Wednesday, December 28, 2016

இன்று கூடுகிறது அ.தி.மு.க. பொதுக்குழு ...





பரபரப்புக்கிடையே இன்று கூடுகிறது அ.தி.மு.க. பொதுக்குழு


அப்பட்டமாக தெரிகின்றது சசிகலா பொதுசெயலாளராக போகிறார் என்று, இதில் என்ன பரபரப்பு வேண்டி இருக்கின்றது?


பெரும் எதிர்ப்புகள் ஏதுமில்லை,சிலர் கத்தி ஒன்றும் ஆகபோவதுமில்லை





கட்சி இப்பொழுது ஆட்சியில் உள்ளதால் சசிகலா என்ன? கோவை சரளா பொதுசெயலாளர் ஆனாலும் யாருக்கும் சிக்கல் இருக்காது.

அவர்களுக்கென்ன? யார் ஆண்டால் என்ன? இன்னும் 4 வருடம் சம்பாதிக்க வேண்டும், அதற்கு யார் காலிலும் விழ, அல்லது எந்த தலமைக்கும் தலைகொடுக்க அவர்கள் தயார்

ஒரு சில அதிருப்தி எம்எல்ஏக்கள் கட்சி தாவ முடியாதபடி சட்டம் இருக்கின்றது, அதனால் அவர்கள் சிலிப்பிங் செல்களாக இருப்பதை தவிர வேறு வழி இல்லை

இனி அக்கட்சியில் ஒரு பரபரப்பும் இருக்காது, இப்படியே விட்டால் 4 வருடத்தினை கடத்தி விடுவார்கள்

ஆனால் சிக்கல் எங்கு வரும்?

சட்டம் ஒழுங்கு சீர் குலைந்தாலோ, இப்படி அடிக்கடி பண குவியல் சிக்கினாலோ 356 போட்டு கலைத்துவிடுவார்கள்

அப்பொழுது தேர்தல் வருமல்லவா? அப்பொழுதுதான் இந்த தலமையினை ஏற்கமாட்டோம் என அடாவடியாக கிளம்புவார்கள், பல்டி அவர்களுக்கு புதிதல்ல‌

ஆக அக்கட்சியில் ஏதும் திருப்பம் நேரவேண்டும் என்றால் 4 வருடம் காக்க வேண்டும், அல்லது அதிரடி காரியங்கள் மத்திய அரசால் நடத்தபடவேண்டும்

செய்திகள் என்ன சொல்கின்றன?

அதிமுகவினருக்கு 1 சிங்கமும் 4 மாடுகளும் கதையினை சசிகலா சொன்னாராம் எல்லோரும் ஒழுங்காக கேட்டுவிட்டு சமத்தாக பொதுகுழுவிற்கு வந்துவிடுவார்களாம்

எல்லாம் ஆட்சி இருக்கு மட்டும், அதோ நிலாவில் வடை சுடுவது ஜெயலலிதா என்றால் கூட அதிமுகவினர் இப்பொழுது சமத்தாக கேட்டு கொள்வார்கள்

ஆட்சி இழந்தால் என்னாகும்?

சசிகலா இவர்களுக்கு கதை சொல்ல மாட்டார், இவர்கள் ஊடகங்கள் முன்னால் கதை சொல்வார்கள், என்ன கதை?

கூடாரத்தில் ஒட்டகம் நுழைந்த கதை








No comments:

Post a Comment