Thursday, September 28, 2017

புதிய தலைமுறை டிவி..

ஜெயா சாவு தொடர்பாக விசாரணை நடக்கின்றது.
ஒரு விசாரணை நடக்கும்பொழுது தகவல்கள் கண்டிப்பாக அந்த கமிஷனிடம் மட்டுமே கொடுக்கபட வேண்டும், அப்படி செய்யாமல் தனியாக தகவல்களை வெளியிடுவது தண்டனைகுரிய குற்றம்.
விசாரணையோ வழக்கோ நடக்கும்பொழுது அதுபற்றி கருத்து கூற கூடாது என்பதுதான் பொதுசட்டம். அதிலும் உறுதிபடுத்தபடாத தகவல்களை அள்ளிவிடுவது கண்டிக்கதக்கது.
அந்த மிக பெரும் குழப்பத்திற்குரிய , கண்டிக்க கூடிய காரியத்தினை புதிய தலைமுறை டிவி செய்கின்றது.
இது நிச்சயம் கண்டிக்கதக்கது. தன்னிடம் இருக்கும் தகவலை கமிஷன் முன் சொல்லலாம், அல்லது நீதிபதிகள் முன் சொல்லலாம்
மாறாக மகா முக்கிய விசாரணையில் இப்படி செய்தி வாசிப்பது திசை திருப்பும் விவகாரம்.
இந்த செய்தியினை புதிய தலைமுறைக்கு கொடுத்தது யார்? அவர்களை ஒளிபரப்ப சொன்ன சக்தி எது?
இவ்வளவு நாளும் இது ஏன் மர்மமாக வைக்கபட்டது?
இப்பொழுது கமிஷனினிடம் சொல்லாமல் இவர்களாக சொல்வது ஏன்?
புதிய தலைமுறை என்பது அரசாங்க ஊடகமா? இப்பொழுது அந்த செய்தி எப்படி கிடைத்தது? விசாரணை அதிகாரிகள் செய்தியினை கடத்தினார்களா?
ஜெயா மரண விவகாரத்தை வெளியிட புதிய தலைமுறை போதுமென்றால் ஆறுமுகசாமி தலமையினாலான கமிஷன் எதற்கு?
தமிழச்சி என்பவர் முகநூல் பதிவிற்கும், புதிய தலைமுறைக்கும் என்ன வித்தியாசம்? தமிழச்சி மீது 70 வழக்குகள் என்றால், புதிய தலைமுறை மீது நடவடிக்கையே இல்லையா?
முகநூலில் கூட ஆதாரம் இல்லாமல் பதிந்தால் நடவடிக்கை என்றார்கள், புதிய தலைமுறைக்கு ஒன்றுமே இல்லையா?
முகநூலுக்கு ஒரு நியாயம், டிவிக்களுக்கு ஒரு நியாயமா?
இது நீதிதுறைக்கு பெரும் அவமானம். அந்த விசாரணை கமிஷன் முகத்தில் கரி பூசும் செயல்.
இவர்களாக சொல்லிகொண்டிருந்தால் கமிஷன் எதற்கு? விசாரணை அமைப்புகள் எதற்கு? இந்த உரிமையினை அவர்களுக்கு யார் கொடுத்தது?
விசாரணை நீதிபதி தலமையில் நடக்கின்றது, அவர்கள் விசாரித்து அறிக்கை தரும்வரை அமைதிகாப்பதே நல்லது அல்லது காத்தே தீரவேண்டும்.
பொறுப்பானாவர்கள் அதிகார பூர்வமாக அறிவித்த பின்பே ஊடகங்கள் வாய் திறக்க வேண்டும்.
இதற்கு தக்க நடவடிக்கை எடுக்காவிட்டால் மிக மிக தவறான முன்னுதாரணமாக சென்றுவிடும். பின் எதிலுமே உண்மை வராது, குழப்பமே மிஞ்சும்.
பெரும் குழப்பம் பல மோசமான விளைவுகளை கொண்டு வரும்.
இது மிக மிக அதிர்ச்சிகரமான, பெரும் நடவடிக்கை எடுக்க வேண்டிய விஷயம்.

No comments:

Post a Comment