Friday, September 15, 2017

அலறி அடித்து இருக்கைக்கு ஓடுவதன் பெயர் தற்காலிக வாபஸாம்

"அரசினை எச்சரிக்கின்றோம், அடுத்த தேர்தலில் நாங்கள் எங்களில் ஒருவரை நிறுத்தினால் கட்டாயம் வெல்வோம், அதன் பின் எங்களுக்கான உரிமையினை நாங்களே எடுப்போம்" : ஜேக்டோ ஜியோ


ஒஹோ.. நீங்களே நின்று நீங்களே வாக்களித்து நீங்களே வெல்வீர்களா? இப்படி ஒரு கனவா?


விவசாயி, மீணவன் அல்லது தொழிலாளி எல்லாம் இப்படி நிறுத்தினால் நீங்கள் தாங்குவீர்களா? அப்படி ஒரு பாமர தொழிலாளி வென்று வந்துவிட்டான் என்றால் உங்கள் நிலை என்னாகும் என்பதை கொஞ்சம் யோசித்துவிட்டு சவால் விடுங்கள்




(என்ன தைரியத்தில் இப்படி சவால் விடுகின்றார்கள்?, தேர்தலில் எல்லா வாக்குசாவடிகள், அலுவலகம், வோட்டு எண்ணுமிடம் என எல்லாவற்றிலும் நாம்தான் இருப்போம், கள்ளவோட்டு போட்டு, தில்லுமுல்லு செய்து ஜெயிக்கலாம் எனும் திட்டம் இருந்தாலும் இருக்கலாம்


தேர்தல் கமிஷன் இதனை கவனத்தில் கொள்வது நல்லது)






நாட்டின் பாதுகாப்பு குறித்து யாரும் அச்சம் கொள்ளத் தேவை இல்லை: நிர்மலா சீதாராமன்


நாட்டின் பாதுகாப்பினை குறித்து யாருக்கும் அச்சமில்லை, ஆனால் பாதுகாப்பு துறை அமைச்சர் குறித்துத்தான் அச்சமாக இருக்கின்றது.








ஐகோர்ட்டு எச்சரிக்கை எதிரொலி: அரசு ஊழியர்கள்- ஆசிரியர்கள் போராட்டம் தற்காலிகமாக வாபஸ்


அலறி அடித்து இருக்கைக்கு ஓடுவதன் பெயர் தற்காலிக வாபஸாம்.







 நீட் தேர்வு எழுதத் தயார் : தமிழிசை

எதற்கு எழுதவேண்டும், அது எழுதி என்னது ஆக போகின்றது?

இந்தம்மா இவ்வளவு அப்பாவியா? அவர்கள் சொன்னால் இவர் இப்படி கிளம்பிவிடுவாரா?


நாளை யாராவது எல்.கே.ஜி படிக்க தயரா என்றால் கூட யூனிபார்ம் போட்டு, இரட்டை சடை போட்டு, லாலிபாப் சப்பிகொண்டு , பின்னால் ஸ்கூல் பேக் போட்டுகொண்டு கிளம்பிவிடுவார் போல..




 



No comments:

Post a Comment