Wednesday, September 13, 2017

காவேரியில் வெள்ளம், தமிழக‌ கரையோர மக்களுக்கு எச்சரிக்கை & மோர்...

போலி சாமியார்கள் பெயர் பட்டியலில் பாபா ராம் தேவ் பெயர் இல்லாதது மிகுந்த ஏமாற்றம் அளிக்கிறது : காங்., மூத்த தலைவர் திக் விஜய் சிங்


மிஸ்டர் திக் விஜய் சிங், நாங்களும் அந்த அதிர்ச்சியில்தான் உள்ளோம்


நித்தி, ஜக்கி, பால் தினகரன், ஏஞ்சல் டிவி சாமியார், எஸ்ரா சற்குணம், ஜகீர் நாயக் போன்ற பல சாமியார்கள் பெயர் மிஸ்ஸிங்.






காவேரியில் வெள்ளம், தமிழக‌ கரையோர மக்களுக்கு எச்சரிக்கை


"டெல்லி எசமான்களே, காவேரியில் வெள்ளம் வந்தாயிற்று. அங்கு விவசாயம் செய்யவேண்டிய பயல்கள் எல்லாம் அங்கு கோவணத்தோடு கொடிபிடித்து போராடி கொண்டிருக்கின்றான்.


அய்யா அவன் சாதாரணமில்லை, காவேரியில் நீர் இல்லை என்றுதானே சொன்னீர்கள், இதோ வந்தாயிற்று கிளம்புங்கள் என நீங்கள் கேட்டால் .....





காவேரியில் நீர் வந்து எதற்கு? செலவழிக்க பணம் இல்லை என்பான், இவ்வளவு நாளும் இங்கு டிசைன் டிசைனாக போராட, தங்க ஏது பணம் ஏது ?" என கேட்டு முதுகில் மிதித்து இங்கு விவசாயம் செய்ய சொல்லி அனுப்புங்கள்.





தமிழகத்தில் கறுப்பு ச் சட்டை ஐயப்ப பக்தர்களின் அடையாளமாகிவிட்டது - துக்ளக் குருமூர்த்தி.


அது ஒன்றுமில்லை, நாளை மோடியோ அமித்ஷாவோ தமிழகம் வரும்பொழுது கறுப்பு கொடி காட்டி தமிழகம் ஏதிர்ப்பு தெரிவிக்குமல்லவா?


அப்பொழுது "இதெல்லாம் இங்கு பக்தி, பாருங்கள் சபரிமலை பக்தர்கள் கூட கருப்பு சட்டைதான் போட்டிருக்கின்றார்கள். இங்கு கறுப்பு என்பது பக்தி.





பாருங்கள் நீங்கள் சிகப்பு, லட்சுமியும், சீதையும் சிகப்பு அதனால் காவி கொடி.

தமிழர் கறுப்பு , ராமரும் கருப்பு , கண்ணனும் கறுப்பு அதனால் கறுப்பு

மற்றபடி எல்லாம் பக்தி மயம் ஹிஹிஹிஹி.." என சொல்லி சமாளிக்கலாம்.

அவர்கள் திட்டமெல்லாம் இப்படி படு நுட்பமாகத்தான் இருக்கும் , குடுமி சும்மா ஆடாது.





அதிமுகவில் பொதுச் செயலாளர் பதவி ஏன் இல்லை - திருநாவுக்கரசர் கேள்வி


ஏன் தமிழக காங்கிரசில் பொதுசெயலாளர் பதவி இல்லைதான், அதனை உருவாக்கி குஷ்பூவினை அமர்த்திவிடலாமா?


காங்கிரஸ் கட்சியின் தலைவருக்கு இந்த அதிமுக கட்சி மீது எவ்வளவு அக்கறை?






நடிகை ஆவேன் என்று நினைக்கவில்லை : நிக்கி கல்ராணி


இப்பொழுது மட்டும் நீங்கள் நடிக்கின்றீர்கள் என எவன் சொன்னான் அம்மணி?






No comments:

Post a Comment