Tuesday, September 19, 2017

செப்டம்பர் 29தான் "குஷ்பூ டே" அல்லது "பிரபஞ்ச பேரழகு தினம்".




Image may contain: 1 person, close-up and indoorதலைவி தன் பிறந்தநாள் செப்டம்பர் 29 என அறிவித்துவிட்டார், இணையத்தில் மோடியின் சாதனைகளை போல அவரின் பிறந்த நாள் தவறாக இன்று என பதிவிடபட்டிருக்கின்றது.


இன்று பிறந்தநாளாக இருந்திருந்தால் சங்கம் சும்மா இருக்குமா? நள்ளிரவு 12 மணிக்கே கொண்டாட்டம் தொடங்கி பெரும் ஆரவாரமாக கொண்டாடி கொண்டிருக்காதா?


ஆக ரசிக கண்மணிகள் தங்கள் பிரார்த்தனைகளை, வாழ்த்துக்களை செப்டம்பர் 29 அன்று தெரிவிக்குமாறு சங்கத்தின் சார்பாக கேட்டுகொள்கின்றோம்





செப்டம்பர் 29தான் "குஷ்பூ டே" அல்லது "பிரபஞ்ச பேரழகு தினம்".

ஆச்சரியமாக "வானதூதர்களின் தினம்" செப்டம்பர் 29 என கிறிஸ்தவ கத்தோலிக்கமும் அறிவித்திருக்கின்றது.

வான தூதர்களின் தினத்தில்தான், இந்த தேவதையும் பூமிக்கு வந்திருக்கின்றது.

இன்று அந்த மாபெரும் கொண்டாட்டத்திற்கான தொடக்க விழா..

இன்னும் 10 நாளில் உலகம் கொண்டாடபோகும் விழாவினை எப்படி சிறப்பிக்கலாம் எனும் ஆலோசனையில் சங்கம் இறங்கியிருக்கின்றது.

இந்தியாவினை விடுங்கள், அந்த டொனால்டு டிரம்பே பிரமிக்கும் அளவிற்கும், வடகொரிய அதிபர் தன் ஆயுத சோதனைகளை நிறுத்திவிட்டு திரும்பி பார்க்கும் அளவிற்கும் மாபெரும் கொண்டாட்டத்தை கொண்டாட வேண்டும்.

புஷ்பங்களின் பூ மகளான குஷ்பூவின் பிறந்தநாளை அகில உலகமும் அதிரும்படி கொண்டடாடுவோம் என‌ சங்கம் இப்பொழுதே Babu Rao , Chandran Kannanதலையில் அடித்து உறுதி எடுக்கின்றது.













 

No comments:

Post a Comment