Tuesday, September 12, 2017

தமிழகத்தில் ஒவ்வோர் மாவட்டங்களிலும் நவோதயா பள்ளிகள்

தமிழகத்தில் ஒவ்வோர் மாவட்டங்களிலும் நவோதயா பள்ளிகள் தொடங்கலாம் என சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.


அது என்ன மாவட்டம் தோறும்? ஊர் தோறும் திறந்தால் என்ன?


எங்கிருந்தோ வந்த பிரிட்டன் காரனும், அரபுகாரனும் சில பள்ளிகளை தமிழகத்தில் நடத்துவதை காண முடிகின்றது. இந்த இந்திய பள்ளிகளை தமிழக முழுவதும் விரிவுபடுத்தினால் அது நல்ல விஷயமே.




தமிழுக்காய் போராட்டம் என சொல்லி ஆட்சிக்கு வந்த கட்சிகளின் பிரமுகர்கள் ஆங்கில பள்ளிகளை நடத்தி பணம் குவித்துகொண்டிருப்பது ஒன்றும் இங்கு ரகசியம் அல்ல‌


நவோதயா பள்ளிகளில் 8ம் வகுப்புவரை தாய்மொழி கல்வி என்பது கூடுதல் அம்சம், தமிழக திராவிட‌ அரசுகள் மிக கண்டிப்பாக செய்ய தவறியதை அப்பள்ளிகள் செய்வதால் வரவேற்கலாம்.


இதற்கும் எவனாவது எதிர்ப்பு தெரிவித்தான் என்றால் அவன் ஒன்று மாபெரும் மடையனாக இருக்கவேண்டும் அல்லது பெரும் பிழைப்புவாதியாக இருக்கவேண்டும்






வேற்றுமையில் ஒற்றுமையே நம் சிறப்பு. வட மாநிலங்களில், தமிழ்நாடு தினத்தை ஏன் கொண்டாடக் கூடாது," :பிரதமர் மோடி


சொல்லாதீர்கள், செய்து காட்டுங்கள் வாழ்த்த தயாராக இருக்கின்றோம்.






தமிழிசை நீட் தேர்வு எழுதி டாக்டர் பட்டம் பெறட்டும் 
: சீமான்


யாராவது இவரிடம் "நீ துப்பாக்கி தூக்கிவிட்டோ அல்லது சயனைடு கடித்துவிட்டோ, உடலில் குண்டை கட்டி வெடித்துவிட்டோ பிரபாகரனின் தம்பி என சொல்லிக்கொள்" என கேட்டால் அன்னார் என்ன செய்வார்?







 


சாரணியர் இயக்க தலைவராக ஹெச். ராஜாவை நியமிக்க என்ன தகுதி இருக்கிறது ? - சுப.உதயகுமார் கேள்வி

இங்கே பிரதமர், முதல்வர் எல்லாம் தகுதி பார்த்துதான் நியமிக்கபடுகின்றார்களா?

வார்டு கவுன்சிலர் முதல் குடியரசு தலைவர் வரை தகுதி பார்த்தா அமர்த்துகின்றோம்?


தகுதி பார்த்தா பழ.நெடுமாறனுடனும் சீமானுடன் எல்லாம் கை கோர்க்கின்றீர்கள் அய்யா?

இங்கு யார் தகுதி பார்க்கின்றார்கள்? அவனவன் லாபம் அவனவனுக்கு முக்கியம்.







"பெரிய மனிதர்களிடம் இருந்து கடனை வசூலிப்பது வங்கிகளுக்கு சவாலாக உள்ளது" : அருண் ஜேட்லி


எளிய மனிதர்கள் வங்கி கடன் வாங்குவதே பெரும் சவாலாக உள்ளது அமைச்சரே.









 


No comments:

Post a Comment