Monday, September 18, 2017

காசுக்கு துணைபோகும் கூட்டம் எது?

" இந்து கோவில் ஆனால் நீ உள்ளே வர கூடாது, இது இந்துக்கள் கிணறு ஆனால் நீ நீர் எடுக்க கூடாது


நீனும் இந்து , நானும் இந்து ஆனால் ஒன்றாய் அமரவோ உண்ணவோ கூடாது.


நீ கீழாவனன் நான் மேலாவவன், என்னை கண்டால் 10 அடி தள்ளி நிற்கவேண்டும், மேலாடை அணிய கூடாது.




நீ படிக்க கூடாது, நீ சிந்திக்க கூடாது, விலங்குகளில் ஒன்றாய் நீ இருக்கவேண்டும்.


வாழலாம், ஆனால் நீ எப்படி வாழவேண்டும் என்பதை நானே சொல்வேன், முடிந்தால் இதற்கு கட்டுபட்டு வாழப்பார், இல்லை சாவு ,எங்காவது ஓடு


இப்படி இருந்த சமூகத்தில்தால் புத்தனும், மகாவீரனும் முதலில் தோன்றி விரட்டபட்டவர்களை அரவணைத்தார்கள்


ஆயினும் அவைகளால் நிற்க முடியவில்லை , மறுபடியும் அதே சூழல்


அப்பொழுதுதான் தங்களை மனிதர்கள் என ஒப்புகொண்ட ஒரே காரணத்திற்காக, அந்த ஒற்றை காரணத்திற்காகவே இஸ்லாமுக்கும், கிறிஸ்தவத்திற்கும் சிலர் சுயமரியாதை என தனியாகவும் கிளம்பினார்கள்


தங்கள் கண்ணீரை யார் தொட்டு துடைத்தார்களோ, தங்கள் காயங்களுக்கு யார் மருந்திட்டார்களோ அவர்களின் பின்னால் சென்றார்களேயன்றி காசுக்க்கும் பணத்திற்கும் யாரும் மாறவில்லை


ஏன் காசுக்கும் பணத்திற்கும் மாறியிருந்தால் இப்பொழுது நீங்கள் அதே காசுபணம் கொடுத்து மாற்றினால் என்ன?


அம்பானி தொழிலுக்கும், அதானி தொழிலுக்கும் ஆபத்து என ராமர்கோவிலையே காசுக்கு மறந்த கூட்டம்தான், கிறிஸ்தவனும் இஸ்லாமியனும் காசுக்கு மாறினான் என சொல்லிகொண்டிருகின்றது


கொத்தி விரட்டினால் ஓடத்தான் செய்வார்கள், கதற கதற அடித்தால் அவன் ஆறுதல் தேடி பறக்கத்தான் செய்வான்


தவறுகளை எல்லாம் சாதி பெயரால் இவர்கள் செய்வார்களாம், அந்த கொடுமை பொறுக்காமல் ஓடினால் அவன் காசுக்கு மாறியவனாம்


காசு கொடுக்கின்றான் என்றவுடன் மாட்டுகறி தின்னும் வெள்ளையனிடம் துரை, பிரபு, சுவாமி என குனிந்து நின்றது யார்?


தாழ்த்தபட்டவனிடம் காட்டிய தீண்டாமையினை எவனாது வெள்ளைக்காரனிடம் காட்டினானா?


காசுக்கு துணைபோகும் கூட்டம் எது?


இப்படி பேசினால் ஆயிரம் பேசலாம்.



No comments:

Post a Comment