Wednesday, December 14, 2016

ரத்தத்தின் ரத்தங்கள் இப்பொழுது பித்தத்தின் பித்தங்களாக....

உண்மையில் " புரட்சி தலைவி" எனும் பட்டம் வி.என் ஜானகிக்குத்தான் சென்றிருக்க வேண்டும், "புரட்சி தலைவரின்" அதிகார்வ பூர்வ மனைவிதானே "புரட்சி தலைவியாக" இருந்திருக்க வேண்டும்,

திருமணம் முறையாக நடக்கவில்லை என்பதால் விட்டுவிட்டார்களோ? அந்த மகோ.ராமசந்திரன் எதனைத்தான் உருப்படியாக செய்தார்?

சரி இது புரட்சி சமாச்சாரம்


ஜெயலலிதாவிற்கு திருமணம் இல்லை, கணவன் இல்லை. அதனால் அம்மா என அவரை அழைக்கும்பொழுது "அப்பா" என ஒருவரை அழைக்கும் அவசியம் வரவில்லை

இனி சசிகலா" சின்னம்மா" என்றால், நான் தான் தமிழகத்தின் "சித்தப்பா" என நடராஜன் கிளம்பிவிட மாட்டாரா?

இனி தமிழக "சித்தப்பா" நடராஜன்.

ரத்தத்தின் ரத்தங்கள் இப்பொழுது பித்தத்தின் பித்தங்களாக ஆகிகொண்டிருக்கின்றார்கள்

"சித்தி" எனும் ராதிகாவின் பட்டமும், "சித்தப்பா" என்ற சரத்குமாரின் பட்டமும் தாரை வார்க்கபட்டுகொண்டிருக்கின்றன‌





"ஜெயலலிதா இறக்கவில்லை சின்னம்மா வடிவில் நம்மோடு தான் இருக்கிறார் , ஜெயலலிதாவோடு 33 ஆண்டுகளாக இருந்த சின்னம்மா அதிமுகவின் தலைமை பொறுப்பை ஏற்க வேண்டும்.. ": சரத்குமார்


என்ன தல, அடி கொஞ்சம் பலமோ?


எத்தனையோ பல்டிகளை ஒலிம்பிக்ஸில் பார்த்தோம், இப்படி ஒரு அசகசாய சூர பல்டியினை எங்காவது பார்க்க முடியுமா?..




அதுவும் டூப் போடாமல்






 ஜெயலலிதாவுக்கு தஞ்சாவூரில் அதிமுக நிர்வாகி சாமிநாதன் என்பவர் கோயில் கட்டியுள்ளார்.


ஜெயலலிதாவிற்கு அங்கோர்வார்ட் அளவு கோயிலே கட்டினாலும் இனி ஒரு கவுன்சிலர் பதவியாவது கிடைக்குமா?

கொஞ்சமேனும் விவரமாக இருந்தால் "பவர்மிகு" சின்னம்மன் ஆலயம் அல்லவா எழுப்பியிருப்பார்?


அவ்வளவு விவரமாக இருந்தால் ஏன் கோயில் கட்ட கிளம்புகின்றார்?




சேகர் ரெட்டிக்கு அச்சகத்தில் இருந்து நேரடியாக வந்த ரூ.2 ஆயிரம் நோட்டுகள்

ஒரு ரெட்டிக்கே இப்படி நேரடியாக வந்ததென்றால், எத்தனை ஆயிரம் ரெட்டிக்கள் இந்தியாவில் இருப்பார்கள். எவ்வளவு பதுங்கியிருக்கும்

பின் எப்படி ஏடிஎம்மில் பணமிருக்கும்?


ஆக்சிஸ் வங்கியும் இதே சர்ச்சையில் சிக்கியது, இன்னும் பல வங்கிகள் சர்ச்சையாகின்றன, ஆனால் எதன் மீதும் நடவடிக்கை இல்லை

உண்மையில் இந்த நாட்டின் பெரும் கறுப்பு பண பதுக்கலுக்கும், கொள்ளைக்கும் துணைபோவது இந்த வங்கிகளே..

இதோ சேகர் ரெட்டி கைகாட்டியும் ஒரு நடவடிக்கையுமில்லை

மோடி தாத்தா என்ன செய்யபோகின்றார்?




 



No comments:

Post a Comment