Tuesday, September 12, 2017

கீழவெண்மணியில் ரஞ்சித் எங்கிருந்தார்





கீழவெண்மணியில் ரஞ்சித் எங்கிருந்தார், இன்னும் பெரும் சாதிய படுகொலையில் ரஞ்சித் என்ன செய்தார் : சீமான் சீற்றம்


அட பைத்தியக்கார சீமான், கீழவெண்மணி நடக்கும்பொழுது, இம்மானுவேல் படுகொலையின் பொழுது ரஞ்சித் பிறந்திருக்கவே மாட்டானே?


சரி மிஸ்டர் சைமன், முன்பு 1983 இலங்கை கலவரம், ஈழ அகதிகள் வருகை, அதனை தொடர்ந்த இந்திய ஆதரவு, கலைஞர் அமிர்தலிங்கம் சந்திப்பு, கலைஞர் அமைதிபடை மீட்க பாடுபட்டது, பத்மநாபா கொலையில் சம்பந்தமாக கலைஞர் ஆட்சியினை இழந்தது .





ஈழ போராட்டத்தில் தமிழகம் ஒவ்வொரு காரியத்திலும் போராட்டத்திலும் இறங்கிய பொழுது சீமான் எங்கிருந்தார்? பாரதிராஜாவிடம் சினிமா படித்துகொண்டிருந்தார்

அன்று போராளிகள் சந்திப்பு, அகில இந்திய அளவில் ஈழவிடுதலைக்கு ஆதரவு என கலைஞர் செய்த காரியங்கள் ஏராளம், அன்று சீமான் எங்கிருந்தார்?

உச்சமாக ராஜிவ் கொலையால் படுகுழியில் வீழ்ந்தது போன்ற காலங்களில் எல்லாம் சீமான் எங்கிருந்தார்?

1500 இந்திய வீரர்களை புலிகள் கொன்ற பொழுதும், இந்திய அபிமானியான அமிர்தலிங்கத்தை புலிகள் கொன்று இந்தியாவினை புலிகள் எச்சரித்த பொழுதும் உச்சமாக பத்மநாபாவினை தமிழகத்திலே கொன்று மிக கடுமையான இந்திய எதிர்ப்பினை காட்டியபொழுது சீமான் எங்கிருந்தார்

ராஜிவ் கொலையினையொட்டி கலைஞர் கடும் சிக்கலில் மாட்டியபொழுது, திராவிட கழகம் பெரும் நெருக்கடியில் தள்ளபட்டபொழுது சீமான் எங்கிருந்தார்? பாஞ்சாலங்குறிச்சி படம் எடுத்துகொண்டிருந்தார்.

ரஞ்சித் பிரிட்டனில் இருந்தா வந்தார் என கேட்கும் அங்கிள் சைமன், 2006க்கு முன் என்ன சர்வதேச விண்வெளி நிலையத்திலா 30 ஆண்டுகள் இருந்தார்?

ஒரு தமிழ் பிராடு இன்னொரு சாதி பிராடு மேல் சீறுகின்றது.









ஏம்பா ரஞ்சித், அவனுகளே ஈழத்தில் மலையக தமிழரை சாதி ரீதியாக ஒதுக்கி வைத்து, யாழ்பாண சாதிவெறியில் உருவான ஈழபோராட்ட புலிகளை தூக்கி வைத்து கொண்டாடுபவர்கள்.

ஈழ‌ சாதிவெறி தமிழக சாதிவெறிக்கு கொஞ்சமும் குறைந்ததல்ல, மலையக அடிமை தமிழர்களை அவர்கள் தமிழர் என்றவகையில் அணைத்தவர்களோ ஆறுதல் அளித்தவர்களோ அல்ல‌

பின் அந்த சாதி வெறியினை மறைத்து தமிழர் ஈழ கோஷ்டியினை தூக்கிபிடிக்கும் அமீர் முன்னால் போய் நீர் சாதி என‌ கத்துவீரா?


உம்மை நம்பி தன்னை சிலுவையில் அறைய ஒப்புகொடுத்திருக்கும் ரஜினியினை நினைத்தால்தான் பரிதாபமாக இருக்கின்றது.

பட்டும் தெளியாதவர் ரஜினி.





 

 



 

No comments:

Post a Comment