Thursday, September 14, 2017

ஆளாளுக்கு நீட் என புலம்புகின்றார்கள்...

ஆளாளுக்கு நீட் என புலம்புகின்றார்கள், கூட்டம் நடத்துகின்றார்களே தவிர, உருப்படியாய் போராட ஒருவரிடமும் திட்டமில்லை.


முதலில் தூக்கி எறியபடவேண்டியது மாநில அரசு, அந்த இடத்தில் சரியான திராவிட பார்வை உள்ள அரசு அமைந்தால் ஒழிய நீட்டிற்கு தீர்வு இல்லை


நிச்சயம் பாஜக இறங்கிவராது. தமிழக எதிர்ப்பால் அவர்களுக்கு ஒரு நஷ்டமுமில்லை. காரணம் இங்கு கட்சியே இல்லை, மக்கள் எப்படி எதிர்த்தால் அவர்களுக்கு என்ன? நிச்சயம் கண்டுகொள்ளமாட்டார்கள்.


அவர்களுக்கு லாபமோ, நஷ்டமோ இல்லா சிக்கல் இது. நிலமை எல்லை மீறி சென்றால் ஆட்சி கலையும், அதன் பின் திமுக ஆட்சி.


அவர்களுக்கென்ன வந்தது?


ஆக ஏதும் நிவாரணம் வேண்டுமென்றால் தமிழக அரசு பொங்கவேண்டும், அது தூக்கி போட்டு மிதித்தாலும் ஏன்? எண்ணெய் கொப்பரையில் போட்டாலும் புன்னகைக்கதான் செய்யும், அது ஒரு ஜென் நிலையினை அடைந்துவிட்டது


முதலில் குறிவைக்க வேண்டியது இந்த அரசினைத்தான், ஆனால் யாரும் செய்யவில்லை, காரணம் உள்ளே இருக்கும் ரகசிய இழை அப்படி.


அதனை செய்யாமல் மத்திய அரசு ஒழிக என சொல்லிகொண்டே இருந்தால் ஒன்றும் ஆகாது.


மொத்தத்தில் இந்த நீட் தேர்வி எதிர்ப்பினை எல்லாம் கண்டுகொள்ளும் மனநிலையில் அரசு சுத்தமாக இல்லை


டெல்லிக்கு 39 எம்பிக்களை அனுப்பினோமே, மாநிலத்தில் ஒரு அரசினை அமர்த்தினோமே என்ற சிந்தனை மக்களுக்கும் இல்லை


அதனால் உறுதியாக சொல்லலாம், இந்த போராட்டங்கள் எல்லாம் ஒரு பலனையும் தராது.


இது அரைத்த மாவினையே அரைப்பதர்கு சமம், மாநில உரிமை என்பார்கள், தேசியத்தில் வரமாட்டார்கள். அப்படியானால் தனிநாடு கேட்டால் என்ன என்றால் கேட்கவும் மாட்டார்கள்.


வாக்களிப்பது எல்லாம் தமிழக கட்சிகளுக்கு, ஆனால் நியாயம் கேட்பதெல்லாம் டெல்லியிடம்.


சென்னைக்கு வாக்களித்து விட்டு, டெல்லியிடம் நியாயம் கேட்டால் எப்படி கிடைக்கும்? இதனை சொன்னால் நாம் திராவிட துரோகி.


சரி நம்மை நம்பி வாக்களித்தார்களே, அம்மக்களின் உரிமையினை காப்போம் என்று இவர்களுக்கும் சிந்தனை கொஞ்சமும் இல்லை.


டெல்லி அடக்குகின்றது என்றால் தனிநாடு கேட்கலாம், 50 ஆண்டுகளாக தமிழகத்தை ஆண்ட திராவிட கட்சிகள் காஷ்மீர் போல தமிழகத்திற்கு சிறப்பு அந்தஸ்தாவது வாங்கி தர முடிந்ததா? என்றால் அதுவும் இல்லை.


தமிழக நலன் காக்க எந்த சிறப்பு சட்டத்தை திராவிட கட்சிகள் 50 ஆண்டில் ஏற்படுத்தியிருக்கின்றன? ஒன்றும் இல்லை, அவர்கள் பலம் அவ்வளவுதான்.


அப்படியும் போகமாட்டோம், இப்படியும் போகமாட்டோம் ஆனால் டெல்லி வந்து வாயில் ஊட்டவேண்டும் என எதிர்பார்ப்பதெல்லாம் சுத்த மடத்தனம்.


இப்பொழுதும் திராவிட கட்சிதானே மாநிலத்தில் ஆட்சியில் இருக்கின்றது, நீட்டை விரட்டினால் என்ன என்றேல்லாம் கேட்க கூடாது, மாநில அரசு இருப்பதையே மறந்துவிடுவார்கள் அல்லது அதுபற்றி பேசவிடாமல் திசை திருப்புவார்கள்


முன்பு இந்திக்கு பக்தவத்சலம் காரணமாம், ஆனால் இப்போது நீட்டிற்கு மத்திய அரசுதான் காரணமாம், நேரத்திற்கொரு கொள்கைகள்.


என்னதான் திராவிட புரட்சி , போராட்டம் என்றாலும் அதனை நடத்த பிராமண சிந்தனைதான், மூளைதான் 
வேண்டும்


அது பெரியாரிடம் இருந்தது அதன் பின் கலைஞரிடம் இருந்தது , இப்பொழுது யாரிடமும் இல்லை என்பது நன்றாக தெரிகின்றது.

No comments:

Post a Comment