Friday, September 15, 2017

ஜாக்டோ ஜியோ அமைப்புகள் மீது அரசு மிக கடுமை காட்ட வேண்டிய நேரமிது





மிக பெரும் தொகையில் சம்பளம், வேலை நேரம் என்பது ஒரு நாளில் 5 மணிநேரமே இருக்கும், வாரம் இருநாள் விடுமுறை மற்றும் அரசு விடுமுறை.


இன்னும் சம்பளத்தோடு கூடிய ஏகபட்ட விடுமுறைகள் அவர்கள் எடுத்துகொள்ளலாம்.


காலாண்டு , அரையாண்டு, மேமாதம் என சம்பளத்தோடு கூடிய விடுமுறை. மற்ற அலுவலகர்கள் யாருக்காவது இப்படி உண்டா?





இவர்களுக்கு மட்டும் அந்த பெரும் சலுகை உண்டு.

சம்பளம் போக அந்த படி இந்த படி என பல சலுகைகள், இது போக தேர்வினை கண்காணிக்க தனி சம்பளம், விடைத்தாளை திருத்த தனி சம்ப்பளம்

தேர்வும் , விடைத்தாள் திருத்தலும் அவர்கள் பணிகளில் ஒன்று, அதற்கு ஏன் கூடுதல் சம்பளம்?

தேர்தல் காலங்களில் ஸ்பெஷல் சம்பளம், ஏன் அன்று பாடம் நடத்தவில்லை, வாங்கும் சம்பளத்திற்கு அரசுக்கு இன்னொரு பணி செய்கின்றோம் என என்றாவது நினைத்தார்களா? சுத்தமாக இல்லை.

இப்படியாக மிக மிக சுகமாக பணியாற்றும் அந்த ஆசிரியர்கள்தான் கொடிபிடித்து போராடுகின்றார்களாம். இன்னும் என்னவெல்லாமோ மிரட்டுகின்றார்கள்.

உண்மையில் இவர்களுக்கு தகுதிக்கு மீறி கொடுத்து கெடுத்து வைத்திருக்கின்றது அரசு.

சம்பளம் போதவில்லை என்றால் செல்லலாம், அதில் நாலில் ஒருபங்கு பெற்று மாங்கு மாங்காக உழைக்க பட்டதாரிகள் எல்லாம் வரிசையில் நிற்கும் மாநிலம் இது.

அங்கு இருந்துகொண்டு என்னை வேலையில் வைத்த அரசே எனக்கு இதெல்லாம் கொடு என மிரட்டுவது எப்படி நியாயம் என தெரியவில்லை

சொன்னால் உனக்கு என்ன தெரியும் வாழ்வில் செலவுகள் அப்படி, இப்படி என பொங்குகின்றார்கள், சிலர் அது எம் உரிமை என்று வேறு உரிமை குரல் எழுப்புகின்றார்கள்

ஏதோ ஆசிரியரின் குழந்தைகள் கற்க வழியின்றி இருப்பது போலவும், அவர்கள் வீட்டு அடுப்பில் பூனை தூங்குவது போலவும் பல ஆதரவு குரல்கள்.

அரசு மிக கடுமை காட்ட வேண்டிய நேரமிது.

அரசு சிக்கலில் இருக்கின்றது என சொல்லி சமாளிக்கலாம், ஆனால் எம்.எல்.ஏக்களுக்கு வெட்டியாக சம்பளத்தை ஏன் அதிகரிக்க வேண்டும்?

அதுதான் இந்த சிக்கலுக்கு முதல் காரணம்.

ஆக அரசை மிரட்டும் எம்.எல்.ஏக்களுக்கும் இந்த ஆசிரியர்களுக்கும் வித்தியாசமேயில்லை

எது எப்படி போனால் என்ன? மாநிலம் நாசமானால் என்ன? நமக்கு கொட்டிகொண்டே இருக்கவேண்டும் என்ற எண்ணம் வளருமானால் தமிழகம் நிம்மதியாய் இராது, பொறுப்பு எல்லோருக்கும் வேண்டும்

அவ்வளவு பொறுப்பு இருந்தால் இந்த அரசு எப்படி வந்திருக்கும்? இன்னும் எப்படி நீடிக்கும்?

எனினும் இந்த ஜாக்டோ ஜியோ அமைப்புகள் மீது மிக கடுமையான நடவடிக்கை எடுக்கவேண்டும், இவர்கள் எழுப்பும் கூக்குரல் நிச்சயம் அநியாயமானது, கண்டிக்கபட வேண்டியது.




 

 



 

No comments:

Post a Comment