Monday, December 19, 2016

இப்படித்தான் சீனாவும், ரஷ்யாவும் உலகிற்கு சவால் விடுகின்றன.




ஆட்சிக்கு வந்தவுடன் என்ன செய்யலாம் என டிரம்ப் யோசிக்க, டிரம்ப் வருவதற்கு முன் தான் என்ன செய்யவேண்டும் என சீனா யோசித்துகொண்டிருக்கின்றது


அதாவது நிச்சயம் தைவான் விவகாரம் பெரும் சிக்கலாகும், அதற்கு முன் தைவானை திபெத் போல ஆக்கிரமித்துகொண்டால் முந்திகொள்ளலாம் என சீனா திட்டமிடுகின்றதாம்


ஆனால் தைவானின் சகலமும் அமெரிக்கா, அதன் பாதுகாப்பு உட்பட‌


அப்படி சீனா துணிந்தால் அப்பகுதியில் அமெரிக்கா, தென்கொரியா, ஜப்பான் ஒரு முனையும், சீனா இன்னொரு முனையிலும் மோதலாம்


வடகொரியா வாலிண்டியராக வந்து குதிக்கலாம்


ஒரு பெரும்போருக்கே அது அடித்தளமாக இருக்கலாம் என உலகம் அச்சத்தில் இருக்கின்றது, சீனாவின் நடவடிக்கைகள் அப்படித்தான் இருக்கின்றன, டிரம்ப் வேறு அவர்களை சீண்டிகொண்டே இருக்கின்றார்


என்ன வகையில் சீனா தைவானை தன் நாட்டின் ஒரு பகுதி என சொல்கின்றது? எவ்வகையில் உக்ரைனின் ஒரு பகுதியினை ரஷ்யா இணைத்தது?


எங்கள் நாட்டு மக்கள், கலாச்சார தொடர்பு, மொழி, மதம் உட்பட‌ பல வகை தொடர்பில் அங்கும் வாழ்கின்றார்கள் அதனால் அப்பகுதி எங்கள் நாட்டிற்கு உரியது


முன்பு காஷ்மீரில் இப்படியான குழப்படியில் எப்படியோ சமாளித்து வெற்றிபெற்றது இந்தியா, சிக்கிமும் அப்படியே கிடைத்தது


இப்படித்தான் சீனாவும், ரஷ்யாவும் உலகிற்கு சவால் விடுகின்றன.


அதாவது அவர்கள் எங்கள் இனம் அல்லது எங்கள் இனங்களின் இனம், அதனால் எங்களை சேர்ந்தவர்கள்.


உலகின் பலநாடுகள் அப்படித்தான் தங்களை பெரிதாக்குகின்றன


இதனை இன்னொரு கோணத்திலும் சர்வதேசத்தில் இந்தியா செய்யலாம்.


அதாவது இந்தியாவும் அதனை ஈழத்தில் செய்யலாம், அது எம்நாட்டு மக்களான தமிழக மக்களின் உறவு, எம்நாட்டு மொழியே அங்கும் பேசபடுகின்றது என எதனையாவது சொல்லி களமிறங்கலாம்


ஆனால் நடக்காது ஏன்?


காஷ்மீரில் பெரும்பாலோனோர் இந்திய அபிமானி, சிக்கிமில் சிக்கலே இல்லை


ஆனால் ஈழமக்கள் இந்தியாவினை விரும்ப மாட்டார்கள், அப்படி ஆக்கி வைத்தாயிற்று


இந்தியா களமிறங்கினாலும் ஈழமக்கள் இந்தியாவோடு செத்தாலும் இணைய மாட்டார்கள்


தனிநாடு வேண்டும், அல்லது சிங்களனோடு அடிபட்டு சாகவேண்டும் என்பது அவர்கள் விருப்பம்.


இதுதான் அவர்கள் விருப்பமே தவிர, தமிழகத்தோடு சேர்ந்து இந்தியாவோடு இணைவது சாத்தியமே அல்ல‌


ஆனால் கிரிமிய மக்கள் உக்ரைனை உடைத்து ரஷ்யாவோடு இணைந்தது போல ஈழம் வந்து சேர்வது எல்லாம் நடக்காத விஷயம்


ஈழ மக்களுக்கு சீமான் வீட்டு கொல்லைபுறத்தில் இருக்கும் பிரபாகரன் விரைவில் வெளிவருவார் , நாடு கொடுப்பார் என நம்பிக்கையினை சொல்லிகொண்டே இருக்கின்றார்கள் இன உணர்வாளர்கள்.


அதனை கடைசி வரை இனி சொல்லிகொண்டே இருப்பார்கள்.








No comments:

Post a Comment