Monday, September 18, 2017

நாங்கள் பாஜகவிற்கு அடிமை அல்ல : ஜெயகுமார்

18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கத்தால் வாக்களித்த மக்கள் வேதனையோடு பார்க்கிறார்கள்: வானதி சீனிவாசன்


ஏம்மா, தகுதி நீக்கும் செய்யும் ஐடியா எல்லாம் இந்த பழனிச்சாமிக்கும், தனபாலுக்கும் உதிக்கவா செய்யும்?


இப்படி எல்லாம் ஆடும் அளவிற்கு அவர்கள் வொர்த் இல்லை, ஏதோ ஒரு சக்தி திட்டம் தீட்டி கொடுக்கின்றது அவ்வளவுதான்





அதனைத்தான் நாங்கள் வேதனையோடு பார்க்கின்றோம் தாயே...





தினகரனும், ஸ்டாலினும் நல்ல பாம்பு, சாரைப் பாம்பு மாதிரி பின்னிப் பிணைந்து இருக்கிறார்கள் அது மக்களுக்கு நன்றாக தெரியும். நாங்கள் தினகரனை ஒரு பொருட்டாகவே கருதவில்லை : ஜெயக்குமார்


ஓஹோ.. இதுதான் பாம்பின் கால் பாம்பறியும் என்பதோ?






சசிகலா குடும்பம் குறித்து மேலும் 89% உண்மைகளை வெளியிட நேரிடும் என துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் எச்சரித்துள்ளார்.


தமிழக மக்களை பார்க்க‌ உங்களுக்கு எப்படி தெரிகின்றது பன்னீர்? எல்லோரும் கேணையர்களா என்ன?


அந்த 11% ரகசியத்தை எப்பொழுதையா சொன்னீர்?




முதலில் அந்த 11% ரகசியத்தை சொல்லுங்கள், 89% பின்னால் பார்க்கலாம்







பல ரகசியங்களை வெளியிடுவேன்: ஓ.பன்னீர்செல்வம்


இந்த ஒரு வசனத்தை வைத்து கொண்டே 8 மாதமாக அரசியல் செய்கின்றார் பன்னீர்


அன்று ராமசந்திரனை ரகசியமாக மிரட்டியே தனிகட்சி தொடங்க வைத்து , என்னவெல்லாமோ செய்து காட்சிகளை நடத்தியது டெல்லி.




அந்த கட்சி உருவானதும், அது வளர்ந்ததும் ஆட்சிக்கு வந்ததும் இன்றுவரை ரகசியமே.


பின்பு ஜெயலலலிதாவிற்கு சசிகலாவிற்கும் என்ன ரகசியம் என இன்றுவரை தெரியவில்லை, ஜெயா ஆன்மாவும் சொல்லவேயில்லை.


ஆனால் ஏதோ ரகசியமில்லாமல் இவ்வளவு பெரும் காரியங்கள் நடந்திருக்காது, அந்த உறவு தொடர்ந்திருக்காது.


ஆக ரகசியங்களாலே இயங்கிய கட்சியில் , இன்று பன்னீரும் ரகசியம் வெளியிடுவேன் என மிரட்டுவது ஒன்றும் ஆச்சரியமல்ல‌


இந்த ரகசிய கட்சியால், தமிழகம் நாசமாய் போனது மட்டும் ரகசியமே அல்ல....







நாங்கள் பாஜகவிற்கு அடிமை அல்ல, அவர்களோடு சேர்ந்து நலதிட்டங்களை தமிழகத்திற்கு கொண்டு வருகின்றோம் : ஜெயகுமார்


என்னென்ன நலதிட்டங்கள் கொண்டுவந்தீர்கள் என்பது நீட் தேர்விலே தெரிகின்றது, அப்படி நீங்கள் பாஜக அடிமை இல்லையென்றால் சட்டசபையில் பெரும்பான்மை நிரூபித்துவிடுங்கள் பார்க்கலாம்.


இரட்டை இலையினை மீட்டு, பாஜகவினை சேர்க்காமல் உள்ளாட்சி தேர்தலை நடத்திவிடுங்கள் பார்க்கலாம்.


அங்கொரு தமிழிசை, இங்கொரு ஜெயக்குமார்.






ரஜினியும் கமலும் ஒரே பக்கம் வரவேண்டும் : தமிழருவி மணியன்


மணிரத்தினமே அப்படி இருவரையும் இணைத்து படமெடுக்க முடியாமல் விட்டுவிட்டார் மிஸ்டர் மணியன்,


அந்த "சக்கரவர்த்தி" படத்தை மறுபடியும் நீர் தொடங்கபோகின்றீரா?






"சசிகலாவால் கிடைத்த முதல்வர், அமைச்சர் பதவிகளை ராஜினாமா செய்துவிட்டு எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தைக் கூட்டி மீண்டும் பதவிக்கு வர முடியுமா" : தினகரன் சவால்


மிஸ்டர் தினகரன். எம்ஜிஆர் தொடங்கிய கட்சியில் இருந்து கொண்டு, ஜெயா எனும் உருவத்தை தாங்கி பிடித்து கொண்டு அரசியல் செய்வதை விட்டுவிட்டு.


இருவரையும், இரட்டை இலையினையும் அதிமுகவினையும் தூர எறிந்துவிட்டு , புதிதாக கட்சி தொடங்கி நீங்கள் அரசியல் செய்ய முடியுமா? என மக்கள் சவால் விட்டால் என்ன‌ செய்வீர்கள்?






 

No comments:

Post a Comment