Tuesday, September 19, 2017

இன்றைய அரசியல் நிலவரம்

ஸ்ரீரங்கம் கோவிலில் டி.டி.வி. தினகரன் தரிசனம்


எதற்கு? எம்ஜிஆர் காலத்தில் கட்டிமுடிக்கபட்ட கோபுரம் காக்கும் என்றா? நடக்குமா?


எதற்கு அங்கு சென்றிருப்பார் தினகரன்?




இந்த நாஞ்சில் சம்பத் என்பவரை கொஞ்ச நாளாக காணவில்லை, அந்த கோவில் பக்கம் ஏதும் கடைபோட்டு மாறுவேடத்தில் அலைகின்றாரோ என பார்க்க போயிருக்கலாம் தினகரன்.







மூழ்கும் கப்பலை யாராலும் காப்பாற்ற முடியாது : ப.சிதம்பரம் டிவிட்


இவர் அதிமுகவினை சொல்கின்றாரா? இல்லை காங்கிரசை சொல்கின்றாரா? அல்லது மோடி அரசின் இந்தியாவினை சொல்கின்றாரா என்பதுதான் தெரியவில்லை






தமிழகத்தில் வான்வெளிபூங்கா அமையும் : அமைச்சர் சம்பத்


கூரையேறி கோழி பிடிக்க முடியாதவன் வானமேறி வைகுண்டம் போவானா? என்பது இதுதான்






இலங்கை ஜனாதிபதியின் டிவிட்டர் தளம் இனி தமிழிலும் செயல்படும் என அறிவிப்பு


ஆக தமிழ் கோஷமிடும் தமிழக அரசியல்வாதிகள் செய்யாத விஷயத்தை இலங்கை அதிபர் செய்கின்றார், தமிழ் இனி இலங்கையில்தான் வளரும் போலிருக்கின்றது.


தமிழ்நாட்டினரை தவிர எவனும் தமிழை பயன்படுத்தகூடாது, அது எமக்கு மட்டுமே சொந்தமான மொழி என இன்னும் அங்கிள் சைமனின் தும்பிகள் சொல்லவில்லை என்பதுதான் ஆச்சரியம்




அதானே, சிங்களன் தமிழ் வளர்க்கின்றானே எப்படி விடலாம்? அவனுக்கும் தமிழுக்கும் என்ன தொடர்பு


"ஏ சிங்களனே நீ சிங்களத்தை மட்டும் வளர்த்துகொள், தமிழை அங்கிள் சைமனும் இன்னபிற இந்தி எதிர்ப்பு திமுகவினரும் வளர்த்து கொள்வார்கள் ஆமாம்"











 கமலஹாசன் கட்சி தொடங்க ஆயத்தம் : செய்தி


இந்த ரஜினிகாந்த் என்பவர் கட்சி தொடங்கலாம் என செய்தி வந்தபொழுது குதியோ குதி என குதித்த சீமான், சு.உதயகுமார் இன்னும் பல தமிழ் உணர்வாளர்களை இப்பொழுது காணவேயில்லை.


ரஜினி சினிமாக்காரன், ரஜினிக்கு அரசியல் தெரியாது, ரஜினி எப்படி தமிழருக்காக ஆளமுடியும், விடமாட்டோம் என நடுரோட்டில் படுத்து உருண்டவர்கள் சத்தம் கமல் விஷயத்தில் வருமா என்றால் வராது.





ஏன் வராது என்றால் இவர்கள் அப்படித்தான், இவர்கள் யாருடைய அடிமைகள் என்பதை பொறுத்த விஷயம் அது.

ஆக கமல் கட்சி தொடங்கினால் இவர்களுக்கு பிரச்சினையே இல்லை

ஏம்பா தமிழ் அல்ட்ராசிட்டிகளா, ஒருவேளை நாளை கமலஹாசனுக்கு ஆதரவு என ரஜினி அறிவித்தாலோ, அல்லது கமல் கட்சியில் ரஜினி இணைந்தாலோ என்ன செய்வீர்கள்?







 



 பா.ஜ.க கூட்டணியில் இருந்து விலகுகிறது சிவசேனா 

சிவசேனாவே பாஜக அரசு படு தோல்வி என ஒப்புகொண்டபின் சொல்வதற்கு என்ன இருக்கின்றது?








 

தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 18 பேர் தகுதி நீக்கம்: பேரவைத் தலைவர் நடவடிக்கை


19 பேர் மட்டும்தான் தகுதி இல்லாதாவர்களா? மீதி எல்லோரும் மிக சிறந்த தகுதி கொண்டவர்களா?


அந்த கோஷ்டி எல்லாம் எப்படிபட்டவை என்பதற்கு அலுக்காமல் ஆளுநர் மாளிகை சென்ற சம்பவங்களே சாட்சி.




இதே கும்பல்தான் முன்பு கூவத்தூரில் கூடிகிடந்தது, பின் சிறைகைதிகள் போல அழைத்துவரபட்டது, அப்பொழுதெல்லாம் தகுதி என்ன ஆனது?


அமைச்சர் மீது வருமானரி புகார் வந்தபொழுது கூட தகுதி நீக்கம் இல்லை, ஊரெல்லாம் டெங்கும் இன்னபிற நோய்கள் வந்தபொழுதும் சுகாதார அமைச்சர் தகுதி நீக்கம் இல்லை


நீட் தேர்வில் பெரும் குழப்படி நடந்தபொழுதும் கல்வி அமைச்சர் தகுதி இழக்கவில்லை


கூவத்தூரில் கூடி இருந்தால் கட்சிபணியாம், குடகு மலையில் கூடியிருந்தால் தகுதி இழந்துவிடுவார்களாம்.


என்னவோ அந்த கட்சியில் 19 பேர்தான் தகுதி இல்லாதவர் போலும், மீதி எல்லோரும் புடைத்து தேர்ந்தெடுக்கபட்ட யோக்கியர்கள் போலும் செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன.






ஓட்டுக்கு பணம் தருவது ஒழிந்தால்தான் மாற்றம் வரும் : ராமதாஸ் வேதனை


அப்படியும் சாதி பார்த்து வாக்களிப்பது ஒழியவேண்டும் என சொல்லவில்லை பார்த்தீர்களா? இதுதான் ராமதாஸ்


சாதி பார்த்து வாக்களிக்க எதற்கு பணம் என்பதுதான் அவரின் ஆதங்கம்.







 


No comments:

Post a Comment