Thursday, December 22, 2016

ஜெயா இருக்கும் வரை ஒரு அடையாளம் இருந்தது...







பாஜக ஏன் ஜெயா மீது பாயவில்லை, அவர் இல்லா நேரம் தான் வரவேண்டுமா? , கலைஞர் மீது ஏன் பாயவில்லை என்றெல்லாம் பல பதர்கள் பேசிகொண்டிருக்கின்றன‌

மக்கள் சக்தி என்பது பெரும் விஷயம், தெரிந்தோ தெரியாமலோ எம்ஜிஆருக்கு பின் அது ஜெயாவிற்கு வந்தது

பெங்களூரில் ஜெயா சிறையில் இருந்தபொழுதே தமிழகம் பட்டபாடு கொஞ்சமல்ல, பெரும் மக்கள் சக்தி படைத்த ஒருவருக்கு எந்த அரசும் அஞ்சத்தான் செய்யும்

கலைஞர் இன்னமும் என்றும் பெரும் மக்கள் சக்தி, அவரை தொட்டால் அது பெரும் எழுச்சியினை தமிழகத்தில் ஏற்படுத்தும் என்பது அரசியல் பாலபாடம்

இன்று அதிமுகவிற்கு பாதுகாப்பாக யாருமில்லை, யாரையும் பிடிக்கலாம், சிறையில் அடைக்கலாம் கேட்பதற்கு யார் உண்டு

அவ்வளவு ஏன்? நாளையே சசிகலா மேல் பெரும் நடவடிக்கை பாய்ந்தாலும் தமிழகத்தில் என்ன வெடிப்பு நடக்கும்? ஒரு மண்ணாங்கட்டியும் நடக்காது,

வேண்டுமானால் நடராஜனை பிடிக்கவில்லையா? திவாரகரனை ஏன் விட்டார்கள்? என்றுதான் செய்தி வரும்

பின் மத்திய அரசு ஏன் துணியாது?

சுத்தமான மாநில சுயாட்சி கோஷம் எழுப்பவேண்டுமென்றால் மடியில் கனமிருக்க கூடாது, இங்கோ வயிற்றில் கோலார் சுரங்கமும், ரிசர்வ் பேங்க் லாக்கரும் இருக்கின்றது

துணிந்து தைரியமாக மத்தியா அரசினை எதிர்க்க இவர்களிடம் என்ன பலம் இருக்கின்றது? என்ன மக்கள் சக்தி இருக்கின்றது

மத்திய அரசு இந்த பலவீனத்தை மிக அழகாக படித்துவிட்டது, இவ்வளவுதான் இவர்கள், இனி இவர்களை போட்டு அடித்தாலும் தமிழகத்தில் கேட்பதற்கு யாருமில்லை என அது துணிந்துவிட்டது

அது உண்மையும் கூட‌

நாளையே பன்னீர் அரசு டிஸ்மிஸ் செய்யபட்டாலும், பல கட்சி தலைகள் மீது வழக்குகள் பதியபட்டு ஓட அடிக்கபட்டாலும் என்ன நடந்துவிடும்?

மக்களை அந்த கட்சி என்று திரட்டியது? என்று போராடியது

ஜெயா இருக்கும் வரை ஒரு அடையாளம் இருந்தது, இன்று அதுவுமில்லை

நாளை சசிகலாவே தமிழனமே திரள்வீர், மாநில சுயாட்சி காப்பீர் என அழைத்தால் தமிழகத்தில் சிரிக்காதவர் யார்?

மேய்ப்பன் இல்லா மந்தை சிதறிகிடக்கின்றது, அடுத்த காவல்காரன் இல்லை, தன்னை நிரூபித்து மேல் எழும்பி கட்சியினை கைபற்றும் அடுத்த துணிச்சல்காரர், ஆற்றல்காரர் அங்கு இல்லை

பணம் கொடுத்தால் போதும் என ஒரு கூட்டம், காலில் விழ இன்னொரு கூட்டம், எங்கிருந்து தலைவன் எழும்புவான்?

ஆக கலைந்துவிட்ட மந்தையினை விரட்டி விரட்டி அடிக்கும் சிறுத்தையாக மத்திய அரசு களமிறங்கிவிட்டது

இன்னும் பல வேடிக்கைகள் பார்க்கலாம், அங்கு காப்பாற்ற யார் உண்டு?

திமுகவினை அழித்துவிட முன் கங்கணம் கட்டினார்கள், எம்ஜிஆரை கொம்பு சீவி அலங்கரித்துவிட்டார்கள், கடுமையான ஊழல் விசாரணைகளை அமைத்தார்கள்

ஆனால் கலைஞர் தன்னால் முடிந்த மட்டும் காத்தார், இந்தி எதிர்ப்பாகட்டும், மிசா ஆகட்டும், இன்னும் பல விவகாரங்காளகட்டும் உன்னால் முடிந்தை பார் என சவால் விடும் தைரியம் அவருக்கே இருந்தது

ஈழம் அமைக்க உதவா அமைதிபடை ஏன் செல்லவேண்டும் என்ற முழக்கம் தமிழகத்தில் அவரிடமிருந்தே தான் வந்தது

முடிந்த அளவு போராடிய டெல்லி அவரிடம் தோற்றுத்தான் போனது, ம்ஹூம் இறுதிவரை அவரை அசைக்க முடியவில்லை

ஆனால் அவர் ஊழல்வாதி என்றொரு முத்திரையினை பதித்து அதனை பெரும் விவாதமாக்கி எதிராளிகளை ஜெயிக்கவைக்கும் உத்திக்கு அது வழிவிட்டுதான் இருந்தது

ஆனாலும் மாநில சுயாட்சி என்பதில் கலைஞரை போல உறுதியும், போராட்ட குணமும் யாருக்கும் இல்லை

இன்று அதிமுக அலறுகின்றது, எப்படி மத்திய படை கோட்டைக்கு வரலாம் என ஒப்பாரி வைக்கின்றதே தவிர அதற்கு என்ன செய்வது? எப்படி தொடங்குவது? என ஒரு மண்ணும் புரியவில்லை

கோட்டை வெறிச்சோடி கிடக்கின்றது

இவ்வளவிற்கும் அதன் பெயர் அண்ணா திமுக , சீ வெட்கமாக இல்லை

இதே திமுகவிற்கு இப்படி ஒரு சோதனை அல்லது அவமானம் என்றால் கலைஞர் எப்படி சீறுவார்

"திராவிட நாடு கோரிக்கையினை கைவிடுகின்றோமே தவிர, அதற்கான காரணங்கள் அப்படியே இருக்கின்றன என சொல்லித்தான், மாநில சுயாட்சி மத்தியில் கூட்டாட்சி என்ற உறுதிக்கு பின்னர்தான் அண்ணா தனிநாடு கோரிக்கையினை கைவிட்டார்

ஆனால் அந்த மாநில சுயாட்சிக்கும், மாநில சுயமரியாதைக்கெல்லாம இழுக்கு வரும் பொழுது எப்படி போராடவேண்டும் என்பதை பெரியார், அண்ணா எல்லோரும் எங்களுக்கு சொல்லிவிட்டுத்தான் சென்றிருக்கின்றார்கள்

அவர்கள் காட்டி வைத்த வழியில் போராடி, மாநில நலன் காக்கும் காலம் நெருங்கிகொண்டிருக்கின்றது

அண்ணா மறைந்தாரே ஒழிய அவரின் இதயம் இன்றும் கட்சியோடு துடித்துகொண்டுதான் இருக்கின்றது

உடன்பிறப்பே அந்த ஆரிய கூட்டம், மறுபடி அரியணையில் ஏறி திராவிட கழுத்தை நசுக்க புறப்பட்டிருக்கின்றது

இதனை ஆரம்பத்திலே முடியடிக்க வேண்டாமா?

நாம் வன்முறையாளர்கள் அல்ல, ஆனால் நம் சுயமரியாதையினை விட்டு கொடுப்பவரும் அல்ல,

விரைவில் அண்ணா சதுக்கத்தில் கூடுவோம், இந்த பெரும் ஆபத்தை விரட்ட துணிவோம், சுயமரியாதை காப்போம்"

இப்படி ஒரு அறிக்கை விட்டால் அதன் பின் மத்திய அரசு விந்திய மலையினை தாண்டும்??

கலைஞரும் திமுகவும் மிக உறுதியாக எப்படி இருக்கின்றன என்றால் இப்படி ஒரு ஆற்றலில்தான், இம்மாதிரியான அணுகுமுறையால்தான்.

அவர் இம்மாதிரி ஒரு கட்டளை இட்டால் மெரினா நிரம்பும், தமிழகமே பரபரப்பாகும்.

இதனை சசிகலா, பன்னீர், எடப்பாடி, சைதை துரைசாமி, தம்பிதுரை போன்றாவ்ர்களால் செய்ய முடியுமா?

பின் கலைஞரை நெருங்குவார்களா? இல்லை அவர்களை நொறுக்குவார்களா?

போட்டு தாக்கத்தான் செய்வார்கள்.

அதனால்தான் உறுதியாக சொல்லலாம், மாநிய சுயாட்சி எனும் கோஷத்தை எழுப்பவும், அதற்காக போராடவும் திமுக எனும் கட்சியினை தவிர யாருக்கும் ஆற்றலும், தகுதியில் இப்போதைக்கு தமிழகத்தில் அறவே இல்லை

திமுக கடந்த 60 வருடங்களாக நடந்து வந்த பாதையினை பாருங்கள், அது உங்களுக்கே புரியும்

அதிமுக ஒரு வானவேடிக்கை கட்சி, அது கலைந்துகொண்டிருக்கின்றது அவ்வளவுதான்.

பெயர்தான் அண்ணா திமுக, ஆனால் அவர் சொன்ன‌ மாநில சுயாட்சி பற்றியோ திராவிட சித்தாந்தம் பற்றியோ, அதன் போர்குணம் பற்றியோ ஒரு மண்ணாங்கட்டியும் தெரியாது

இதனைபோல வெட்க கேடு ஒன்றுமே இல்லை,,







No comments:

Post a Comment