Friday, September 15, 2017

மகா விசித்திரமான மனிதர் சுப்பிரமணியன் சாமி




Image may contain: 1 person, close-upஇந்தியாவிற்கே, ஏன் உலகிற்கே மகா விசித்திரமான மனிதர் சுப்பிரமணியன் சாமி


முழுக்க தேவைபடும் அரசியல்வாதி என்று சொல்ல முடியாது, அதே நேரம் முழுக்க தேவையில்லாதவர் என்றும் சொல்லிவிட முடியாது.


சர்ச்சைகுரிய அரசியல்வாதிதான் ஆனால் சில விஷயங்களில் அவரின் அணுகுமுறை பாராட்டபட வேண்டியது.





புலிகளுக்கு எதிராக அவர் இன்றுவரை காட்டும் உறுதிக்கு வாழ்த்தலாம், 1991 முதல் 1996 வரையிலான ஜெயாவின் காட்டு தர்பாரை எதிர்த்த முதல் ஆள் சுப்பிரமணியன் சாமிதான்.

அதன் பின் அவர் தொடுத்த வழக்குத்தான் இன்று சசிகலாவினை உள்ளே தள்ளியிருக்கின்றது.

மதுரை அழகிரியினை எச்சரித்ததாகட்டும், ஸ்பெக்ட்ரம் விஷயங்களை வெளிகொண்டுவந்ததாகட்டும் சு.சாமி தனித்து நின்றார்.

கனிமொழி நீரா ராடியா டேப் விவகாரம் வரை அவர் வெளிகொண்டுவந்தது கொஞ்சம் அல்ல,

தமிழகத்தில் அரசியல் பிரளயங்களை நிகழ்த்தியவர்களில் சுப்பிரமணியன் சாமிக்கு எந்நாளும் இடம் உண்டு.

ராஜிவ் கொலை வழக்கிற்கு முன்பே புலிகளை கடுமையாக எச்சரித்தவர் சு.சாமி. ராஜிவ் கொலையில் சு.சாமிக்கு தொடர்பு என்பதெல்லாம் ஆதாரமில்லா விஷயங்கள். முன்பே சொன்னது போல புலிகள் எல்லோரையும் இழுத்துவிட போட்டிருந்த திட்டத்தின் பகுதி.

இப்படி பல விஷயங்களை சொன்னாலும் திடீரென சில பல்டியடித்து குழப்பி விடுவார், உதாரணம் தற்போதைய அவரின் சசிகலா ஆதரவு.

பழனிச்சாமியினை ஏன் அவர் சில நேரம் விமர்சிக்கின்றார் என்றால் சு.சாமி அப்படித்தான், அவருக்கு பதவியில் இருப்பவர்களை எப்பொழுதும் சீண்டியே பழக்கம். அவர்கள் உரசினால் அவர்களுக்கெதிரான ஆதாரங்களை தூக்கி வீசி திணறடிப்பார் என்பதால் பெரும்பாலும் மேல்மட்டங்கள் அவரை பகைக்காது

அதுதான் சு.சாமியின் பலம்

ஆனால் மோடி அரசினை அவர் இன்னும் விமர்சிக்காமல் இருப்பது ஆச்சரியம், இப்படி திடீரென பல்டிகளும் உண்டு.

அதாவது சு.சாமியினை முழுக்க நம்பவும் முடியாது, நம்பாமலும் இருக்க முடியாது. வினோதமானவர்.

காங்கிரசினை எதிர்த்து உருவான ஜனதாவினை,
, அது பலமிழந்து போனாலும் தனிமனிதனாக நடத்தி, பின் இன்று பாஜக பலம்வரும் வரை காத்திருந்து , பின் அதில் இணைந்துகொண்டு கடைசிவரை தன் நிலையில் நிற்கின்ற சாமியின் உறுதியும், சாதனையும் வாழ்த்துகுரியது.

முக்கியமான விஷயங்களை பேசுவாரே ஒழிய, சில்லறை விஷயங்களை பேசி சில விவகாரங்களை கிளப்பினார், பெரியாரை சீண்டினார் என்று எங்காவது கேட்டதுண்டா? இல்லை. அவ்வகையில் சு.சாமியினை பாராட்டலாம்

மதம், சாதி , இனம் இன்னபிற அரசியல் எல்லாம் அவரிடம் இல்லை என்பதும் இன்னொரு விஷயம், ஒரு வகையில் அவர் தேசியவாதி.

மிக நுட்பமான, தைரியமான அவரின் சில நடவடிக்கைகளுக்கு வாழ்த்து சொல்லித்தான் ஆகவேண்டும்

திமுக வலுவாக தொடுக்காத அதிமுக மீதான வழக்கினை அவர்தான் தொடுத்தார். அதிமுக கண்டுகொள்ளாத ஸ்பெக்ட்ரம் வழக்கினை அவர்தான் தோண்டினார்

திராவிட கட்சிகள் வளர்த்துவிட்ட புலிகளை முதன் முதலில் உயிருக்கு அஞ்சாமல் விமர்சித்தது அவர்தான்.

அதாவது தமிழ்நாட்டில் திமுகவும், அதிமுகவும் செய்ய தவறியதை அல்லது செய்ய விரும்பாததை எல்லாம் தைரியமாக அவர்தான் செய்தார்.

இப்படி சில காரியங்களை தைரியமாக செய்த சுப்பிரமணியன் சாமிக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்













 

No comments:

Post a Comment