Monday, September 11, 2017

நான் சேரிக்காரன், தலித் போராளி என முழங்கும் ரஞ்சித்தை

நான் சேரிக்காரன், தலித் போராளி என முழங்கும் ரஞ்சித்தை, "சேரி பிஹேவியர்" என பகிரங்கமாக சொன்ன காயத்திரி எதிர்ப்பில் காணவே இல்லை.


அதனை கண்டுகொள்ளாமல், அமீரின் மைக்கை பிடித்து "நான் சேரிக்காரன், நீ என்ன தமிழன்" என பொங்கினாராம்


அதாவது சினிமாவில் இருக்கும் உயர்சாதிகாரர்களை, அவர்கள் என்ன சொன்னாலும் அவர் எதிர்க்கவே மாட்டார் போலிருக்கின்றது,





அதனால் பிராமண சினிமாகாரி "சேரி பிஹேவியர்" என காரி துப்பினாலும் அன்னார் கண்டுகொள்ளமாட்டார். கண்டுகொண்டால் எப்படி சினிமாவில் நீடிப்பது?

மற்றபடி அவர் புரட்சியாளர், அடக்கி வைக்கபட்ட சமூகத்தின் கோப வடிவம் என்றெல்லாம் நீங்கள் நம்பவேண்டும்





தற்போதைய சாதி அமைப்பு குறித்து ரஜினி உங்களுக்குப் புரியவைப்பார்: பா. இரஞ்சித்துக்கு எஸ்.வி. சேகர் பதில்


ரஜினிக்கு அவரை சுற்றியிருக்கும் பிராமண சமூகம் புரியவைக்கும், அதனை ரஜினி ரஞ்சித்திற்கு புரிய வைப்பார்


ஆக காலா படம் இப்பொழுதே ரஜினிக்கு கால் தானாக‌ ஆடும் அளவிற்கு சென்றுகொண்டிருக்கின்றது.






மணிரத்னத்தின் அடுத்த படத்தில் சிம்பு


படு பயங்கர அவமானத்துடன் மணிரத்தினத்தின் சினிமா வாழ்க்கை முடியவேண்டும் என விதி இருந்தால் அதனை மாற்ற யாரால் முடியும்?


அண்ணன் ஜி.வி தற்கொலை செய்தார், மணிரத்னமும் ஏன் அந்த முடிவினை நோக்கி செல்லவேண்டும்?






 எச்.ராஜா சாரணிய இயக்க தலைவராவதா? மு.க ஸ்டாலின் கண்டனம்


அவரைதமிழக கவர்னராகவோ அல்லது முதல்வராகவோ ஆக்காமல் ஏதோ சாரணியர் சங்க தலைவராக்கினால் சந்தோஷபடாமல் இப்படியா கண்டிப்பது??







No comments:

Post a Comment