Thursday, September 14, 2017

கர்நாடகாவில் தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள்

நான் சொன்னபடி கேட்டிருந்தால் சசிகலாவிற்கு இந்த வீழ்ச்சி வந்திருக்காது :டி.ஆர்


ஆக டி.ஆர் சொற்படி கேளாமல் நாசமாய் போய்விட்டாராம் சசிகலா, இனி இருக்கும் அதிமுகவினராவது டி.ஆர் சொற்படி கேட்டு நடப்பது நல்லது.


மிஸ்டர் டி.ஆர், இந்த சிம்புவிற்கு ஏதும் சொல்ல கூடாதா?






கர்நாடகாவில் தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் அடைத்து வைக்கபட்டிருக்கின்றனர், அவர்கள் விவகாரம் தொடர்பாக தமிழக காவல்துறைக்கும் அந்த கோஷ்டிக்கும் தகறாறு நடக்கின்றது.


அதில் ஒரு எம்.எல்.ஏ ஒரு ஒப்பந்தக்காரரை மிரட்டிய வழக்கில் காவல்துறையால் தேடபடுகின்றாராம், அவரும் உள்ளேதான் இருகின்றார், தகறாறு தீவிரமாகின்றது


துப்பாக்கி சூடு நடத்தி இன்னும் அவர்களை மீட்கவில்லை என்றாலும், "எங்கள் விருப்பம் எங்கும் இருப்போம் அதனை கேட்க நீங்கள் யார்.." என எகிறுகின்றது தினகரன் கும்பல்




இதை கேட்க வேண்டியது அந்த தொகுதியின் மக்கள், "ஏன்யா வோட்டுபோட்டு எங்கள் பிரச்சினையினை கவனி என தேர்ந்தெடுத்தால் நீ தினகரன் பிரச்சினையினை கவனிக்கின்றாயா?, கிளம்பு தொகுதிக்கு.." என மிரட்டும் உரிமை அவர்களுக்குத்தான் இருக்கின்றது.


கன்னடத்திற்கு என்ன ராசியோ தெரியவில்லை, இங்கிருக்க வேண்டியவர்கள் எல்லோரையும் அங்கு அடைத்து வைத்துவிடுகின்றது. காவேரி, சசிகலா உட்பட.






சசிகலா கணவர் ஆபத்தான கட்டத்தில் மருத்துவமனையில் அனுமதி


ஜெயா ஆவி பழிவாங்கும் வேலையினை செய்ய தொடங்கிவிட்டதோ என்னமோ?






பாமக மாநாட்டுக்கு வரும் தொண்டர்கள் வீரப்பன் படம் அணிந்த டிசர்ட் போட கூடாது : ராமதாஸ் கண்டிப்பு


வீரப்பன் கதையினை சீரியலாக எடுத்து தன் டிவியில் ஓளிபரப்புவார், பல இடங்களில் வீரப்பனை தனக்கு சாதகமாக கையாள்வார் ராமதாஸ், வீரப்பனை வைத்தும் டாக்டர் செய்த அரசியல் கொஞ்சமல்ல.


ஆக அவர் வீரப்பனை பயன்படுத்தலாம், ஆனால் தொண்டர்கள் யாரும் வீரப்பன் பெயரை சொன்னால் டாக்டர் அய்யா தாங்க மாட்டார்








No comments:

Post a Comment