Wednesday, September 13, 2017

தினதந்தி அதிபர் பெயர் பா.ஆதித்தன்




Image may contain: 1 person, glassesகலைஞர் வந்தேறி, அண்ணா வந்தேறி இன்னும் ஏராளமானோர் உள்ள வந்தேறி வரிசையில் தினதந்தி ஆதித்தனாரையும் சிலர் சேர்த்துவிட்டனர்


வழக்கமாக ஒருவருக்கு வந்தேறி பட்டம் கொடுப்பது சீமான் கோஷ்டிகள்தான், ஆனால் "தமிழர் தந்தை" என சிலர் சொல்லும் ஆதித்தனாரையே வந்தேறி என சொல்லி சீமானுக்கே கடுக்காய் கொடுக்க தொடங்கிவிட்டனர் சிலர்.


அதாவது ஆதித்தனார் குடும்பம் கேரளாவின் காயங்குளம் எனும் ஊரில் இருந்து இந்த தேரிகாட்டு காயாமொழிக்கு வந்தது என்பது அவர்கள் ஆராய்ச்சி முடிவாம்.





எப்படிபட்ட அபத்தம் இது? கொஞ்சமும் தேரிகாட்டு வரலாறு தெரிந்தால் இப்படி எல்லாம் பேசமுடியுமா?

ஆதித்தன் என்பது மலையாள பெயரா? அது சுத்தமான தமிழ்பெயர். வரலாற்றில் நடந்தது என்ன?

பாண்டிய நாட்டை பிடித்த நாயக்கர்கள் பின் சோழநாட்டையும் பிடித்தனர். அங்கிருந்து விரட்டபட்ட மக்களே தேரிகாட்டில் குடியேறினர், அதுவரை தேரிகாட்டு பக்கம் குடியிருப்புகள் இல்லை.

இட்டமொழி, காயாமொழி, படுக்கபத்து,உடன்குடி போன்ற தேரிகாட்டு குடியிருப்புக்கள் அக்காலத்தில்தான் உருவாயின‌

அந்த சோழநாட்டில் ஒரு குறிப்பிட்ட இனத்திற்கு ஆதித்தன் எனும் அடைமொழி இருந்தது, அந்த இனம் தேரிகாட்டுக்கு குடிபுகுந்தாலும் அந்த அடைமொழி நீடித்தது. அந்த வம்சத்தில் வந்தவர்தான், காயாமொழியில் பிறந்த சி.பா ஆதித்தன்.

இன்றும் தினதந்தி அதிபர் பெயர் பா.ஆதித்தன் என்பதே, ஆக அவர்கள் வந்தேறி எல்லாம் இல்லை. இங்குள்ள வம்சம் என்பதில் சந்தேகமே இல்லை.

இங்கு உள்ள வெட்டிபயல்களுக்கு என்ன ஆயிற்றென்றே தெரியவில்லை, பெரியார் வந்தேறி, பிராமணன் வந்தேறி, கலைஞர் வந்தேறி , இப்பொழுது ஆதித்தனாரும் வந்தேரியாம்

ஏம்பா, எல்லோரும் வந்தேறியென்றால் தமிழகத்தில் யாருமே இல்லாமலா இருந்தார்கள்?













 

No comments:

Post a Comment