Monday, September 18, 2017

ஒரு தமிழனுக்கு சிங்களன் குரல் கொடுக்கின்றான்




Image may contain: 1 person, smilingஇலங்கையில் தமிழனுக்கு ஒரு அநீதி நடந்திருக்கின்றது, இங்கு தட்டிகேட்பார் யாருமில்லை


அதாவது பந்துவீச்சில் சாதனை படைத்த தமிழன் முத்தையா முரளீதரன். அவர் விளையாண்ட காலம் எல்லாம் அவர் பந்து எதிரிக்கு சிம்ம சொப்பணம். இலங்கைக்கு உலக‌ கோப்பை பெற்று தந்ததில் முரளிதரனின் பங்கு அதிகம்.


இன்றும் அதிக விக்கெட்டுகள் வீசிய சாதனை அவர் வசமே இருக்கின்றது. அவரை முடக்கி ஷேன் வார்ணேயினை உயர்த்திவிடும் எல்லா ஆஸ்திரேலிய திட்டங்களும் தவிடுபொடியாயின‌





இந்த நூற்றாண்டின் மிக சிறந்த கிரிக்கெட்டர்களில் முரளிதரனும் ஒருவர் என்பதால் இலங்கை அரசு ஒரு கிரிக்கெட் மைதானத்திற்கு அவர் பெயரை அமைத்து கவுரவபடுத்தியது.

இப்பொழுது அந்த பெயரை நீக்கிவிட்டார்கள், சர்ச்சை வெடிக்கின்றது, ஆனாலும் வடக்கில் பெரும் சத்தமில்லை, இங்கு அங்கிள் சைமன் சத்தமும் இல்லை

காரணம் வெரி சிம்பிள்

ஒடுக்கபட்ட, தாழ்த்தபட்ட இந்தியா வம்சாவழியான மலையக தமிழரின் வாரிசு முரளிதரன். அதனால்தான் சிங்களன் அவரை கொண்டாடியது போல யாழ்பாணத்தார் கொண்டாடியிருக்க மாட்டார்கள், கவனித்தால் இது புரியும்

முரளிதரன் தமிழர் அல்லவா என கேட்டால் "அவர் எஸ்டேட் தமிழன்" என ஒரு மாதிரி சொல்லிவிட்டு கடந்துவிடுவார்கள்

ஜாதி, வர்க்க பேதம் என ஏராளமான காரணங்கள்

இதுவே யாழ்பாண ஆறுமுக நாவலரின் பெயரினை இலங்கை அரசு நீக்கியிருந்தால் இந்நேரம் யாழ்பாணம் அலறும், இங்கே சீமானும், வேல் முருகனும் கொக்கரிப்பார்கள்.

ஆனால் பெரும் கிரிக்கெட் அடையாளமாயினும் முரளிதரன் தாழ்த்தபட்ட தமிழக வகையறா அல்லவா? அதனால் அங்கு சத்தமே இல்லை

அட அங்குதான் சத்தமில்லை, ஒரு தமிழனுக்கு இழைக்கபட்ட அநீதிக்கு இங்கு தமிழரை காக்க வந்த ஈழ கோஷ்டிகளிடமும் சத்தமில்லை

காரணம் ஏன் என்றால் இவர்கள் அப்படித்தான், தங்களுக்கு ஏதும் தேறா இடத்தில் பேசமாட்டார்கள், இன்னொன்று யாழ்பாணத்தார் சொன்னால்தான் இவர்கள் பேசுவார்கள்

முரளிதரனுக்காக யாழ்பாணத்தார் பேசமாட்டார்கள் என்பதால் இவர்களும் மகா அமைதி

ஆக ஒரு சரித்திர தமிழனுக்கு இழைக்கபடும் அநீதிக்கு இங்கு குரலெழுப்ப யாருமில்லை,

ஆச்சரியமாக தமிழர் எதிர்ப்பு கொள்கை கொண்ட புத்த குருக்கள் எதிர்க்கின்றனர், முரளிதரன் தேசிய அடையாளம் அவர் பெயரை மறுபடியும் சூட்ட வேண்டும் என கோரிக்கை வைக்கின்றனர்

ஆக ஒரு தமிழனுக்கு சிங்களன் குரல் கொடுக்கின்றான்.

முன்பொருமுறை கலைஞர் சொன்னார், "இப்போதுள்ள கிரிக்கெட் வீரர்களில் எனக்கு மிகவும் பிடித்தவர் தமிழன் முத்தையா முரளிதரன்".. ஆம் அப்பொழுது சர்வதேச போட்டிகளின் ஒரே தமிழராக அவர்தான் ஆடிகொண்டிருந்தார்

அவர் நலமாக இருந்திருந்தால் நிச்சயம் குரல் எழுப்பியிருப்பார்.

ஒருவேளை கலைஞர் அப்படி சொன்னதில்தான் இந்த சீமான் கோஷ்டி அமைதியாக இருக்குமோ?

ஆனாலும் பாருங்கள் சைமன், நீங்கள் இருக்கும் பொழுது ஒரு சிங்கள புத்த குரு முரளிதரனுக்கு ஆதரவாக வந்து நிற்பது உங்களுக்கு எவ்வளவு பெரும் அவமானம்???













 

No comments:

Post a Comment