Tuesday, December 20, 2016

சிரியாவினையும், துருக்கியினையும் கையில் வைத்திருப்பது யார்?




Image may contain: 1 person, shoes


துருக்கியின் அமைவிடம் அதற்கு இப்பொழுது பெரும் சிக்கல், காரணம் துருக்கி ஐரோப்பிய ஆசிய இணைப்பு நாடு, ஒரு வாசல் போன்றது,


ஆசியாவின் நுழைவாசல், ஐரோப்பியருக்கு புறவாசல்


சிரியாவும், துருக்கியும் ஒரு வல்லரசின் கையில் கிடைக்கும் பட்சத்தில் பைப் போட்டு அரேபிய எண்ணையினை ஐரோப்பாவிற்கு கொண்டு செல்லலாம் என்பதே இந்த சண்டையின் உள்நோக்கம்.





அப்படி சென்றால் ரஷ்ய எண்ணெய் சந்தை பாதிக்கபடும் என்பது புடின் கணக்கு

சிரியாவினையும், துருக்கியினையும் கையில் வைத்திருப்பது யார்? என்பதே பெரும் போட்டி. இதற்கு செத்திருப்பது இதுவரை பல லட்சம் மக்கள், ஏராளமான அகதிகள்

இன்றைய துருக்கி ஐரோபியசார்பு நாடு, முழுக்க அமெரிக்க சார்பு அல்ல, சமீபத்தில் அங்கு ஆட்சிமாற்றம் செய்ய அமெரிக்கா செய்த முயற்சி தோல்வியில் முடிய , அமெரிக்கா மீது அது கோபத்தில் இருந்தது

அமெரிக்க துருப்புக்கள் சிரியாவில் நிலைகொண்டிருப்பதை கட்டம் போட்டு மறைமுகமாக காட்டுகின்றது ரஷ்யா

சிரியாவில் அமெரிக்கா களமிறங்காது என சொல்லிகொண்டிருந்த அமெரிக்காவிற்கு இது பெரும் அடி

சிரியாவில் ரஷ்யா செய்யும் பெர்மாமன்ஸ் அமெரிக்கா வயிற்றில் புளிகரைத்துவிட்டது, ஏதாவது செய்ய வேண்டும் என அது முடிவு செய்தது

ரஷ்யவோ தினம் யுத்தத்தை எதிர்பார்பது போல தன் நீர்மூழ்கிகளை அணு ஏவுகனைகளுடன் ஐரோப்பாவினை சுற்றிவர செய்கிறது, ரஷ்ய விமானங்கள் அடிக்கடி பிரிட்டனில் ஊடுருவுகின்றன‌

பல வகையான தீவிரவாத அடியாட்களை கொண்ட அமெரிக்கா, துருக்கியின் நிலையினை சிக்கலாக என்னமோ செய்கின்றது,

அடிக்கடி குண்டுவெடிப்பும் நிகழும்

அதாவது சிரியா போல துருக்கியும் ஒரு மோசமான நிலைக்கு செல்லவேண்டும் என்பது யாரோ ஒரு பெரும்புள்ளியின் விருப்பம்

இந்நிலையில் துருக்கியில் ரஷ்ய தூதர் சுட்டுகொல்லபட்டுள்ளார், சர்வதேச ரீதியில் இது பெரும் பரபரப்பு

அமெரிக்காவோ துருக்கியில் பாதுகாப்பு சரியில்லை, அரசு சரியில்லை, என என்னவெல்லாமோ சொல்லி கன்னத்தில் கை வைக்கின்றது

ரஷ்ய தூதரை சுட்டவனோ, சிரியாவில் ரஷ்ய படைகள் செய்யும் அட்டகாசத்திற்கு சுட்டதாக சொல்கிறான், ஈராக்கில் துருக்கிய படைகள் செய்யும் அட்டகாசத்திற்கு அவனை யார் சுடுவது?

ரஷ்ய தூதர் கொல்லபட்டது ரஷ்யாவிற்கு அவமானம், அதாவது முதுகில் குத்திய செயல்

நிச்சயம் ரஷ்யாவின் அதிரடி வேறுமாதிரி இருக்கலாம்

ரஷ்யாவில் இருக்கும் துருக்கி தூதரை எல்லாம் தூக்க மாட்டார்கள்,

காரணம் கொன்றது யார்? கொல்ல சொன்னது யார்? என்பது வரை புட்டீனுக்கு தெரிந்திருக்கும்

அதனால் துருக்கியினை பழிவாங்க ரஷ்யா கிளம்பாது

ஆனால் வாங்க வேண்டிய இடத்தில் மிக சரியாக ரஷ்யா வாங்கும், ஏற்கனவே திட்டமிட்டு வைத்திருக்கும் புட்டீன் எப்படி பதிலடி கொடுப்பார் என விரைவில் காணலாம்.

இந்த பரபரப்பில் என்னாகும்?

சிரியாவில் அமெரிக்க துருப்புக்கள் இருக்கும் செய்தி மறைக்கபடும் அவ்வளவுதான்.

டிரம்ப் கொஞ்சம் புட்டீன் ரசிகர், புட்டீனுடன் பேசுவேன், பல பிரச்சினைகளை முடிப்பேன் என்றெல்லாம் சொல்லிகொண்டிருப்பவர்

அவருக்கும் புட்டீனுக்கும் பெரும் சிக்கல் வைக்கும் நோக்கிலும் இது நடத்தபட்டிருக்கலாம் என்பது இன்னொரு கோணம்

புட்டீனின் அடி எஸ்தோனியா பக்கம் இருக்கலாம், கொஞ்ச நாளாக அவர் அப்பக்கம்தான் உறுமிகொண்டிருக்கின்றார்.







No comments:

Post a Comment