Showing posts with label ஶ்ரீ லங்கா. Show all posts
Showing posts with label ஶ்ரீ லங்கா. Show all posts

Thursday, September 21, 2017

பிரபாகரனுக்கு முள்ளிவாய்க்காலில் நினைவு சின்னம் எழுப்ப வேண்டும் : சிங்கள புத்த பிக்கு

பிரபாகரனுக்கு முள்ளிவாய்க்காலில் நினைவு சின்னம் எழுப்ப வேண்டும் : சிங்கள புத்த பிக்கு


முன்பே சொல்லியிருந்தோம், இலங்கையில் இந்திய படைகளை எதிர்த்து விரட்டவேண்டிய சிங்களனுக்கு உதவியாகத்தான் புலிகள் போராடினர்


அதாவது இலங்கை ராணுவம் ஈடுபடவேண்டிய மோதலில் புலிகள் ஈடுபட்டனர். அவ்வகையில் அவர்கள் செய்தது இலங்கை தேசியத்திற்கான பெரும் உதவி.




அப்படி ஒரு காலத்தில் இந்திய படைகளை விரட்டிய பெரும் இலங்கை மாவீரன், தேசபக்தன் என பிரபாகரன் கொண்டாடபடுவார் என நாம் முன்பே சொன்னதை நீங்கள் கவனித்தீர்களோ இல்லையோ தெரியாது.


ஆனால் நடக்க தொடங்கிவிட்டது.


இதோ தொடங்கிவிட்டார்கள், கொஞ்ச நாளில் இலங்கை பாராளுமன்றத்திலும் அவர் படம் இடம்பெற்றாலும் ஆச்சரியமில்லை.


ஆக சிங்களன் இலங்கைக்கு மகா விசுவாசமானவனாக பிரபாகரனை தூக்க ஆரம்பித்துவிட்டான். இந்திய தமிழர்களுகுத்தான் சொரணையே இல்லை


இனியாவது தமிழக தமிழர்களுக்கு சொரணை வரட்டும்.



Friday, September 15, 2017

இன்று திலீபன் உண்ணாவிரதம் தொடங்கிய நாள்.




Image may contain: 3 people, people sittingஇன்று திலீபன் என்பவர் இலங்கையில் அன்று உண்ணாவிரதம் தொடங்கிய நாள்.


அதனால் ஆரம்பித்தாயிற்று அங்கிள் கோஷ்டி. இந்தியா திலீபனை காப்பாற்ற தவறியது, இந்திய துரோகம், இந்தியா ஒழிக. ஹேய்ய்ய் இன்னபிற ஆட்டங்கள்.


திலீபனை காப்பாற்ற வாய்ப்பு இருந்தது, அவன் கேட்டது உடனே நிறைவேற்றபடும் கோரிக்கை அல்ல. அதற்கு சில அவகாசம் வேண்டும், அவனை உண்ணாவிரதத்தை கைவிடுங்கள் என்ற இந்தியாவின் வேண்டுகோரிக்கையினை புலிகள் கண்டுகொள்ளவே இல்லை





அன்று திலீபனின் சாவு அவர்களுக்கு வேண்டியிருந்தது, அதனை வைத்து மக்களை உணர்ச்சியூட்டும் அவசியம் இருந்தது, அதனால் அப்படி நகர்த்தினார்கள்.

இதோ வேலூர் சிறையிலும் முருகன் உண்ணாவிரதம் இருந்தார், மூன்றாம் நாளே நமது காவல்துறை தூக்கிபோட்டு மருத்துகொடுத்து காப்பாற்றவில்லையா? புலிகள் இதனை செய்திருக்கலாம்

காந்திய வழியிலோ, அஹிம்சையிலோ கொஞ்சமும் நம்பிக்கை இல்லாதவர்கள் புலிகள், பின்பு ஏன் இப்படியான காரியங்கள்

அப்படி காந்தி வழி என்றால், காந்தி தானே உண்ணாவிரதம் இருந்தார். தன் உயிரை கொடுக்க துணிந்தார். எவனையோ பிடித்து உண்ணாவிரதம் இருக்க வைத்துவிட்டு வெள்ளையனிடம் அவர் பேரம் பேசினாரா?

ஆனால் பிரபாகரன் அதனைத்தான் செய்தார், கேட்டால் காந்திவழி போராட்டமாம்.

தீலிபனை காக்கும் பொறுப்பு இந்தியாவினை விட புலிகளுக்கு இருந்தது, பிரபாகரன் ஒரு உத்தரவிட்டிருந்தால் திலீபன் எழும்பியிருப்பான்

ஆனால் அவனே தன்னை காப்பாற்ற கூடாது என எழுதியிருகின்றான் என சொல்லி, வந்த மருத்துவரை எல்லாம் திருப்பி அனுப்பினர் புலிகள்

திலீபனுக்கு நடந்தது திட்டமிட்ட கொலை, இந்தியாவிற்கு எதிராக அன்று ஏவப்பட்ட ஒரு தற்கொலைப் படை அவன்

இதே இலங்கையில் அன்று பல்கலைகழகத்தில் சிங்களனை எதிர்த்து உண்ணாவிரதம் இருந்தனர் சில மாணவிகள், இதெல்லாம் போராட்டம் அல்ல துப்பாக்கி தூக்குவதுதான் போராட்டம் என சொல்லி அவர்களை தூக்கி வந்து காப்பாற்றினர் புலிகள்

அவர்களில் ஒருவர்தான் பிரபாகரன் மனைவி மதிவதனி

அதாவது யார் உண்ணாவிரதம் இருக்கவேண்டும் , யார் சாக வேண்டும் என்பது பிரபாகரன் கையில்தான் இருந்திருக்கின்றது

அவர் நினைத்தால் திலீபனை காத்திருக்கலாம், ஆனால் சொன்னது என்ன?

" நீ முன்னால் போ, நான் பின்னால் வருகின்றேன்" என அவன் செத்தே தீரவேண்டும் என்ற முடிவோடு அனுப்பினார்

அதன்பின் கிட்டதட்ட 1 லட்சம் மக்களோடு பிரபாகரன் 22 வருடம் கழித்து திலீபன் சென்ற இடம் சென்றார், ஈழ தமிழருக்கு ஒரு தீர்வும் பெற்று தராமலே சென்றார்.

இதனை எல்லாம் மறைத்துவிட்டு சீமானின் தும்பிகள் தியாக தீபம் திலீபன் என சொல்லிகொண்டிருக்கின்றன‌

விகடன் போன்ற பத்திரிகையும் உண்ணா நோன்பின் மகத்துவத்தை உலகிற்கு சொன்னா திலீபன் என படுபயங்கர சதியினை சொல்கின்றன, பொறுப்பு என்பது கொஞ்சமும் இல்லை.

விகடனின் இந்த கபடம் பத்திரிகை துரோகம். தன் சொந்த நாட்டினை எதிர்த்து எங்கோ மோசடியாக உண்ணாவிரதம் என கொல்லபட்ட அந்நியநாட்டுக்காரன் ஒருவனை தியாகி என இந்திய பத்திரிகை எழுதுவதுதான் தேச துரோகம்.

பக்தாள் எல்லாம் இம்மாதிரியான தேசதுரோகங்களை எல்லாம் கண்டுகொள்ளவே மாட்டார்கள், அதுவும் "அவாள்" பத்திரிகை என்றால் ம்ஹூம்.













 


Tuesday, August 29, 2017

இலங்கை கடற்படை தளபதியாக தமிழர் சின்னையா




இலங்கை கடற்படை தளபதியாக தமிழர் சின்னையாவினை வைத்தாலும் வைத்தார்கள் , இலங்கையில் அவரை கொண்டாடுகின்றார்கள்


அவர் யார் தெரியுமா? இந்தோனேஷியா பக்கம் நின்றிருந்த புலிகள் கப்பலை அழித்த மாவீரன், திருகோணமலை பக்கம் நின்று புலிகளை ஒழித்த சூரன் என்றெல்லாம் கடும் கொண்டாட்டம்


ஆக புலிகளை ஒழித்ததில் ஒரு தமிழன் பெரும் பங்களிப்பினை செய்திருக்கின்றான்


இனிதான் இருக்கின்றது அடுத்த சிக்கல், எல்லை தாண்டும் தமிழக மீணவர்களை பிடிப்பதெல்லாம் இலங்கை கடற்படைதான். அதன் தலைவர் இனி தமிழர்


இனி இங்கிருது கொண்டு சிங்களன் அடிக்கின்றான், பிடிக்கின்றான் என சொல்ல முடியாது. தமிழன் தான் தமிழன் படகினை பிடிக்க போகின்றான்


அப்பொழுது இங்கிருக்கும் சைமன் கோஷ்டி எப்படி கொதிக்கும்?


"ஏ சிங்கள அரசே.. தமிழனுக்கு உயர் பதவி கொடுக்காதே, அவனுக்கு அரசு வேலையே கொடுக்காதே


இம்மாதிரி பதவியில் தமிழனை வைத்தால் நாங்கள் எப்படி திட்டுவது?


எல்லா அரசு வேலைகளிலும், உயர் பதவிகளிலும் சிங்களனையே வை, தமிழனை விரட்டு. அப்பொழுதுதான் எங்களுக்கு வசதி"




 

 



 

Thursday, August 3, 2017

இலங்கையில் இஸ்லாமியர் நிலை என்ன?



Image may contain: one or more people and people sittingபுலிகளை ஆதரித்து சில இஸ்லாமிய நண்பர்களும் சொல்வதுதான் விசித்திரம், பழனிபாபா அப்படி சொன்னார் பக்கத்துவீட்டு வாபா இப்படி சொன்னார் என அழிச்சாட்டியம் தாங்கவில்லை.


பழனிபாபா நல்ல இஸ்லாமியானா என்பது விஷயம் அல்ல, மாறாக அவர் இந்திய தேசியத்திற்கு எதிரானவர் என்பது மட்டும் உண்மை.


இலங்கையில் இஸ்லாமியர் நிலை என்ன?


அவர்கள் மூர்ஸ் என அழைக்கபடும் இனம், தமிழ் பேசும் இஸ்லாமியர். தமிழ் பேசிவிட்டால் மட்டும் போதாது, இனம் என்பது வேறு வகை என்பது ஈழத்தவர் கொள்கை.


சிங்களருக்கு இவர்கள் ஆகாது, ஈழத்தவருக்கு அறவே ஆகாது. இலங்கையில் மலையக தமிழருக்கு அடுத்து மிக பரிதாபமான‌ இனம், ஆனால் உழைக்கும் கடுமையாக உழைக்கும் கொஞ்சம் தமிழகத்து மார்வாடிகள் போல செழிப்பான இனம்.


Image may contain: one or more peopleஹிட்லருக்கு பணக்கார யூதர்கள் மீது இருந்த வெறுப்பினை போலவே, இம்மக்கள் மீதும் புலிகளுக்கு வெறுப்பு வந்தது, சிறுபான்மை சமூகம் வசதியாக வாழ பெரும்பான்மை சமூகம் எங்கும் ஒப்புகொள்வதே இல்லை.


வெள்ளையர் காலத்திலே சிங்களர் அவர்களை கொல்வார்கள் , யாழ்பாணர் லண்டனில் சென்று இஸ்லாமியரை கொல்வது கொலை அல்ல என வாதிட்டு வெற்றியும் பெறுவார்கள், அதன் பின் ஈழனும், சிங்களனும் அந்த அப்பாவிகளை போட்டு சாத்துவான்.


இப்படிபட்ட மூர்ஸ் இனம், யுத்தகாலத்திலும் பாடுபட்டது. வடக்கு கிழக்கினை இணைக்கும் இந்திய ஒப்பந்தத்தை புலிகள் எதிர்க்க பெரும் காரணமே அங்கு வாழும் இஸ்லாமியர்தான், இதுதான் முதல்படி.


கிழக்கு மாகாண இஸ்லாமியரை ஈழ மக்களாக நினைக்க அங்கு வாழ்ந்த யாருக்கும் விருப்பமில்லை, அதனை உணர்ந்துதான் புலிகள் அந்த இணைப்பினையே எதிர்த்தார்கள், ஆனால் கிறிஸ்தவர்களுக்கும் புலிகளுக்கும் ஒரு புரிந்துணர்வு இருந்திருக்கின்றது


Image may contain: foodபுரிந்துணர்வு என்றால் ஒன்றுமில்லை, கிறிஸ்தவர்களுக்கு புலிகள் எதிரானவர்கள் என்றால் ஐரோப்பாவில் பணம் பிரிக்க முடியாது, அது ஒன்றுதான் காரணம்


புலிகள் அமைக்க நினைத்தது தூய்மையான ஈழம், சீமானின் தமிழ்தேசியம் போன்றது. இஸ்லாமிய பெருமக்களோ தானுண்டு தன் வேலையுண்டு என இருந்தவர்கள், வலுகட்டாயமான காலத்தில் புலிகளுக்கு வரியும் கட்டினார்கள்,புலிகளுக்கு போதாதல்லவா?


அது அமைதிபடை வெளியேறிய 1990ம் ஆண்டு காலங்கள், புலிகளின் ஏகபோகம் உச்சகாலங்கள்.


நெல்லை பகுதிகளில் சுடலை ஆண்டவருக்கு குடும்பத்தில் ஒரு கடா வெட்டுவார்கள், அல்லது சுடலை விடமாட்டார். அப்படி ஈழத்தில் குடும்பத்தில் ஒருவரை பிரபாகரனுக்கு பலிகொடுக்க வேண்டும் கூடவே அள்ளியும் கொடுக்கவேண்டும் இல்லாவிட்டால் சாமி விடமாட்டார்.


அப்படிபட்ட சாமிக்கு இஸ்லாமியர் கிள்ளிகொடுப்பது பிடிக்கவில்லை, துரோகிகள் என அறிவித்தார். துரோகிகளுக்கு புலிகளின் தண்டனை கொலை. அப்படி கிழக்கு மாகாணத்தில் புலிகளின் அட்டகாசம் தொடங்கியது


இஸ்லாமியர் கையில் ரூ.500 பணம் மட்டும் கொண்டு செல்லலாம் என அறிவித்தார்கள், நகைகளை வாகனங்களை தொட கூடாது, பலர் கிளம்பினர்.


Image may contain: shoesஎப்படிபட்ட அநியாயம் இது?, காலம் காலமாக வாழ்ந்தவர்களை, வீடு வாசல் என இருந்தவர்களை வெறும் 500 எடுத்துகொண்டு ஓடு என்பதெல்லாம் எப்படிபட்ட கொடூரம்?


மண்ணைவிட்டு செல்வது என்றால் எவ்வளவு வேதனை? கொஞ்சம் பேர் இருந்து பார்க்கலாம் என இருந்த இஸ்லாமியர் மீது பிரபா சாமி நெற்றிகண் திறந்தது, சுடலை வாள் வீசிற்று


ஏறாவூரில் கொல்லபட்டதில் 10 வயதிற்குட்பட சிறுவர்கள் உண்டு,காத்தன்குடி பள்ளிவாசலில் தொழுகையில் இருந்த இஸ்லாமியரை மசூதிக்குள் புகுந்து வெட்டினர், கிட்டதட்ட 90 இஸ்லாமியர் என புலிகளே சொன்னால் கணக்கு 500க்கு மேல் இருக்கலாம் என்பது ஒரு தியரி, இன்றுவரை தெரியாது


புனிதமான மசூதி அன்று ரத்தகாடாயிற்று, குரான் ஒலித்த இடம் அன்று ஓப்பாரி ஓலத்தில் அழுதது.


அம்மக்கள் காலம் காலமாய் வாழ்ந்த இடத்திலிருந்து அவர்களை விரட்ட புலிகளுக்கு என்ன உரிமை? யார் கொடுத்தது?


யார் காப்பாற்றுவார்? சிங்களம் வராது, இந்தியா வராது, வந்த இந்தியாவினையும் விரட்டியாயிற்று, பின் யாரும் வரமாட்டார்கள், புலிகள் வைத்ததுதான் சட்டம்


அது புலிகள் துரோகிகளுக்கு கொடுத்த தண்டனை, 
ஆனால் முள்ளிவாய்க்கால் உலகமே செய்த இனபடுகொலை அப்படித்தான் நீங்கள் நம்பவேண்டும்.


ஒருவேளை இந்திய அமைதிபடை தொடர்ந்து இருந்திருந்தால் இந்த மாபெரும் அவலம், அநியாயம் நிச்ச்யம் தடுக்கபட்டிருக்கும், இதற்கெல்லாம் இந்தியபடை அனுமதிக்காது.


இதனை எல்லாம் மிக சாதரணமாக கடந்து சென்றன புலிகளின் பிரச்சார ஊடகங்கள், அப்பாவிகளும் நம்பின, ஆனால் சர்வதேசம் குறித்துகொண்டே இருந்தது,


இறுதி யுத்தத்தில் ஈரான் ஓடிவந்து சிங்களனுக்கு உதவ இதுவும் காரணம்.


அப்படி இஸ்லாமிய குடும்பங்களை எல்லாம் விரட்டிவிட்டுத்தான் ஏராளமான தங்கங்களை அபகரித்தார்கள், அவற்றில் ஆயுதம் வாங்கினார்கள், இன்றும் அவர்கள் புதைத்து வைத்த தங்கத்தை தேடித்தான் சிங்களன் அலைகின்றான், கொஞ்சம் மீட்கவும் பட்டது அதனை மறைத்த விஷயம்தான் பொன்சேகா, ராஜபக்சே சண்டையின் முதல்படி


சிங்களனும், புலிகளும் அந்த இஸ்லாமியருக்கு செய்த கொடுமைகள் கொஞ்சமல்ல, ஆனாலும் புலிகளின் பெரும் படுகொலைகளில் அந்த காத்தன்குடி பள்ளிவாசல் படுகொலை, தொழுகையிலிருந்த அந்த இஸ்லாமியர் மீதான படுகொலை பெரும் ரத்த அடையாளம், அவர்களின் மிக கொடூரமான வெறிக்கு பெரும் சாட்சி.


1983ல் கொழும்பில் தமிழரை சிங்களன் அடித்து கொன்றதற்கும், 1990ல் புலிகள் இஸ்லாமியரை கொன்று விரட்டி தமிழர் தூய்மை செய்ததற்கும் என்ன வித்தியாசம்?


சிங்களன் யாழ்பாண நூலகத்தை எரித்தற்கும், இந்த புலிகளின் பள்ளிவாசல் கொலைகளுக்கும் என்ன வித்தியாசம் கண்டீர்கள்? மனித தன்மையுள்ளோர் இதனை ஏற்க முடியுமா?


இச்சம்பவத்தில் 3 வயது குழந்தையினை புலிகள் கொன்ற கோரமும் உண்டு, 10 வயதிற்குட்பட்ட 30 சிறுவர்கள் சுட்டுகொல்லபட்டனர், இதனை எல்லாம் கடந்துவிட்டா பாலசந்திரனின் படத்தினை பிடித்து போராட முடியும்?


இந்த திருட்டு முருகன் மே 17 இயக்கம், இன்னும் பல அழிச்சாட்டியங்கள் எல்லாம் மறைக்கும் உண்மைகள் இவை, ஆனால் உலகம் இவற்றை அறிந்ததால்தான் இவர்களை கண்டுகொள்ளாமல் விட்டிருக்கின்றது


திருட்டு முருகனும் இருக்கவேண்டிய இடத்தில் இருக்கின்றார்.


அந்த காத்தன் குடி படுகொலைகள் நடந்த 27ம் நினைவுநாள் இது, இதே ஆகஸ்டு 3ம் தேதிதான் அந்த பள்ளிவாசலில் பிஞ்சுகள் உட்பட ஏராளனார் கொல்லபட்டு மசூதி ரத்தத்தில் நனைந்தது.


என்னிடம் ஆயுதம் இருக்கின்றது, இது என் நாடு அதனால் எல்லோரையும் கொன்றுகொண்டே இருப்பேன் என்பது போராட்டம் ஆகாது, அதன் பெயர் காட்டுமிராண்டிதனம்


ஏன் உங்களிடம் ஆயுதமிருந்தால் எதுவும் செய்வீர்களா? எங்களிடம் இருக்கும் ஆயுதங்களை காட்டட்டுமா? என உலகநாடுகள் திரண்டபொழுது புலிகள் காணாமல் போனார்கள்.


ஆனால் ஈழத்தை கெடுத்தது காங்கிரஸ், திமுக என சிலர் சொல்லிகொண்டே இருப்பான்


இப்படி எல்லாம் ஆடிய புலிகள்தான் கடைசியில் முள்ளிவாய்காலில் எல்லோராலும் வெறுக்கபட்டு கொல்லபட்டனர்.


தெய்வம் நின்று கேட்கும் என்பது அங்கு நன்றாய் தெரிந்தது


இப்படி புலிகளால் கொல்லபட்டர் ஏராளம் இருக்க, முள்ளிவாய்க்கால் நினைவு சின்னம் என ஒன்றை வைத்து நேற்று ஒரு கும்பல் அஞ்சலிக்கு கூடியிருக்கின்றது


அந்த சிலைகளை செய்த வீர சந்தாணம் என்பவருக்கு அஞ்சலியாம்


அமைதிபடையாய் சென்று செத்த 1500 வீரர்களுக்கும், இம்மாதிரி புலிகளால் கொல்லபட்ட தமிழருக்கும் தமிழகத்தில் சிலையும், நினைவிடமும் உண்டா என்றால் இல்லை


அந்த அஞ்சலி கூட்டத்தில் நெடுமாறன், நடராசன், சீமான், கவுதமன் என ஒரு கும்பல் கூடியிருந்தது, வடகொரியாவின் சோதனை ஏவுகனை திசைமாறி இங்கு வந்து விழுந்தால் நன்றாக இருந்திருக்கும்


இந்த கபடதாரிகளை விடுங்கள், அந்த மசூதியில் கொல்லபட்டவர்க்காய் அஞ்சலி செலுத்தலாம், இதே ஆகஸ்டு 3ல் கொல்லபட்டார்கள்.


(இப்பொழுதும் வந்து பிரபாகரனை பற்றி உனக்கு தெரியாது, இஸ்லாமியர் எல்லோரும் துரோகிகள், இந்தியபடைக்கு தகவல் சொன்னவர்கள் அதனால்தான் அண்ணன் கொன்றார் என சொல்வார்கள் பாருங்கள், அங்கே தான் பெரும் வெறுப்பும் பரிதாபமும் வரும்)















Friday, July 28, 2017

இலங்கை : விந்தியா கொலை வழக்கு








37.gifஇலங்கையில் நடந்த சம்பவத்தை நீங்கள் அறிந்தீர்களோ இல்லையோ தெரியாது, விசித்திரமான சம்பவம்


அந்த விசித்திர சம்பவம் முன் நடந்தது கொடூர சம்பவம்


ஆம், விந்தியா எனும் தமிழ்பெண் , தமிழர்களால் கற்பழிக்கபட்டு மிக கொடூரமாக கொல்லபட்டார். யார் விசாரிப்பார்கள் ? சிங்கள அரசுதான் விசாரிக்கின்றது





அந்த மாணவி கொல்லபட்ட விதத்தை கேட்டால், அவர்களை எல்லாம் உடனே விமானம் ஏறி சென்று கொல்லவேண்டும் என்றுதான் கோபம் வரும், அவ்வளவு கொடூரம்

அந்த வழக்கிற்கு அந்த தமிழ்குற்றவாளிகள் தரப்பு எவ்வளவோ இடைஞ்சல் கொடுத்தாலும் அரசு விடாபடியாக விசாரித்து குற்றவாளிகளை கைது செய்திற்று

இப்பொழுது விசாரிக்கும் ஒரு நீதிபதி தமிழர், பெயர் நெடுஞ்செழியன், இவரின் பாதுகாவலர் பெயர் சந்திரசேகரா சிங்களர்

இந்நிலையில் பல மிரட்டல்களுக்கு பின்னும் நீதியாக விசாரிக்கும் அந்த தமிழ் நீதிபதியினை சுட்டிருக்கின்றார்கள், அதில் நீதிபதியினை காப்பாற்றிவிட்டு அந்த சிங்கள காவலர் உயிரிழந்திருக்கின்றார்

கவனியுங்கள்

கொல்லபட்டது தமிழ்ப்பெண், கொன்றது தமிழர்கள், விசாரிப்பதும் தமிழன், அந்த நீதிபதியினை சுட்டவன் தமிழன், அந்த நீதிபதிக்காய் செத்தவன் ஒரு சிங்களன்

இதுதான் இன்றைய இலங்கையின் நிலை

இங்கு இந்த பத்திரிகைகள் இதனை எழுதுமா என்றால் எழுதாது, இந்த ஈழ விவகார வியாபாரிகளான சீமான், வைகோ, வேல்முருகன் , திருமா எல்லாம் இதனை பற்றி பேசுவார்களா என்றால் இல்லை

எல்லாம் கடப்பாரை விழுங்கியது போல மகா அமைதி

இந்த ஈழ விவகாரம் எல்லாம் இவர்களிடம் ஒரு சிணுங்கலையும் கொடுக்காது, இதுவே தமிழ்பெண்ணை சிங்களன் கொன்றிருந்தால், தமிழ் நீதிபதியினை சிங்களன் சுட்டிருந்தால், "ஐயகோ புலிகள் இல்லாமல் பாதுகாப்பு இல்லை, என் இனம் அழிகின்றது, ஏய் மோடி , ஏய் கலைஞர், ஏய் காங்கிரஸ்.." என குட்டிகரணம் அடிப்பார்கள்.

சீமான் எல்லாம் நாதியற்ற இனமா நாம் என பல பல்டி அடிப்பார்

ஆனால் தமிழன் தமிழனால் அங்கு கொல்லபட்டால், தமிழனுக்காக சிங்களன் உயிர்விட்டால் இவர்கள் எல்லாம் கண்டுகொள்ளவே மாட்டார்கள்.




 

 



 



Wednesday, July 26, 2017

புலிகள் மீதான தடையினை நீக்கிவிட்டார்கள்

"ஐரோப்பாவில் புலிகள் மீதான தடையினை நீக்கிவிட்டார்கள், நியாயம் வென்றது, நீதி வென்றது, வெற்றி வெற்றி மாபெரும் வெற்றி


சரி, யுத்ததின் போது தடையினை அவர்கள்தான் போட்டிருந்தார்கள் ஏன்?


அது அப்பொழுது, இப்பொழுது புலிகளை உலகம் மதிக்கின்றது, இது எங்கள் போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி




சரி, அடுத்து என்ன செய்வீர்கள்?


அதெல்லாம் தெரியாது, இது மாபெரும் வெற்றி


ஐரோப்பாவில் இருந்து படைதிரட்டி வந்து யுத்தம் தொடங்குவீர்களா?


யுத்தமா? அதெல்லாம் எதற்கு? இது உனக்கு புரியாது, பெரும் வெற்றி


அதவது 2006ல் தீவிரவாதிகள் என புலிகளை சொன்ன ஐரோப்பிய ஒன்றியம், புலிகள் அழிந்தபின் அவர்களுக்கு தடையில்லை என்றால் அவர்கள் நல்லவர்கள்?


ஆம், அவர்கள் உத்தமர்கள், எங்கள் நியாயம் புரிந்திருக்கின்றது


கலைஞரும் தான் 2009l உண்ணாவிரதம் எல்லாம் இருந்தார், தமிழ்செல்வன் கொலைக்கெல்லாம் கண்டனம் தெரிவித்தார், யுத்தம் நிறுத்தபடவேண்டும் என்றார், அவரை ஏன் திட்டுகின்றீர்கள்?


இல்லை அவர் துரோகி, அவரை மன்னிக்கவே முடியாது


2009ல் சிங்களனோடு சேர்ந்து புலிகளை கொன்ற ஐரோப்பிய யூனியன் இப்பொழுது மட்டும் உங்களுக்கு தியாகியாக தெரிவது எப்படி?


அது..இ'து.. இல்லை இல்லை ஐரோப்பா வாழ்க, கலைஞர் ஒழிக‌..


அழிந்துவிட்ட இயக்கத்திற்கு அந்த தடை இருந்தால் என்ன? இல்லாவிட்டால்தான் என்ன?ஈழப்போர் தொடங்குமா?


போய்யா , போர் யாருக்கு வேண்டும்? இனி வசூல் செய்ய தடை இருக்காது அது போதாதா, யுத்தம் தொடங்கும் என‌ நாலு பொய்களை அள்ளிவிட்டால் அள்ளிவிடலாம், வெற்றி வெற்றி மாபெரும் வெற்றி



Thursday, July 13, 2017

அப்பாபிள்ளை அமிர்தலிங்கம்



Image may contain: 1 person, close-upஇலங்கை தமிழர்களில் அவர்தான் மிக முக்கிய தலைவராக இருந்தார். ஈழத்துகாந்தி சாமுவேல் செல்வநாயகத்திற்கு பின் அவரைத்தான் ஈழதமிழர்களின் தலைவராக உலகம் கருதிற்று


பன்மொழி ஆற்றல், பெரும் ஜனநாயகவாதி, எல்லா நாட்டு மக்களாலும் மதிக்கபட்டவர் என அவருக்கு பெரும் மதிப்பு இருந்தது, இலங்கை பாராளுமன்றத்தின் எதிர்கட்சி தலைவராக இருந்தவர்


அப்பாபிள்ளை அமிர்தலிங்கம்


செல்வாவிற்கு பின் அவர்தான் ஈழபிரச்சினையினை முன்னெடுத்து சென்றார், கொழும்பு கலவரத்தை தொடர்ந்து ஈழதமிழர் மேல் உலகெல்லாம் ஒரு அனுதாபம் ஏற்பட அவர்தான் காரணம்


தமிழகத்திற்கு அவர் ஆதரவு தேடி வந்தார். அவரை வரவேற்பதில் எம்ஜிஆருக்கும், கலைஞருக்கும் போட்டியே இருந்தது, நாவலரே வருக என போஸ்டர் ஓட்டி அசத்தினார் கலைஞர்


நான் தான் முதல்வர், என் காரில்தான் நீங்கள் வரவேண்டும் என விமான நிலையத்திலிருந்து தன் காரில் அழைத்து சென்று கருணாநிதியினை பார்த்து கிக்கிக்க்க்கி என சிரித்தபடி சென்றார் எம்ஜிஆர்


சுருக்கமாக சொன்னால் ஈழபிரச்சினையினை தமிழகத்தில் கொண்டு வந்து பெரிய செய்தி ஆக்கியதே அமிர்தலிங்கம் தான்


இந்திராகாந்தியிடம் அவர்தான் முதலில் ஈழநிலையினை எடுத்துரைத்தார், அமிர்தலிங்கமும் தந்தை செல்வாவின் மகனுமான சந்திரஹாசனுமே இந்தியாவில் ஈழபோராளிகள் பயிற்சிபெற அனுமதிபெற்றனர்


Image may contain: 4 people, people standingஅமிர்தலிங்கத்தி அமைதியான அணுகுமுறையே இந்திரா ஈழபோராட்டத்தில் இறங்க வழிகோலியது, அமிர்தலிங்கம் இல்லையென்றால் ஈழபோராட்டம் இந்த அளவு வளர்ந்திருக்காது, புலிகள் என்றோ காலியாயிருப்பர்


1984 குடியரசு தின விழாவின் பொழுது அமிர்தலிங்கத்தை அழைத்து தன் அருகே சிறப்பு விருந்தினராக அமரவைத்தார் இந்திரா


அது வெளிநாட்டு அதிபருக்கே கொடுக்கபடும் கவுரவம், ஆனால் ஒரு நாட்டின் எதிர்கட்சி தலைவருக்கு எப்படி கொடுத்தார் என பெரும் பரபரப்பு எழும்பியது


அமைதியாக ஜெயவர்த்தனேவினை பார்த்து புன்னகைத்தார் இந்திரா, ஆம் அதன் அர்த்தம் ஜெயவர்த்தேனேவிற்கு மட்டும் புரிந்தது


ஈழம் அமைந்தால் அதற்கு அமிர்தலிங்கம்தான் அதிபர் என்ற பொருள் யாருக்கு புரியாது? அலறினார் ஜெயவர்த்தனே, சிங்கள இனமே அலறிற்று


இந்திரா காலத்திற்கு பின் ராஜிவ் வந்ததும், ராஜிவ் ஜெயவர்த்தனே ஒப்பந்தம் வந்தபொழுதும் அமிர்தலிங்கம் இந்தியா பக்கமே இருந்தார்


இந்தியா மூலமே இலங்கை தமிழர்கள் நன்மை பெறமுடியும் என்பதும், இன்னொரு நாடு ஒருகாலும் ஈழதமிருக்காய் வராது, இந்தியா மட்டுமே ஏதாவது நன்மை பயக்கும் நிலையில் இருக்கின்றது, நாளை சிக்கல் என்றாலும் இந்தியாதான் கொடுக்கும் என்பது அவரின் நம்பிக்கை


அது மகா உண்மையும் கூட‌


இது பிரேமதாசாவிற்கு பெரும் எரிச்சலை கொடுத்தது, புலிகளும் பிரேமதாசாவும் இந்திய படைகளுக்கு எதிராக கூட்டாஞ்சோறு பொங்கி ஒருவருக்கொருவர் ஊட்டிவிட்ட காலங்கள் என்பதான் கொலபொறுப்பினை புலிகள் எடுத்தனர்


அவர்களுக்கென்ன தமிழர் தரப்பு பிரதிநிதி என எவர் வந்தாலும் கொல்ல வேண்டும்.


அமிர்தலிங்கம் புலிகளின் கடும் போக்கினை விமர்சித்தார், போராளிகள் என்பவர்கள் செய்யும் அட்டகாசங்கள் நல்ல விளைவுகளை ஏற்படுத்தாது என்றார், தமிழர்களை கொல்லும் அந்த கொடூரம் ஒரு காலமும் நன்மை பயக்காது என பொதுவாக சொல்லிகொண்டிருந்தார்


அவர்தான் ஈழதமிழர்களின் பிரதிநிதி என உலகம் பார்த்து கொண்டிருந்தபொழுதே புலிகளுக்கு சகிக்கவில்லை. அவர்களை பொறுத்தவரை தாங்கள் மட்டுமே ஈழ தமிழரின் பிரதிநிதி என சொல்லிகொண்டார்கள்


போட்டிக்கு வந்தவர்களை எல்லாம் தொலைத்த புலிகள், அமிர்தலிங்கத்தை விடுவார்களா?


நாங்கள் துப்பாக்கி தூக்கி போரிடும் பொழுது, அமிர்தலிங்கம் இலங்கை அரசோடு பேசுகின்றார் அதனால் அவர் துரோகி என அறிவித்தார்கள்


(ஆனால் இதே புலிகள் பின்பு பிரேமதாசாவோடு கொஞ்சியது வரலாறு,அவர்கள் செய்தால் ராஜ தந்திரம் மற்றவர் செய்தால் கொடூரம்)


புலிகளின் வாயில் ஒருவனை துரோகி என சொல்லிவிட்டால் அவன் சாகபோகின்றான் என பொருள்


பிரபாகரன் பற்றி தன் கருத்தை இப்படி பண்பட்ட மொழியில் சொன்னார் அமிர்தலிங்கம்


தம்பி பிரபாகரன் தமிழனித்திற்காக சிறுவயதில் இருந்தே போராடுவது வரவேற்கதக்கது, ஆனால் எதனை செய்யவேண்டும், எதனை செய்யகூடாது எனும் அறிவு அவரிடம் இல்லை, பக்குவம் இல்லை, முதிர்ச்சி இல்லை.


இவர் இப்படியே செய்துகொண்டிருந்தால் அது பெரும் அழிவில் முடியும், அவர் பின்னால் இளைஞர்கள் செல்வது நல்ல அறிகுறி அல்ல..."


துரோகி என புலிகள் குமுறிகொண்டிருந்தபொழுது, இந்த வார்த்தைகள் புலிகளை வெறியூட்டின‌


ஒரு பெரும் தலைவனே, தமிழர் தலைவனே இப்படி சொல்லிவிட்டபின் மக்கள் எப்படி பிரபாகரனை நம்புவர், விடுவார்களா?


3 புலிகளை அமிர்தலிங்கத்துடன் பேசவேண்டும் என அனுப்பினர், அவர்களும் சில நாட்கள் சென்று பேசினர், அப்பொழுதெல்லாம் ஆயுதம் இல்லை


அமிர்தலிங்கம் பெரும் பாதுகாப்பில் இருந்தவர், சிங்கள அரசு அவருக்கு பலத்த பாதுகாப்பு வழங்கியிருந்தது, காரணம் உலகம் மதிக்கும் ஒரு தமிழ் தலைவனுக்கு போராட்டம் நடக்கும் காலத்தில் ஏதும் நடந்து தொலைத்துவிட்டால் அது இலங்கை அரசுக்கு பெரும் சிக்கல்"


இஸ்ரேலியர் அராபத்தை விட்டு வைத்தார்கள் அல்லவா? அப்படி


இந்நிலையில் அந்த கொலைகார புலிகள் ஆயுதத்தோடு அவரை பார்க்க வந்தார்கள், வாசலில் நின்ற சிங்களன் தடுக்கின்றான், அனுமதிகவில்லை பெரும் சத்தம். அதனை கேட்டு மாடியிலிருந்து சொல்கின்றார் அமிர்தலிங்கம்


"அவர்கள் எனக்கு தெரிந்தவர்கள் அனுப்புங்கள், ஆயுதம் பற்றி கவலை இல்லை" என அனுமதி கொடுக்கின்றார் அமிர்தலிங்கம்


எப்படி நம்பியிருக்கின்றார் பார்த்தீர்களா?


அதன் பின் அமிர்தலிங்கத்துடன் பேசுகின்றார்கள் கொலைகாரர்கள், அவரோடு இன்னும் இருவர் இருந்தார்கள், யோகேஸ்வரன் போன்றவர்கள், அவர்களும் சிறந்த சிந்தனையாளர்கள்


அமிர்தலிங்கத்தின் மனைவி மங்கையற்கரசி எல்லோருக்கும் தேநீர் கொண்டு வருகின்றார், கொலைகார புலிகள் குடிக்கின்றார்கள்


கொஞ்சமும் மனிதாபிமானம் உள்ளவர்கள் அதனை குடிப்பார்ளா? அல்லது அந்த மங்கல மகராசி கையால் தேநீர் குடித்தபின் அவள் தாலிபறிக்க நினைப்பார்களா?


புலிகளுக்கு ஏது நன்றி? ஏது மனது? எல்லாம் கொடூரம்


தேநீரை அருந்திவிட்டு அமிர்தலிங்கத்தை சுட்டார்கள், அதன் பின் அருகிலிருந்தவரை சுட்டுவிட்டார்கள். சத்தம் கேட்டு அமர்தலிங்க மனைவியும் அந்த சிங்கள காவல்காரனும் ஓடிவந்தான்


அவனை கண்டதும் அமிர்தலிங்கம் மனைவியினை சுடும் திட்டத்தை கைவிட்டு கொலைகாரர்கள் ஓடினர், ஆம் அவர்கள் அமிர்தலிங்கதினை சுட்டுவிட்டு தனிஈழம் பெற அவசரமாக ஓடினர்.


ஆனால் அந்த சிங்களன் பின்னால் விரட்டி சென்று சுட்டடான்


கொலையாளிகளை அவன் விரட்டி சுட்டு கொன்றான், ஒரு தமிழ் தலைவனை கொன்ற தமிழ்புலிகளை சுட்டு கொன்றவன் ஒரு விசுவாசமான சிங்களன்


அது மட்டுமல்ல அமிர்தலிங்கத்தின் பாதுகாவலரானா அந்த சிங்களன் அமிர்தலிங்கம் மனைவியிடம் அழுதான், என்னை மன்னியுங்கள், நான் அவர்களை தடுத்திருக்கவேண்டும், இவர் அழைத்தார் என்றுதான் விட்டுவிட்டேன் என் கடமையினை நான் சரியாக செய்யவில்லை


எப்படிபட்ட மிக உயர்ந்த சிங்களன் அவன்? , பிரபாகரனுக்கு பின்னும் இலங்கை அமைதியாக இருக்கின்றது என்றால் அது இதுபோன்ற நல்ல சிங்களர்களால்தான்


அமிர்தலிங்கத்தின் கொலை பெரும் பிரச்சினையாயிற்று, ஈழமக்கள் அழுதனர், வழக்கம் போல மறுத்தனர் புலிகள், பின் அமைதியாயினர்


புலிகள் கொலையினை மூன்று வகையாக எதிர்கொள்வர், ஒன்று கொன்றது நாங்கள்தான் என்பர், இரண்டாது ரகம் முணுமுணுப்பு, மூன்றாம் ரகம் மர்ம அமைதி


ராஜிவ் கொலை என்பது மூன்றாம் ரகம், அமிர்தலிங்கம் கொலை இரண்டாம் ரகம்


புலிதளபதி மாத்தையா அமிர்தலிங்கத்திற்கு கொடுக்கபட்டது மரண தண்டனை என பகிரங்கமாக சொன்னார்,


பிராபகரன் உத்தரவுபடி அந்த கொலையினை செய்தது நிச்சயம் மாத்தையாதான், பின் மாத்தையாவும் பிரபாகரனுக்கு துரோகி ஆனார், கொஞ்சநாளில் பிரபாகரனால் கொல்லபட்டார்.


பின் ராஜிவும் கொல்லபட்டு , புலிகளின் நன்றி கடனுக்காக பிரேமதாசாவும் கொல்லபட்டார்


எப்படிபட்ட நன்றிமிக்கவர் புலிகள், காப்பாற்றி சோறு போட்டவனை எல்லாம் மண்டையில் போட்டவர்கள்


வடமராட்சியில் தன்னை காத்த ராஜிவினை கொன்றார்கள், பின் அமைதிபடையிடமிருந்து காத்த பிரேமதாசாவினை கொன்றார்கள்


அப்படியே தாங்கள் பெரும் போராளிகளாக இடமளித்து பயிற்சிபெற‌ இந்தியாவிடம் வாதாடி வழிகொடுத்த அமிர்தலிங்கத்தையும் கொன்றார்கள்


புலிகள் செய்த மிக மிக தவறான அரசியல் கொலைகளில் அமிர்தலிங்கம் கொலையும் ஒன்று


இதே ஜூலை 13ம் நாளில்தான் அவர் புலிகளால் கொல்லபட்டார், இப்படி எல்லாம் சிரித்துகொண்டே கொலை செய்வது ஒருவகையான மனநோய், பிரபாகரனுக்கும் அவர் கும்பலுக்கும் அதுதான் இருந்திருக்கலாம்


இதன் பின் என்னவெல்லாமோ நடந்து புலிகள் 2009ல் பெரும் மக்கள் அழிவோடு அழிந்தும் போயினர்


இன்று யாருமில்லா அனாதைகளாக நிற்கின்றது ஈழ தமிழினம், மறுபடி அமிர்தலிங்கம் போன்றவர்கள் பிறந்து வந்து வழிகாட்டட்டும்


பிரபாகரன்கள் இனி பிறக்காமலே போகட்டும்


திருப்பெரும்புதூரில் காவலர் அனுசுயா தற்கொலை குண்டுதாரி அனுசுயாவினை தடுக்க, அவரை தடுக்காதீர்கள் மாலையிட அனுப்புங்கள் என சொல்லி தனுவினை தன் அருகே அழைத்தார் ராஜிவ்


அந்த சதிகாரியும் வந்து குனிந்து வணங்கி கொன்றாள்


இவர்கள் எனக்கு தெரிந்தவர்கள், அவர்களிடம் ஆயுதம் இருப்பது பிரச்சினையில்லை உள்ளே அனுப்புங்கள் என சொல்லி கொலையாளிகளை தன்னை கொல்ல அனுமதி கொடுத்தார் அமிர்தலிங்கம்


அவர்களும் வந்து வணங்கி தேநீர் குடித்துவிட்டே கொன்றனர்


புலிகளின் பயிற்சி இப்படித்தான் நம்ப வைத்து கழுத்தறுப்பதாக இருக்கின்றது


இதனைத்தான் பெரும் வீரகாவியமாக இந்த சீமானும் வைக்கோவும் பழநெடுமாறன் எனும் இந்த தேசத்தின் சாபங்கள் எல்லாம் சொல்லிகொண்டிருக்கின்றன‌


அமிர்தலிங்கத்தின் மரணம் ராஜிவிற்கு பெரும் எச்சரிக்கை, பத்மநாபாவின் கொலை அடுத்த எச்சரிக்கை இதனை எல்லாம் கொஞ்சமும் சிந்திக்காமல்தான் ராஜிவ் இறந்தார்


தன் உயிர்கொடுத்து இந்தியாவினையும், ஈழ மக்களையும் எச்சரித்த அந்த உன்னத தலைவன் அமிர்தலிங்கத்திற்கு ஆழ்ந்த அஞ்சலிகள்.














 


 

Monday, July 10, 2017

இலங்கையில் சில அதிசய இடங்கள் உண்டு




Image may contain: mountain, sky, grass, plant, outdoor and nature


வால்மிகி ராமயணத்தில் ராவணன் ஆண்ட இடம்பற்றி மிக சரியாக சொல்லவில்லை, ஆனால் கம்பன் அதனை தென்னிலங்கை என வாதிட்டு பாடலும் இயற்றினார்


இலங்கையில் சில அதிசய இடங்கள் உண்டு, மலை மீது இருக்கும் மிக அதிசய கோட்டை இன்னும் சில இடங்கள் புராதனமாவனை


அது ராவணனின் அடையாளம் என்றே சொல்கின்றார்கள், சிங்களரோ ராவணன் சிங்கள அரசன் என சிரிக்காமல் சொல்வார்கள்





இலங்கை இந்துக்களுக்கும் சிங்களவருக்கும் ராவணன் பெரும் அடையாள சின்னம், ஒரு மன்னன் வாழ்வாங்கு வாழ்ந்திருகின்றான் அது ராவணன் என்பது அவர்கள் நம்பிக்கை

மலை மீது இருக்கும் அந்த கோட்டை மகா அதிசயமானது, எப்படி கட்டினார்கள் என இன்றும் ஆயிரம் கேள்விகள் எழும், உண்மையில் உலக அதிசயம் எனும் பட்டியலுக்கு மிக பொருத்தமான கோட்டை அது,

Image may contain: one or more people and outdoor

நிச்சயம் அது அதிசயமே, அக்காலத்தில் கட்ட வாய்ப்பே இல்லாத கோட்டை அது

இதுகாலம் யாரும் ஏறமுடியா மலைமீது இருக்கும் கோட்டையே ராவணன் மாளிகை என நம்பிக்கொண்டிருந்தவர்களுக்கு ஒரு தரையடி மாளிகை கிடைத்திருக்கின்றதாம்

அப்படி ஒரு குகை மாளிகை அன்றே அமைந்திருக்க வாய்ப்பு உண்டு, ஆச்சரியமெல்லாம் இல்லை

அங்கு செல்ல ஒரு குகை வழியாக நுழையவேண்டுமாம், அப்படி ஒரு புத்த துறவி சில அடையாளங்களை கண்டு அங்கு மாளிகை இருக்க வாய்ப்பு உண்டு என சொல்ல்விட்டார்,

படம் அவர் எடுக்கவில்லை, கொஞ்ச தூரம் பார்த்துவிட்டு வந்துவிட்டார், மிக அபாயகரமான பகுதி என்கின்றன செய்திகள்

பெரும் அளவில் தக்க ஆராய்ச்சி செய்தால் அதன் முழு உண்மை வெளிவரலாம்

இந்தியாவில் ராமர் விவகாரம் பெரிதாகும் காலங்களில் இலங்கையில் ராவணன் விவகாரமும் பெரிதாவது ஆச்சரியமே

அது இருக்கட்டும்

இப்பொழுது அந்த புத்த துறவி குகைக்குள் கொஞ்ச தூரம் சென்றுவிட்டு பயந்து வந்துவிட்டார் என்ன செய்யலாம்??

ராவணன் தமிழ் மன்னன், அவனுக்கு வீரவணக்கம் என சொல்லும் கும்பல்கள் இங்கு உண்டு, அவர்களில் சிலரை பிடித்து உங்கள் முப்பாட்டன் மாளிகையினை கண்டுபிடித்து வாருங்கள் என குகைக்குள் அனுப்பலாம்

"முப்பாட்டனான ராவணன் மாளிகையில் தமிழின விரோதிகளான புத்த பிக்குகள் நுழைவதா? விடலாமா சொந்தங்களே" இந்த தமிழ் இன உணர்வாளர்களின் என அவர்களும் செல்வார்கள்

மொத்தமாக எல்லோரையும் அனுப்பினால் தமிழகத்திற்கு நல்லது














 


 

Wednesday, June 21, 2017

கோலி இனியாவது திருந்தட்டும்..

சீனியர்களை ஒதுக்குகின்றார், ஒரு மாதிரி தலைக்கணமாக நடந்துகொள்கின்றார் என்பது கோலி மீது கொஞ்ச காலமாக உள்ள சர்ச்சை


கோலியும் அதனை உறுதிபடுத்துவது போலவே நடந்துகொண்டார்


அது இன்று கும்ப்ளே ராஜினாமா வரை வந்து நிற்கின்றது, கோலி காரணம் என்கின்றார்கள், விஷயம் உறுதிபடுத்தபட்டு விட்டது




கிரிக்கெட்டில் அல்ல, எல்லா விஷயத்திலும் சாதித்தவர்கள் எல்லாம் ஆணவத்தை விட்டொழித்தவர்கள். ஆணவமிக்கவர்கள் அழிந்த சரித்திரம் உண்டே தவிர சாதித்த சரித்திரமில்லை


கடந்த சில வருடங்களாகவே உலகைவிட்டு மறைமுகமாக விலக்கி வைக்கபட்ட அணி பாகிஸ்தான், சொல்லிகொள்ளும்படியான வீரர்கள் இல்லாமல்தான் அது விளையாட வந்தது


ஆனால் தோல்வியில் துவண்டுவிடாமல் அற்புதமாக ஆடியது, ரமலான் நோன்பு நேரத்திலும் அவர்களின் ஆட்டம் அணல் பறந்தது, அவர்கள் வாழ்த்துகுரிய ஆட்டக்காரர்கள்,


அவர்கள் இருக்கட்டும், கோலி இனியாவது திருந்தட்டும்..



Monday, June 5, 2017

உண்மைகள் உறங்குவதுமில்லை, பொன்.சிவகுமாரன் மறைவதுமில்லை.








Image may contain: one or more people, people standing and snow








அது 1974ம் ஆண்டு, தமிழர்களை சிங்கள அரசுகள் ஒடுக்க ஆரம்பித்த நேரம். வஞ்சகமாக இந்திய மலையக வம்சாவழிதமிழரில் பெரும்பான்மையினரை இந்தியாவிற்கு அனுப்பிவிட்டு (அப்பொழுது ஒரு ஈழதமிழரும் அதனை கண்டிக்கவில்லை,எதிர்க்கவில்லை என்பதுவேறுகதை ) ஈழதமிழரை குறிவைத்து காய்களை நகர்த்தியது.


இறுதியாக ஒரு திட்டத்தினை கொண்டுவந்தது. அது சிறிமாவோ பண்டாரநாயக, ஒரு யானைகுட்டியை கொடுத்து கச்சதீவை வாங்கியர் (அதாவது கச்சதீவு இலங்கைக்கு கொடுக்கபட்டபொழுது இந்திராவுக்கு இவர் ஒரு யானைகுட்டி பரிசளித்தார்) என சிங்களர்களால் கொண்டாடபட்ட சிறீமாவோ ஒரு கடும் கட்டுப்பாடு


அதாவது இடஒதுக்கீடு எனும் முறையை ஒரு சட்டம் மூலம் கொண்டுவந்தார் அதன்பெயர் தரப்படுத்துதல்.
சுருக்கமாக சொல்லவேண்டுமென்றால் நமது மாநிலத்தில் 95% மதிப்பெண்பெற்ற உயர்சாதி மாணவனுக்கு கிடைக்கும் உயர்படிப்பும் அரசு வேலையும் 65% எடுத்த தாழ்த்தபட்டமாணவனுக்கு கிடைக்கின்றதல்வா?


அதேதான் அங்கே தரபடுத்துதல், உயர்வகுப்பு மாணவன் நிலையில் ஈழமாணவர்களும், தாழ்த்தபட்ட வகுப்பில் சிங்கள மாணவர்களும் வையுங்கள் அதேதான், புரிந்திருக்கும்.


நமது நாடு வித்தியாசமான அரசியல், உயர்வகுப்பினர் யாரும் கலவரம் செய்யவில்லை, ஆனால் ஈழமக்கள் கல்வியை உயர்வாய் கருதுபவர்கள் பொங்கிவிட்டார்கள்.
சொல்லபோனால் ஈழபிரச்சினை பெரும் திருப்பமாக இங்குதான் மாறிற்று, மாணவர்கள் போராட இறங்க, அரசியல்வாதிகள் தீ மூட்டினார்கள்.


தங்களுக்கு பிடிக்காத தமிழ்தலைவர்களை துரோகிகள் என காட்டிகொடுத்தார்கள், இன்றுவரை துரோகிகள் வரிசை நீண்டுகொண்டே இருக்கின்றது. கலைஞர் கூட துரோகியாகிவிட்டார்


மாணவர்கள் கூட்டமைப்பு ஆயுதம் தாங்க தீர்மானித்தது, சிவகுமாரனும் அதில் ஒருவர்.


அப்படி புறப்பட்ட மாணவர்களில் ஒருவர்தான் சிவகுமாரன், முதல் போராளி நிச்சயம் அவர்தான்.


நமது மதிப்பெண்கள் குறைக்கபட்டுவிட்டன, இனி எதிர்காலமில்லை என அரசியல்வாதிகள் முழக்கமிடும் கூட்டத்தில் எல்லாம் அவன் முன்னணியில் இருந்தான்,


சிங்களனோடு பேசும் தமிழர்கள் துரோகிகள் என்பதை குறித்துகொண்டான், அவர்கள் கைகாட்டிய திசையில் ஆல்பர்ட்துரையப்பா இருந்தார், அவர் அப்போது யாழ்பாண மேயர்.


அவரை குறிவைத்தார் சிவகுமாரன், அவரது வாகனத்திற்கு குண்டுவைத்தார், ஆனால் உயிர்தப்பினார் துரையப்பா,(பின்னாளில் அவர் பிரபாகரனால் கொல்லபட்டார்)


ஆனால் ஈழத்தில் தமீழத்திற்காய் முதலில் வெடித்தகுண்டு இதுதான்.


அதன்பின் காவல்துறையின் தீவிரசோதனையில் அகப்பட்டு அனுராதாபுரம் சிறையில் அடைக்கபட்டார், ஒரு பைசா குறையாமல் சிவகுமாரனின் தாய் தாலியை விற்று கொடுத்த பணத்தில் ஒரு தமிழ் வக்கீல், கவனிக்கவும் தாலிவிற்ற பணத்தில் தமிழ்வக்கீல் வாதாடி ஜாமீனில் வெளிவந்தார் சிவகுமாரன்.


அப்பொழுதுதான் 1974 யாழ்பாண உலகதமிழ்மாநாடு நடைபெற்றது, சிங்கள அரசு ஒரு தமிழ்பேச்சாளருக்கு தடைவிதித்திருந்தது, சீமான் போன்ற ஒரு மாதிரியான பேச்சாளர் அவர், அவரை மேடையில் ஏற்ற போலிஸ் தடை விதித்திருந்தது..


ஆனால் அவர் மேடையேறினார், அங்கேயே கைதுசெய்ய நினைத்த போலீசுக்கும் மக்களுக்கும் கைகலப்பு ஏற்பட்டு கலவரமாக மாறியது.


பெரும் கலவரம் அங்கு துப்பாக்கிசூட்டில் முடிந்தது, 11 பேர் பலியாகி இருந்தார்கள். துரதிருஷ்டவசமாக‌ மின்கம்பி அறுந்து விழுந்து செத்தவர்களும் இதில் உண்டு, சிங்களம் வசமாக மாட்டி கொண்டது


துப்பாக்கி சூட்டிற்கு உத்தரவிட்டவர் அமைச்சர் சந்திரசேகர. மாநாட்டு பந்தலிலே அமைச்சரை கொல்வேன் என சூளுரைத்தவர் சிவகுமாரன்.


அமைச்சர் மீதான எல்லா கொலைமுயற்சியும் தோல்வியில் முடிந்தது, அமைச்சருக்குஆயுள் கெட்டி.


ஆனாலும் இளைஞர்களை திரட்டி போராடிகொண்டிருந்தார் சிவகுமாரன், சிங்கள அரசின் உளவாளியாக யாழ்பாணத்தில் இருந்த நடராஜா என்பவரை கொல்லும் திட்டத்தில் இருந்த சிவகுமாரனை, நடராஜனை உலவவிட்டு சுற்றிவளைத்தது போலீஸ்.


ஒருமுறை சிக்கி அனுபவித்த சித்திரவதைகளை எண்ணிய சிவகுமாரன், இம்முறை சயனைடு கடித்து உயிர்விட்டார்.


ஈழ இளைஞர்களிடையே ஒரு எழுச்சி ஏற்பட்டது, ஏன் ஈழவரலாற்றிலே முதல்முறையாக பெண்களும் சுடுகாடுவரை சென்று அஞ்சலி செலுத்தினர்.


ஈழத்தின் முதல் விடுதலை குண்டும் அவன் வீசியது, முதல் தற்கொலை போராளியும் அவனே.


அதன்பின் நடந்ததெல்லாம் உலகம் அறிந்தவை.


ஆனால் தமிழக தமிழர் தற்போது அறிபவை ஒன்றே ஒன்றுதான். ஈழம் என்றால் பிரபாகரன், போராட்டம் என்றால் பிரபாகரன்.


இடஒதுக்கீடு எனும் தரபடுத்ததுதல் சட்டமும், கல்வி இல்லை என்றால் வாழ்கை இல்லை எனும் பயமுறுத்தலும் அவனை போராளி ஆக்கிற்று.


இந்த சலசலப்பு இந்தியாவிலும் எதிரொலித்தது.


பெரும்பான்மை சமூகம் அடிமட்டத்திலும், சிறுபான்மை சமூகம் ஆளும் வர்க்கத்திலும் இருந்து வர்க்கபேதம் அதிகரிக்கும்பொழுது இட ஒதுக்கீடு தவிர்க்கமுடியாதது


இந்திய மாநிலங்களில் அது இல்லையா? என சிறீமாவோ கேட்ட கேள்விக்கு இந்தியா பதில்கூறமுடியவில்லை.


இடஒதுக்கீடு இல்லாமல் இந்தியாவில் எந்தமாநிலத்தில் ஆட்சிசெய்யமுடியும்? வாக்கு வங்கியின் ஆதாரமே அதுதானே. ஜனநாயக ஆட்சிதான் ஆனால் மெஜாரிட்டி வோட்டுவங்கி இருக்கும் இடம்தானே அரசியலுக்கு முக்கியம்.


ஆனால் திறமைக்குத்தான் முக்கியம் என சொல்லி, ? அதிக மதிப்பெண் எடுத்தவனுக்குத்தான் முன்னுரிமை என ஈழமாணவர் அமைப்புகள் கேட்டது எக்காலத்திலும் தவறாகாது.


மக்களாட்சியின் பெரும் முரண் இது


சிவகுமாரன் சாவினை தொடர்ந்து பெரும் கலவரம் வெடித்தது, மாணவர்கள்பால் ஈழமக்களிடையே அனுதாபம் தோன்றிற்று இனகலவரங்கள் வெடித்தன‌


ஒருநாடும் எட்டிபார்க்காத நிலையில்தான் இந்தியா கொஞ்சம் மனிதாபிமானத்தோடு களமிறங்கிற்று..


கொழும்பு கலவரத்தை காரணமாக கொண்டு களமிறங்கி ஆடிபார்த்தது, அது இந்திரா படுகொலையாலும், ஜெயவர்த்தனேவின் ராஜதந்திரத்தாலும், பிரேமதாசாவின் நரித்தனத்தினாலும் வெளியேறிற்று.


இன்று என்னவெல்லாமோ நடந்து முடிந்துவிட்டது.


ஆனால் ஈழபோராட்டத்தை முதலில் ஆயுதபோராட்டமாக துணிவுடன் தொடங்கியர் இந்த பொன்.சிவகுமாரன்.


அந்தோ பரிதாபம், ஈழத்திற்காக போராடுகின்றோம், களமாடுகின்றோம் என கத்தி கத்தி முஷ்டிமடக்கும் யாரும் அவனை நினைவுகூறவில்லை.


ஈகிகள் என ராஜிவ்கொலையாளிமுதல் சாஸ்திரிபவன் முன்னால் இறந்த முத்துக்குமார் வரை நினைவு கூறுபவர்கள், முதல் தற்கொலை போராளியான இவரை , குட்டிமணி குழுவை, உமா மகேஸ்வரனை, சபாரத்தினத்தை எல்லாம் அம்னீசியா நோயாளிகளாக மறந்துவிடுவதும் வேடிக்கை,


இப்படி எத்தனையோ பெரும் தியாகிகள், போராளிகள் அங்கு உண்டு, இவர்களை எல்லாம் மறைத்துவிட்டு நாங்கள் மட்டும் தான் என இறுதிவரை சொன்னவர்கள் புலிகள், இவர்களை போன்றவர்களுக்காக ஒரு தீக்குச்சி கூட புலிகள் கொளுத்தவில்லை


பிரபாகரனின் ஒருவிதமான சிறுபிள்ளைத்தனமான ஹீரோயிச கொள்கை அது, தான் மட்டும்தான், என் சொல் கேட்டவர்கள் மட்டும் போராளிகள், தமிழகத்தில் அது மட்டும்தான் தொடர்ந்தது


பிரபாகரனுக்காய் செத்தவர்கள்தான் மாவீரர்கள் போராளிகள் என்பது பிற்காலத்தில் உருவான பச்சை பொய், பொன் சிவகுமாரன் சாகும்பொழுது பிரகாரன் குட்டிமணி கும்பலில் துப்பாக்கி துடைக்கும் வேலையில்தான் இருந்தார்.


இவர்கள் எல்லாம் ஈழத்திற்காய் அல்லாமல் காதல்தோல்வியிலோ அல்லது கடன் தொல்லையிலா செத்தார்கள்?


இன்று ஜூன் 5 அந்த மாவீரனின் நினைவுநாள்.


இதை எல்லாம் நினைத்துபார்த்து அவனை நினைவுகூறகூட யாருமில்லை என்பதுதான் உண்மையான ஈழ சோகம்.


சுருக்கமாக சொன்னால் இன்றுதான் 1974ல் ஈழம் புதுபோராட்டத்துடன் களமிறங்க பெண்கள் கூட சிவகுமாரனின் சாம்பலில் சத்தியம் செய்துகொண்டிருந்தார்கள்,


ஆனால் பிரபாரனுக்காய் செத்தவர்கள்தான் "போராளிகள்",பிரபாகரனை ஆதரித்தவர்கள்தான் "இன‌உணர்வாளார்கள்", இப்படித்தான் ஈழவரலாறு இப்பொழுது தமிழகத்தில் திருத்தி எழுதபடுகின்றது.


உண்மையான ஈழஎழுச்சி இந்த நாளில்தான் தொடங்கியது . பின்பு பற்றி எரிந்தது, பல குழுக்கள் உருவாயின, பின்பு புலிகள் எல்லோரையும் அடக்கி தானும் அழிந்தனர், ஈழபோராட்டம் முற்றுபெற்றது


உண்மைகள் உறங்குவதுமில்லை, பொன்.சிவகுமாரன் மறைவதுமில்லை.




 

Friday, June 2, 2017

பிரபாகரன் வாழ்ந்தது ஒரு டான் வாழ்க்கையே

யாழ்பாணத்தில் பல்வேறு குற்ற சம்பவத்தி சம்பவத்துடன் தொடர்புடைய தமிழர்கள் மூன்று பேர் திருச்சியில் கைது செய்யபட்டு இலங்கை போலிசாரிடம் ஒப்படைக்கபட்டனர்.


படித்தவர் நிரம்பிய யாழ்பாணத்தில் 1960களில் சமூக விரோதிகள் பெருகினர், இந்தியாவும் இலங்கையும் தனிநாடான பின்பு கடத்தலும் பெருகிற்று, அப்படிபட்ட கடத்தல் கும்பலின் கைகளில் போராட்டம் சிக்கியதும் பெரும் தவறு.


பெரும் கொள்ளையர் எல்லாம் நாங்களும் போராளிகள் எங்களுக்கும் பணம் வேண்டும் என கொள்ளைகளில் சாதரணமாக இறங்கினார்கள், அந்த போராளிகளுக்குள் சண்டைவர பெரும் காரணமே இம்மாதிரி கொள்ளைகளே.




பத்மநபா தவிர எல்லா ஈழ போராளி இயக்கத்திற்கும் அப்படி ஒரு அடையாளம் இருந்தது, அங்கு அவர்களை கொள்ளையடித்த குற்றத்திற்காக போலீஸ் தேடினால் இங்கு தமிழகத்தில் அவர்கள் போராளிகளாக வலம் வந்தனர்.


பிரபாகரன் கூட அப்படியான கும்பல்களில் முதலில் இருந்தார், அவரின் இயல்பு அங்குதான் மாறியது, இறுதிவரை போராட்டத்தை ஒரு கடத்தல் கும்பலுக்கும் போலிசுக்கும் நடக்கும் போராட்டம் போலவே அவர் செய்துகொண்டிருந்தார்,


பிரபாகரன் வாழ்ந்தது ஒரு டான் வாழ்க்கையே


யுத்தம் முடிந்தபின்னும் இன்றும் யாழ்பாணம் பெரும் சமூக சிக்கலில் இருக்கின்றது, பெரும் வன்முறையும் வெட்டு குத்துக்களும் நாள்தோறும் அரங்கேறுகின்றன‌


அப்படி தேடபட்ட குற்றவாளிகள் சிலர் திருச்சியில் சிக்கியிருக்கின்றார்கள் என்றால் நிச்சயம் அவர்கள் விமானம் மூலம் வந்திருக்க முடியாது, அப்படியென்றால் கொழும்பிலே சிக்கியிருப்பார்கள்


பின் எப்படி வந்திருக்க வேண்டும்? வைகோ காட்டிய வழிதான்


ஆக இன்னும் விசா இன்றி, அங்கே கொள்ளையடித்துவிட்டு கடல்மார்க்கமாக இங்குவந்து அகதிகள் மத்தியில் ஒளியும் கும்பல் இருக்கத்தான் செய்கின்றது


இதனை போலிசார் சோதித்தால் அகதி முகாமில் போலிஸ் அராஜகம் என்பார்கள் இங்குள்ள தமிழ் உணர்வாளர்கள்.


1980களில் இப்படித்தான் இலங்கை வங்கிகளில் கொள்ளையிட்டு, சில கடைகளில் கொள்ளையும், சில கொலைகளையும் செய்த பிரபாகரனும் இந்தியாவில் இருந்தான், தமிழக போலிசாரிடமும் சிக்கினான்


அன்றே சிங்களம் அவனை ஒப்படைக்க சொன்னது, இந்திரா மறுத்தார். அவனை காப்பாற்றினார, அதன் பின் என்னவெல்லாமோ நடந்தது


இந்த மூன்றுபேரையும் போல அன்றே அவனை ஒப்படைத்திருந்தால் இத்தனை பெரிய அழிவு உண்டாயிருக்காது, இவர்களையாவது ஒப்படைத்தார்களே நல்லது


அங்கிள் சைமன், என்ன அநியாயம் இது? பச்சை தமிழன் பழனிச்சாமி ஆட்சியில் யாழ்பாண குற்றவாளிகள் சிங்களனிடம் ஒப்படைக்கபடுவதா?


பார்வதி அம்மாவினை திருப்பி அனுப்பிய கலைஞரை (கலைஞர் என்ன இந்திய குடிநுழைவு அதிகாரியா??) சாடிய நீங்கள், இந்த 3 பேரை பிடித்துகொடுத்த தமிழக அரசை கண்டிக்காதது ஏன்???


உங்கள் தொண்டை எங்கே? , உங்கள் புஜம் எங்கே? நீங்கள் திரட்டிய மான தமிழ்படை எங்கே? எங்கே?


அட முதலில் நீங்கள் எங்கே???



Wednesday, May 31, 2017

புத்தகம் இல்லா நூலகம், தெய்வம் இல்லா ஆலயம்




36 ஆண்டுகளுக்கு முன்பாக இந்நேரம் யாழ்பாணத்தில் அந்த நூலகம் எரிய ஆரம்பித்தது, தரப்படுத்துதல் எனும் இடஒதுக்கீட்டினை எதிர்த்து ஈழமாணவர்கள் போராடிகொண்டிருந்த நேரம் அது,





Image may contain: outdoor






தனிஈழம் மட்டுமே தீர்வு என சொல்லி அரசியல்வாதிகளும் தூண்டிவிட்ட காலம் அது, தேர்தல் கால பிரச்சார கூட்டத்தில் சில போலிசார் கொல்லபட அது கலவரமாக வெடித்தது.


வாசலில் சரஸ்வதி சிலையும் அழகான கட்டிடமாக பெரும் அறிவு பொக்கிஷமாக அது திகழ்ந்தது


ஆசியாவின் குறிப்பிடதக்க நூலகமாக விளங்கிய யாழ்பாண நூலகம், யாழ்பாண தமிழர்களின் அறிவின் அடையாளமாக விளங்கியதால், இந்த கல்விக்காக தானே போராடுகின்றீர்கள் என்றுதான் சிங்களன் அதனை கொளுத்தினான்,


அது அன்று யாழ்பாண தமிழரின் அறிவிற்கு சான்றாக விளங்கியது, ஆம் யாழ்பாண தமிழரின் அறிவிற்கு சான்றாக மட்டும்...


கிட்டதட்ட 1 லட்சம் நூல்களும், அரிய சுவடிகளும் சாம்பலாயின. அவற்றில் பல நூறு நூல்கள் இன்று உலகிலே இல்லை, இனி கிடைக்கவும் கிடைக்காத பொக்கிஷங்கள்.


ஆயிரகணக்கான மாணவர்கள் அதன் பின் போராட கிளம்பினர், இந்த சம்பவமும் அதன் பின் நடந்த கொழும்பு கலவரமே எல்லா போராளிகுழுக்களிலும் மக்கள் எழுச்சியுடன் இணைய வழிவகுத்தது.


Image may contain: outdoorஅதன் பின் அவர்களுக்குள் மோதியதும், புலிகள் ஏதேச்சதிகாரமாக தான் மட்டும் போராட்டத்தை கையிலெடுத்ததும் பின் மொத்தமாக போராட்டத்தை அழித்தது இன்னொருபக்கம்.


19866ல் இருந்து 1995 வரை யாழ்பாணத்தை கையில் வைத்திருந்த புலிகள் இந்த நூலகத்திற்கு செய்ததென்ன என்றால் ஒன்றுமே இல்லை, புலிகள் அப்படித்தான்.


1995ல் புலிகளை யாழ்பாணத்திலிருந்து விரட்டிய சந்திரிகா , அந்நாளைய தவறுக்கு பிராயசித்தமாக பின் 2001ல் அந்த நூலகத்தை அமைத்தார். 1985 முதல் 1995 வரை அந்த நூலகம் சிதலமடைந்து புத்தகம் இல்லாமல் புலிகள் கட்டுபாட்டில்தான் இருந்தது, சீரமைக்கும் ஆசை எல்லாம் புலிகளுக்கு இல்லை..


புத்தகம் இல்லா நூலகம், தெய்வம் இல்லா ஆலயம்


புலிகளுக்கு நூலகம் எல்லாம் பிடிக்காது, யாழ்பாண கல்லூரியினையே ஆயுத சாலையாக வைத்திருந்தவர்கள் அவர்கள்.


இயேசு, காந்தி, லிங்கன், மார்ட்டில் லுத்தர் கிங் போன்றோரின் படுகொலை வரிசையில் வரலாறு கண்ட பெரும் கொடுமைதான் இந்நூலக எரிப்பு.


உலகில் எந்த நாடும், இம்மாதிரியான சகிக்க முடியாத கொடுமைகளை, இம்மாதிரியான அட்டூழியங்களை கண்டிக்கவில்லை, யாரும் இலங்கையினை சீண்ட கூட இல்லை,


நூலகத்தையே எரிக்கும் காட்டுமிராண்டி தேசம் என சிங்களனை தனிமை படுத்தித்தான் இந்தியா ஈழத்தில் நுழைய முடிந்தது


இந்தியா ஈழ மக்களுக்காக‌ களம் இறங்கியது, அவர்கள் வாழ்வில் அமைதி ஏற்பட முடிந்த அளவு போராடி பார்த்தது, தன் 1500 வீரர்களை இழந்தும் பார்த்தது.


ஆனால் விதி இந்தியாவினை வலுகட்டாயமாக புலி வடிவில் வெளியே தள்ளிற்று


அதன் பின் நடந்ததவை எல்லாம் பெரும் அழிவுகள் மட்டுமே, அதில் இறுதியாக நடந்ததுதான் முள்ளிவாய்க்கால்,நிச்சயம் அதன் மூலகாரணம் இந்தியா அல்ல‌


வரலாற்றில் நிகழ்ந்த பெரும் அழிவுகள், கொலைகள், படுகொலைகள், தீரா மன உளைச்சல் தரும் கொடூரங்களில் இந்த அறிவு செல்வமான யாழ்பாண நூலகம் எரிந்த சம்பவமும் ஒன்று


காந்தி, லிங்கன், மார்ட்டில் லுத்தர் கிங் போன்றோரின் படுகொலை வரிசையில் வரலாறு கண்ட பெரும் கொடுமைதான் இந்நூலக எரிப்பு.


அறிவார்த்த தமிழக தமிழர்கள் ஈழ தமிழருக்காக அழவேண்டிய காரியங்களில் முதல் சொட்டு கண்ணீர் நிச்சயம் இந்த நூலகத்திற்காகத்தான் இருக்க வேண்டும்


ஈழ தமிழனின் பெருமை அந்த பிரபாகரன் அல்ல, அவரொரு சைத்தான், மாறாக அழிந்துவிட்ட அந்த நூல்களும் அந்த நூலகமுமே..


அதனை எல்லாம் இங்கு எந்த உணர்வாளனும் பேசமாட்டான், அந்த நூலகத்திற்கு ஆயிரம் புத்தகம் வாங்கிகொடுத்து இன்னும் பொலிவுற செய்வோம் என்றேல்லாம் யாருக்கும் சிந்தனை வராது.


பில்லியன் டாலர் சொத்துமதிப்புள்ள புலிகளுக்கே அந்த எண்ணம் இல்லை, ஐரோப்பிய வாழ் ஈழதமிழனுக்கும் இல்லை, இருந்திருந்தால் தமிழகத்தில் ஏன் சில்லறைகள் உருவாக போகின்றன?, யாழ்பாண நூலகம் இன்னும் சிறந்திருக்கும்


அவர்களுக்கு வரும் சிந்தனை எல்லாம் பிரபாகரன், முள்ளிவாய்க்கால், கலைஞர், இந்தியா என எல்லாமே அரசியல், அந்த நாசகார சிந்தனை


படிப்பிற்கும் அறிவிற்கும் பெரும் பெயர் பெற்றிருந்த யாழ்பாணம், இந்த நூலக எரிப்பிற்கு பின் நாசமாயிற்று, இன்று அதன் நிலை மகா பின்னடைவு


யாழ்பாணா பொற்காலங்களில் அந்த நூலகம் செயலாற்றிய காலம் முக்கியமானது, இனியாவது அந்த நூலகமும் யாழ்பாணமும் தன் பழம் பொற்காலத்தை மீட்டெடுக்கட்டும்


இந்த நூலக எரிப்பு தினத்திற்காக யார் நினைவு கூர்ந்து அழுகின்றார்களோ இல்லையோ, அந்த அரிய புத்தகங்களுக்காக நாம் அழலாம்


புத்தகங்களின் அருமை தெரிந்த யாரும் அழலாம்...





Tuesday, May 30, 2017

இலங்கையில் கடும் மழை, பெரும் நிலச்சரிவு

இலங்கையில் கடும் மழை, பெரும் நிலச்சரிவு : மீட்புபணிகளில் பல நாடுகள் களமிறங்கியிருக்கின்றன‌

இலங்கை நல்ல மழைபொழியும் நாடுதான், ஆனால் சிக்கல் மழையில் மட்டும் அல்ல என்கின்றார்கள்

ஏகபட்ட ஆக்கிரமிப்புகளும், முறையில்லாமல் கட்டபட்ட கட்டிடங்களும், ஆபத்தான இடங்களில் அனுமதியின்றி கட்டபட்ட கட்டங்களே பெரும் ஆபத்தினை கொண்டு வந்திருகின்றது என்கின்றன செய்திகள்


பொதுவாக வெள்ளையன் ஆண்ட நாடுகளில் எல்லாம் நல்ல சட்டதிட்டங்களும் வழிகாட்டலும் உண்டு, மலேயா சிங்கப்பூர் போன்றவை இன்றும் அதனை பின்பற்றி வளர்ந்துகொண்டே இருக்கின்றன‌

நமக்கும் அருமையான சட்டங்களையும், மக்கள் இடைஞ்சலில்லாமல் வாழும் சட்ட திட்டங்களையும் தான் வெள்ளையன் கொடுத்திருந்தான், பஸ் நிலையம் ரயில் நிலையம் வரை அக்காலத்தில் இந்தியரும் சட்டத்திற்குட்பட்டுதான் நடந்திருக்கின்றார்கள்

நம் காந்தி சட்டத்தை மீறுவோம் என அழைத்தார் அல்லவா? அப்பொழுது சட்டத்தை மீறி ஆட்சிக்கு தொல்லை கொடுக்க தொடங்கியவர்கள் நாம், இன்னும் செய்து கொண்டே இருக்கின்றோம்

சுதந்திரம் பெற்றதெல்லாம் நமக்கு தெரியவே இல்லை, சட்டத்தை மீற காந்தி சொன்னார், செய்கின்றோம், இனி அவர் வந்து சொல்லும் வரை மீறுவோம்

இலங்கைக்கும் நல்வாழ்வு வெள்ளையன் கொடுத்திருந்தான், ஆனால் சிங்கள புத்தவாதமும் போதாகுறைக்கு பெரும் போரும் அந்நாட்டை சிக்கலில் தள்ளின‌

ஹாங்காங் அளவிற்கு வளர்ந்திருக்க வேண்டிய இலங்கை தீவு நாசமானது, லஞ்சமும் ஊழலும் அதிகரித்து எல்லாமே சட்டத்திற்கு புறம்பாய் நடந்து, இன்று கட்டங்கள் இடிந்து சாவும் அதிகரித்திருத்திருக்கின்றது

லஞ்சமும் ஊழலும் அதிகரிக்கும் நாட்டில் கண்ட இடங்களில் கட்டடம் கட்டபடும், என்றாவது ஒரு நாள் அது பெரும் அழிவிற்கு காரணமாயிருக்கும் என்பதை இலங்கை மழை வெள்ளம் உலகிற்கு சொல்லிகொண்டே இருக்கின்றது

ஆண் தெருவில் விழுந்தால் கைதூக்கிவிட ஆளிருக்காது, ஆனால் சொப்பன சுந்தரிக்கு சுளுக்கு என்றால் கூட ஆண் வர்க்கமே பொங்கும் அல்லவா?

அப்படி இலங்கை பல நாடுகளுக்கு சொப்பன சுந்தரி, அதன் அமைவிடம் அப்படி

அதனால் உலகநாடுகள் ஆளாளுக்கு ஓடிப்போய் விழுந்து விழுந்து உதவி கொண்டிருக்கின்றார்கள்..

Friday, May 26, 2017

திரிகோணமலையின் ஒரு பக்கத்தில் அமெரிக்க முகாம் அமையலாம் : செய்தி



No automatic alt text available.


திரிகோணமலையின் ஒரு பக்கத்தில் அமெரிக்க முகாம் அமையலாம் : செய்தி


1980ல் அமெரிக்கா இதற்குத்தான் முயன்றது, தந்திரமாக ஆடிய இந்திரா அதனை முறியடித்தார், அதன் பின் புலிகள் இந்திய எதிரிகள் என்றாலும் இந்தியா விட்டுகொண்டே இருந்த காரணம் அதுதான், சிங்ளனை மிரட்ட ஒரு சக்தி தேவை


இது பிரபாகரனுக்கு மிக நன்றாக தெரியும், அந்த தைரியத்தில்தான் ராஜிவ் கொலையினை ஒரு பொருட்டாக எடுக்காமல் இருந்தார் பிரபாகரன்


2009ல் விஷயம் எல்லை மீறியது, புலிகளை ஒழித்து தீருவோம் என உலகம் மொத்தமாய் களமிரங்கியபொழுது இந்தியாவால் தடுக்கமுடியவில்லை, முடியவும் முடியாது


அதனால் மறுபடியும் 1987 ஒப்பந்தத்தை காட்டி உட்புகுந்துவிடலாமா என யோசித்தது, ஆனால் புலிகள் விடவில்லை


இந்திய ராணுவத்தை அனுப்பும் முடிவினை இந்திய தளபதிகளே நிராகரித்தனர், சென்று காப்பாற்றினால் அமைதிபடை பட்டபாடுதான், புலிகள் ஆயுதம் ஒப்படைத்து சரணடையட்டும் மறுநொடி நாம் இறங்கலாம்


புலிகள் ஒப்புகொள்ளவே இல்லை, எல்லாம் முடிந்தது


இப்பொழுதும் திரிகோணமலை துறைமுகத்தில் இந்திய பிடி உண்டு, அது யுத்த முகமாக மாற்றபடாது என்ற இலங்கை சட்டமிருப்பதால் அது எண்ணெய் குடோனாக உள்ளது


அமெரிக்காவிற்காக அது யுத்தமுகாம் என திருத்தபடுமானால் நிச்சயம் இந்தியாவால் சும்மா இருக்கமுடியாது, இந்தியா என்ன திட்டம் வைத்திருக்கின்றதோ தெரியவில்லை


ராஜிவினை இழ்ந்தும் திரிகோணமலையில் காங்கிரஸ் அரசு தன் கட்டுப்பாட்டில்தான் வைத்திருந்தது, ஆனால் பாஜக அரசு சறுக்குகின்றது


இனி அமெரிக்க படைகள் இலங்கையில் கால்பதிக்கலாம், நாளை அமெரிக்கா இந்தியா மோதும் சூழல் வந்தால், அதாவது இந்தியா பாகிஸ்தான் மோதலிலோ அல்லது இன்னொரு நாட்டுடன் இந்தியா மோதும் சூழல் வந்தாலோ நாங்களும் இறங்குகின்றோம் என இறங்கினால்


சாகபோவது தமிழகம் தான், இப்போதைக்கு சீனாவினை விரட்டுகின்றோம் என அமெரிக்காவுடன் இந்தியா கரம்கோர்த்தாலும் அவர்கள் நம்பகூடியவர்கள் அல்ல‌


இனி நெல்லைமாவட்ட விஜயநாராயணத்தை மேம்படுத்தும் அவசியம் இந்தியாவிற்கு வரலாம், சேது சமுத்திர திட்டத்தை மீளாய்வு செய்யும் நிலைவராலாம்


அமெரிக்கா கால்பதித்துவிட்டால் இனிவரும் காலங்கள் பரபரப்பானவை, அது கால்பதிக்கும் அறிகுறி தெரிகின்றது


அதெல்லாம் இருக்கட்டும்


இந்திய படை ஆக்கிரமிப்பு படை, கற்பழிப்பதற்கு என்றே ஜட்டியோடு ஈழம் சென்றபடை என சொன்னவன் முகத்தை எல்லாம் தேடிகொண்டிருக்கின்றேன்


இதோ அமெரிக்க முகாம் இலங்கையில் வருகின்றதே? அது என்ன ராவணன் கோயிலை தேடிய திருபயணமா? புனித யாத்திரையா?


இலங்கையில் கால்பதித்த இந்தியாவினை புலிகளை வைத்து விரட்டியதும் , பின் புலிகளை அழித்துவிட்டு ஒன்றும் தெரியா கன்னிபோல கால் வைப்பதும் யார் விளையாட்டு என தெரிகின்றதா?? முள்ளிவாய்க்கால் கொடுமை ஏன் நடந்தது என புரிகின்றதா?


புரிந்தாலும் சொல்லமாட்டீர்கள்


அந்த அரைகிறுக்கனும், உலகத்தை தன் அடிதொண்டையில் வைத்திருப்பவனுமான சீமான் என்பவன், திருமுருகன் காந்தி, திருமா, வேல்முருகன் சொல்வதை நம்பியதாக நடியுங்கள்


உண்மைகள் சாகாது, பொய்கள் நிலைக்காது


ராஜிவின் தியாகமும், புலிகளின் சாயமும் வெளியே வந்துகொண்டிருக்கின்றது


அது இருக்கடும், இந்தியாவிலிருந்து வெறும் 50கிமீ தூரத்தில் உலக வல்லரசு முகாம் அமைக்கின்றது, மோடி என்ன செய்ய போகின்றார்? மோடி செய்யமாட்டார்


ஆனால் புட்டீன் செய்யலாம், ஐ.என்.எஸ் கட்டபொம்மன் இனி விஸ்வரூபமெடுக்கலாம்


காங்கிரசின் அயல்நாட்டு திட்டங்கள் எப்படி எல்லாம் இருந்திருக்கின்றன, புலிகள் எனும் அந்நிய சக்தி எப்படி சிதைத்திருக்கின்றது என்பதை கண்ணார காண்பீர்கள், இதோ கண்டுகொண்டிருக்கின்றீர்கள்


அரேபியருக்கு பெட்ரோல் போல ஈழமக்களுக்கு அந்த துறைமுகம் துருப்பு சீட்டு, அதனை வைத்து சிங்களிடம் பல உரிமைகளை வல்லரசு துணையோடு பெற்று அமைதியாக வாழும் வாய்ப்பு இருந்தது, அது ஒன்றுதான் தீர்வு , சுயநல உலக யதார்த்தம் அது


அப்படி இந்தியா சில உரிமைகளை பெற்றுகொடுக்க முயன்றது, அடிபட்டு ஒதுங்கியது, இதோ அமெரிக்கா நுழைகின்றது? என்ன உரிமை ஈழ தமிழருக்கு பெற்று கொடுத்தது? போர்குற்றம் கூட குப்பைக்கு சென்றாயிற்று


புலிகள் ஒருகாலமும் சிங்களனை வெல்லமுடியாது, வென்றாலும் அது தனிநாடு ஆகமுடியாது, ஏதாவது ஒருநாடு வந்து மீட்டு சிங்களனிடம் கொடுத்தே தீரும்


இந்நிலையில்தான் இந்தியா ஓரளவு ஈழதமிழருக்கு நலம் கொடுக்கும் திட்டங்களை சொன்னது, கேட்கவேயில்ல்லை, தனிநாடு கிழிப்போம் என்றார்கள், எங்கே அமெரிக்க படைகளை விரடட்டும் பார்க்கலாம்..


இனியும் எவனாவது அமைதிபடை ஏன் சென்றது என கேட்கமுடியுமா? முடிந்தால் அமெரிக்க தூதரகத்தில் சென்று ஈழ் திரிகோணமலையில் அந்நிய வெள்ளையனே உனக்கு என்ன வேலை என கேட்டுவிட்டு வாருங்கள்.













 


 

Tuesday, May 23, 2017

என்னா கதை விடுகின்றார் ராஜ்கிரண்???




Image may contain: one or more people


மகாத்மா காந்தியின் ஆட்சியினை 10 வருடமாக ஈழத்தில் நடத்தினார் பிரபாகரன், அதனால் உலக நாடுகள் அழித்தன : ராஜ்கிரண்


நல்ல மனிதர் என நினைத்தால் உளறி கொட்டுகின்றார்


மிஸ்டர் ராஜ்கிரண், உங்களுக்கு ஒரே ஒரு கேள்வி, அந்த பொன்னான ஆட்சிக்கு ஏன் உலகெல்லாம் இருந்த ஈழதமிழர் திரும்பவில்லை





தமிழகத்தின் படுபயங்கரமான அகதிகள் முகாமில், ஆஸ்திரேலிய முகாமில் இருந்தெல்லாம் அகதிகள் ஏன் அந்த பொன்னான பூமிக்கு செல்லவில்லை?

எல்லா அகதிகளும் நாடு திரும்புங்கள் பொற்கால ஆட்சி நாங்கள் தருகின்றோம் என புலிகள் ஏன் அழைக்கவில்லை?

அந்த பொன்னான பூமியினை விட்டா அகதிகளாக ஓடினார்கள்?

சரி அந்த பொன்னான பூமியில் நீங்கள் என் குடியுரிமை வாங்கவில்லை?

நீங்கள் செல்லும்பொழுது வன்னிபகுதி மட்டுமே புலிகளிடம் இருந்தது, யாழ்பாண தமிழர்கள் ஏன் அந்த பொன்னான பூமியுடன் இணைய துடிக்கவில்லை?

ஏன் அய்யா இப்படி கதை விட்டு அழுகின்றீர்? இதோ சிங்கப்பூரில் , புருனேயில், துபாயில் பொற்கால ஆட்சி நடக்கின்றது உடனே உலக நாடுகள் எல்லாம் புகுந்து அழித்துவிட்டதா?

அங்கு மின்சாரம் கூட இல்லாமல், பள்ளிகள் இல்லாமல் சகலமும் துப்பாக்கி முனையில் என அம்மக்கள் பட்ட பாடு கொஞ்சமா?

கிட்டதட்ட 70 ஆண்டு ஈழத்தை பின்னோக்கி கொண்டு சென்றனர் புலிகள், அது இன்றைய உலகத்தோடு ஒட்ட இன்னும் 40 ஆண்டு ஆகலாம்,

என்ன இருக்கின்றது அங்கு? ஒரு கல்வி நிறுவணம்? ஒரு தொழிற்சாலை? ஒரு சுற்றுலா தளம்? ஒரு துறைமுகம்? ஏதாவது ஒன்று புலிகளின் இடத்தில் வளர்ந்ததா?

ஒரு வளர்ச்சியினை காட்ட முடியுமா?

ஏதோ நியூயார்க் அளவிற்கு புலிகள் ஈழத்தை வளர்த்தது போலவும், அதனை பின்லேடன் போல உலகநாடுகள் அழித்தது போலவும் அன்னார் பேசுகின்றார்

என்னா கதை விடுகின்றார் ராஜ்கிரண்???

ராஜ்கிரன் சினிமாவில் மட்டும் எலும்பு கடிப்பவர் அல்ல என்பது மட்டும் புரிகின்றது













 


 

Monday, May 22, 2017

அமைதிபடை அட்டகாசம் தெரியாமல் பேசுகிறாய் என்கின்றனர் சிலர்



Image may contain: one or more people, people standing, tree, outdoor and nature


அமைதிபடை அட்டகாசம் தெரியாமல் பேசுகிறாய் என்கின்றனர் சிலர்.


அமைதிபடைக்கு முன்பே ஜேவிபி கிளர்ச்சியும் அதனை அடக்க இந்திய ராணுவம் கொழும்பிற்கு சென்றதும் இவர்களுக்கு தெரியுமோ தெரியாதோ? தெரியாவிட்டால் விட்டுவிடலாம். அதாவது அன்றிலிருதே இன்னொரு மூன்றாம் நாடு இலங்கையில் தலையிடுவதை இந்தியா அனுமதிப்பதில்லை.


ஈழ போராட்டத்தின் ஆரம்பத்திலிருந்தே பிரபாகரன் இந்தியாவினை ஒதுக்கிதான் வைத்தார், போராளிகளுக்கு பயிற்சிகள் தொடங்கிய காலத்திலும் வேண்டா வெறுப்பாக இறுதியில் வந்து சம்பிரதாயத்திற்குதான் கலந்து கொண்டனர் புலிகள். அவ்வப்போது இந்தியாவுடன் மோதும் சூழ்நிலை வரலாம் என்று எதிர்பார்த்தேதான் இருந்தார்.


அமைதிபடை சென்று இறங்கியதும் எல்லா குழுக்களும் ஆயுதம் ஒப்படைக்க, புலிகளும் சிலவற்றினை ஒப்படைத்து சுதுமலை மேடையில் "இந்தியாவினை நம்பி ஆயுதங்களை ஒப்படைக்கின்றோம்" என்றவுடன் கூட்டம் மகிழ்ச்சியில் ஆர்பரித்தது,


ஆனால் பிரபாகரனின் முகம் சிலநொடி சட்டென இருண்டது, மக்கள் இந்தியாவினை நேசிப்பதை அவரால் தாங்கவே முடியவில்லை, அவர் அப்படித்தான். கடைசிவரை ஒரு ஹீரோ போல தான் மட்டும் மக்கள் மனதில் வாழவேண்டும் என்ற எண்ணம் அவரிடம் இருந்தது


அமைதிபடை காலம் அமைதியாகத்தான் தொடங்கியது, மக்களும் இந்திய படையினை வரவேற்றனர், டீ கொடுத்து உபசரிக்கும் அளவிற்கு நல்லுறவுகள் வளர்ந்தன, புலிகளை மக்கள் மறக்க தொடங்கினர்


அமைதிபடை இருந்தால் களத்தில் நாம் மக்களால் மறக்கபடுவோம் என்பதை புலிகளால் தாங்கமுடியவில்லை, அமைதிபடைக்கும் பொதுமக்களுக்கும் சண்டைமூட்டும் காரியத்தில் இறங்கினார்


இந்திய வீரர்களுக்கு எல்லாமே அங்கு புதிது, சிரித்தால் சிரிப்பார்கள், ஆனால் அடித்தால்..அவர்களுக்கு யார் புலி? யார் பொதுமக்கள் என எப்படி தெரியும்? அங்குதான் சிக்கல் வெடித்தது


17 புலிகளை சிங்களன் கைது செய்யும்போது அவர்களிடம் சயனைடு இல்லை, ஆனால் புலிகள் சென்று பார்த்துவிட்டு வந்தபின் சயனைடு வந்தது, கொஞ்சநேரத்தில் அவர்கள் சாக பிரச்சினை வெடித்தது, பழி இந்தியா மேல்.


அதன்பின் புலிகளின் வரிவசூல் ஒப்பந்தத்தால் பாதிப்படைய, தீலிபனின் உண்ணாவிரதம் தொடங்கியது, அவனை காப்பாற்ற புலிகள் ஒரு முயற்சியும் எடுக்கவில்லை, அவன் செத்ததும் அவன் உடலோடு மக்கள் முன் சென்று ஒரு உணர்ச்சி எழுச்சி உண்டாக்கினர்.


அதன்பின் அது போராக வெடித்தது, உணர்ச்சியூட்டி ஈழமக்களை இந்தியபடையினை எதிர்க்க வைப்பது அவர்களுக்கு எளிதாயிற்று


இந்தியபடை சுற்றுலா செல்வது போல் சென்றிருந்தது, அந்த இடங்களின் வரைபடம் கூட அவர்களிடம் இல்லை, புலிகள் தங்களுடன் மோதுவார்கள் என கனவிலும் நினைக்கவில்லை, புரியாத புது இடத்தில் அது திணறியது. புலிகளின் தாக்குதல் அகோரமாக இருந்தது, இந்திய படைக்கு புலி எது? மக்கள் எது என தெரியவில்லை. தடுமாறியது.


உதாரணம் பனை உச்சியிலிருந்து ராணுவத்தை சுடுவார்கள், ஒரு வீட்டின் உள்ளிருந்து சுட்டுவிட்டு ஓடுவார்கள், ராணுவம் உள் செல்லும், விளக்கிற்காக சுவிட்சை போட்டால் குண்டு வெடிக்கும் இப்படி ஒரு வித்தியாசமான களம் அது.


மக்கள் யார், புலிகள் யார் என இந்தியபடைக்கு தெரியாது, மருத்துவமனையில் மக்களோடு நோயாளியாக படுத்திருக்கும் புலி, தெருவில் செல்லும் ராணுவம் மீது சுட்டுவிட்டு படுத்துகொள்ளும், ராணுவம் என்ன செய்யும்? ஒரே ஒரு முறை திருப்பி தாக்கியதில் மருத்துவமனை அழிந்தது, அதனை பெரும் செய்தியாக்கினர் புலிகள்.


மாலை மக்களை ஒன்றாக அமரவைத்து சில பாதுகாப்பு விஷயங்களை சொல்வார்கள் இந்திய ராணுவத்தார், நடு கூட்டத்திலிருந்து ஒரு புலி சுடும், திரும்ப மொத்த மக்களை கொல்லவா முடியும்? ராணுவம் திணறும்.


திண்ணையில் வெற்றிலை இடிக்கும் பாட்டி ராணுவம் வீட்டை கடந்ததும், முந்தானையில் இருக்கும் ரிமோட்டை அமுக்குவார், வாகனம் சிதறும். பள்ளி மாணவிகள் உள்ளாடைகளில் தோட்டா முதலான ஆயுதம் கடத்தபடும், எப்படி சோதிக்க? சில மாணவிகள் செக்போஸ்டை கடக்கும்போது அசால்டாக புத்தக பையினை எறிவார்கள் அது வெடிக்கும், சோதனை மற்ற மாணவிகள் மீது நடக்கும், அதற்கும் இந்திய ராணுவம் கற்பழிக்கின்றது என செய்தி பரவும்.


ஒரு கட்டத்தில் தவறான தகவலை பரப்பவிட்டு 300 ராணுவத்தினரை மொத்தமாக கொன்று, அவர்கள் உடலை அம்மணமாக ஒப்படைத்தனர் புலிகள், சர்வதேச சட்டபடி அது ஒரு தேச அவமானம், இந்திய ராணுவ உச்சம் அவமானத்தால் தலைகுனிந்த நேரம் அது. அப்படி செய்திருக்க கூடாது.


எந்த நாடும் தன் நாட்டில் அந்நிய ராணுவம் இருக்க அனுமதிக்க்காது, உண்மையில் மோதி இருக்கவேண்டியது சிங்கள படை, ஆனால் தமிழ் மக்களும், இந்திய ராணுவமும் பாதுகாப்பில்லாமல் இருக்க மிக மகிழ்ச்சியாக இருந்தது சிங்கள இனம் மட்டுமே, புலிகளுக்கு ஆயுதம் கொடுத்து மகிழ்ந்தார் பிரேமதாச.


இதுதான் உலகின் 4ம் பெரும் ராணுவமான இந்திய ராணுவத்தை புலிகள் விரட்டிய வரலாறு, நேருக்கு நேர் எல்லாம் மோதவில்லை, இன்னொன்று இந்திய ராணுவம் அழிவுகளை குறித்து கவனமாக போராடிற்று, அப்படியும் பிரபாகரனை முடக்கிய சமயத்தில்தான் விபி சிங் படை மீட்டார்.


இதே தந்திரத்தை, அதாவது மக்களோடு மறைந்து தாக்கும் வித்தையினை 2009ல் சிங்களனிடம் காட்டிய புலிகள் மொத்தமாக வாங்கி கட்டி அழிந்தனர், யாரைபற்றியும் கவலைபடாத சிங்களம் மொத்தமாக அழித்தது.


பிரபாகரனின் உடல் கோவணத்துடன் கிடந்தது, அன்று 300 இந்திய ராணுவ வீரர் உடல்களை அம்மணமாக்கி கொடுத்த வினை, பின் அவருக்கே திரும்பியது. யுத்த களத்தில் ஒரு உச்சகட்ட அவமானம் அது. அதனால்தான் சிங்களன் அந்த படத்தினை திரும்ப திரும்ப காட்டினான்.


அந்த அமைதிபடையினை மட்டும் விரட்டியிருக்காவிட்டால், இன்று வடக்கு கிழக்கு இணைந்த ஈழ மாகாண முதல்வராக ஒரு தமிழன் இருப்பார், பின்புலத்தில் இந்தியா இருக்கும், இந்திய தளமும் அந்நாட்டில் தொடர்ந்து இருந்திருக்கும், ஈழ மக்கள் இவ்வளவு துன்பம் அடைந்திருக்கமாட்டார்கள், 25 வருட அழிவும், முள்ளிவாய்க்கால் கொடுமையும் நடந்திருக்காது.


Image may contain: one or more people and people standing

இந்திய ராணுவம் அன்று பின் வாங்க ஒரே காரணம் புலிகளின் பிரச்சார ஊடகங்களும், சிங்கள அரசு புலிகளுக்கு கொடுத்த மகா ஒத்துழைப்புமே, இன்று வரை அது அப்படியே நிலைத்துவிட்டது, அமைதிபடை அழித்தது, கற்பழித்தது. புலிகளின் ஊடகபலம் அப்படி. இதோ ராஜிவ் கொலை குற்றவாளி 5 புலிகள், 2 தமிழகத்தார் என்பதை 7 தமிழர்கள் என லாவகமாக மறைத்தார்கள் அல்லவா? அப்படியே தான்.


அமைதிபடை காலத்தில் 1500 இந்திய வீரர்கள் செத்தனர், பெரும்பாலும் சீக்கிய சகோதரர்கள், அவர்களுக்கு இலங்கையில் இன்றும் நினைவு மண்டபம் உண்டு, அவர்கள் பெயர் எல்லாம் பொறிக்கபட்டுள்ளன.


மக்களை முன்னிறுத்தி செய்யபடும் இடத்தில் எமது பெருமை மிக ராணுவம் தன் உயிரை இழக்குமே ஒழிய, அப்பாவிகளை கொல்லாது என்பதற்கு பெரும் அடையாளமாக அது உள்ளது, இலங்கை செல்லும் எல்லா இந்திய ராஜதந்திரிகளும் அதனை வணங்க தவறுவதே இல்லை.


நிச்சயம் கண்ணீரால் வணங்கவேண்டிய இடம் அது, இந்த புலிகளால் ஒரு நாளில் லட்சகணக்கான அப்பாவி மக்கள் சாவார்கள் என முன்னறிவித்த இடம் அது, அந்த , முள்ளிவாய்க்கால் காலத்தையும் அமைதிபடை காலத்தையும் ஒப்பிட்டு அமைதிபடை காலத்தில் இருந்த ஈழத்தவரிடம் கேட்டால் சொல்வார்கள்


சிங்கள ராணுவம் என்பது எவ்வளவு இரக்கமில்லாத அமைப்பு என்பது எங்களுக்கு பின்னாளில்தான் விளங்கிற்று, அப்படி பார்க்கும்பொழுது இந்திய ராணுவம் ஓரளவு பொறுமையுடந்தான் போராடிற்று, முடிந்த அளவு பொறுமை காத்தது, அழிவுகளையும் அவமானங்களையும் பொறுத்துகொண்டது.


மக்கள் அழிவுகளை பற்றி கவலை இன்றி அடித்து நொறுக்கி இருக்குமானால் புலிகளை வீழ்த்த அதற்கு 1 நாள் கூட ஆகியிருக்காது.


ஆயிரம் அர்த்தம் நிறைந்த வார்த்தை அது,


இந்திய அமைதிபடை திரும்பும்பொழுது எந்த எல்லையில் சிங்களபடை இருந்ததோ அதுவரை புலிகள் பிடித்தனர், அந்த எல்லை இந்தியா பெற்றுகொடுத்தது, அதுவரை புலிகள் கொரில்லாதான்


அந்த நன்றியும் புலிகளுக்கு இல்லை, பின் கொஞ்சம் கொஞ்சமாக பிடிக்க தொடங்கிய சிங்களம் 1995ல் யாழ்பாணம், 2007ல் கிழக்கு, 2009ல் வன்னி என மொத்தமாக பிடித்து புலிகளை அழித்தது


இந்திய அமைதிபடை உருவாக்கிய எல்லையில்தான் புலிகள் ஆட்டம் போட்டு அதிகாரம் செலுத்தினர், வரலாறு சொல்லும் உண்மை அதுதான்...


உதவ வந்த அந்த படையினை விரட்டிவிட்டு, மொத்த வன்னிமக்களையும் முள்ளிவாய்க்காலில் சிங்களனிடம் ஒப்படைத்துவிட்டு, இனபடுகொலை, வெள்ளைகொடி படுகொலை, மனித உரிமை மீறல் என்றெல்லாம் சொல்வதை 1500 வீரர்களையும் ஒரு தலைவனையும் இழந்து, பெரும் பழி சுமத்தபட்ட‌ இந்த பெரும் தேசம் எப்படி எடுத்துகொள்ளும்?


ஈழத்தில் இந்தியா இறங்கிய பின்னும் என்ன பிரச்சினை என்பதற்கு முன்பு ராஜிவ்காந்தி அருமையான பதில் சொன்னார்,


"ஒரு நபர் தன் ஆயுதத்தை கீழே வைத்தால் மறுநொடி கொல்லபடுவோம் என அஞ்சுகின்றார், ஆயுதம் இல்லாமல் அவரால் வாழமுடியாது. தன் ஆளுகைகுட்பட்ட நாட்டில், காலம் வரை ஆயுத துணையோடு வாழும் முடிவில் அவர் இருக்கின்றார், அதுதான் பெரும் பிரச்சினை" ,


பின்னாளைய வரலாறு அதனை உண்மை என காட்டிற்று.


இலங்கை செல்லும் எந்த இந்திய உச்சமும் அங்கு இந்திய அமைதிபடையினாய் சென்று புலிகளால் கொல்லபட்ட வீரர்களுக்கான நினைவிடத்தில் வீரவணக்கம் செலுத்த தவறுவதே இல்லை


மோடியும் அதனை செய்தார்


இது காங்கிரஸ் அல்லது பாஜக என எதுவும் ஆளும் நாடாக இருக்கட்டும், ஆனால் இந்தியா. அந்த இந்தியா ஈழத்தில் அந்த மக்களுக்காக போராடி 1500 ராணுவத்தாரை இழந்துதான் , ஒரு தலைவரை இழந்துதான் திரும்பியது.


மறுபடி 2009ல் அடிக்கின்றான் வாருங்கள் என்றால் இந்த பெருமை மிகு ராணுவம் எப்படி வரும்?


மானமும் வீரமும் ஈழத்தில் மட்டும்தான் உண்டா? இந்திய ராணுவத்தில், இந்தியாவிற்கு கிடையாதா?


அமைதிபடையினை அவமானமாக திருப்பி அனுப்பியதன் பலனே முள்ளிவாய்க்காலில் உலகிற்கு தெரிந்தது..














 


 

Sunday, May 21, 2017

அவனுகளும் அவனுக படித்த ஈழமும்.. போங்கடா டேய்




 Image may contain: 13 people, people sitting







ராஜிவ் அமைதிபடையினை அனுப்பினார் அதனால் புலிகளால் செத்தார் என சிலர் சொல்லிகொண்டிருக்கின்றான்

அட மானிட பதர்களா, தமிழனத்தினை இலங்கை மண்ணிலிருந்தே கருவருப்பேன் கன கங்கணம் கட்டி நின்ற தமிழின விரொதி ஜெயவர்த்தெனே என்றொருவன் இருந்தானே, கொழும்பில் 10 ஆயிரம் தமிழரை கொளுத்தினானே, யாழ்பாண நூலகத்தை கொழுத்தினானே அவனை என்ன செய்தார்கள் புலிகள்?

அமைதிபடையினை இலங்கைக்கு அழைத்த ஜெயவர்த்தனேக்கு என்ன நடந்தது? ஒன்றுமே இல்லை


ஈழசிக்கலின் பிதாமகன் ஜெயவர்த்தனே, அவன் தான் ராஜிவினை தந்திரமாக இழுத்துவிட்டு, புலிகளை சீண்டிவிட்டு ஆடியவன், அவனுக்கு புலிகளும் எதிரி , இந்தியாவும் எதிரி

ஆனால் இருவரையும் மோதவிட்டு இந்தியாவினை ஓரங்கட்டி , பின் புலிகளை எப்படி ஒழிக்கவேண்டும் என அஸ்திவாரம் எழுப்பியவனும் அவனே

புலிகள் வீரர்கள், மானமுள்ளவர்கள், பழிவாங்குவதில் சூரர்கள் என்றால் ஜெயவர்த்தனேவினை கொன்றிருக்கவேண்டும் செய்தார்களா?

அட அதன் பின்னாவது கோத்தபாய, மஹிந்த என தொட்டார்களா?

புலிகள் என்பது யார்? தனக்கு பிடிக்காதவர்களை அவர்கள் எதிர்பாரா நேரத்தில் நம்ப வைத்து அடித்து கொல்லும் கூட்டம்

ராஜிவ், பிரேமதாசாவினை அப்படித்தான் கொன்றார்கள், விழிப்பாக இருப்பவன் பக்கம் செல்ல கூட மாட்டார்கள்

அதுவும் ஜெயவர்த்தனே போல அமெரிக்க விசுவாசி என்றால் அவன் பக்கமே செல்லமாட்டார்கள், அதுதான் புலிகள்

ஒருசிலர் இன்று அமைதிபடை , பழி என என்னமோ சொல்லிகொண்டிருக்கின்றான்

அப்படி மானமுள்ள புலி ஏன் ஜெயவர்த்தனே பக்கம் செல்ல கூட இல்லை என பதில் கேள்வி கேட்டால் பதிலே இல்லை

அமைதிபடையினை வரசொல்லி கேட்டதே ஜெயவர்த்தனே தான், அவன் மகாராஜா போல வாழ்ந்து நிம்மதியாக செத்தான்

ஏன் புலிகள் ஜெயவர்த்தனேவினை கொல்லவில்லை என எவனாவது மலையாள மந்திரவாதியினை பிடித்து, பிரபாகரன் ஆவியினை துப்பாக்கி முனையில், சயனைடு குப்பியில் வரவழைத்து கேட்டால் தான் உண்மை தெரியும்..

இப்படியான கோணங்கள் எல்லாம் சீமானிய அடிப்பொடிகளிடம் இல்லை, அவர்களுக்கு தெரிந்தது எல்லாம் கலைஞர் ஒழிக...

சிதறி செத்திருக்க வேண்டியவன் ஜெயவர்த்தனேவே தவிர ராஜிவ் அல்ல, இதுதான் உண்மை

வரலாறு இப்படி இருக்க சிலர் இன்று குதித்துகொண்டிருக்கின்றான்

அவனுகளும் அவனுக படித்த ஈழமும்.. போங்கடா டேய்