Friday, December 16, 2016

பிரபாகரன் இப்படிபட்ட பைத்தியக்காரனா?

கலைஞர் ஈழத்தில் தமிழர் சாகும்போது வேடிக்கை பார்த்த்தாராம், அதனால் அவர் மருத்துவமனையில் இருக்கும்போது இவர்கள் வேடிக்கை பார்ப்பார்களாம்


இப்படி சிலர் கிளம்பியிருக்கின்றார்கள்


கலைஞர் புலிகளுக்கு செய்த உதவியும், அமைதிபடை காலத்தில் அவர் காட்டிய புலி அபிமான செயல்கள், ஆட்சி இழந்தது என பல பார்த்தாகிவிட்டது


ஈழப்போர் எப்படி நடத்தபட்டது என்பதையும் சொல்லியாகிவிட்டது,


பிரபாகரன் எப்படிபட்ட பைத்தியக்காரனாக இருந்தான் என்பதனை சமீபத்தில் இலங்கை பத்திரிகையாளர் எழுதியதில் புரிந்துகொள்ளலாம், அவர் பாலசிங்கத்திற்கு நெருக்கமானவர்


அதாகபட்டது நார்வே, ஜப்பான் என எல்லா நாடும் பேசிபார்த்துவிட்டு இனி பிரபாகரன் அழிவதை தடுக்க முடியாது, ஆனால் மக்கள் அழிவு அதிகமாக இருக்கும், எதற்கும் ஒருமுறை பேசிபாருங்கள் என பாலசிங்கத்த்தை அனுப்பி இருந்தார்கள்


இனி யுத்தம் வந்தால் உலக நாடுகள் புலிகளை அழித்துவிடும் தம்பி, கொஞ்சம் யோசனை செய் என்றார் பாலசிங்கம்


"அதை விடுங்கோ, சேரனின் ஆட்டோகிராப் பாருங்கோ.." என படத்தை ஓட விட்டார் பிரபாகரன்


படம் முடிந்தது, பேச்சை தொடக்கினார் பாலசிங்கம்


"இன்னொருமுறை பாப்போம்.." என படத்தினை ஓடவிட்டார் பிரபாகரன்


மறுபடியும் படம் முடிந்தது, இனி பேசலாமா என்றார் பாலசிங்கம்


"இன்னொருக்கா பாப்போம்.." என படத்தை தொடங்கினார் பிரபாகரன்


இதற்கு மேலும் பாலசிங்கத்தை அவமானபடுத்த முடியாது, நாசமாய் போ என மனதிற்குள் சபித்தபடி கிளம்பிய பாலசிங்கம் அதன் பின் பிரபாகரனை சந்திக்கவில்லை


இதனைத்தான் பிரபாகரன் எதனையுமே சிந்திக்கும் மனநிலையில் இல்லை என பகிரங்கமாக சொன்னார் நார்வே தூதர்


இனி சனம் சாகுறத யாரும் தடுக்க முடியாது, தம்பிக்கு ஒரு இழவும் புரியாது என சொல்லிவிட்டு கைகழுவினார் பாலசிங்கம்


ஆக முடிவினை யார் தேடிகொண்டார்கள் என்பது பாலசிங்கத்திற்கு நெருங்கிய பத்திரிகையாளன் மூலம் தெரிகின்றது


அதாவது மக்கள் லட்சகணக்கில் சவார்கள் என பால்சிங்கம் கொடுத்த எச்சரிக்கையினை கொஞ்சமும் சட்டை செய்யாமல் ஆட்டோகிராப் படம் பார்த்தவன் மக்கள் தலைவனாம்


கொஞ்சமாவது பொறுப்புணர்ச்சி என்பவது அவனுக்கு இருந்திருக்கின்றதா? இருந்தால் இப்படி செய்வானா?


இதில் கலைஞர் கெடுத்தாராம், இவர்கள் சிரிப்பார்களாம்


அடேய் அங்கிள் மங்கீஸ், அந்த பாலசிங்கத்திற்கு தெரியாததெல்லாம் உங்களுக்கு தெரியுமா?


சரி மங்கிஸ், அப்பொழுதும் பிரபாகரன் சேரனின் படத்தினைத்தான் பார்த்திருக்கின்றார்,


சீமானின் படங்களை அல்ல

1 comment:

  1. ஈழ போரில் தமிழன் தோற்க என்ன காரணம்?
    .
    கீழே உள்ள இணைய பக்கத்தில் காணலாம்;..
    .
    .
    .
    http://www.tamilhindu.com/2013/07/vidhiye-vidhiye-play-7/

    ReplyDelete