Saturday, September 16, 2017

ஹெச். ராஜா தோல்வி மற்றும் பிக்பாஸ் கொடுத்திருக்கும் டாஸ்க்....

சட்டத்திற்கு புறம்பாக நடந்த சாரண - சாரணியர் தேர்தல் செல்லாது: எச்.ராஜா பேட்டி


நல்ல வேளையாக "நான் போட்டியே இடலங்கிறேன்" என சொல்லாமல் இருந்தாரே அது வரைக்கும் நலல்து.






மத்தியில் அசுரபலம், மாநில அரசின் முதுகிலும் அமர்ந்தாயிற்று ஆயினும் ஒரு சாதாரண இயக்க பதவியினை பிடிக்க முடியவில்லை


கேட்டால் இன்றிரவு தாமரை மலரும், நாளை மாலை மலரும் என அள்ளிவிட வேண்டியது.


இந்த கோஷ்டியினையும் ஏதோ பெரிய இயக்கமாக எண்ணி சிலர் பதில் சொல்லிகொண்டிருப்பதுதான் காமெடி. இன்னும் தமிழக பாஜகவிற்கு பதில் சொன்னால் அவனை போல பரிதாபத்திற்குரியவன் யாரும் இருக்க முடியாது.




கங்கை கரையில் மலரும் தாமரையினை இந்த கருப்பு மண்ணில் மலர சொன்னால் எப்படி மலரும்?


இந்த சாரணர் இயக்க தேர்தல் தெரிவிப்பது ஒன்றே ஒன்றுதான், இனி பழனிசாமி கோஷ்டிக்கு பாஜகவிடமிருந்து விடுதலை என்பதே இல்லை.






ரஜினி விரும்பினால் கட்சியில் இணைத்துக் கொள்வேன் : கமல்


இனி ரஜினி வீட்டில் கல்வீச்சு, ரஜினி கொடும்பாவி ஆற்றில் வீச்சு, நடு ரோட்டில் ரஜினிபடம் தார் ஊற்றி அவமானம் என செய்தால் அது சாட்சாத் ரஜினி ரசிகர்களின் வேலையாகவே இருக்கும்.


அது சரி மிஸ்டர் கமல், இங்கு பெரியார் கட்சி, அண்ணா வழி, திராவிடம் காக்கும் திமுக என பல கட்சிகள் இருக்க உங்களுக்கு ஏன் தனிகட்சி?




எந்த வோட்டை யாருக்காக பிரிக்கபோகின்றீர்கள் ? இதுதான் உங்களுக்கு பிக்பாஸ் கொடுத்திருக்கும் டாஸ்க்கா?









No comments:

Post a Comment