Thursday, September 14, 2017

சல்யூட் சார், மிஸ்டர் டிரம்ப்...

21730795_10210127750725385_1783690152677395929_n.jpgஇந்த டிரம்ப் என்பவரை கொஞ்சம் கவனிக்கத்தான் வேண்டியிருக்கின்றது, மனிதர் கொஞ்சம் சவால்களை எடுக்கின்றார்


அதாகபட்டது சுதந்திரம் அடைந்த காலத்தில் இருந்தே அமெரிக்க நிதியில் இயங்கும் நாடு பாகிஸ்தான். அவர்களுக்கும் அன்றைய சோவியத்துடனான மோதலிலும், இன்னபிற விஷயங்களிலும் பாகிஸ்தான் தேவைபட்டது.


அதுவும் தாலிபான்களுக்கு கொம்பு சீவி விட்டு ரஷ்யாவினை ஆப்கனிலிருந்து விரட்டிய காலங்களில் எல்லாம் அமெரிக்காவின் பெரும் செல்லபிள்ளை பாகிஸ்தான். அதற்கு அமெரிக்கா கொடுத்த ஆயுதங்கள் கொஞ்சமல்ல, அவர்கள் அணுகுண்டு செய்ததை கூட தடுக்க அமெரிக்கா விரும்பவில்லை


காஷ்மீர் விவகாரங்களில் கூட பாகிஸ்தான் பக்கமே அமெரிக்கா சாயும்


வங்கபோரின் பொழுது அமெரிக்க கடற்படை பாகிஸ்தானுக்கு எதிராக இறங்க வந்ததும், ரஷ்யா மிரட்டியதால் பின்வாங்கியதும் வரலாறுகள்


சீனாவோடு அது கொஞ்சினாலும் பல காரியங்களுக்காக அமெரிக்கா பாகிஸ்தானோடு கள்ள சிரிப்பு சிரிக்கும், பின்லேடன் பாகிஸ்தானில் கொல்லபட்டாலும் நண்பேண்டா என கொஞ்சும்.


இன்னும் அணுகுண்டு நுட்பத்தை வடகொரியாவிற்கும், லிபியாவிற்கும் பாகிஸ்தான் விற்றபொழுது கூட, கண்ணே இப்படி செய்வது தப்புடா செல்லம், என கொஞ்சியதே தவிர வன்மையாக கண்டிக்கவில்லை


காரணம் ஆபகனை தக்க வைக்க பாகிஸ்தான் தயவு தேவை, அதன் வழியாகவே ஆப்கனை சென்றடைய முடியும் என ஏராள தேவைகள், இந்தியாவினை முடக்க பாகிஸ்தான் போன்ற ரவுடி நாடு அவசியம் எனும் சர்வதேச அரசியல் உட்பட ஏராளம்.


மொத்தத்தில் சசிகலா ஜெயலலிதா உறவு போன்றது அமெரிக்க பாகிஸ்தான் உறவு, பிரியவே முடியாது பிரிந்தால் பாகிஸ்தான் வாழ முடியாது.


டிரம்ப் வந்தபின் இதில் விரிசல் விழுகின்றது, இந்தியாவில் மோடி நகர்வில் ஆட்டம் சூடுபிடிக்கின்றது.


அமெரிக்க அதிபர்களிலே முதல் முறையாக "அந்த பாகிஸ்தானுக்கு ஏன் இப்படி கொட்டவேண்டும்? அவர்கள் நமக்கு என்ன விசுவாசமாக இருக்கின்றார்கள்?


நம்மிடம் பணம் வாங்கிவிட்டு, தீவிரவாதத்தை பரப்புகின்றார்கள். அது நமக்கு எதிராக திரும்புகின்றது இனி ஒரு பைசா கொடுக்க முடியாது" என சொல்லிவிட்டார் டிரம்ப்


அதோடு விட்டாலும் பரவாயில்லை அடுத்ததுதான் அதிர்ச்சி


இந்தியாவிற்கு எந்த நவீன தொழில்நுட்பமும் கிடைக்க கூடாது என பைபிளில் சத்தியம் எடுத்துவிட்டு வருபவர்கள் அமெரிக்க அதிபர்கள், இந்திய எரிச்சல் அப்படி. கிரையோஜெனிக் எல்லாம் கிடைக்காமல் செய்தவர்கள் அவர்கள்தான்


ஆனால் டிரம்ப் அமெரிக்க அதிநவீன விமானமான எப் 16 போன்ற விமானங்களை இந்தியாவிற்கு கொடுக்க தடையில்லை என்கின்றார்.


உண்மையில் ஒரு பெரும் திருப்பம் இது. 50 ஆண்டு கால வரலாற்றில் நிகழ்ந்திருக்கும் திருப்பம்.


பாகிஸ்தானை தனிமைபடுத்தவேண்டும் என்ற இந்தியாவின் கோரிக்கைக்கு கிடைத்திருக்கும் மிகபெரிய வெற்றி, ஒரு மாபெரும் வல்லரசை பாகிஸ்தானிடம் இருந்து பிரித்த ராஜதந்திரம்


உள்நாட்டில் பல சறுக்கல்கள் , அவசர கோலங்கள் என்றாலும் வெளிநாட்டு விஷயத்தில் மோடியின் மிகபெரிய வெற்றி, சந்தேகம் இன்றி சொல்லலாம்


ஆனால் இதன் பின் விளைவுகள் கொஞ்சம் ஆபத்தானது.


டிரம்ப் சீற்றத்தோடு நிற்கவில்லை மாறாக பாகிஸ்தான் மீது பொருளாதார தடை என மிரட்டுகின்றார், இந்த தடையில்தான் காட்சிகள் மாறுகின்றன.


இந்தியாவின் நீண்டகால நண்பன் ரஷ்யா, அணுமுதல் அணுவுலை வரை அவர்கள்தான் கொடுப்பார்கள். இப்பொழுது அமெரிக்க விமானங்களை வாங்க இந்தியா தயராவதும், அமெரிக்க இந்திய உறவும் அதற்கு பெரும் கோபம்


அதனால் சீனாவுடன் சேர்ந்து பாகிஸ்தானுக்கு பொருளாதார தடை வந்தால் ஐநாவில் வீட்டோ அதிகாரத்தில் தடுப்போம் என எச்சரிக்கின்றது.


இதுதான் அரசியல், இங்கு நிரந்தர நண்பனோ பகைவனோ இல்லை. அவனவன் லாபம் அவனுக்கு முக்கியம்


திமுகவினை, திராவிடர் கழகத்தினை திட்டி தீர்த்த சீமான் நீட் எதிர்ப்பு என அவர்களோடு வரிசையில அமர்கின்றார் அல்லவா? அப்படி


இந்தியா அமெரிக்க அணியில் சேர்கின்றது என்பதை விட பாகிஸ்தானை அமெரிக்கா விரட்டுகின்றது என்பது நல்ல விஷயம், அதில் இந்தியாவிற்கு வெற்றி


ஆனால் ரஷ்யாவினை எப்படி சமாளிக்க போகின்றது என்பதுதான் மோடி முன்னால் இருக்கும் சவால்


அது இருக்கட்டும், முதன் முதலாக அமெரிக்க வரலாற்றில் ஒரு நியாயமுள்ள தலைவனாக டிரம்ப் தெரிகின்றார், இனி அவருக்கு மரியாதை செலுத்துவதுதான் முறை.


சல்யூட் சார்.

No comments:

Post a Comment