Wednesday, December 14, 2016

குடி வீட்டை , நாட்டை கெடுக்கும்..

குடி குடும்பத்தை கெடுக்கும் என்பார்கள், அது ஒரு மாநிலத்தை கெடுத்திருக்கின்றது


மதுகடைகளை கலைஞர் திறந்து பல சர்ச்சைகளை தொடங்கினார், திமுக மீது ஊழல் மற்றும் சாராயகடைகளை திறந்துவிட்டார்கள் என்ற குற்றசாட்டை வைத்து ஊர்வலம் எல்லாம் சென்று கட்சி தொடங்கி நடத்தினார் எம்ஜிஆர்


பின்னாளில் ஆட்சிக்கு வந்தவுடன் அந்த எம்ஜிஆருக்கும் நிதி சிக்கல் தொடங்கிற்று, மதுகடைகள் நடத்தும் முடிவுக்கு வந்தார்




தாய்குலங்கள் முகம் சுழித்தன, நாயகனின் பிராதான வோட்டு வங்கியே தாய்குலம் அல்லவா?, ஒரு வசீகரமான அதிமுக பெண் முகம் தேவைபட்டது


சரோஜா தேவி அரசியலுக்கு வர மறுத்தார், வெண்ணிற ஆடை நிர்மலா போன்றோர் இருந்தாலும் பல திறன் மிக்க ஒரு பெண் முகம் தேவைபட்டது


விளைவு கலைசெல்வி ஜெயலலிதாஉருவானார், அவரை டெல்லி வரை அனுப்பி புன்னகைத்தார் புரட்சி தலைவர், கலைஞரின் சாராய கடைகளை கண்டித்து பின் தானும் அதனையே திறந்த அந்த தானை தலைவர்


டெல்லியில் இந்திரா ஜெயலலிதாவினையும், வைகோவினையும் மாறி மாறி புகழ்ந்தார், ஏதோ திட்டம் இருந்திருக்கின்றது. பின்னாளில் இருவரும் தனிகட்சி நடத்தினர் என்பது வரலாறு


பாம்பின் கால் பாம்பறியும் அல்லவா? அச்சபட்ட எம்ஜிஆர் கலைசெல்வியினை டம்மியாக்கி திடீரென அவரே டம்மியானார்


பின் கலைசெல்வி புரட்சி தலைவி ஆனார், எத்தனை நாள்தான் விஜய் மல்லையாவின் சாராயம் வாங்கி விற்பது? நாமே காய்ச்சினால் என்ன? என சிந்தித்தார்


உடன்பிறவா தோழியுடன் மிடாஸ் தொடங்கினார், அடுத்த ஆட்சியில் கலைஞரின் பினாமிகள் சாராய ஆலை தொடங்கியதையும் அவர் கண்டு புன்னகைத்தார்


இன்று சின்னமா நம் கையினை விட்டு அதிகாரம் சென்றால் இந்த மிடாஸ் போன்ற சாராய வியாபரங்களும் சென்றுவிடுமோ என அக்கட்சியினை கட்டுக்குள் வைக்க முயல்கின்றார்.


இதற்கு மூலம் என்ன?


ரூபாய்க்கு 3 படி எனும் அண்ணாவின் முழக்கம்


அந்த 3 படி அரிசிக்கு ஊரெல்லாம் விவசாயத்தினை ஊக்குவித்தால் தீர்ந்தது விஷயம்,


அதனை விட்டு சாராய கடைகளை திறந்து அண்ணாவின் கனவை நிறைவேற்ற கிளம்பிய கலைஞர்


அதே கனவினை தொடர நினைத்த எம்ஜிஆர், அதில் கெட்ட பெயர் உண்டான போது அவர் உருவாக்கிய புரட்சி தலைவி, பின் சகல சுதந்திரத்தோடு, மிடாஸ் ஆலையோடு அந்த தலைவி உருவாக்கிய "சின்னம்மா"


ஆக குடி எப்படியெல்லாம் தமிழ்குடி கெடுத்திருக்கின்றது பார்த்தீர்களா?



No comments:

Post a Comment