Wednesday, September 20, 2017

இந்திய வரலாற்றின் மிக குறிப்பிடதக்க நாள் செப்டம்பர் 20, 1857

இந்திய வரலாற்றின் மிக குறிப்பிடதக்க நாள் செப்டம்பர் 20, 1857


அதுவரை கிழகிந்திய கம்பெனியின் நாடாக இருந்த இந்தியா, அன்று தொடங்கிய கலவரங்களின் தொடர்ச்சியாக இங்கிலாந்து அரசின் கட்டுபாட்டிற்கு சென்று பிரிட்டிஷ் இந்தியா ஆனது.


அதாவது எத்தனை நாள்தான் டாஸ்மாக் எனும் தங்க சுரங்கத்தை தனியாரிடம் விட்டுவைப்பது, நாமே நடத்தினால் என்ன என அரசு கைபற்றியது அல்லவா? அப்படி இந்தியாவினையும் பிரிட்டன் அரசு எடுத்தது.




அது எடுத்தபின்பே பல சட்டங்களும்,முறையான அரசும் இந்தியாவிற்கு வந்தன, அதன் அடிப்படையிலேதான் காந்தி போராட முடிந்தது


கிழக்கிந்திய கம்பெனி தொடர்ந்திருக்குமாயின் காந்தியினை என்றோ போட்டு தள்ளியிருப்பர், அவர்களின் காட்டாட்சி அப்படி.


1857ம் ஆண்டு மீரட்டில் நடந்ததுதான் முதல் விடுதலைப்போர் என குறித்துவிட்டார்கள், அது பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியது உண்மை, ஆனால் முதல் கிளர்ச்சி அது அல்ல‌


1806ம் ஆண்டு வேலூர் கோட்டையில் நடந்ததுதான் மிகபெரும் கிளர்ச்சி, ஆனால் அந்த காலகட்டத்தில் பிரிட்டனின் கண்களில் விரலை விட்டு நெப்போலியன் ஆட்டிகொண்டிருந்தான் என்பதால் அவர்கள் கவனம் முழுக்க அவன் மீதே இருந்தது.


1857ல் அப்படி சிக்கல் இல்லாததால் இந்தியாவினை எடுத்தது பிரிட்டன், நெப்போலியன் எழும்பாவிட்டால் 1806லே இந்தியா பிரிட்டிஷ் அரசு நாடாக இருந்திருக்கும்


ஆக 1857ல்தான் புரட்சி நடந்தது என்பது சரியல்ல, புரட்சி என்பது 1500களில் வாஸ்கோடகாமா வரிபிரிக்கும் பொழுதே தொடங்கிற்று, அந்த கிளர்ச்சியில்தான் அவன் கொச்சிபக்கம் கொல்லபட்டான்


இந்த தேசம் ஐரோப்பியருக்கு 400 ஆண்டுகாலம் எதிர்ப்பு கொடுத்து கொண்டேதான் இருந்தது.


எனினும் இந்த செப்டம்பர் 20ம் நாள் பெரும் மாற்றத்தை இந்திய போராட்ட களத்தில் கொடுத்தது என்பது மட்டும் உண்மை.



No comments:

Post a Comment