Friday, December 16, 2016

ராஜாஜி ஒரு சிந்தனையாளர்...




ராஜாஜி ஒரு சிந்தனையாளர் என்றால் உடனே பொங்குகின்றார்கள், அவர் பார்ப்பன வெறியன் என ஏகபட்ட குற்றசாட்டுகள்


படித்தவர், பெரும் அறிவாளி. பெரும் தீர்க்கதிரிசியும் கூட அன்றைய இந்தியாவில் விரல்விட்டு எண்ணபட கூடிய பெரியவர்களில் அவரும் ஒருவர், அதனால்தான் வெள்ளையன் கவர்னர் ஜெனரல் பதவியினை அவருக்கு கொடுத்திருந்தான்


காந்தி அவர் வீட்டோடு சம்பந்தம் செய்திருந்தார், ஒரு தமிழன் காந்தியின் சம்பந்தி.


ஒருங்கிணைந்த சென்னை ராஜதானியின் முதல்வரானார் ராஜாஜி, அன்று பள்ளிகளும் குறைவு, தொழில் வாய்ப்புகளும் குறைவு


உலகளாவிய அனுபவம் பெற்றிருந்த ராஜாஜி பன்னாட்டு முறையினை இங்கும் அறிவித்தார், அதாவது மதியம் வரைதான் பள்ளி, மற்றபடி மாணவர்கள் எந்த தொழிலும் செய்யலாம்


அன்று என்ன தொழில் இருந்தது? விவசாயம் மற்றும் அதனை சார்ந்த தொழில், வேறு வழி இல்லை


உடனே கொந்தளித்தார்கள், இது குலகல்வி முறை என்றார்கள்,பார்பணா திமிர் என்றார்கள் இன்னும் ஏராளம்


அதே நேரம் உலக நிலை எப்படி இருந்தது? அமெரிக்க , ஜப்பானிய, சிங்கப்பூர் மாணவன் எல்ல்லாம் மதியம் வரை பள்ளி சென்றுவிட்டு மற்ற நேரம் தோட்ட தொழில், கடை தொழில் என செய்துகொண்டு இருந்தார்கள்


அந்நாடுகள் எல்லாம் குலதொழில் என ஒப்பாரி வைக்கவில்லை, நாடு வளர்ந்தது


எல்லா ஐரோப்பிய நாடுகளிலும் நிலை அப்படித்தான் இருந்தது, அவை உற்பத்தியில் பின்னி எடுத்தன‌


கல்வியோடு கற்ற தொழிலில் அவை பால் முதல் கார் வரை உற்பத்தியினை குவித்து காட்டின‌


இங்கு குலகல்வி என நாமே பெயரிட்டுவிட்டு விவசாயம் முதல் எல்லாவற்றையும் தொலைத்து நிற்கின்றோம், சரி எங்காவது தாழ்த்தபட்ட மக்கள் பள்ளிக்கு வரகூடாது என ராஜாஜி சொன்னாரா?


பிராமணன் மட்டும் படிக்கவேண்டும் என சட்டம் இயற்றினாரா? இல்லை.


ராஜாஜி மீது சர்ச்சை இருக்கலாம், ஆனால் அவரின் சிந்தனை தீர்க்கமானது ஒருமுறை சொன்னார்


"இன்று வெள்ளையனை எதிர்த்துபோராடுகின்றோம், நாளை சுதந்திர நாடாகும், நம் மக்களுக்கு ஜனநாயகம் வராது, கொஞ்ச நாளிலே லஞ்சம், ஊழல் தலைவிரித்தாடும்


நாடு நாசமாய் போகும், அன்று வெள்ளையன் ஆட்சி வராதா? என ஏங்கும் காலம் நிச்சயம் வரும்"


இதோ வந்துவிட்டதல்லவா? நாமெல்லாம் இங்கிலாந்து போல இந்தியாவில் ஏன் மக்களாட்சி இல்லை என கதறுகின்றோமா இல்லையா?


ராஜாஜி தமிழ்தொண்டும் ஏராளம், உதாரணம் இன்று கலாச்சாரம் என நாம் சொல்லும் சொல்லே அவர் உருவாக்கியது, அதற்கு முன் அப்படி ஒரு வார்த்தையே இல்லை


மபோசி தமிழியக்கம் நடத்தியவர், சிலபதிகாரம் முதல் எல்லா தமிழ் இலக்கியமும் அவருக்கு அத்துபடி


சென்னையினை தெலுங்கர் விழுங்க இருந்தபொழுது அவர்தான் திருத்தணி வரை மீட்டார், குமரி செங்கோட்டை எல்லாம் அவரின் போராட்டத்தால் இணைந்தவை


திராவிட‌ பெரியாரும், திமுகவும் என்ன சொன்னது? எது எங்கு இருந்தால் என்ன? திராவிடத்தில்தான் இருக்கின்றது என மல்லாக்க படுத்துவிட்ட்டது


திருவனந்தபுரமும், திருபப்தியும் தமிழருக்குரியவை என சொன்ன மபோசிக்கு அன்று ஆதரவு இல்லை, கொஞ்சம் ஆதரவு கிட்டியிருந்தால் திருவனந்தபுரமும் திருப்பதியும் நமக்கு கிட்டியிருக்கும்


மொழிப்போர் போல அப்படி ஒரு போராட்டம் நடந்திருக்க வேண்டும், நடக்கவில்லை


ஆக ராஜாஜி, மபொசி போன்றவர்கள் மறக்க முடியாதவர்கள்


அதுவும் காமராஜரை வீழ்த்த கலைஞரோடு கை கோர்த்துவிட்டு, பின் கலைஞர் கள்ளுகடை திறக்கும்பொழுது மன்றாடி அழுத ராஜாஜி நிச்சயம் பெருமகன் தான்.


ஆக அவர்கள் என்ன கிழித்தார்கள் என கேட்டால், கள்ளுகடை திறந்தும், எம்ஜிஆரை வளர்த்துவிட்டும் இன்று தமிழகம் தீரா சிக்கலில் வீழ விதை விதைத்த கலைஞரை விட‌


ஒரு தலைவலியினை உண்டாக்கிவிட்டோமே , அதனை எப்படி வீழ்த்த என தெரியாமல் இன்று 94 வயதில் தமிழகம் சீரழிவதை கண்டுகொண்டே காலத்தை முடிக்கும் கலைஞரை விட,


ராஜாஜியும், மபோசியும் பெட்டர்தான்








No comments:

Post a Comment