Thursday, December 15, 2016

வர்தா புயலுக்கு பின்னர்.....





ஒரு பக்கம் பன்னீர் விழுந்து விழுந்து சென்னையினை சீரமைக்கின்றார், இன்றிரவே சென்னை இயங்கும் என பாராட்டு பத்திரம்

இன்னொரு பக்கம் சென்னை மீள பல வாரமாகும், மின்சாரம் இல்லை, தண்ணீர் இல்லை மீட்புபணி சரியில்லை, அத்தியாவசிய பொருள் தட்டுபாடு

இன்னும் உண்மைநிலை வெளிகாட்டபடவில்லை
என செய்திகள்



வழக்கம்போல ஒன்றுமே புரியவில்லை...

சென்னை செய்திகள் என்றாலே இப்பொழுதெல்லாம் மகா மர்மம்....

இப்போதைக்கு வர்தா புயல் தாக்கியது என்பதுமட்டும்தான் நம்பகமான செய்தி

அப்படியே பன்னீர்செல்வம்தான் முதல்வர் என்பதனையும் நம்பலாம்






சென்னையில் புயலில் ஏராளமான மரங்கள் சரிந்திருப்பதால் 1 லட்சம் மரக்கன்றுகள் நடப்படும் : சவுமியா அன்புமணி அறிவிப்பு


முன்பு வட மாவட்டங்களில் போராட்டம் நடத்தும்பொழுது இவர் மாமனார் ராமராஸ் வெட்டி வீழ்த்திய சாலையோர மரங்கள் இருந்த இடத்தில் எல்லாம் அம்மணி ஏற்கனவே மரம் நட்டு வளர்த்துவிட்டார் என்பது குறிப்பிடதக்கது


மரம் வெட்டி கட்சி, மரம் நடும் கட்சியாகிவிட்டது







No comments:

Post a Comment