Friday, September 15, 2017

நவோதய பள்ளிகள் தமிழ் கல்விக்கு ஆபத்தா?




நவோதய பள்ளிகள் தமிழ் கல்விக்கு ஆபத்து என பலர் பொங்கி கொண்டிருக்கின்றார்கள், எதிர்ப்பதில் முக்கால்வாசி மெட்ரிகுலெஷன் பள்ளி வகையறா, மீதி திராவிட வகையறா.


சரி, இவ்வளவு நாளும் தமிழ் கல்வியினை , தமிழை எப்படி காத்தீர்கள் என கேட்டால் பதில் இருக்காது.


ஆங்கிலமும் சரியாக தெரியாமல், சுத்த தமிழும் தெரியாமல் ஒரு வித்தியாசமான மொழியினை உருவாக்கி வைத்ததை விட இங்கு ஒன்றும் கிழிக்கவில்லை.





பிரபல தமிழ் தலைவர்களின் வாரிசுகள் கூட தமிழ் கல்வி படித்ததில்லை என்பது வேறு விஷயம்.

அந்த தமிழ் தலைவர்களின் குடும்பத்தார் நடத்தும் பள்ளிகளில் கூட தமிழ் இல்லை என்பதுதான் வேதனையான விஷயம்.

இந்தி எதிர்ப்பு போராட்டத்தை நடத்தியவரின் வாரிசுகளே இந்தியில் பட்டையினை கழற்றிய கதையினை எல்லாம் தமிழகம் அறியும்.

இவர்கள் நடத்தும் பள்ளியில் தமிழே இருக்காதாம், கட்டாய தமிழ் கல்வி என திட்டமும் இருக்காதாம். ஆனால் 8ம் வகுப்பு வரை தமிழ்கல்வி என சொல்லும் நவோதயா பள்ளியினை எதிர்ப்பார்களாம்.

ஒரு சிலருக்கு இன்னொரு கவலை, அதாவது நீட் தேர்வு மூலம் வெளிநாட்டுக்காரன், வெளிநாட்டு இந்தியன் எல்லாம் படிக்க தமிழகத்துக்கு வந்துவிடுகின்றானாம், இதனை தடுக்க வேண்டுமாம்

தமிழன் இந்தியா எங்கும் செல்லலாம், உலகெல்லாம் செல்லலாம் பிழைக்கலாம், ஜப்பான் முதல் அமெரிக்கா வரை அவன் சென்று படிக்கலாம் பணிபுரியலாம்

ஆனால் வேறு எவனும் தமிழகத்திற்கு வந்துவிட கூடாது இவர்கள் விடமாட்டார்கள். காரணம் உலகிலே மிக மிக விவரமானவர்கள் இவர்கள் மட்டும்தான்

உலகில் வேறு எவனுக்கும் அறிவே இல்லை.









முக ஸ்டாலினை சந்திக்கின்றார் எச்.ராசா

ஏதோ முதுபெரும் தலைவர் போல முதல்வர், எதிர்கட்சிதலைவர் என எல்லோரையும் ஓடி ஓடி இந்த எச்.ராசா எல்லாம் சந்திகின்றாராம்

இனி தமிழகத்தில் தனுஷ்கோடி மட்டுமா வாழ தகுதியற்ற இடம்?



 தமிழகத்தில் ஜப்பானியத் தொழில் நகரம் பிரதமர் மோடி அறிவிப்பு: பிரதமர் மோடி


இதனையும் தொழில் திணிப்பை எதிர்ப்போம், தமிழக தொழிலாளர் எல்லாம் தெருவிற்கு வருவார்கள் என வேலையற்றவர்கள் நிறைந்திருக்கும் தமிழகத்தில் இருந்து எதிர்ப்பார்கள்






தமிழகம் அப்படித்தான்









 தமிழக அரசியல் கேலிக்கூத்தாக மாறியதில் ஆளுநருக்கு முக்கியப் பங்கு உண்டு: ராமதாஸ்

உண்மையினை சொல்லுங்கள், ஆளுநருக்கு மட்டுமா பங்கு உண்டு டாக்டர்??




 

No comments:

Post a Comment