Tuesday, December 20, 2016

கண்டேன் இரண்டாயிரம் ரூபாய் நோட்டை!!!





2 ஆயிரம் ரூபாய் நோட்டினை முதன் முதலாக காணும் பாக்கியம் நேற்றுதான் கிடைத்தது


கரன்சி என்பது ஒரு நாட்டின் கவுரவம், அடையாளம். அதனால்தான் அந்நாட்டின் மிக பெருமையான அடையாளங்களும், தலைவர்களின் படங்களும் அதில் பொறிக்கபடுகின்றன‌


கரன்சி இருக்கும் அழகிலும் தரத்திலும் ஒரு நாட்டின் நிதிநிலை அழகாக தெரியும்.





இவர்களுக்கு அதில் எல்லாம் கவலையே இல்லை, நாட்டின் நற்பெயர் பற்றி என்று கவலைபட்டார்கள்???

அவசர கதியில் தரமில்லா காகிதத்தில் ஒரு மாதிரியாக 2000 ரூபாய் தாளை வெளியிட்டிருக்கின்றாகள், அதனை பார்த்தாலே எந்த தேசத்துக்காரன் என்றாலும் அவன் மனதில் இந்தியாவின் மரியாதை சற்று குறையத்தான் செய்யும்

2000 ரூபாய்க்கு கரன்சியினை உயர்த்தியதே பெரும் தவறு, நாடு பொருளாதார ரீதியாக சரிகிறது என்பதே அதன் பொருள்.

அப்படி ஒப்புகொள்ளமுடியாதல்லவா? அதனால் கறுப்புபணம் ஒழிப்பு ஆயிரம் செல்லாது ஐநூறு செல்லாது என சொல்லி சந்தடிசாக்கில் 2000 ஆயிரம் கொண்டுவந்தாயிற்று

கொண்டுவந்த நோட்டும் கொடூரமாக இருக்கின்றது,

கையில் 2 ஆயிரம் ரூபாய் நோட்டு கிடைத்துவிட்டது, இப்பொழுது மட்டும் அந்த எஸ்,வீ சேகர் அருகில் இருந்தார் என்றால் பிடித்து அவர் கண்ணை விரிக்க வைத்து இந்த நோட்டை பார்க்க சொல்லி கேட்கலாம்

"இதில் எங்கே ஜிபிஎஸ் இருக்கின்றது? ஜிபிஸ் வைக்க தகுதியான நோட்டா இது?, கொஞ்சமாயா அய்யா பேசினீர்" என நாலு கேள்வி நறுக்கென்று கேட்க வேண்டும்

ஒரு கரன்சியினை உருப்படியாக அடிக்க வழியில்லை, இதில் அதற்குள் ஜிபிஎஸ் இருக்கின்றது, அணுகுண்டு இருக்கின்றது என ஆயிரம் பொய்கள்

பொய்களில் அரசு அமைக்கலாம், பொய்களில் நெடுநாள் ஆளமுடியாது

எப்படிஎல்லாம் பெரும் பொய்களை அவிழ்த்துவிட்டிருக்கின்றார்கள் என்பதற்கு இந்த 2000 நோட்டு பெரும் உதாரணம்

தேடி அகப்பட்டதுதான், ஆனால் கையில் வைத்திருக்க முடியாது, உடனே எங்காவது மாற்றிவிட வேண்டும்கா

காரணம் இன்று இரவே இவர்கள் செல்லாது என அறிவிக்கும் சாத்தியம் உண்டல்லவா?








No comments:

Post a Comment