Wednesday, September 20, 2017

பெட்ரோப்பிற்கு உலகம் அஞ்சலி செலுத்தி செலுத்திக்கொண்டிருக்கிறது



Image may contain: 2 peopleஅந்த பெட்ரோப் அப்பொழுது ரஷ்ய ராடார் முன் அமர்ந்திருந்தார், அது 1983ம் வருடம், செப்டம்பர் 26













திடீரென அவரின் ரேடார் அமெரிக்க ஏவுகனைகள் மொத்தமாக ரஷ்யாவினை நோக்கி வருவதாக காட்டிற்று, அவர் இருந்தது மிக பொறுப்பான பதவி

அதாவது அவர் சொல்வது எல்லாமே உறுதிபடுத்தபட்ட தகவலாக இருக்கும் என்பதால் அவர் சொல்லிவிட்டால் ரஷ்யா தன் பதில் நடவடிக்கையினை தொடங்கும்.


வருவது என்ன ரக ஏவுகனை, அணு ஏவுகனையா? சோதனையா? என அவருக்கு தெரியவில்லை, ஆனால் அவர் சொல்லவேண்டும், சொல்வது சிக்கல் இல்லை , சொன்ன மறுநொடி ரஷ்யா அமெரிக்காவினை சின்னாபின்ன படுத்தும்

இவருக்கோ என்ன செய்வதென தெரியவில்லை, காரணம் அது மிரட்டல்கள் இல்லா இயல்பான காலம். போர் எல்லாம் வர வாய்ப்போ பிரச்சினையோ இல்லை, இப்பொழுது எப்படி?

ஆனால் சொல்லாமல் இருந்து, வருவது ஏவுகனைகளாக இருந்தால் ரஷ்யா அழியும், பின் இவர் அந்த பொறுப்பில் இருந்து என்ன பயன்?

இப்படியாக இரு விஷயங்களை மாறி மாறி யோசித்தாலும் அவர் உள்மனம் சொன்னபடி நடப்பது நடக்கட்டும் என இருந்துவிட்டார்,

20 நிமிடங்களில் முடிவு தெரியும்

எப்படி இருந்திருக்கும் அவருக்கு? ஆனால் உணர்ச்சிகளை வெளிகாட்டாமல் அமர்ந்திருந்தார். திக் திக்கான நிமிடங்கள்.

20ம் நிமிடத்தில் ரேடாரில் புள்ளிகள் மறைந்தன, எந்த ஏவுகனையும் ரஷ்யாவினை தாக்கவில்லை.

Image may contain: 1 person, glassesஅவருக்கு ஒன்றுமே புரியவில்லை , ஆனால் நல்லவேளையாக உயரதிகாரிகளிடம் சொல்லவில்லை எனும் நிம்மதி அவருக்கு.

பின்பு ஏதோ ஒரு சோதனையில் மேக கூட்டம் இடையே வரும் சூரிய ஒளியினை ரேடார்கள் தவறுதலாக சில நேரம் ஏவுகனைகள் என அடையாளம் காட்டபடும் என கண்டுபிடிக்கபட்டது.

அதுதான் அன்றும் நிகழ்ந்திருக்கின்றது

அந்த பெட்ரோப் மட்டும் அன்று நிதானமின்றி தன் கடமையினை செய்திருந்தால் உலகின் மூன்றாம் உலகப்போரும், அணு ஆயுதபோரும் அன்றே தொடங்கியிருக்கும்.

உலகில் பாதி அழிந்திருக்கும், பெரும் விபரீதம் எல்லாம் ஏற்பட்டிருக்கும்.

அவரால் பெரும் யுத்தம் தடுக்கபட்டிருக்கின்றது, அவர் இடத்தில் இன்னொருவன் இருந்திருந்தால் இந்த நிதானம் இருந்திருக்குமா என்பது சந்தேகம், அலறியடித்து மேலதிகாரிகளுக்கு பட்டனை தட்டினால் முடிந்தது உலகம்.

இந்த விஷயத்தை அவர் 2013ம் ஆண்டுதான் சொன்னார், அதனை கேட்ட உலகம் அரண்டது மனிதர் எவ்வளவு பெரும் காரியத்தை செய்திருக்கின்றார் என அவரை பாராட்டியது.

இந்த நிதானம் மூலம் உலகை காப்பாற்றிய மனிதர் என அறியபட்ட அந்த பெட்ரோப் சமீபத்தில் மரணமடைந்திருக்கின்றார் என்று இன்றுதான் அறிவித்தார்கள்.

அதுவும் இந்த சம்பவத்தை சினிமா எடுக்க ஒருவர் தேடி சென்றபொழுதுதான் அவர் காலமான விஷயம் தெரிந்திருக்கின்றது.

சில விஷயங்களில் நிதானம் எவ்வளவு முக்கியம் அது எத்தனை ஆயிரம் உயிர்களை காக்கும் என உணர்த்திய அந்த பெட்ரோப்பிற்கு உலகம் அஞ்சலி செலுத்தி கொண்டிருக்குன்றது.














 






No comments:

Post a Comment