Thursday, December 22, 2016

ஓரே "பொன்னம்மா" குஷ்பூ தான்....

https://youtu.be/Jb_8PTQbCg0




நம்மை யாரோ பின் தொடர்ந்துகொண்டே இருக்கின்றார்கள் போலும்


காலையில் ஜெயாடிவியினை கலாய்த்தால் அதற்கு நம்மை மிக சரியாக மாலையில் பழிவாங்கிவிட்டார்கள்


வருமான வரி சோதனை என்ன ஆனது? புதிய சோதனைகள் உண்டா? சசிகலா பொதுசெயலாளர் ஆகிவிட்டாரா? சிரிய நிலமை எப்படி இருக்கின்றது? கலைஞர் திரும்பிவிட்டாரா? என ஆவலாய் டிவியினை பார்க்கும் முன் கொஞ்ச நேரம் ஜெயா டிவியின் காமெடி காட்சிகளை பார்க்க தோன்றிற்று





அதே சின்னம்மா புராணம், பாயிரம் வாழ்த்து என பாடிகொண்டே இருந்தார்கள், "வாராய் நீ வாராய்" என அதே பாடல், திருந்த வாய்ப்பே இல்லை

சரி இனி வேறு சேனல் மாற்றுவோம் என்றால் தடாலடியாக அறிவித்துவிட்டார்கள், நம் வீக்னெஸ் அவர்களுக்கும் தெரிந்திருகின்றது

வருஷம் 16 படம் இனி ஒளிபரப்பாகும் என சொல்லிவிட்டார்கள்

அதனை பார்ப்பதை விட ஒரு ரசிகனுக்கு என்ன சமூக பொறுப்பு வேண்டி இருக்கின்றது?

அக்கால குஷ்பூவினை பார்த்துகொண்டிருப்பது மிக சுகமான ரசனைகளில் ஒன்று

பாசில் கதை, கார்த்திக் நடிப்பு, அற்புதமான பத்மநாபுர அரண்மனை, அழகான நாஞ்சில்நாடு என பல இருந்தாலும், படத்தில் ஜொலிப்பது குஷ்பூவே

இறுதிகாட்சியினை மட்டும் பார்க்க கூடாது, அதனை கண்டு நெஞ்சு பலமுறை வெடித்திருக்கின்றது, அது தவிர மற்ற காட்சிகளை காணலாம்.

இனி வருமான வரி சோதனை நடந்தால் என்ன? சசிகலா எப்படி போனால் என்ன? கலைஞர் நாளை திரும்பினால்தான் என்ன?

மிக சரியாக நம்மை இடம் பார்த்து அடித்துவிட்டது ஜெயா டிவி

அடிக்கடி குஷ்பூ படம் போட்டால் நன்றாகத்தான் இருக்கும், சின்னமா செய்திகளை கடந்து "பொன்னம்மா" குஷ்பூவினை பார்க்க வேண்டியதுதான்

அம்மா, சின்னம்மா என யாரும் இருக்கட்டும்

ஓரே "பொன்னம்மா" குஷ்பூ தான்.








No comments:

Post a Comment