Thursday, September 14, 2017

"ஆதி" என்பது என்ன வார்த்தை? தமிழ் வார்த்தை

ஆதித்தன் என்பது தமிழ்பெயரல்ல, அதனால் சி.பா ஆதித்தனார் தமிழர் அல்ல என மறுபடியும் ஒப்பாரி


ஆதி என்றால் என்னவென்று கூட தெரியாமல்தான் தமிழகத்தில், தமிழ், தமிழர் என சொல்லிகொண்டிருக்கின்றார்கள் போல‌


"ஆதி" என்பது என்ன வார்த்தை? தமிழ் வார்த்தை.




திருகுறளில் கூட வள்ளுவன் அதனைத்தான் சொல்கின்றார். ஆதி என்றால் தொடக்கம் , மூலம் என்று பொருள்.


இதனால்தான் வடமொழியில் சூரியன் ஆதித்யன் எனபட்டது, உலகின் மூலம் என்று அதன் பொருள். ஆதி எனும் தமிழ்வார்த்தையே சமஸ்கிருதத்தில் கலந்தது.


அப்படி தமிழர் ஆதி என்ற பெயரை பல இடங்களில் வைத்திருந்தனர், சோழ பரம்பரையில் இரண்டாம் முக்கிய மன்னன் ஆதித்ய சோழன். இன்னும் சில ஆதித்ய சோழர்கள் உண்டு.


பாண்டிய நாட்டில் பாண்டிய மன்னர்களின் பெயர்கள் சில குடும்பங்களுக்கு அடைமொழியாகி இன்றும் தொடர்கின்றன, அப்படி ஆதித்தன் எனும் சோழ மன்னனின் அடைமொழி பல குடும்பங்களுக்கு தொடர்ந்தன‌


அதில் வந்தவர்தான் சி.பா ஆதித்தன்


உண்மை இப்படி இருக்க, ஆதித்தன் என்பது தமிழ்பெயர் அல்ல, அதனால் அவர் தமிழர் அல்ல என சில அபத்தங்கள் வருகின்றன‌


ஆதித்ய சோழன் என்பவனாவது தமிழ் மன்னனா? இல்லை அவனும் சமஸ்கிருத மன்னனா?


ஒரு மண்ணாங்கட்டியும் ஆழ நோக்குவது இல்லை, மாறாக எவனுமே தமிழன் இல்லை, எல்லாம் வந்தேறி என புலம்ப வேண்டியது.



No comments:

Post a Comment