Thursday, December 22, 2016

நாற்காலி எனக்கு என ஒற்றைக்காலில் நிற்கும் நட்பு

தளபதியில் ரஜினி சொல்லும் அந்த வார்த்தை நினைவுக்கு வருகின்றது


"நட்புண்ணா என்னெண்ணு தெரியுமா?
நண்பன்ணா என்னெண்ணு தெரியுமா?"


நண்பருக்காக தலையினை கொடுக்கதுணிந்த கும்ணனும் இங்கேதான் வாழ்ந்தான், அந்த நட்பு வரலாறும் இங்குதான் நடந்தது.


கோப்பெருஞ்சோழன் பிசிராந்தையார் வாழ்ந்த தமிழகம் இது


பார்க்காமலே இருவருக்கும் அவ்வளவு நட்பாம், நட்பென்றால் அப்படி ஒரு நட்பாம், எல்லாம் ஒருவரை ஒருவர்


கேள்விபட்ட தகவலால் வந்த நட்பாம்


கோப்பெருஞ்சோழன் இறந்த செய்தி கேட்டு பிசிராந்தையாரும் உயிரை விட்டாராம்


நண்பன் இல்லா உலகத்தில் அவர் வாழவிரும்பவில்லை, இவ்வளவிற்கும் அவர்கள் சந்தித்தது கூட இல்லை


அப்படியும் ஒரு நட்பு இருந்திருக்கின்றது.


அதன் பின் 1990களில் தமிழகம் ஒரு நட்பினை கண்டது


30 வருட நட்பு என்கின்றார்கள், உயிராய் பழகினார்கள், ஒன்றாக வாழ்ந்தார்கள், பிரிக்கமுடியா நட்பு அது என்கின்றார்கள்.


குடும்பதை விட அவரே முக்கியம் என இவரும், கணவனை விட தோழியே முக்கியம் என அவரும் கொண்டாடிய நட்பு அது, உலகமே ஆச்சரியபட்ட நட்பு


ஆனால் அவர் செத்ததும் நண்பரான இவர்


நாற்காலி எனக்கு என ஒற்றைக்காலில் நிற்கின்றார்


இதுவும் தமிழகத்தில்தான் நடக்கின்றது.


"நீயும் நானும் சேர்திருந்தோம் நிலவும் வானும் போலே..நான் நிலவு போல தேய்ந்துவந்தேன் நீ வளர்ந்ததாலே" என கலைஞரை தாங்கி நிற்கும் அன்பழகன் நிச்சயம் நட்பிற்கோர் எடுத்துகாட்டு.

No comments:

Post a Comment