Friday, December 16, 2016

போக்குவரத்து நெரிசலில் சிக்கினார் முதல்வர் பன்னீர் செல்வம்





போக்குவரத்து நெரிசலில் சிக்கினார் முதல்வர் பன்னீர் செல்வம் : செய்தி


அம்மா இருந்தவரை முதல்வரின் போக்குவரத்த்து எப்படி இருந்தது? இரண்டுமணி நேரம் வரை மக்களை நடுரோட்டில் நிறுத்திய சம்பவங்கள் உண்டு


இன்னும் ஏராள மக்கள் விரோத செயல்கள் உண்டு





ஆனால் பன்னீர் செல்வம் இப்படியே மக்களை கொடுமை படுத்தாமல் ஒதுங்கி நின்று, இனி பிளாட்பாரத்தில் நடந்து, ஏதும் பிரச்சினை என்றால் ஹெலிகாப்டரில் வராமல் கால் தேய ஓடிவந்து கடமை ஆற்றினால்..

கோடை என்றால் கொடநாடு மாளிகை கட்டாமல் குடிசையில் கயிற்றுகட்டிலில் இருந்தால்..

ஒரு ரூபாய் பொருளில் 5 ரூபாய்க்கு ஸ்டிக்கர் ஒட்டாமல் இருந்தால்...

இது எப்படி அம்மாவிற்கு காட்டிய விசுவாசமாகும்? அம்மா காட்டிய வழியாகும்

இவர் இப்படி செய்ய செய்ய முன்னாள் அம்மாவினை மக்கள் திட்ட மாட்டார்களா? அம்மா மதிப்பு இறங்கி விடாதா?

மக்களை பாடாய் படுத்தினால் அல்லவா பன்னீருக்கு அம்மா பரவாயில்லை என மக்கள் சொல்வார்கள்?

ஜெயலிதாவிற்கு பன்னீர்செல்வம் பரவாயில்லை என சொல்ல ஆரம்பித்தால் எப்படி ஜெயா ஆத்மா சாந்தி அடையும்?

இப்படி பன்னீர் செல்வம் செய்வது அம்மாவிற்கான துரோகம் அல்லவா?, இப்படியா அம்மா பெயரினை கெடுப்பது??

இப்படி அம்மா பெயரினை கெடுத்தால் அவரை கட்சியினை விட்டு விரட்டிவிட மாட்டார்களா?

செல்வத்திலே வளர்ந்து, செல்வத்திலே புரண்டு, செல்வத்திலே இறந்தவர் ஜெயலலிதா, அடித்தட்டு மக்களின் மனமோ, அவரிகளின் வாழ்க்கை சிக்கலோ அவருக்கு புரியாது

தாத்தா, தாய், எம்ஜிஆர், பின் அடிமைகள் கூட்டம் என அவரை தாங்கி பிடிக்க பெரும் கூட்டம் இருந்தது

பன்னீர்செல்வம் அடித்தட்டிலிருந்து வந்தவர், கூடுமானவரை மக்களின் சுமைகளும், கஷ்டங்களும் கலைஞர் போலவே அவருக்கும் புரியும்

இப்பொழுது கைகள் வேறு அவிழ்த்துவிடபட்டிருப்பதால் மனிதர் பல விஷயங்களை ஓடி ஓடி அணுகுகுகின்றார். விடுதலை பெற்ற கைதிகள் போல எதனையும் எதிர்பார்க்காமல் காரியம் ஆற்றுகின்றார்.

சரி இந்த முதல்வர் இருக்கும்போது வைகோ ஏன் டெல்லிக்கு சென்று தமிழக நிதி கோர வேண்டும். அவரை அரசு காரியங்களில் குறுக்கிடுகின்றார் என கைது செய்தால் என்ன?

பின்னால் நடக்கலாம்

ஆனாலும் எத்தனை நாள் கோபமோ தெரியவில்லை, மிக அழகாக ஜெயலலிதாவினை பன்னீர்செல்வம் பழிவாங்கிகொண்டிருக்கின்றார்.

பரவாயில்லை முதல்வர் கொஞ்சம் இறங்கி வந்து மக்கள் சிரமங்களோடு பழகுகின்றார்.

ராஜதந்திரமான பழிவாங்கல் இது

நல்ல வேளையாக வீரப்பன் இல்லை. இல்லையென்றால் முதல்வர் மலையடிவார பகுதிகளுக்கு செல்லும்பொழுது மிக எளிதாக கடத்திவிடுவான்.









கொடநாட்டில் அதிமுக பொதுக்குழு 21ம் தேதி கூடும்

செயற்குழு சிறுதாவூர் பங்களாவில் கூடும், தேசிய கட்சிகளுடனான சந்திப்பு ஐதராபாத் பங்களாவில் நடக்கும், தினசரி ஆலோசனைகள் போயஸ் கார்டனில் நடக்கும்

ஏதும் மவுனமான கூட்டம் என்றால் நிச்சயம் ஜெயா சமாதி

சரி இந்த அதிமுக கட்சி அலுவலகம் என ஒன்று எதற்கு இருக்கின்றது என நாம் கேட்க கூடாது, ஏதும் கட்சி துக்கம் என்றால் அங்கு கொடியினை அரைகம்பத்தில் பறக்கவிடுவார்கள்

அதற்கு ஒரு அலுவலகம் அவ்வளவுதான்.








No comments:

Post a Comment