Sunday, December 11, 2016

ஞாயிறு ஸ்கூப்ஸ்... தமிழக எதார்த்தம் அப்படி....












மிக வலுவான வார்தா புயல் சென்னை அருகே நாளை கரையினை கடக்கின்றது, இன்று மாலை முதல் கன மழை பெய்யும், கடலில் கடும் சீற்றம் இருக்கலாம் : வானிலை அறிக்கை

இந்த புயலில் இருந்து சென்னை மக்களை காக்க அரசு என்ன நடவடிக்கை எடுத்திருக்கின்றதோ தெரியவில்லை, அமைச்சர் உதயகுமார் மட்டும் பட்டும் படாமலும் ஏதோ சொல்கின்றார், அது ஏதோ மின்விசிறி கண்ட்ரோலை மாற்ற சொல்வது போல் இருக்கின்றது

பாதுகாப்பு, முன்னெச்சரிக்கை என ஏதும் இல்லை


அரசும் அதன் அமைச்சர்களும் சசிகலா காலில் விழுந்து பொதுசெயலாளர் ஆகுங்கள் என கதறிகொண்டிருக்கின்றது, சசிகலா சாப்பிடும் நேரம், தூங்கும் நேரத்தில் அவர்கள் அம்மா சமாதியில் அழுதுகொண்டிருக்கின்றனர்

ஆக சசிகாலா மேஜைக்கும், அம்மா சமாதிக்குமே அவர்கள் ஓடிகொண்டிருக்கின்றார்கள்

சென்னையினை புயலிலிருந்து இறைவன் காக்கட்டும், அவன் விரும்பினால் மத்திய அரசு காக்கட்டும்

இவர்களை தவிர‌ இனி தமிழகத்தை காக்க யாருமில்லை..







 இதனை செய்யவே மாட்டேன், என அடம்பிடித்து அம்மா நிறுத்திவைத்த பல திட்டங்களை ஒபிஎஸ் அரசு செய்ய தொடங்கிவிட்டதாம், மதுரவாயல் பறக்கும் சாலையும் அதில் ஒன்றாம்




மத்திய அரசுக்கு பயந்துதான் இப்படியான திட்டங்களை பன்னீர் அரசு செய்ய தொடங்கி இருக்கின்றதாம்

இனி கண்ணகி சிலை தானே வந்து அமரலாம், சோபன்பாபு சிலை இனி கடலுக்குள் செல்லலாம்


இப்படி பல விஷயங்கள் நடக்கலாம் என்கின்றார்கள்.

மாண்புமிகு மத்திய அரசே, அப்படியே மிரட்டி அவர்களை சென்னை கோட்டையிலிருந்து விரட்டி அந்த புது சட்டமன்ற வளாகத்திற்கு அனுப்பி விடுங்கள், அந்த அண்ணா நூலக சர்ச்சைக்கும் ஒரு முடிவு கட்டுங்கள்

அப்படியே இந்த டாஸ்மாக் கொடுமைக்கும் ஒரு முடிவு கட்டுங்கள், டாஸ்மாக்கை மூடிவிட்டு அந்த கடைகளை எல்லாம் யோகா மையங்களாக கூட மாற்றுங்கள்

முக்கியமாக ஆளுநராக சு.சாமியினை நியமியுங்கள், அவர் சர்சைகுரியவர் என்றால் அந்த சந்திரலேகாவினையாவது நியமியுங்கள்

அந்த ஆசிட் தழும்பிற்காவது ஒரு ஆறுதல் கிடைக்கும்







 சேகர் ரெட்டியிடம் இருந்து கைப்பற்றிய பணத்தில் விவசாயக் கடன்களை அடைக்கப் பயன்படுத்தலாம்: விஷால்


திரையுலகத்தில் நடமாடும் கருப்பு பணத்தினை கைபற்றினால் இந்தியாவின் கடன்களையே அடைத்துவிடலாம், அதனை பற்றி எல்லாம் விஷால் பேச மாட்டார்.

சரத்குமார் அப்பக்கம் இருக்கின்றார் என்பதற்காக, அந்த கும்பலின் கறுப்புபண பதுக்கலில் விஷாலுக்கு ஒரு தனி அக்கறை :)



அதிமுகவினை யாராலும் உடைக்க முடியாது : வைகோ


முன்பு இவர் உடைக்க முடியாது என சொன்ன புலிகள் இயக்கம் உடைந்தது, பின் மதிமுகவும் உடைந்தது, தேமுதிக உடைந்தது

ஆக சின்னம்மாவின் சிங்கங்களே, சசிகலாவின் கிங்கரர்களே இந்த வைகோவிடம் கவனமாக இருங்கள்

இவர் ஆதரித்த எதுவும், வாய் திறந்த எதுவும் உருபட்டதாக சரித்திரமில்லை

ஒருவேளை உடையும் என தெரிந்தேதான் சொல்லிகொண்டிருப்பாரோ??



தமிழகம் ஏன் இப்படி இருக்கின்றது என பார்த்தால் அது அக்காலம் முதல் அப்படித்தான் இருந்திருக்கின்றது


பிராமனனா? சரி வா அதிகாரம் செய்துகொள், நீ யார்? களபிரனா? அடுத்து பல்லவனா? சரி நீனும் ஆண்டுகொள்


சேரனோ, சோழனோ, பாண்டியனோ சண்டையிட்டு முடிவு செய்து உங்களில் யாராவது ஆண்டுகொள்ளுங்கள்


இதில் சேர வம்சத்திற்கு கொஞ்சம் அறிவு இருந்திருக்கின்றது, இந்த சகவாசமே வேண்டாம் என சொல்லி அது மலையாளம் என ஒரு மொழியினை உருவாக்கி கொண்டே ஒதுங்கிவிட்டது


அடுத்து இஸ்லாமியர் மறைமுகமாக வாழும் பொழுதும் தமிழகத்தில் ஒரு பரபரப்புமில்லை


நாயக்கர்கள் ஆளவரும்பொழுதும் தமிழகம் பெரும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை, அடுத்து மராட்டியன் வரும்பொழுதும் அது அமைதியாக இருந்தது


ஆற்காடு நவாப் ஆளும்போதும் அது மகிழ்ந்துகொண்டிருந்தது


அடுத்து போர்த்துகீசியன், பிரெஞ்சிக்காரான், பிரிட்டிஷ்காரன் என அடுத்தடுத்து ஆளும் போதும் தமிழத்திற்கு ஒரு ஆட்சேபனையும் இல்லை


பின் ராஜாஜி காலம் , காமராஜர் காலத்தில் திராவிட் கட்சிகள் தமிழகமே உங்களை கட்டிலில் பொட்டு தாலாட்டுவோம் என்றது அப்படியா? சரி நீங்களே ஆளுங்கள் என ஒப்புகொண்டது


பின் மகோ.ராமசந்திரன் திரையில் படைத்த சாம்ராஜ்யத்தை தமிழர் வாழ்விலும் அமைப்பேன் என்றது, சந்தோஷமாக ஆள அனுமதித்தது


அவர் காலாமனதும் கோபாலபுரமும், போயஸ்கார்டனும் ஆள அனுமதித்துவிட்டு அதுபோக்கில் இருந்தது


இப்போது கூர்ந்ந்து பார்க்கிறட்து, ஓஹோ அடுத்த ஆட்சி மன்னார்குடியா சரி ஆளட்டும் என அதுபோக்கில் இருக்கின்றது


இந்த தமிழ்நாடு இப்படித்தான், ஆட்சிகளை பற்றி அது அக்காலம் போல இக்காலமும் கவலைபட போவதில்லை


எக்காலமும் கவலைபட போவதே இல்லை


இதில் மன்னார் குடி என்ன? அந்தமான் பழங்குடியினரே வந்து ஆளலாம்


தமிழக எதார்த்தம் அப்படி.


வாழ்க பாரத மணிதிருநாடு...








டிவியில் மன்னன் படம் ஓடிகொண்டிருக்கின்றது, குஷ்பூ நடித்திருப்பதால் பார்த்தாகி வேண்டும், இல்லாவிட்டால் அவருக்கு என்ன மரியாதை?

அன்று பார்த்த ரஜினி, விஜயசாந்தி எல்லாம் இன்று பெரிதும் மாறிவிட்ட கோலத்தில் குஷ்பூ மட்டும் அன்று போல இன்றும் இருகின்றார்

படத்தில் அவருக்கு சிறிய வேடம்தான், அதனால் என்ன?


நீள தங்க சங்கிலியில் ஒரு சிறிய துண்டு வைரம் இருந்தால், அது வைர சங்கிலி என்றுதான் அழைக்க்கபடும், மாறாக‌ தங்க சங்கிலி என அழைக்கபடாது

அதனால் இது குஷ்பூ படமே....வேறு யார் படமும் அல்ல






சக்திவாய்ந்த அதிகாரம் கொண்டிருக்கும் போலீஸ் கமிஷனர், அமைச்சர்கள் எல்லாம் ஒரு பதவியிலும் இல்லாத சசிகலாவினை எப்படி சந்திக்கலாம்?? என கேள்வி கேட்கும் தைரியம் இப்போதைக்கு பாமக ராமதாஸிடம் மட்டும்தான் உள்ளது.


வேறு ஒரு பயலும் ஒரு இருமல் கூட இருமவில்லை.


திமுகவினரிடமிருந்து ஒரு சத்தமும் இல்லை, இருவருக்கும் ஏதும் உள்குத்து வெளிகுத்து இருக்குமோ என தமிழகம் சந்தேகிக்கும் நேரம்





ராமதாஸ் மட்டுமே உருப்படியான கேள்விகளை எழுப்பிகொண்டிருக்கின்றார்,

வாழ்த்துக்கள் டாகடர்








தமிழ்நாட்டில் பிறக்கவில்லையே என வாழ்வில் ஏங்கி ஏங்கி அழுதுகொண்டிருக்கும் பெண்கள் உலகில் மூவர், அழுகை என்றால் சாதரண அழுகை அல்ல‌


எவ்வளவு பெரும் ஊழலும், அவமானமும் அடைந்தாலும் மறுபடி மறுபடி அதிகாரத்திற்கும், ஆட்சிக்கும் வருவது உலகில் தமிழ்நாட்டினை தவிர எங்கும் சாத்திமில்லை என்பதை உணர்ந்து அவர்கள் கதறி அழுகின்றார்கள்


அட தமிழச்சியாக பிறக்கத்தான் இல்லை, உடன்பிறவா வெளிநாட்டு தோழியாக கூட பழகியிருக்கலாமே என அவர்கள் சமீபகாலமாக நொந்துகொண்டிருக்கின்றார்கள்




தென் கொரிய முன்னாள் ஊழல் பெண் அதிபர் பாக் கியுன் ஹய்


பிலிப்பைன்ஸ் முன்னாள் அதிகர் எமல்டா மார்கோஸ்


கிளிண்டனின் முன்னாள் தோழி மோனிகா லெவின்ஸ்கி


சொல்லமுடியாது ......கொடநாடு என்ன வாருங்கள் ஸ்விஸில் பங்களா வாங்குவோம், மியாமியில் கப்பல் விடுவோம் என சொல்லி நட்பு வளர்த்து


"சிஸ்டருக்கு" ஏதும் உடலுக்கு முடியாவிட்டால் வெளிநாட்டு மருத்துவமனைக்கு அழைத்து அதன் பின் சகலத்தையும் கைபற்றும் ஐடியா இப்பொழுதே அவர்கள்
மனதில் ஓடிகொண்டிருக்கலாம்








No comments:

Post a Comment