Thursday, December 29, 2016

இளம் வயது கங்கை அமரன் ஒரு பாடல் எழுதினார் ... வீரமணி ஜால்ரா போடுகிறார்...



Image may contain: 1 person, text


தமிழக திரையுலகில் குறிப்பிடதக்க கலைஞர் கங்கை அமரன், இளையராஜா எனும் சூரியன் முன் அவர் திறமை மங்கலாக தெரிந்திருக்கலாமே ஒழிய , மிக திறமையான கிராமிய கலைஞன்


அவரின் பல பாடல்களுக்கும், வைரமுத்துவின் பாடல்களுக்கும் கூட வித்தியாசம் தெரியாது எனும் அளவிற்கு அவர் திறமை அபாரமானது.


அவருக்கும் அதிமுகவிற்கும் என்ன பிரச்சினையோ தெரியவில்லை, பூர்வ ஜென்ம தொடர்பாக இருக்கலாம்


இளம் வயது கங்கை அமரன் அக்காலத்தில் ஒரு பாடல் எழுதினார்


"நம்ம ஊரு நல்ல ஊரு இப்ப ரொம்ப கெட்டு போச்சிண்ணே.." என வந்த பாடல் அது,


பாடல் பிரச்சினை இல்லை, அது வந்த காலம்தான் பிரச்சினை


அதாவது எம்ஜி ராமச்சந்திரன் ஆண்ட காலம், திரை துறையினை வைத்து அரசியலுக்கு வந்தவர் என்பதால் திரையுலகில் அவர் கண், காது, மூக்கு, அந்த பாதி தொண்டை, தொப்பி தலை என எல்லாவற்றையும் வைத்திருப்பார்


எப்படி அவர் படங்களில் திராவிட அண்ணா பாடல்கள் தாக்கம் தனக்கு அடையாளம் கொடுத்து போல இன்னொருவன் வந்துவிட கூடாது என்பதில் அவருக்கு அப்படி ஒரு ஆனந்தம்


"நீங்க நல்லா இருக்கோணும் நாடு முன்னேற, நான் ஆணையிட்டால்" போன்ற பாடல்கள் தமிழகத்தில் ஒலித்துகொண்டே இருக்கவேண்டும் என்பதுதான் அவர் ஆசை,


தேங்காய் சீனிவாசன் ஜால்ரா வசனங்களும் இருக்க வேண்டும்


பலர் எம்ஜிஆரை அண்ணன் என அழைத்துகொண்ட காலம், அங்கிள் என அழைக்கமால் அண்ணன் என அழைத்த காலம்,


இதில் "சிப்பாய் அண்ணே.., ஆளாக்கு நாட்டாமை, விலைவாசி கூடிப்போச்சி, செய்றதை செய்யுங்கள்" போன்ற வரிகள் எம்ஜிஆரை எரிச்சல் படுத்தின‌.


""என் ஆட்சியில் இப்படி பாடல் வந்தால் மக்கள் என்னைபற்றி என்ன நினைப்பார்கள்" என சீரியசாக சிந்தித்தார் ராமசந்திரன்.


காரணம் அக்காலத்தில் இப்படியான பாடல்களை பாடித்தான் அவர் மக்கள் மனதில் இடம்பிடித்தார், கலைஞர்களின் பாடல் கலைஞர்கள் அறிவார்கள் அல்லவா?


அதுவும் ராமச்சந்திரன் மதுகடைகளை மறுபடி திறந்த காலம், அப்பாடலில் வேறு குடித்துவிட்டு பாடுவதாக இருந்தது (இன்றும் வெங்கட் பிரபு படங்களில் அந்த சாயல் உண்டு)


போதாதா எம்ஜிஆருக்கு, இது சமூகத்திற்கு கேடான பாடல் என கதையினை மாற்றி கங்கை அமரனை நிற்க வைத்தார், அதவாது ராமசந்திரன் ஆட்சியில் மது கடைகள் திறந்தது சமூக பொறுப்பு அதனை சினிமாவில் காட்டினால் சமூக சீர்கேடு


ஒன்றும் ஆச்சரியமல்ல, சினிமாவின் தாக்கத்தை எம்ஜிஆரை விட அனுபவித்தவர் யார்? அந்த அனுபவம்


கடும் விசாரணை கங்கை அமரன் மீது நடத்தபட்டது, ஒரு மாதிரி மிரட்டலில்தான் அவர் வீடுதிரும்பினார், புரட்சி தலைவரின் பொற்கால ஆட்சியில் இப்படி பெரும் வெகுமதி பெற்றார் கங்கை அமரன் எனும் கலைஞன்


அதன்பின் அப்படியான பாடல்களை அவர் எழுதவில்லை


புரட்சி தலைவர் அப்படி செய்தால், புரட்சி தலைவியும் ஏதும் செய்யவேண்டும் அல்லவா?


சசிகலா தன் சிறுதாவூர் வீட்டை மிரட்டி வாங்கினார் என ஜெயலலிதாவிடம் புகார் சொன்ன கங்கை அமரனுக்கு ஒரு நீதியும் கிடைகவில்லை, வீடு போய் சில வழக்குகள் வந்ததுதான் மிச்சம்


இப்படி புரட்சி தலைவரிடம் பாடல் சுதந்திரத்தையும், புரட்சி தலைவி ஆட்சியில் வீட்டையும் இழந்த கங்கை அமரன், இனி அடுத்த ஆட்சியில் எதனை இழப்போமோ என தெரியாமல் தன் ஆர்மோனியத்தை கெட்டியாக பிடித்துகொண்டிருக்கின்றார்


காரணம் அதிமுக தலமைகளுக்கும் அமரனுக்கும் உள்ள பூர்வ ஜென்ம தொடர்பு அப்படி.


சினிமா மூலம் அரசியலை கைபற்றியவர்களால் பின் வந்த சினிமாக்காரர்கள் எப்படி எல்லாம் அடக்கபட்டிருக்கின்றார்கள் என்பதற்கு கங்கை அமரன் பெரும் உதாரணம்


அவர் கதை வெளியே வந்தது, இன்னும் எத்தனைபேர் கதை வெளிவராமல் இருக்கின்றதோ?


இந்த அரசியலால் சினிமா இழந்த பெரும் கலைஞன் வடிவேலு.


தன்மான சிங்கம் டி.ஆர் இன்று தரைடிக்கெட் அளவிற்கு கவிழ்ந்து கிடப்பதும் அவ்வகையே.


அஜித் சசிகலா சந்திப்பு என சில செய்திகள் கண்ணாமூச்சி ஆடுவதும், அஜித் இதுவரை மூச் விடாமல் இருப்பதும் அவ்வகையே


முன்பாவது யாரும் மிரட்டினால், பொதுகூட்டத்தில் கலைஞர் முன்னால் "மெரட்டுராங்ங்ங்க்க அய்ய்ய்யாஆஆஅ" என சொல்ல அஜித்தால் முடிந்தது


இப்பொழுதுள்ள முதல்வர் பன்னீர்செல்வத்திடம் அஜித்தால் அப்படி சொல்ல முடியும்?


ஒருவேளை அஜித் அப்படி சொன்னால் பன்னீர் என்ன செய்வார்??


இம்சை அரசன் வடிவேலு பாணியில் கண்ணீரை துடைத்து சொல்வார்


" என் இனமடா நீ.. அழக்கூடாது"



















வீரமணி ஏன் சசிகலாவினை ஆதரிக்கின்றார் என சர்ச்சைகள்

வீரமணியின் அரசியல் மகா சிம்பிள் கணக்கு, ஆட்சியில் யார் இருக்கின்றார்களோ? அதிகாரம் யாரிடம் இருக்கின்றதோ அவர்களுக்கு ஜால்ரா போட்டு பெரியார் சொத்துக்களை காத்துகொள்வது அவரின் அரசியல்.

இதனைத்தான் இத்தனை காலமும் செய்கின்றார், இனியும் செய்வார்


அன்று ஜெயாவினை "சமூக நீதி காத்த வீராங்கனை" என்றார், இனி சசிகலாவினை "சமூக நீதி காக்கும் சின்ன வீராங்கனை" என்பார், சின்ன போர்வாள் என்பார்

அதிமுகவினை ஆதரிப்பதும், அப்படியே பாஜகவினை ஆதரிப்பதும் ஒன்று என்பது இந்த வீரமணிக்கு தெரியாதது அல்ல‌

சசிகலா என்ன? நாளை சங்கராச்சாரியோ, பங்காரு அடிகளோ யார் ஆட்சிக்கு வந்தாலும் வீரமணி இப்படித்தான் சொல்வார்

அவனவன் தன் கையில் சிக்கியிருக்கும் சொத்துக்களை காக்க என்ன வேண்டுமானாலும் சொல்லும் உலகமிது..




 



No comments:

Post a Comment