மர்மம் விலக வேண்டும் என கோரிக்கை வைப்பாரோ?


விமானம் கடத்துவது எல்லாம் இப்பொழுது பெரும் சவால்..


ஆனால் மனிதர் கொஞ்சம் வித்தியாசமானவர், சசிகலாவினை கடத்தும் திட்டம் கூட இருக்கலாம்..






அதிமுக தலமை அலுவலகத்தில் மோதல், பலருக்கு ரத்த காயம்


கமிஷனர் சசிகலாவினை சந்திக்கின்றார், போயஸ் கார்டனுக்கு போலிஸ் காவல் போடபட்டுள்ளது


ஆனால் தொண்டர்கள் கூடிகொள்ளும் தலமை அலுவலகத்தில் ஒரு பாதுகாப்பும் இல்லை போலிருக்கின்றது, இவ்வளவிற்கும் ஆளும் கட்சி.


தனியார் பாதுகாப்பு படையினரும், போலிசும் போயஸ் கார்டனில் குவிந்திருக்க இனி அக்கட்சியின் தலமையகம் இப்படித்தான் இருக்கும்


எதற்கும் அந்த கட்சி அலுவலகத்தை மெரீனா பக்கம் மாற்றுவது நல்லது, அடிதடி என்றால் மோதிகொள்ள அருமையான இடம்.


ரத்தம் வரும் வரை ஏன் மோதிகொண்டார்கள்?


ஓ.. ரத்தத்தின் ரத்தங்கள் அல்லவா?


ஒருவர் ரத்தத்தை இன்னொருவர் பார்த்திருக்கின்றார், அவ்வளவுதான்.






வெளிநாட்டு நிதிபெறும் 20,000 தொண்டு நிறுவணங்கள் மீது நடிவடிக்கை மத்திய அரசு அறிவிப்பு


அதானே, இந்திய பிரதமர் மட்டும்தான் உலகெல்லாம் சென்று வெளிநாட்டு நிதி பெற தகுதியுள்ளவர். அவர் சென்று கையேந்தினால் அது அன்னிய‌ முதலீடு அது நாட்டுசேவை.


அதனை விட்டுவிட்டு மக்களே ஆள் ஆளாக்கு வெளிநாட்டில் கை ஏந்தினால் எப்படி? பின் பிரதமருக்கு என்ன மரியாதை?




ஆக 20,000 தொண்டு நிறுவணங்களே, இனி உங்களுக்கும் சேர்த்து பிரதமரே வெளிநாட்டு நிதியினை வசூலித்துகொள்வார்.


நீங்கள் கையேந்த கூடாது, மாறாக பிரதமர் கையேந்தி உங்களுக்கு தருவார், புரிகின்றதா?






ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர் தமிழகத்தில் நடப்பது மர்மமாகவே இருக்கிறது: திருநாவுக்கரசர் பேட்டி


ஜெயா இருக்கும்போது மட்டும் எது வெளிப்படையாக நடந்தது? அவர் இருக்கும் பொழுதும் அதே மர்மம் தான்






இரு தலையுடன் ஒரே உடலில் வாழும் 26 வயதான அமெரிக்க சகோதரிகள் , வினோத செய்தி


இது என்ன வினோதம், அவர்களாவது ஒன்றாய் பிறந்தவர்கள் ஒரே உடலில் இரு தலையோடு வளர்கின்றார்கள்,


தமிழகத்தில் எங்கோ பிறந்து பின் ஒரே உடலில் , ஒரே மனதோடு , இரு தலையோடு 30 வருடம் வாழ்ந்த உடன்பிறவா சகோரிகள் உண்டு, அதுதான் மகா வினோதம்







 

Tuesday, December 27, 2016

'மநகூ'விலிருந்து வெளியேறுவதாக வைகோ அறிவிப்பு, ஜெ ஆவி உக்கிரம்...

https://youtu.be/RAQJq0RhmDY

'மநகூ'விலிருந்து வெளியேறுவதாக வைகோ அறிவிப்பு

சிரிய போரில் அமெரிக்க கூட்டணியாக இருந்தவர், கொடுமை தாங்காமல் வெளியேறிவிட்டார், இனி உலகில் அணு ஆயுத யுத்ததிற்கு வாய்ப்பு கூடுகின்றது

பங்குசந்தை முதல் கச்சா எண்ணெய் வரை இனி பெரும் குழப்பம் ஏற்பட வாய்ப்பு உண்டு


இதுபற்றி விவாதிக்க ஐநா சபை அவசரமாக கூடுகின்றது,

டிரம்பும் புட்டீனும் சந்தித்துகொள்ள ஜெனிவா விரைகின்றனர்





ஜெ.ஆவி உக்கிரமாக சுற்றி வருகிறது! 2023 வரை இங்குதான் இருக்கும்! பிரபல சாமியார் அசோக்ஜி பரபரப்பு

தன் நாற்காலியில் இன்னொருவர் அமர்வதை கண்டால் எப்படி அந்த ஆவி பொறுக்கும்? நாற்காலியே இல்லாமல் போனால் அமைதியாகும்.

அதாவது கட்சி சுத்தமாக அழிவதை கண்டபின்புதான், கட்சி இல்லாமல் போனால்தான் அமைதி கொள்ளும் அப்படித்தானே ஜி?




மிஸ்டர் & மிஸஸ் விஜயகாந்த், கொஞ்சம் தெருவுக்கு வந்து ஒரு பிடி மண் எடுத்தாவது வீச கூடாதா?


சீன முன்னாள் மந்திரிக்கு 10.5 ஆண்டு ஜெயில்..




லஞ்சம் வாங்கிய வழக்கில் சீன முன்னாள் மந்திரிக்கு 10.5 ஆண்டு ஜெயில்..


நாடா அது? இங்கு அதெல்லாம் நடக்குமா?


ஒரு தலமை செயலாளரை சும்மா தொட்டாலே அது அரசியல் சாசன அவமானம், மத்திய அரசின் கொடுமை என்றெல்லாம் பொங்குவது எங்கள் ஸ்டைல், தண்டனை எல்லாம் கிடையவே கிடையாது.


வருமான வரி சோதனையா? வா வந்து எடுத்துகொள் அவ்வளவுதான், மேற்கொண்டு தண்டனை அது இது என நீனும் பேச கூடாது நானும் பேசமாட்டேன் என்பது எங்கள் கொள்கை


எத்தனை ரெய்டு நடக்கின்றது, எவனாவது கைது செய்யபட்டானா? நெவர், நடக்கவே நடக்காது அதுதான் இந்தியா..


வியாபாரி வரி கட்டவில்லை என சொல்வோம் , வரி கட்டாதவன் உரிமத்தை ஏன் ரத்துசெய்ய கூடாது என சொல்லமாட்டோம், காரணம் இது ஜனநாயக நாடு.


சீனாவினை இந்தியர்களாகிய நாங்கள் ஏன் பகிரங்க எதிரியாக கருதுகின்றோம் என்றால் இதற்காகத்தான். இப்படி ஊழலுக்கு பெரும் தண்டனை கொடுக்கும் நாடு எப்படி எங்களுக்கு நட்பு நாடாக இருக்க முடியும்?


ஆக சீனர்களே உங்கள் கொள்கையும் கோட்பாடும் வேறு, உங்களை பார்த்து நாங்கள் கெட்டுபோக மாட்டோம் அதனால் உங்களோடு என்றுமே கா....








ஜெயா இருந்தால் இப்படி நடக்குமா? : ராம் மோகன ராவ் புலம்பல்

என்னவோ வெள்ளையனை எதிர்த்து கப்பல் விட்டதை போலவும், அதனை வெள்ளையன் அரசு பிடுங்கிவிட்டு இவரை புல்வெட்ட போட்டது போலவும் ராம மோகன் ராவ் பேட்டியளித்துகொண்டிருக்கின்றார்


இவரை பதவி நீக்கிய பின்னும் என்ன பேசி கிழிக்கவேண்டியிருக்கின்றது, குற்றமில்லை என்றால் நீதிமன்ற கதவினை தட்டி சொல்லலாம்.


இங்கு இருந்து கொண்டு இது மத்திய சதி, மாநில சதி , இது அரசியல் சாசன அடி என்று சொல்வதெல்லாம் பெரும் காமெடிகள்




அதிகாரிகளும் அரசியல்வாதிகளாகிகொண்டிருக்கும் அவலம நடந்துகொண்டிருக்கின்றது


இவர் தலமை செயலாளராம், அதனால் இவரை அடைத்து வைத்து விசாரித்தது சட்ட விரோதமாம்.


என்னவெல்லாமோ பேசுகின்றார்


ஜெயா இருந்தால் இப்படி நடக்குமா? என்கின்றார்


முதல்வரே பெங்களூர் சிறையில் இருந்தது மறந்துவிட்டது போல, அந்த கோட்டையே ராணுவத்திற்கு சொந்தமானது என்பதுமா மறந்துவிட்டது?


முதலில் இவரை கைது செய்யாமல் வைத்திருப்பதே பெரும் தவறு, அவரோ தியாகி ஆக முயற்சித்து கொண்டிருக்கின்றார்


எல்லாம் சரி ராவ், 20 இடத்திலிருந்துகொண்டு எப்படி 19 பேரை முந்தி ராவோடு ராவாக பதவி பெற்றீர்? அந்த மர்மத்தையும் சொன்னால்தான் என்ன?






என்னை குறி வைத்துள்ளனர் என் உயிருக்கு ஆபத்து : ராமமோகனராவ்


அந்த ஈர வெங்காயம் எங்களுக்கும் தெரியும், நிச்சயம் உங்கள் உயிருக்கு ஆபத்துதான்


சரி யாரால் ஆபத்து, அவை எல்லாம் யாருடைய பணம், நீர் உயிரோடு இருந்தால் யாருக்கு ஆபத்து என்பதை சொல்லி தொலையும்


இந்த சமூகத்திற்காவது அது பயன்படும்


மற்றபடி இனி நீர் இருந்து மறுபடியாகவும் தலமை செயலாளர் ஆக "மக்கள் பணியாற்றும்" வாய்ப்பு இனி வரவா போகின்றது?


 எல்லையில் அனுதினமும் ராணுவ வீரன் சாகும்பொழுது......


4 கொள்ளையர்களை அடையாளம் காட்டிவிட்டு நீர் செத்தால்தான் என்ன?






1994 ல் இருந்து என்னை பழக்கி பயிற்சி அளித்தவர் ஜெயலலிதா : ராம் மோகன் ராவ்.


அட பாவி மனுஷா, பயிற்சியினை நீர் கலைஞரிடம் எடுத்திருக்க கூடாதா? இந்நேரம் வருமான வரிதுறையே தலையினை பிய்த்து ஓடியிருக்காதா?


சசிகலாவினையே சமாளிக்க தெரியாத அந்த அப்பாவியிடமா பயிற்சி எடுப்பது?






மக்கள் எல்லாம் ஏடிஎம்மில் சொந்த காசை எடுக்க காத்து நிற்கும் நாட்டில், ஏதோ உழைத்து சேர்த்த பணத்தை கண்ணெதிரே ஐடி அதிகாரிகள் அள்ளிகொண்டு சென்றதை போல அவருக்கு நெஞ்சுவலி வந்திருக்கின்றதாம்


அது என்னவோ தெரிவில்லை, முன்னாள் முதல்வர் ஒரு அரசு பணியாளர், இதோ முன்னாள் தலமை செயலாளர் ஒரு அரசு பணியாளர். இவர்கள் அரசிடம் சம்பளம் வாங்கும் பணியாளர்கள்


ஆனால் இவர்கள் சிகிச்சை எடுக்கும் இடமெல்லாம் தனியார் மருத்துவமனைகள்




நிச்சயமாக இந்த ராமமோகன்ராவ் தேசிய சிறந்த அரசு மருத்துவர்கள் பாதுகாப்பில் அரசு மருத்துவமனையிலே சிக்கிசை பெற வேண்டியவர்


இதில் இன்னமும் "அடுத்த எம்ஜிஆர்" சின்ன இதயகனி, சின்ன புரட்சிதலைவர், சின்ன அய்யா பன்னீர் செல்வம் அவ்ர்கள் இன்னமும் கருத்து சொல்லாதது பெரும் விசித்திரம்


"சின்ன சின்னவர்" பன்னீர் செல்வம் அவர்கள், கட்சியில் யாராகவும் இருந்துவிட்டு போகட்டும், ஆனால் இப்பொழுது ஒரு மாநிலத்தின் முதல்வர்


அவ்வகையில் அவருக்கு பதில்சொல்லும் கடமை உண்டு


இருக்கட்டும்


இனி ஐடி அதிகாரிகளோடு ஒரு ஆம்புலன்சையும் சில டாக்டர்கள் குழுவினையும் அனுப்புவது நல்லது, அடுத்த நபர் சயனைடு கடித்தாலும் கடிக்கலாம்


எதற்கும் ரெட்டிக்கு மிக விரைவில் நெஞ்சுவலி வரலாம், சுற்றிலும் மருத்துவர்களை நிறுத்துவது நல்லது


இவ்வளவு இளகிய மனம் படைத்தவர்களா ஆட்சி செய்யும் அதிகாரிகள்?, இப்படி படீர் படீர் என நெஞ்சுவலி வருகின்றது









தமிழக நிலை என்ன?




நாட்டின் இன்றைய மகா முக்கிய பிரச்சினை கரன்சி மாற்றமும் அதனால் ஏற்படும் விளைவுகளும்


எந்த கட்சியாவது இதனை உருப்படியாக பேசுகின்றதா என்றால் இல்லை, பாஜக் கட்சி தலைவர்களே வண்டு முருகன் வடிவேலு போல "தத்தப்ப்பத்தப்ப்ப்" என சொல்லிகொண்டிருக்கின்றார்கள்


தமிழக நிலை என்ன?


ப.சிதம்பரம் தனக்கே உரித்தான நிபுணத்துவத்திலும், அனுபவத்திலும் பின்னி எடுக்கின்றார். அழகாக அர்த்தமாக பேசி உண்மை நிலையினை உணர்த்துகின்றார், இன்னும் சில மகா பெரும் பிம்பங்கள் மணி சங்கர் அய்யர் போல உண்டு


பாஜகவின் தமிழிசை வாயினை திறந்தாலே சிரிக்க தோன்றுகின்றது, அர்த்தமுள்ள வார்த்தை ஒன்று கூட வராது, கோவை சரளா லெவலுக்கு சென்றாகிவிட்டது


அதிமுக நிலை இன்னும் பரிதாபம், ஆளும் கட்சிதான் ஆனால் முதல்வர் பன்னீர் செல்வத்தினை பார்க்கும்பொழுது ஜீன்ஸ் படத்தின் இன்னொரு நாசர் நினைவுக்கு வருகின்றார், கையில் அந்த புத்தகம் மட்டும் இல்லை


சி.ஆர் சரஸ்வதி எல்லாம் கட்சி பிரமுகராக பேசும் நிலை, இந்த பிரச்சினை பற்றி விளக்க அங்கும் ஆளில்லை, வரவும் மாட்டார்கள் வந்தால் அக்கட்சியில் இருக்கவும் மாட்டார்கள்


பாமக ராமதாஸ் உண்மையில் கொஞ்சம் விபரமானவர், அவர் சொல்லும் சில கருத்துக்கள் ஏற்றுகொள்ள கூடியவை. ஆனால் அங்கும் அன்புமணி தவிர உருப்படியாக யாருமில்லை, காடுவெட்டி குருவினை காட்டிவிட்டால் அவ்வளவுதான்


திருமா கட்சி பெரும்பாலும் அஞ்சலி கட்சி, யாருக்காவது அஞ்சலி செலுத்திகொண்டே இருப்பார்கள். திருமா சமூக பிரச்சினைகளில் சீறுவார், பொதுகருத்தில் சறுக்குவார். அங்கும் அவரை தவிர அடையாளமில்லை


வைகோ கேட்கவே வேண்டாம், மைதானத்தில் ஓடிகொண்டே இருந்தும் ஒரு ரன்னை எடுக்காதவனை என்ன சொல்லலாம், அவர் அப்படித்தான், ஓடிகொண்டே இருப்பார். அதாவது ஆட்டத்தில் இருக்கின்றாராம். யாரும் கண்டுகொள்ளத்தான் இல்லை


கம்யூனிஸ்டுகள் சிகப்பு கொடியில் கருப்பும் வெள்ளையும் கலந்து சின்ன அம்மா பக்கம் சாயும் காலம்


முன்பெல்லாம் பெரும் நாட்டு நலன் கருத்துக்கள் அவர்களிடமிருந்துதான் வரும், இப்பொழுதெல்லாம் காற்றுவாங்கிகொண்டிருக்கின்றார்கள்


திமுக இதில் மிகவும் சறுக்கி இருக்கின்றது, பாராளுமன்றத்தில் முழங்கிய அண்ணா, முரசொலிமாறனுக்கு பின் அங்கும் யாரும் தென்படவில்லை


இன்று முக ஸ்டாலின் காலம், ஆனால் பெரும் பேச்சாளர்களையும் பெரும் நிபுணர்களையும் வித்தகர்களையும் கொண்டிருந்த திமுகவிற்கு இப்பொழுது ஆளில்லை


மனுஷ்ய புத்திரன் என்றொருவரை எல்லாம் கொண்டு திரியும் சூழலில் அது சிக்கிவிட்டது


ஒன்று புரிகின்றது


நல்ல அறிவாளிகளும், படித்தவர்களும், சிந்தனையாளர்களும், நாட்டு நலன் முதல் எல்லாவற்றிலும் நிரம்ப அறிவும் அனுபவமும் கொண்டவர்கள் இப்போதைக்கு இளம் தலைமுறையாக ஒரு கட்சியிலும் இல்லை


அப்படி அரசியலை விட்டு அவர்கள் ஓட ஓட, கள்ளசாராய கும்பலும், கட்ட பஞ்சாயத்துகாரனும், நாலு வார்த்தை பேசதெரியாதவன் எல்லாம் கட்சியிலும் பதவியிலும் இருக்கின்றான்


ஒரு நல்ல சிந்தனையாளனும், பண்பாளனும் இளம் தலைமுறையாக ஒரு கட்சியிலும் இல்லை. இருந்தாலும் வெளிதெரிவதில்லை தெரியவிட மாட்டார்கள்


ஒரு நல்ல தலைவனை கூட உருவாக்காத இந்த கட்சிகள்தான் வளமான தமிழகத்தை உருவாக்குமாம், நம்பிகொள்ளுங்கள்


சிதம்பரம் மிக பெரும் திறமைசாலி, நன்கு படித்தவர். அவரை போல இன்னும் ஏராளமானோர் உண்டு


ஆனால் தமிழக முதலமைச்சர் பதவிக்கு போட்டியிடுவோர் பன்னீர் செல்வமும், சசிகலாவும்


பெரும் அழிவுகாலத்தை நோக்கி தமிழகம் சென்றுகொண்டிருக்கின்றது என்பதற்கும், எவ்வளவு சீரழிந்துவிட்டது என்பதற்கும் இது பெரும் உதாரணம்


ஒன்று நன்றாக புரிகின்றது


1970களில் எல்லா கட்சிகளிலும் நல்ல வீரியமான அடுத்த தலைமுறை தெரிந்தது


இன்று அப்படி ஒரு நிலை இல்லவே இல்லை


ஒரு கருத்தை, நாட்டு நலத்தினை விவாதிக்க கூட அறிவுபெற்றவர்கள் இளைய தலைமுறையாக யாருமில்லை, உண்மை இதுதான்


ஆக இனி வருங்காலத்தில் ஒன்று தமிழகத்தை ஆண்டவன் காப்பாற்ற வேண்டும் அல்லது வங்ககடல் தன்னுள் எடுத்துகொள்ளவேண்டும்


ஆனால் அதற்குள் தமிழகம் விழித்துகொள்ளும் வாய்ப்பும் இருக்கின்றது, பார்க்கலாம்.








நயந்தாரா, தமண்ணா உட்பட பலர் பொங்கிகொண்டிருக்கின்றனர்

நடிகைகளை பற்றி இந்த இயக்குநர் சுராஜ் என்பவர் ஏதோ சொல்லிவிட்டாராம்


உடனே நயந்தாரா, தமண்ணா உட்பட பலர் பொங்கிகொண்டிருக்கின்றனர்


இதுவரை இந்த நயனையும், தமணையும் பற்றி எழுதா பத்திரிகைகள் இல்லை, எவ்வளவோ எழுதினார்கள், இன்றும் எழுதுகின்றார்கள் அதெற்கெல்லாம் ஒரு சத்தமும் இல்லை




இன்று இவர்கள் கிளம்பியிருப்பது ஒரு வகையான திசை திருப்பல் போலவே தோன்றுகின்றது,


அதுவும் தன்னைபற்றி எழுதி கிழித்தவர்கள் மீது அமைதி காத்தவர்கள், இன்று பொங்குவதுதான் காமெடி.


பத்திரிகைகள் எழுதினால் கிசுகிசுவாம் கண்டுகொள்ளமாட்டார்களாம், ஆனால் இயக்குநர் ஏதும் சொல்லிவிட்டால் பிய்த்துவிடுவார்களாம்


நடிகை என்பது ஒரு தொழில், சினிமா தயாரிப்பு தொழிலில் அவர்களிடம் சில கோரிக்கைகள் வைக்கபடலாம், அது பற்றி சுராஜ் என்னமோ சொல்லிவிட்டார்


இதற்குத்த்தான் சிம்புவிடம் உதட்டை கடிக்க கொடுத்த நயன் பொங்கிகொண்டிருக்கின்றார்


அதாவது இந்த நடிகைகள் எப்படியும் நடிக்கலாம், கேட்டால் அதற்கான பதில் மக்கள் விரும்புகின்றார்கள், இயக்குநர் நடிக்க சொன்னார் அதனால் நடித்தோம், கதைக்கு ஏற்ற நடிப்பினை வழங்குவதே "கலைச்சேவை" என்பதாகவே இருக்கும்


அந்த "கலைச்சேவை"க்கும் ஒரு விலை உண்டு என்பதை சுராஜ் சொல்லிவிட்டாராம், இதற்குத்தான் இத்தனை ஆர்ப்பாட்டம்


எதனையோ மறைக்க இன்று நயந்தாராவின் குரல் கேட்கின்றது, பொதுவாக நயன் இப்படிபட்ட நபர் அல்ல, எதனையும் கண்டுகொள்ளாத நயன் சுராஜினை கண்டுகொள்வதும், அதுவும் இன்றைய ரெய்டு காலத்தில் பதிலடி கொடுப்பதும் மர்மமானவை


ஆனால் ஒரு ஒற்றுமை


அன்று வெள்ளம் வரும்பொழுது சிம்புவின் பீப் சாங்


இன்று ரெய்டு நடக்கும்பொழுது நயந்தாராவின் கண்டன பதில்..


இதற்கு மேலும் நிலை சிக்கலானால் என்ன ஆகும்?


இருக்கவே இருக்கின்றார் தங்கர் பச்சான்


என் "கள்ளிகாட்டு கருப்பாயி" படத்திற்கு நடிக்க முடியாது என சொன்ன நயந்தாரா .." என அவர் கிளம்பினால் நிலை சிக்கல் ஆகாதா?


அதன் பின் எங்கு எந்த ரெய்டு நடந்தால் என்ன? யார் பொதுசெயலாளர் ஆனால் என்ன?


எப்படிபட்ட தமிழ்நாடு இது?


ஆனாலும் இது நயன் தாரா சம்பந்தபட்ட பிரச்சினை என்பதால், நயன் தற்கொலை படை நிறுவணர் மற்றும் தலைவர் Babu Rao பார்த்துகொள்வார்


ஆனால் குஷ்பூ ஏதும் சொல்வாரன்றால், அல்லது அவருக்கு பிரச்சினை என்றால் நாம் நிச்சயம் அவரைத்தான் ஆதரிப்போம்



Monday, December 26, 2016

தை வருது ... ஜல்லிக்கட்டு எங்கே?

https://youtu.be/E-81MzYid5c




ஜல்லிகட்டில் மாடு கொடுமைபடுத்தபடுகின்றது என்கின்றீர்கள், கட்டை வண்டியிலும் , உழவிலும் மாடு என்ன இன்புறுகின்றதா?


முத டிராக்டர் கொடுங்கள்..முதலில் எல்லா விவசாயிக்கும் டிராக்டர் கொடுங்கள்உழவு காளை மாட்டுக்கெல்லாம் ஓய்வு கொடுங்கள்..


வண்டி இழுக்க லாடம் எனும் பெயரில் மாட்டின் காலில் எப்படி எல்லாம் ஆணி அடிக்கின்றார்கள்?, அது கொடுமை அல்லவா?


அதற்கு முதலில் எல்லா விவசாயிக்கும் ஒரு டெம்மோ கொடுத்துவிட்டு அந்த காளைகளை மீட்டுகொண்டு காலின் லாடத்தை பிடுங்குங்கள்


கதற கதற மாட்டிற்கு மூக்கணாங்கயிறு போடுவதும், காலில் லாடம் அடிப்பதும் கொடுமை ஆகாதாம், ஆனால் அவற்றை உற்சாகமாக துள்ளவிட்டு தழுவுவது கொடுமையாம்


முதலில் மூக்கணாங்கயிறு போடுவதையும், லாடம் அடிப்பதையும் நிறுத்த சொல்வீர்களா?


அதுதான் உண்மையான காளை மாட்டு நலன்.. செய்வீர்களா?


இந்த ஆர்யா, ஐஸ்வர்யா, பேட்டா போன்ற இம்சைகள் இதற்கு முதலில் பதில் சொல்லட்டும்.


ஜல்லிகட்டில் மாடு வதைபடுகின்றதாம்


கன்றுகுட்டிக்கு பசு சுரக்கும் பாலை எல்லாம், அதே கன்றினை பசுமுன் கட்டிவைத்து கதற கதற கறக்கின்றீர்களே, அது வன் கொடுமை ஆகாதா?


அது பசு சித்திரவதை ஆகாதா?, அது கன்றிற்கான பால் அல்லவா?, வலுகட்டாயமாக கட்டி வைத்து கறப்பது என்ன நியாயம்??


வளர்த்த பசுவினை கட்டி வைத்து பால் கறக்கலாமாம், ஆனால் காளையினை வளர்த்து கட்டிபிடிக்க கூடாதாம்.


உழவு காளைக்கும், வண்டி மாட்டுக்கும், பசுவிற்கு ஒரு நியாயமாம்,


ஜல்லிகட்டிற்கு இன்னொரு நியாயமாம்.


விசித்திரமான இந்தியா








சென்னை புனித ஜார்ஜ் கோட்டை..











[caption id="" align="aligncenter" width="376"]Image may contain: 1 person யேல் [/caption]


 






சென்னை கோட்டையினை வெள்ளையர் கட்டி வியாபாரம் செய்து, பின் ஆட்சிக்கு வந்தபின் அக்கோட்டை முக்கியத்துவம் வாய்ந்ததானது, அன்று தென்னிந்தியாவின் தலமை செயலகம் அதுதான்


அப்பொழுது 1700களில் தலமை செயலாளராக‌ வந்தவர் யேல்,


வந்து என்ன செய்தார்? வழிகாட்டினார், யாருக்கு?




முன்னாள் தலமை செயலாளர் ராமமோகன் ராவிற்கு


ஆம், சென்னை கோட்டையில் முதன் முதலில் ஊழலில் ஈடுபட்டவர் என வரலாறு அவரைத்தான் சொல்கின்றது, மிக கடுமையான ஊழல். ஆனால் ராம்மோகன் ராவ் போல சிக்கவில்லை


அமெரிக்கா தப்பினார், அங்கு ஒரு கல்லூரி தொடங்கினார் , பின் அது பல்கலை கழகமாயிற்று.


அதன் பெயர் யேல் பல்கலைகழகம்


இந்த யேல் பற்றிய ஊழல் குறிப்புகளும் இன்னும் ஏராள குறிப்புகளும் சென்னை மியூசியத்தில் சிக்கின, தாமதமாக தெரிந்துகொண்ட யேல் பல்கலைகழத்தினர் அதனை மீட்க நினைத்தபொழுது இந்தியா கொடுக்கவில்லை. என்ன இருந்தாலும் தங்கள் நிறுவணர் ஊழல்வாதி என்பது அவர்களுக்கு அவமானம் அல்லவா?


பின் என செய்தது? அண்ணாவிற்கு டாக்டர் பட்டம் கொடுத்து ஐஸ் வைத்தது, அண்ணா ஆட்சிக்கு வந்தபின் அந்த யேல் பற்றிய குறிப்புகளை, அவர் கைபட எழுதிய பிரதிகளை சென்னையில் காணவில்லை


ஏன் எப்படி என நீங்கள் கேட்க கூடாது, காணவில்லை அவ்வளவுதான்


ஆக சென்னை கோட்டையில் முதல் ஊழல் செய்த தலமை செயலாளர் யேல், பின் அவரின் குறிப்புகள் அண்ணா காலத்தில் மர்மமாயின‌


அதே சென்னை கோட்டையில் இப்பொழுது சிக்கி இருக்கின்றார் ராவ், ஆனால் ஆட்சி அண்ணா திமுகவுடையது


சென்னை கோட்டையினை உலுக்கிய ஊழல் வழக்குகளில் யேலுக்கு பின் ராவ் இடம்பெற்றுவிட்டார்.


இந்த இரு ஊழல்வாதிகளுக்கும் அண்ணா பெயருக்கும் ஏதோ பூர்வஜென்ம தொடர்பு


தப்ப விட்டிருந்தால் கனடாவிலோ, நியூஸிலாந்திலோ இந்த ராவும் பல்கலைகழகம் கட்டியிருக்கலாம், பின் அவர்கள் பன்னீர்செல்வத்திற்கும் சசிகலாவிற்கும் டாக்டர் பட்டம் அளித்திருப்பார்கலாம், எல்லாம் நடந்திருக்கும்




[caption id="" align="aligncenter" width="420"]Image may contain: 1 person, glasses ராம் மோகன் ராவ்[/caption]

நாமும் டாக்டர் பன்னீர் செல்வம், டாக்டர் சசிகலா என அழைத்துகொண்டிருப்போம், இந்த பாழாய்போன வருமான வரிதுறை எல்லாவற்றையும் கெடுத்துவிட்டது.


என்ன விசித்திரமோ?


கலைஞர் ஆட்சியில் ஒரு கட்டை பீடியோ, அரை கிலோ உப்பு காணாமல் போனாலே ஆட்சியினை டிஸ்மிஸ் செய் என கொடிபிடிப்பவர்கள் இந்த மாபெரும் ஊழலிலும் அவமானத்திலும் வாயே திறக்கவில்லை


அது ஆச்சரியமல்ல‌


திமுகவே அதுபற்றி ஒரு குரலும் எழுப்பவில்லை என்பதுதான் ஆச்சரியம்


என்ன மர்மமோ


யேல், யேல் ஊழல், பல்கலை கழகம், அண்ணாவின் டாக்டர் பட்டம், யேல் குறிப்புகள் காணாமல் போகுதல் என திராவிட கட்சிகளுக்கும் யேலுக்கும், அண்ணாவிற்கும், இன்று ராவிற்கும் , அண்ணா திமுகவிற்கும் உள்ள தொடர்புகள் ஏராளம்


ஒரே வித்தியாசம்


அன்று கிழக்கிந்திய கம்பெனி
இன்று அனைதிந்திய அதிமுக‌


மற்றபடி அதே சென்னை கோட்டை












தமிழகத்தில் ஏற்பட்டுள்ள வெற்றிடத்தை பாஜக நிரப்பும் : தமிழிசை

எது? எம்ஜிஆர் கல்லறைக்கும், ஜெயா கல்லறைக்கும் இடையில் உள்ள வெற்றிடத்தையா?




 

Sunday, December 25, 2016

தமிழக புதிய ஆளுனர் ...

தமிழகத்தின் ஆளுநராக கர்நாடகத்தை சேர்ந்தவரை நியமிக்க எதிர்ப்பு, பல கட்சிகள் கண்டனம்


இதற்குத்தான் இந்த மத்திய அரசுக்கு விவரம் போதவில்லை என்பது, ஒரு கன்னட பெண் முதல்வராகும் பொழுது, ஒரு கன்னடர் சூப்பர் ஸ்டார் ஆகும் பொழுது, ஒரு கன்னடர் ஆளுநராக முடியாதா?


முடியும் எப்படி?




கன்னட அரசியல்வாதி இங்கு வரத்தான் பிரச்சினையே தவிர, கன்னட திரையுலகவாசி அல்ல‌


அப்படி சரோஜா தேவியினை தமிழக ஆளுநராக ஆக்கினால் ஒரு சர்ச்சை இருக்காது, எம்ஜிஆரின்
ஆஸ்தான நாயகிகளில் ஒன்று முதல்வராகும் பொழுது இன்னொரு ஆஸ்தான நாயகி ஆளுநராக கூடாதா?


ஆக ஆளுநராகும் தகுதி படைத்த ஒரே கன்னட நபர் சரோஜா தேவியே, இனி மத்திய அரசு இப்படி சிந்தித்தாலும் சிந்திக்கலாம்


சரோஜா சாமான் டிக்காலோ.....






மாட்டை அடக்குவதிற்கு பதில் சிங்கத்தை அடக்கினால் என்ன?


தமிழ் கலாச்சாரத்தை படிக்க சொன்னால் அவர்களில் யாரோ படிக்காமல், அடிமைபெண் படம் பார்த்திருக்கின்றார்கள்.








கிறிஸ்துமஸ் நாளில் தலைவர்கள்...




கிறிஸ்துமஸ் விழாவில் முக.ஸ்டாலின் பங்கேற்பு


பக்ரீத், ரமான் சாய்பாபா, கிறிஸ்மஸ் வாழ்த்து என பகுத்தறிவிலிருந்து விலகிகொண்டே சென்ற திமுக விரைவில் கடவுள் ஏற்பு கொள்கைக்கு சாயலாம்


இந்து மத பண்டிகைகளில் மட்டும் திமுகவினர் வாய்திறக்க மாட்டார்கள், என்ன சொல்லி சமாளிக்கலாம்?





திராவிடநாடு கோரிக்கையினை காலம்பார்த்து கழற்றிவிட்டதை போல இந்த பகுத்தறிவு இம்சைகளையும் கழற்றிவிடலாம்

எப்படி? அண்ணா காட்டிய வழியில்

"திராவிட நாட்டு கொள்கையினை கைவிடுகின்றோமே தவிர, அதற்கான காரணம் அப்படியே இருக்கின்றது" என்றார் அண்ணா,

அப்படியே "இந்துமத நண்பர்களுக்கு எங்கள் தீபாவளி, சதுர்த்தி, கார்த்திகை வாழ்த்துக்களை தெரிவிக்கின்றோம், ஆனால் எந்த காரணத்திற்காக இந்து கடவுள்கள் இல்லை என சொன்னோமோ அந்த காரணம் அப்படியே இருக்கின்றது: என சொல்லி பக்தி ஜோதியில் கலந்துவிடலாம்

காலத்திற்கு ஏற்றபடி வாழ்க்கை முறையும், உலகமும் மாறும்பொழுது கட்சிகளும், இயக்கங்களும் மாறுவதில் தவறில்லை

காலத்திற்கு மாறாத எதுவும் நிலைத்து நிற்காது

அப்படி திமுக மாறினாலும் அது பெரும் தவறு ஆகாது

ஆனான ரஷ்யாவிலே தேவாலயங்கள் சீரமைக்கபட்டு கிறிஸ்துமஸ் கோலகலமாக கொண்டாடபடவில்லையா?









தற்போதைய சூழ்நிலையில் திராவிட இயக்கங்கள் எழுச்சி பெறுவது மிகவும் அவசியம்; தா.பாண்டியன்

இதனை சொல்லவேண்டியது கலைஞரை பார்த்த பின்பா? அல்லது சசிகலாவினை சந்தித்த பின்பா?

சசிகலாவினை சந்தித்துவிட்டு திராவிட இயக்கம் எழுச்சி பெற வேண்டும் என்பதை விட இந்த ஆண்டின் பெரும் காமெடி எதுவாக இருக்க முடியும்?


தா.பாண்டியன் இப்பொழுது ச்சீசீ.பாண்டியன்









சிகிச்சைக்கு சென்றிருந்தாலும் தவறு செய்தவர்கள் தப்பிக்க முடியாது: தமிழிசை சவுந்தரராஜன் பேட்டி

ராம் மோகன் ராவினை குறித்து மறைமுகமாக தமிழிசை இப்படி சொல்லியிருக்கலாம் என்பது சொல்லிதெரியவேண்டியதில்லை, சரி மேடம் தவறு செய்தவர்கள் எந்த சிகிச்சைக்கு சென்றாலும் தப்ப முடியாது என்பது சரி

ஆனால் இதனையே "அந்த 75 நாட்கள்" நடக்கும்பொழுது சொல்லியிருக்கலாம் அல்லவா?




Saturday, December 24, 2016

மலேசியாவில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்

பாட்டி தாத்தாவோடு தன் வாழ்வின் முதல் கிறிஸ்துமஸை மகள் கொண்டாட துவங்குகின்றாள், அவளை பொறுத்தவரை மிக மகிழ்வான தருணம்


வழக்கமான சனி, ஞாயிறு கிழமைகளில் மீன் பின்னாலும், கோழி பின்னாலும் ஓடிகொண்டிருக்கும் என்னை இந்த இரவில் பிடித்து சர்ச்சுக்கு இழுத்து சென்றார்கள்


மலேசியாவில் கத்தோலிக்கர் அதிகம், கத்தோலிக்க ஆலயங்களும் அதிகம், ஆனால் பெரும் கூட்டம்




இது சீனர்கள் அதிகமான பகுதி, சீனத்திலும் ஆங்கிலத்திலும் திருப்பலி உண்டு, நமக்கு இரண்டுமே புரியாது எனினும் ஆங்கிலம் கொஞ்சம் புரியும் என்பதால் அதற்கு ஆஜர்


மலேசிய மக்களுக்கே உரித்தான புன்னகையுடன் அவர்கள் சூழ்ந்து நிற்க, திருப்பலியில் மகிழ்வுடன் பங்குகொள்ள முடிந்தது, எங்கும் உற்சாகம்


கிறிஸ்மஸ் மரம் முதல் அட்டகாசமான தோரணம், அழகான குடில் அமைத்திருந்தார்கள்


திருப்பலி முடிந்தும் "சைலண்ட் நைட் ஹோலி நைட்" "ஜாய் டூ த வெர்ல்ட்" அந்த பிரத்யோக பாடல்களை இசைத்தார்கள்


மலை வடிவில் குடில், உள்ளே பாலகன் யேசு அருகே ஆட்டு இடையர்கள், சுற்றிலும் ஆடுகள்


இந்த ஆங்கில பாடல்களையும் மீறி அந்த பாடலே மனதில் ஓலித்தது


"ஆயர்பாடி மாளிகையில் தாய்மடியில் கன்றினைபோல்" எனும் பாடல் அது


கவியரசரின் அந்த தாலேலோ பாடல் மிக முற்றிலுமாக இந்த கிறிஸ்மஸ்க்கு பொருந்தும், அவரின் இயேசு காவிய வரிகளும் நினைவுக்கு வந்தன‌


"ஜோதிமணி பெட்டகமே, சுடரொளிய கண்மணியே, ஆதி மகனாய் பிறந்த அருந்தவமே தாலேலோ


வானளந்த திருக்குமாரா, மனிதகுல மருத்துவனே, தேன்மதுர திருவாயில் சித்திரங்கள் தீட்டவந்தாய்" எனும் வரிகள் மிக அற்புதமானவை


அவ்வரிகளே இந்த குடில் காட்சிகளை பார்க்கும்பொழுது நினைவுக்கு வரும்


கிறிஸ்மஸ் தொடங்கியாயிற்று....


கிறிஸ்மஸ் என்றால் என்ன என புரிந்தும் புரியாமல் கொண்டாடி கொண்டிருக்கின்றாள் மகள்


புரியாத வயதில் புரியாத விஷயங்களை கொண்டாடுவதுதான் ஒரு சுவாரஸ்யம், அந்நினைவுகளே பின்னர் பசுமையாக மனதில் தங்கும்


மெர்ரி கிறிஸ்மஸ் என கண்ணில்பட்ட எல்லோருக்கும் சொல்லிகொண்டே இருக்கின்றாள்...


வண்ணமயமான விளக்குகளில் கிறிஸ்மஸ் ஜொலிக்கின்றது


நமது மனமோ சொந்த‌ கிராமத்தையும், அந்த சின்னஞ்சிறிய ஆலயத்தையும் சுற்றி சுற்றி வருகின்றது..


எங்கே போனாலும் கூடவே வந்து தொலைவது நிழல் மட்டுமல்ல, சொந்த மண்ணின் பசுமையான நினைவுகளும் அந்த ஏக்கமும் கூட. அதனை கழற்றிவிட ஒருகாலமும் முடியாது.


அந்த குடிலை மறுபடியும் பார்க்கின்றேன், அதே வரிகள்


"ஆயர்பாடி மாளிகையில் தாய்மடியில் கன்றினை போல்..."



ஒரு மாமனித ஆச்சர்யம் இயேசு கிறிஸ்து



Image may contain: one or more people


கடவுளின் அவதாரமாக கிறிஸ்தவர்களும், ஒரு இறைவாக்கினராக இஸ்லாமியரும், நாங்கள் எதிர்பார்த்திருக்கும் மெசியா அல்ல இது ஒரு இனதுரோகி என யூதரும், மற்ற மதத்தினர் எல்லாம் மாபெரும் தத்துவஞானியாகவும் பார்க்கபடும் ஒரு மாமனித ஆச்சர்யம் இயேசு கிறிஸ்து.


புத்தமதத்தினர் கூட தங்கள் மதத்தின் உண்மையான தத்துவங்களை போதித்தவர் அவர் என அவரை உயர்த்தி பிடிப்பார்கள்.


அவரின் பிறந்தநாள் டிசம்பர் 25 என கொண்டாடபடுகின்றது, அவர் அந்த தேதியில் பிறந்தார் என்பதற்கு ஆதாரம் ஏதுமில்லை (ஓலைசுவடி, பைப்ரஸ்புல்,கல்வெட்டு அல்லது மிருகத்தோல் என ஏதுமில்லை), காரணம் 33 வயதில் அவர் கொல்லபட்டு பின் அவரது மார்க்கம் ரோமையர்களால் இன்னலுக்குள்ளாக்கபட்டு, ஒரு கட்டத்தில் ரோமை அரசையே கிறிஸ்துவம் கைபற்றியபின்புதான் அவரின் பிறந்தநாள் பற்றி யோசிக்க ஆரம்பித்தார்கள்.


இதற்குள் அவர் பிறந்து 350 ஆண்டுகள் ஆனது.


போப் ஜூலியஸ் என்பவர் டிசம்பர் 25 என நாள்குறித்தார், அதுவே பிரதானமானது ஆனாலும் சில ஆர்தடாக்ஸ் சபையினர் ஜனவரி 5 என கொண்டாடவும் செய்கின்றனர், இதுவரை அவர்களை யாரும் கண்டுகொள்ளவில்லை, சரியான ஆதாரமில்லாத நாள் என்று கொண்டாடினால் என்ன?


அது டிசம்பர் 25தானா? என்பதில்தான் சர்ச்சை உண்டே தவிர இயேசு உலகில் பிறந்தார் என்பது சந்தேகத்திற்கு அப்பாற்பட்டது, மிக உறுதியாக வரலேறே அதனை கி.மு, கி.பி என பிரிக்கின்றது அதாவது கி.மு 7 க்கும் கி.மு 2 க்கும் இடைபட்ட காலம் அவர் பிறந்தது என்பது வரலாற்று ஆய்வாளர் வாதம்.


அவரின் வளர்ப்பு சூசையப்பர் அதாவது ஜோசப் , தாவீது மன்னரின் வம்சம், தாவீது இன்றுவரை யூதர்களின் நம்பர் 1 ராஜா, ஆனால் ஜோசப் அரசவம்சம் என்றாலும் அரசுக்கும் அவருக்கும் சம்பந்தமே இல்லை, அப்பாவி தச்சு தொழிலாளி, தாய் மேரி கடவுளைதவிர வேறு ஏதும் அறியா பக்தை.


வானதூதர் வந்து அருள்மொழி கூறி, மரியாளின் வயிற்றில் உருவானார் யேசு என்பது பைபிளின் ஆதாரம், கிறிஸ்தவர்களின் நம்பிக்கை.


அவர்கள் வாழ்ந்தது நாசரேத் எனும் வடக்கு இஸ்ரேலிய நகரம். நசேரா எனும் அரபு சொல்லுக்கு ரோஜா என்பது பொருள், ரோஜாமலர் மிகுந்த சோலைதான் நாசரேத்.


அந்த‌ காலகட்டத்தில் இன்றைய இஸ்ரேல்,பாலஸ்தீன் சிரியா எல்லாம் ரோமானியர் ஆண்டனர், சகலமும் ரோமானிசம், யூத மதம் சிறுபான்மை , ரோமை, கிரேக்க மதங்களை தவிர சொல்லி கொள்ளும் மதம் அங்கு இல்லை.


இன்றைய நவீன மக்களாட்ட்சிக்கு முன்னோடி திட்டமிட்டவர் ரோமானியர்கள், இன்று உலகம் ஜனநாயக நாடுகள் எல்லாம் அவர்கள் 2000 ஆண்டுகளுக்கு முன்னர் அமைத்த அந்த அமைப்பிலேதான் இன்றும் இயங்குகின்றன, அரசமைப்பை விடுங்கள், காலண்டரும், கட்டடங்களும், அழகான சாலைகளும் இன்னும் ஏராளமானது ரோமானியர் கொடை,


அப்படிபட்ட ரோமானிய அரசனான அகஸ்டஸ் சீசர் தனது ஆட்சிக்கு உட்பட்ட மக்களை கணக்கெடுக்க உத்தரவிட்டான், இதுதான் உலகின் முதன் முதல் "மக்கள்தொகை" கணக்கெடுப்பு (நமது பகுதி கணக்கெடுப்பு அதிகாரிகளின் சகல சாபங்களுக்கும் உரியவர் இவர்தான்), அதுவும் மிக நுணுக்கமான கட்டளை. மக்கள் தங்கள் சொந்த ஊரில் சென்று பதியவேண்டும்.


அதாவது மக்கள் நல திட்டங்களை செயல்படுத்தவும், நல்ல நிர்வாகத்தை கொடுக்கவும் நடந்த ஏற்பாடு, மக்கள் எவ்வளவு என முதன்முதலாக அறிய ஆசைபட்ட மன்னர், வேறு நோக்கம் இருக்கமுடியாது காரணம் அன்று தேர்தல் இல்லை :)


இப்படியான காலத்தில்தான் ஜோசப் தனது மனைவி நிறைமாத கர்ப்பிணியான மரியாளுடன் தனது முன்னோர்களின் ஊரான பெத்லகேம் சென்றார் . தாவீது அரசருக்கு பெத்லகேம் சொந்த ஊர்,


ஆனால் அதன் பின் 30 தலைமுறை தாண்டியும் தனது பூர்விகத்தை நினைத்து சென்றிருக்கின்றார் அல்லவா?
இதுதான் யூத குணம், யூத ரத்தத்தில் ஊறிய சொந்த‌ மண் வெறி, வேறு எந்த இனத்திடமும் காணமுடியாது,


வேண்டுமானால் அருகிலிருப்பவரிடம் விசாரியுங்கள் 3ம் தலைமுறை வரை தெரிந்தாலே பெரும் ஆச்சர்யம்.


திடீரென பெத்லெகேம் எனும் ஊருக்கு சென்றார், சொந்த ஊரே தவிர சொந்தகாரர்களோ அல்லது பூர்வீக இடம் கூட தெரியாது, அது சாத்தியமும் இல்லை. தங்குவதற்கு வீடோ அல்லது சத்திரமோ இல்லை காரணம் ஏகபட்ட கூட்டம்.


ஏடிஎம் மிஷினில் சொந்த பணம் எடுக்கவ்வே இந்தியாவில் இவ்வளவு கூட்டம் என்றால், முதல் மக்கள்கணக்கெடுப்பு, சொந்த ஊர் செல்லும் நெரிசல் எவ்வளவு இருந்திருக்கும்
மனைவி நிறைமாத கர்ப்பிணி, தலைபிள்ளை வேறு,


மாற்றுவழி ஒன்றுமில்லை, ஊரை ஒட்டிய ஒரு குகைக்கு சென்றார், அது ஆடுமாடுகளை அடைக்கும் இடம், அது யாருக்கு சொந்தமானது என்பது பற்றி தகவல் இல்லை, ஆனால் மாடுகளுக்கு தீனிபோடும் இடமெல்லாம் வைத்து (நமது ஊரில் "முன் அட்டி" ) பரமரித்த இடம்தான், அங்குதான் சென்றார் ஜோசப்.


அங்குதான் இயேசு பிறந்தார், மாபெரும் அவதாரம், உலகை புரட்டிபோட்ட பெரும் வரலாற்று ஞான சூரியன் அங்கு உதித்தது.


மாட்டுக்டிலில் கடும் குளிரில் அக்குழந்தை கந்தல் துணியில் சிரித்து கொண்டிருந்தது, அருகிலே கடவுளுக்கு பணிந்த ஒரே காரணத்திற்காய் அனாதையாக, உதவிக்கு கூட யாருமில்லாமல் சொல்லமுடியாத பரிதாபத்தோடு படுத்திருந்தாள் மரியாள், ஆனாலும் கடவுளை பற்றி ஒரு வார்த்தை அவர் தவறாக பேசவில்லை


அவளுக்கு உணவளிப்பதற்காக அங்குமிங்கும் ஓடிகொண்டிருந்தார் ஜோசப், கடும் குளிரில் அக்குழந்தையை கொஞ்சம் இதம் கொடுத்தது, அங்கிருந்த பசுமாட்டின் மூச்சு காற்று மட்டுமே, அந்த வெப்பகாற்றில் குழந்தை தூங்கிற்று.


மாடு அடையும் தொழுவம், சாணம் ஹோமியம், கொசு முதல் சகல தொந்தரவும் உண்டு, யாருமே இல்லாத அனாதையாக அந்த அபலைப்பெண், அந்நிய ஊரில் செய்வதறியாமல் தடுமாறிய பரிதாபத்துகுரிய சூசையப்பர்,


முதல் கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் இப்படித்தான் தொடங்கியது, அன்று கிறிஸ்மஸ் மரம் இல்லை, வாழ்த்து செய்தி இல்லை, தலைவர்கள் அறிக்கை இல்லை, விளக்கு அலங்காரம் இல்லை, கேக் இல்லை, பலகாரம் இல்லை வான்கோழி பிரியாணி இல்லை, வெடி இல்லை, புதுஆடை இல்லை, ஒரு ஆரவாரமும் இல்லை.


கடவுள் பூமியில் பிறப்பதற்காக இரு மானிடபிறவிகள் சொல்லணா துயரங்களை அனுபவித்த கணத்தில் இப்படித்தான் கிறிஸ்துமஸ் தொடங்கியது.


குகைக்கு அப்பக்கம் ஆடு மேய்ப்பவர்கள் இருந்தனர், இரவெல்லாம் காவல் காக்கும் பணியும் உண்டு, ஓநாய் தொந்தரவு அதிகம்.


அன்று ஆடு மேய்க்கும் இனம் அந்நாட்டில் ஒதுக்கபட்டது, ஒடுக்கபட்டது அல்லது தாழ்த்தபட்டது, யாரும் அவர்களை கண்டு கொள்ளமாட்டார்கள், புறக்கணிக்கபட்ட அந்த இனத்தினரிடம்தான் வானதூதர் குழு அந்த நல்லசெய்தியை சொன்னது


ஒரு மகன் பிறந்திருக்கிறார், அவர் சமத்துவத்தை கொண்டுவருவார், சகலரையும் வாழ வைப்பார், அதாவது அதன் பொருள் இனி நீங்கள் எல்லாம் ஒதுக்கபட்டு, புறக்கணிக்க பட்டவர்கள் அல்ல, எல்லா மக்களையும் போல நீங்களும் வாழ்வீர்கள், அக்குழந்தை உங்களை வாழவைக்கும்.


அந்த செய்தியை கேட்டவுடன் மகிழ்ந்த இடையரும் சென்று குழந்தையை வணங்கினர், நீங்களும் வாழ்வீர்கள் வளம் பெறுவீர்கள் என்பதுதான் நல்லசெய்தி, அதாவது வான தூதர்கள் உரைத்த நற்செய்தி (மேடைபோட்டு நீ சாவாய், நீ நரகம் போவாய் நீ நாசமாய் போவாய் என மிரட்டுவது நற்செய்தி அல்ல)


மாபெரும் அவதாரம் ஒன்று தனது முதல் தரிசனத்தை ஒடுகபட்ட மக்களுக்கே தருகின்றது, அது பிறந்த இடம் கூட மேல்மக்களால் புறக்கணிக்கபட்ட இடமே.


நிற்க‌ , அப்போது இந்தியாவில் இமயமலை பக்கம் சில ஜாதக விற்பனர்களுக்கு வானில் ஒரு அறிகுறி தோன்றிற்று, ஒரு வால்நட்சத்திரம் ஜோதிட சாஸ்திர ரீதியாக அதன் அர்த்தம் பெரும் அவதார பிறப்பு பிறந்திருக்கின்றது என்பது, அவர்கள் பெரும் பரிசுபொருளுடன் கிளம்பினர், அதனை காண்பதற்கு அவர்களுக்கு அவ்வளவு ஆசை.


கவனியுங்கள் 3 ராஜாக்கள் என பைபிள் சொல்கின்றது, ஆனால் அவர்கள் மூன்று பேரும் வாட்ஸ் அப்பிலோ அல்லது முகநூலிலோ தொடர்பு கொண்டிருக்கமுடியாது, அன்றைய கீழ்தேசம் நிச்சயம் சொல்லலாம் அது இந்தியா, இந்தியா மட்டுமே, இந்தியா என்றால் ஒரே நாடல்ல பல நாடுகள், பல அரசர்கள்.


நட்சத்திரம் கண்டவுடன் அந்நாடுகளில் ஒரு பெரும் பரபரப்பு ஏற்பட்டிருக்கின்றது, அதனால்தான் அரசர்கள் கூடி அக்குழந்தையை பார்க்க வந்தனர்.


நிதானித்து சிந்தியுங்கள், கண்டது ஒரு நட்சத்திரத்தை அதனை வைத்து மிகச்ரியாக யூதர்களின் ராஜா பிறந்திருக்கின்றார் என்று ஜாதக ரீதியாக கணித்திருக்கின்றார்கள் என்றால் எவ்வளவு ஜோதிட அறிவு இருந்திருக்க்வேண்டும், யூத இனம் வாழும் தேசத்திற்கும் இமயமலைக்கும் எவ்வளவு தொலைவு, எவ்வளவு வித்தியாசம்?


நாம் சொல்லவில்லை பைபிள் சொல்கிறது,


தனது விருப்பத்திற்கு பைபிளை வளைக்கும் சில போதகர்கள், ஜோதிடமே முழுபொய் என முழங்குகின்றார்கள் அல்லவா?, அவர்கள் இக்காட்சியை காண்பது நல்லது.


அதாவது பல விஷயங்கள் அறிவுக்கு எட்டாதது.


இப்படியாக அந்த இந்திய ராஜாக்களும் அவர்களின் சாஸ்திரிகளும் சென்று அரண்மனையில் ஜெருசலேமில் தேடினர், காரணம் அவர்கள் தேடியது அரச குழந்தையை. மூன்று அரசர்கள் அனாதைகளாக சென்றிருக்க மாட்டார்கள் அல்லவா? கூடவே ஒரு கூட்டமும் சென்றிருக்கலாம்.


ஆனால் அங்கு ஆட்சியில் இருந்தது ஒரு கம்சன், அவன் பெயர் ஏரோது, கம்சன் கண்ணனுக்கு கொடுத்த இம்சைகளுக்கு சற்றும் குறையாதது யேசுவிற்கு ஏரோது கொடுத்தது.


ஆனால் குழந்தை எங்கு பிறந்தது தெரியாது, அரண்மனையில் பிறக்கவில்லை, யாரை கேட்பது? அவர்களிடமே கேட்டான், இங்கு பிறக்கவில்லை, எந்த யூதர் வீட்டில் கண்டால் என்னிடம் சொல்லுங்கள்.


அரசர் குழந்தையை தேடினர், கம்சன் ஏரோது வாளை தேடினான்.


அந்த அரசர்களும் குழந்தையை கண்டு மகிழ்ந்து பணிந்தனர், சாஸ்திரங்களில் தேர்ந்ததவர்கள் அல்லவா? கனவு சாஸ்திரத்தில் எச்சரிக்கபட்டு ஏரோதை காணாமல் திரும்பினர்.


ஆனால் ஏரோது கடும் சினமுற்றார், அதாவது ஆள்வது மாமன்னன் அகஸ்டஸ் சீசர் என்றாலும் யூதர்களுக்கு தன்னாட்சி உரிமை கொடுத்திருந்தான், அதன்படி கலப்பு யூதரான ஏரோது ஆட்சியை பிடித்து, யூதர்களை மிக தந்திரமாக ஆண்டார்.


யூதர்கள் எனும் பூதம் எப்படி அடங்கும், யெருசலேமில் ஒரு கோயில்கட்டினால் அடங்கும், அதனைத்தான் அவன் செய்தான், அவனிடமே யூதரின் அரசன் பிறந்தார் என்றால் விடுவானா?, குழந்தையை கண்டுபிடிக்கமுடியவில்லை, ஒரு கொடூர திட்டத்தை அவனது பதவிவெறி தூண்டிற்று,


பெத்லகேம் சுற்றியுள்ள 2 வயது குழந்தைகளை கொல்ல சொன்னான், அப்படியே கொல்லதொடங்கினார்கள்.
ஆனால் கனவில் எச்சரிக்கபட்டு பலகினமான உடல்நிலையிலும் மனைவியையும் மகனையும் அழைத்து சென்று தப்பினார் சூசை. இவ்வாறாக இயேசுவின் முதல்கண்டம் கடந்தது.


இப்படி பல துயரங்களில் தப்பி தொடங்கியதுதான் கிறிஸ்துமஸ், பின்னாளில் மதம் வளர வளர‌ கிறிஸ்மஸ் பெரும் கொண்டாட்டமானது, புனித பிரான்சிஸ் அசிசி போன்ற‌ கிறிஸ்தவ துறவிகள் குடில்வைக்கும் பழக்கம் தொடங்கினர்.


குடில் என்றால் அது உருவவழிபாடு அல்லவா? புரட்சி கிறிஸ்தவர்கள் எப்படி ஏற்றுகொள்வார்கள்??


அவர்கள் வேறுவழியில் இறங்கினர், கிறிஸ்துமஸ் மரம், கிறிஸ்துமஸ் வாழ்த்து ,கிறிஸ்துமஸ் கேக் என அவர்கள் வழியில் கொண்டாடினர்.


புனித நிக்கோலஸ் எனும் ஒருவர், கிறிஸ்துமஸ் அன்று குழந்தைகளுக்கு பரிசு கொடுத்து மகிழ்ந்தார், பின்னர் மறைந்தார். குழந்தைகளுக்கு அது பெரும் இழப்பு, அவர் மறைந்தபின்னும் குழந்தைகளுக்கு அவர் பரிசு கொடுப்பார் என குழந்தைகளை நம்பவைத்தனர்,


அவர் பனிச்றுக்கு வண்டியில் வருவார் , மான்கள் இழுத்துவரும் என்றேல்லாம் குழந்தைகளுகு போதிக்கபட்டது, செயிண்ட் நிக்கோலஸ் எனும் வார்த்தை போர்த்துகீசிய மொழியில் சாண்டாகிளாஸ் ஆனது.


இன்று சாண்டாகிளாஸை தெரியாதவர் யாரும் இல்லை.


கிறிஸ்தவம் பரவ பரவ இந்தியாவிலும் கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் தொடங்கியது,


உலகில் எங்கெல்லாம் கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்கள் நடந்தாலும், சொந்த ஊரில் கொண்டாடும் விதமே தனி.


அற்புதமான குடில்கள் செய்து, அதனுள் கிறிஸ்து பிறப்பினை நினைவு கூறும் சொரூபங்களை வைப்பார்கள், அதனை பார்க்கும்பொழுதே, கிறிஸ்து பிறந்த அற்புத காட்சி கண்ணுக்குள் வந்துபோகும்.


புரட்சி கிறிஸ்தவ சபைகளில் இந்த காட்சிகளை காணமுடியாது எனினும், கிறிஸ்மஸ் மரம், அலங்காரங்கள் அற்புதமான பாடல்கள் என அதன் அழகு வேறுமாதிரியானது.


மிக சில சபையார் கிறிஸ்மஸ் கொண்டாடுவதில்லை, கேட்டால் பைபிளில் எங்கும் சொல்லபடவில்லை என்பார்கள், அதே பைபிளில் "உன் சொத்துக்களை விற்று ஏழைகளுக்கு கொடு, பணக்காரனுக்கு ஐயோ கேடு" எனறேல்லாம் வசனம் உண்டல்லவா? என்றெல்லாம் கேட்க ஆசைதான், ஆனால் அவர்கள் கண்களில் மின்னும் பரலோக ஒளியில் நமக்கு நாவறண்டு விடும்.


அற்புதமான நிகழ்வு கிறிஸ்துமஸ், அதாவது ஒதுக்கபட்ட இடத்தில் ஏழையாக பிறந்து, தாழ்த்தபட்டவர் முதல் மாபெரும் அரசர்வரை அந்த இடத்தில் சந்திக்கவைத்த முதல் சமத்துவ நிகழ்வு, அக்குழந்தையின் முன்னால்தான் அரசரும் ஆண்டியும் ஒருசேர வணங்கினார்கள், பெரும் மாற்றத்தின் தொடக்கபுள்ளி அந்த பெத்லஹேம் தொழுவம்.


பிறந்தபொழுதே பிரிவுகளை உடைத்தவர் இயேசு,


கிறிஸ்துமஸ் அதனைத்தான் சொல்கிறது, ஆனால் இன்று சாதியின் பெயரால் திருச்சபையை பிரிகின்றது அல்லது சாதியின் பெயரால் சபை உருவாக்கபடுகின்றது, இப்படியாக ஏரோதிடம் தப்பிக்க அக்குழந்தை பட்ட கஷ்டடத்தினை ஜாதிவெறியர்களிடம் இருந்து தப்பிக்க கிறிஸ்தவம் படுகின்றது.


ஆனால் உண்மையான கிறிஸ்தவர்கள் எந்த வேறுபாடுகளும் பார்க்கமாட்டார்கள், அப்படி பார்க்கவும் கூடாது என்பதற்கு கிறிஸ்து பிறப்பும் அங்கு ஒன்றாக வணங்கிய‌ ஆண்டசாதி மற்றும் அடிமை சாதியுமே எடுத்துகாட்டு,


அந்த சமத்துவம்தான் கிறிஸ்து மாட்டுகுடிலில் பிறந்த ரகசியம். பிறக்கும் பொழுதே சமத்துவம் கொண்டுவந்தவர் இயேசு


ஊரில் கொண்டாடும் கிறிஸ்துமஸ் விழாவிற்கு தனி சிறப்பு உண்டு, மார்கழி குளிரும், பனியும், அற்புதமான அமைதி இரவும், அந்த பிரார்த்தனையும்,வீடுகளில் மின்னும் நட்சத்திரங்களும், நள்ளிரவிலே வெட்டபடும் ஆடுகளும், அவற்றை அருகிருந்தே ஈரல் எனக்கு, கால் உனக்கு என சொல்லி பனை ஓலையில் சுற்றி கொண்டு செல்வதும் ஒரு வகையான குதூகலாம்


எந்த பண்டிகை ஆயினும் சொந்தமண்ணில் சொந்த இனத்தோடு கொண்டாடுவதற்கு ஈடேறா...


ஆக சொந்த ஊரில் சுற்றம் சூழ கிறிஸ்மஸ் கொண்டாடுபவர்களுக்கு பொறாமையோடு கூடிய வாழ்த்து, தொலைதூரத்தில் தனிமையாக கொண்டாடுபவர்களுக்கு ஸ்பெஷல் வாழ்த்து



எல்லோரும் கொண்டாடலாம்...